Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சிட்டி ஆல்பம் - கன்னியாகுமரி - 2


முந்தைய பதிவான சிட்டி ஆல்பம் - கன்னியாகுமரியின் தொடர்ச்சி..

14. திரிவேணி சங்கமம்


இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் ஆகிய முப்பெரும் கடல்களும் ஒன்றாய் சங்கமிக்கும் இடம் இது. இங்கு நீராடுவது புண்ணியம் என்பதால் நீராடும் சுற்றுலா பயணிகள்.



15. காமராஜர் மணி மண்டபம்


காந்தி மண்டபத்திற்கு அருகே காமராஜர் மணிமண்டபம் உள்ளது. இதுவும் காந்தியைப் போலவே காமராஜரின் அஸ்தி கடலில் கரைப்பதற்கு முன் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட இடம். காமராஜரின் அரிய புகைப்படங்கள் இங்கு உள்ளன.


சூரிய உதயத்தை ரசனையோடு பார்ப்பதற்காக உருவாக்கிய இடம் இது.


கன்னியாகுமரியில் கடல் சார்ந்த கைவினைப் பொருட்கள் விற்பனை படுஜோராக இருக்கும். கலைநயம் மிக்க இந்தப் பொருட்கள் விற்கப்படும் கடைகள்.


கடல் அழகைக் கரையில் அமர்ந்து கண்டு ரசிப்பதற்காக உருவாக்கப்பட்ட பூங்கா.


அரசு அருங்காட்சியகத்தின் முன்தோற்றம்.

16. குருநாதசுவாமி கோயில்


இந்த சிறிய கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜராஜசோழன் கட்டியது என்றால் நம்ப கடினமாகத்தான் இருக்கிறது. தஞ்சை பெரிய கோயில் என்ற பிரமாண்டத்தைக் கொடுத்த அந்த ராஜராஜனான இந்த சிறிய கோயிலை கட்டியது என்று. சோழர்களின் கட்டடக்கலையில் உருவாக்கப்பட்ட இந்தக் கோயில் கி.பி.1038-க்கு முன்பு கட்டப்பட்டதாக இங்குள்ள 16 கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ரயில் நிலையம் அருகில் இந்தக் கோயிலைக் காணலாம்.


17. சுவாமி விவேகானந்தர் பாறை



18. திருவள்ளுவர் சிலை



19. படகுத் துறை


கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் விவேகானந்தர் பாறை உள்ளது. அந்த பாறைக்கு எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை என்ற இரண்டு படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். 


புறப்படத் தயாராய் பொதிகை.


படகினுள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்.




படகு வழியாக திருவள்ளுவர் சிலை.




விவேகானந்தர் பாறையில் படகு. இறங்கும் பயணிகள்.


விவேகானந்தர் மண்டபத்தை நோக்கி..


பளிங்கு யானைகளுடன் ஒரு போட்டோ


மண்டபத்தின் முன்தோற்றம்


பக்கவாட்டுத் தோற்றம்


மண்டபத்தை கேமராவுக்குள் அடக்க முயலும் இளஞ்ஜோடி


திருவள்ளுவரை பின்புறம் பார்ப்பது அபூர்வம்தான்


காதலர்களுக்கும் இந்த இடம் சொர்கம்தான். எப்படி போஸ் கொடுக்கிறார்கள் பாருங்கள்!




ஸ்ரீபாத மண்டபம்


ஸ்ரீபாத மண்டபமும் விவேகானந்தர் மண்டபமும்

20. திருவள்ளுவரின் முழுத்தோற்றம்


திருக்குறள் தந்த தெய்வ புலவர் திருவள்ளுவர் சிலை. 133 அதிகாரங்களில் திருக்குறள் அமைந்திருப்பதை நினைவு கூறும் வகையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை உயரம் 95 அடி. அலங்கார மண்டபம் அதாவது பீடம் 38 அடி உயரம். மொத்தம் 133 அடி.


திருவள்ளுவர் சிலை 1283 சிறிய மற்றும் பெரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மொத்த எடை 7,000 டன். முகத்தின் உயரம் மட்டும் 10 அடி. தோள்பட்டை அகலம் 30 அடி. 


சிலை மட்டும் 2000 டன் எடைக் கொண்டது. திருவள்ளுவரின் காலடியில் நின்று கடலைக் கண்டுகளிப்பது தனி சுகம்.


திருவள்ளுவர் சிலையில் இருந்து விவேகனந்தர் பாறையைப் பார்ப்பது தனியழகு. 

22. அலையும் துறவி கண்காட்சி


விவேகானந்தர் உலகம் முழுவதும் அலைந்து ஆன்மிகப் பணியாற்றிய நிகழ்வுகளை அற்புதமாக சொல்கிறது இந்த அலையும் துறவி கண்காட்சி. இந்தக் கட்டடம் ஆன்மிக வடிவமைப்பில் மேரு கலையை குறிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 

23. வேக்ஸ் மியூசியம்


இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் வேக்ஸ் மியூசியம் இதுதான். இங்கு தலைவர்கள், நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகுச்சிலைகள் உள்ளன. இந்த சிலைகளுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளவது வித்தியாசமான அனுபவம்.


ஜெயலலிதா மெழுகுச்சிலையாக


24. இயந்திரத்துடன் கிரிக்கெட்


வேக்ஸ் மியூசியத்தில் பவுலிங் இயந்திரம் போடும் பந்துகளுக்கு கிரிக்கெட் விளையாடி மகிழலாம்.

