• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், ஜனவரி 05, 2016

  சைக்கிளில் உலகைச் சுற்றிய முதல் மனிதர்


  கடந்த 2015, ஜனவரி 4-ம் தேதி தமிழ்மணத்தில் எனது வலைப்பூ இணைக்கப்பட்டது. சரியாக ஒரு வருடத்தில் அதே 4-ம் தேதியில் தமிழ் மனதில் 4-ம் இடம் கிடைத்திருக்கிறது. 
  நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !
  * * * * * * *

  சைக்கிளில் உலகைச் சுற்றுவது பெரிய விஷயமா? என்று கேட்கலாம். பெரிய விஷயம்தான், மனிதனைவிட உயரமான சக்கரம் கொண்ட அந்தக் கால சைக்கிளில் உலகை சுற்றுவது உண்மையிலே பெரிய விஷயம். 130 வருடங்களுக்கு முன்பு சைக்கிள் ஓட்டுவது அவ்வளவு சுலபமில்லை. முன் சக்கரம் பெரியதாகவும், பின் சக்கரம் மிகச் சிறியதாகவும் இருக்கும். இந்த சைக்கிளில் 'பேலன்ஸ்' செய்து ஓட்டுவது பெரிய சாதனையாகும்.

  அன்றைய காலக் கட்டத்தில் இன்றைய சாலைகள் போல ஒழுங்கான சாலைகள் கிடையாது. உலகம் முழுவதுமே கரடு முரடான சாலைகளே இருந்தன. இதில் பயணம் செய்வது கஷ்டமான காரியம். நல்ல சாலையில் ஓட்டுவதற்கு கடினமான இந்த சைக்கிளில் உலகை சுற்றுவதென்றால் எவ்வளவு மன வலிமை இருக்க வேண்டும். 

  தாமஸ் ஸ்டீவென்ஸ் தனது சைக்கிளுடன்
  அந்த சாதனையை செய்தவர் பெயர் தாமஸ் ஸ்டீவென்ஸ். 1884-ல் இவர் முதல் கட்ட பயணமாக பிரான்சிஸ்கோவில் இருந்து 3,000 மைல் தொலைவை அதாவது அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலையில் உள்ள பாஸ்டன் என்னும் நகருக்கு போய் சேர்ந்தார். அப்போது இவர் ஓட்டிச் சென்ற சைக்கிள் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்து போனது. 

  மேலும் இவரிடம் இருந்த பணம் முழுவதும் செலவாகிவிட்டது. அந்த சமயத்தில் சைக்கிள்கள் உற்பத்தி செய்து வரும் தொழிற்சாலையின் உரிமையாளராக இருந்த கர்னல் எ.எ.போப் என்பவர் ஸ்டீவென்ஸுக்கு புதிய சைக்கிள் ஒன்றையும் பண உதவியையும் செய்ய முன் வந்தார்.

  பின்னர் அவர் அமெரிக்காவிலிருந்து கப்பலில் ஐரோப்பா போய் சேர்ந்தார். அங்கிருந்து பெர்சியா, இந்தியா, தூர கிழக்கு நாடுகள் ஆகியவற்றை சைக்கிளில் கடந்தார். மூன்று  ஆண்டு காலம் சைக்கிளில் உலகைச் சுற்றி விட்டு 1887-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சான்பிரான்சிஸ்கோ வந்தடைந்தார்.


  இவரின் முயற்சியை பாராட்டி அன்றைய பத்திரிகைகளில் கட்டுரைகள் வெளிவந்தன. தனது சைக்கிளில் உலகை சுற்றி வந்த போது ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு புத்தமாக விவரித்து எழுதினார். புத்தக விற்பனை சக்கைப்போடு போட்டது.

  மேலும் தனது அனுபங்களை சொற்பொழிவுகளின் மூலம் பல இடங்களில் பேசினார். அதன் மூலமும் நிறைய செல்வங்களை சேர்த்தார். கஷ்டப்பட்டு ஒருமுறை சாதனை செய்து விட்டு அதனை வைத்தே வாழ்நாள் முழுவதும் வளமுடன் வாழ்ந்து வாழ்ந்தார் தாமஸ் ஸ்டீவென்ஸ்.
  28 கருத்துகள்:

  1. வாழ்த்துகள் நண்பரே
   த ம +
   நட்புடன்,
   புதுவை வேலு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நன்றி நண்பரே, நான்கு நாட்களில் மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிட்டது.

    நீக்கு
  2. இவரைப்பற்றிப் படித்திருக்கிறேன்.

   தம +1

   பதிலளிநீக்கு
  3. சைக்கிளில் பல நாடுகள் பயணம் - அதுவும் இப்படி ஒரு சைக்கிளில்..... எத்தனை பொறுமை இம்மனிதருக்கு.....

   தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம் உண்மையில் வியப்புதான். வருகைக்கு நன்றி வெங்கட்ஜி!

    நீக்கு
  4. இந்த சைக்கிளில் சாதனை என்றால் போற்றப் பட வேண்டியவர்தான் தாமஸ் ஸ்டீவன்சன் :)

   பதிலளிநீக்கு
  5. நல்லதொரு தகவல் நண்பரே... கண்டிப்பாக தாமஸ் ஸ்டீவென்ஸ் அவர்களின் சாதனை போற்றப்பட வேண்டியதே.... இவரது முன்னோர்கள் தேவகோட்டையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ... காரணம் இந்த மா3யே சைக்கிள்கள் எங்கள் ஊரிலும் உண்டு தமிழ் மணத்தில் 4 ஐ தொட்டமைக்கு வாழ்த்துகள் நண்பரே.
   தமிழ் மணம் 7

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம் நண்பரே, அவரின் பூர்விகம் தேவகோட்டை என்றுதான் என்னிடம் சொன்னார். நான்கு நாளில் மீண்டும் ஏழுக்கு வந்துவிட்டேன். வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  6. வாழ்த்துக்கள்.... உங்கள் பதிவுகள் யாவும் அருமை

   பதிலளிநீக்கு
  7. சாதனை மனிதர்தான்! இவரை அறியக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

   பதிலளிநீக்கு
  8. வாசித்திருக்கின்றோம் என்றாலும் தங்கள் மூலம் மீண்டும் அறிய முடிந்தது. சமீபத்தில் கூட சுற்றியவர்கள் உண்டு. பெண்கள் கூட சுற்றியிருக்கின்றார்கள் தனியாக. புத்தகமும் போட்டிருக்கின்றார்கள். ஆனாலும் அந்தக் காலத்தில் வசதிகள் குறைவான காலத்தில் பயணித்த ஸ்ட்டிவன் பாராட்டப்படவேண்டியவரே! நல்ல தகவல்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இது ஏற்கனவே தினம் ஒரு தகவல் தளத்தில் வெளியிட்ட பதிவுதான். அதிலும் நீங்கள் படித்து கருத்திட்டுள்ளீர்கள். வருகைக்கு நன்றி!

    நீக்கு
  9. இந்த சைக்கிளை ஓடுவதை விட தூக்கிட்டு நடந்திடலாம் போல இருக்கே!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்படித்தான் தோன்றுகிறது. வருகைக்கு நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்