24. குமரி வரலாற்றுக் கூடம்


கன்னியாகுமரி ரயில்நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ளது குமரி வரலாற்றுக் கூடம். இங்கு வரலாற்று காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வுகள், உலகத்தின் தோற்றம், அன்னை தேவி குமரியின் அவதாரம், விவேகானந்தரின் வரலாறு, அய்யா வைகுண்டரின் வரலாறு, புனித தாமஸ், மகாத்மா காந்தி, விவேகானந்தர் ஆகியோரின் வருகை உட்பட பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் சித்திரங்களாகவும் சிற்பங்களாகவும் வைக்கப்பட்டுள்ளன.

25. கலங்கரை விளக்கம் 


பழமையான இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றுலாவாசிகள் பார்வையிடலாம். தினமும் மாலை 3 முதல் 5 மணி வரை அனுமதிக்கிறார்கள். அதற்கு கட்டணமும் உண்டு. 

26. விவேகானந்தபுரம்


விவேகானந்த கேந்த்ராவின் தலைமையிடம் இது. கன்னியாகுமரி நகரின் நுழைவிடத்தில் அமைந்திருக்கிறது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த இடம் யோகா, தியானம், ஆன்மிகம், தேசிய ஒருமைப்பாடு போன்ற முகாம்களுக்கு பெயர்பெற்றது.

27. ஏக்நாத் ராணாடே சமாதி


கன்னியாகுமரியில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் ஒரு தியான மண்டபத்தை அமைக்க வேண்டும் என்று முயற்சித்து, அந்த முயற்சியை செயல்படுத்தியவர் ஏக்நாத் ராணாடே. அவரின் சமாதி விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ளது.


முகாமில் பங்குபெறுபவர்கள் தங்கும் இடம்.

27. சன்செட் பாயிண்ட்


சூரியன் அஸ்தமனமாவதை இங்கிருந்து கண்டு களிக்கலாம். அதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த இடம்.












குடும்பத்துடன் சுற்றி வர கன்னியாகுமரி ஏற்ற இடம். இரண்டு நாட்கள் திட்டமிட்டால் எல்லா இடங்களையும் தவறாமல் பார்த்துவிடலாம்.




29 கருத்துகள்

  1. படங்கள் ஒவ்வொன்றும் பளிச்... பளிச்... அடுத்த முறை செல்லும் போது விட்டுப்போன இடங்களை காண வேண்டும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. படங்கள் ஒவ்வொன்றும்அழகோ அழகு நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    கன்னியாகுமரியின் எழிலை அழகாகப் படம் பிடித்து காட்டியது கண்கொள்ளாக் காட்சி.

    வேக்ஸ் மியூசியத்தில் உள்ள சிலைகளும் இரசிக்கும்படியாக உள்ளன!

    சூரியன் அஸ்தமனத்தையும் அழகாக...!

    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  4. படங்கள் அனைத்தும் அருமை. இரண்டு பகுதிகளையும் ஒரு சேரப் படித்து மகிழ்ந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அருமை 23ம் படம் ஒப்பீடு படம் அசத்தல்.....த.ம்6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வம்புல மாட்டிவிட்ருவிங்க போல தெரியுதே.! வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  6. கண்டிப்பாக பார்க்க வேண்டும் ....சூரிய அஸ்தமன படங்கள் அழகு

    பதிலளிநீக்கு
  7. அஸ்தமனத்தையே இவ்வளவு அழகாக உங்களால் தர முடிகிறதே

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நண்பரே பலமுறை பார்த்திருந்தாலும் தங்களது விளக்கமுறையும் புகைப்படங்களின் அழகும் அருமை நன்றி
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  9. இப்பதிவின்மூலமாக தங்களின் ரசனையை அதிகம் காணமுடிந்தது. பல இடங்கள் பார்த்ததாக இருந்தாலும் தங்களின் புகைப்படங்களும் விளக்கங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  10. இதுவரை வந்தது இல்லை! உங்களின் படங்களும் தகவல்களும் வரத் தூண்டுகின்றன! பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருமுறை போய்பாருங்கள்!
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  11. தங்கள் பதிவு
    எங்கள் உள்ளத்தை ஈர்க்கிறது

    யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
    http://www.ypvnpubs.com/2016/01/01.html

    பதிலளிநீக்கு
  12. படங்கள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன நண்பரே! நாங்கள் அப்போது இருந்த போது பார்த்தவையே. பல புதிதாக வந்திருக்கின்றன. வேக்ஸ் ம்யூசியம், அருங்காட்சியகம், தீ பார்க் (சென்ற பதிவு) என்று பல புதியவை. பார்த்ததில்லை. பார்க்க மகிழ்வாக உள்ளது. மிக்க நன்றி உங்கள் வழி எங்கள் ஊரைப் பார்ப்பதற்கு இருவருமே எங்கள் ஊர் என்றுதான் சொல்லிக்கொள்வோம்.

    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்த்து வாருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  13. செமை கலக்சன்
    குறிப்பாக சூரியன் தங்கத் தட்டாக ஜொலிக்கிற அந்த ஷாட் அருமை

    பதிலளிநீக்கு
  14. அருமையான படங்கள்
    வேக்ஸ் ம்யூசியம் அரியாத ஒன்று

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை