Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நீர்வழிச் சாலை: விதைகளை காத்த கலசங்கள் - 16


விதைகளை காத்த கலசங்கள்

சாதாரண மக்கள் தங்களின் வீடுகளின் கூரைகளில் ஒரு பானை கட்டி அந்த பானையில்தான் தானிய விதைகளை சேர்த்து வைப்பார்கள். ஒவ்வொரு பருவத்திலும் விவசாயம் தொடங்கும் போது அந்த விவசாயத்திற்கு உயிர் கொடுப்பது இந்த விதைகள்தான். எந்த கஷ்டத்திலும் அந்த விதை தானியங்களை உணவுக்கு பயன்படுத்த மாட்டார்கள். விற்பனை செய்யமாட்டார்கள்.
* * * * * * * 

மது முன்னோர்கள் தொலை நோக்கு பார்வை கொண்டிருந்தார்கள். பின்னாளில் ஏற்படக்கூடிய சிக்கல்களை முன்கூட்டியே கணித்திருக்கிறார்கள். அதில் ஒன்றுதான் கோயில் கோபுரங்கள். கோயில் கோபுரங்களைவிட உயரமான கட்டிடம் கட்டக் கூடாது என்பது அன்றைய சட்டமாக இருந்தது.

கோயில் கோபுரங்களுக்கு ஆன்மிகத்தில் ஆயிரம் காரணங்கள் சொல்லலாம். ஆனால், அதில் மக்களைக் காக்கும் இரண்டு வாழ்வியல் முறைகள் இருக்கின்றன. 'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று சொன்னதற்கும் இந்த வாழ்வியல் முறைகள்தான் காரணம்.


அந்தக் காலத்தில் ஊரின் உயரமான இடத்தில்தான் கோயில்களை கட்டுவார்கள். அதிலும் மிக உயரமான கோபுரங்களை எழுப்பி அதன்மீது தங்கம், வெள்ளி, செப்பு போன்ற உலோகத்தால் கலசங்களை அமைத்திருப்பார்கள். இல்லையென்றால் ஐம்பொன்னால் ஆன கலசங்களை வைத்திருப்பார்கள். இந்த உலோகங்கள் மின்னலை தன் பக்கம் ஈர்த்து பூமிக்கடியில் அனுப்பிவிடும். கோபுரக் கலசங்கள் சிறந்த இடிதாங்கியாக செயல் படுபவை.

கோபுரத்தின் உயரம் கூடுதலாக ஆக அதன் பாதுகாப்பு பரப்பளவும் கூடும். அதனால்தான் பெரும் நகரங்களில் இருக்கும் பழமையான கோயில்களின் கோபுரங்கள் மிக உயரமாக இருந்தன. உயரமான கலை அம்சம் கொண்ட கோபுரங்களை அமைப்பது மன்னர்களுக்கு பெருமை மிக்கதாகவும், செல்வ செழிப்பை பறைசாற்றுவதாகவும் இருந்தன. மக்களையும் காத்தன.

இதில் இன்னொரு மக்கள் காத்தலும் இருந்தது. அதுதான் தானியங்கள்.  நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் என்ற ஒன்பதுவகையான தானியங்களை கோபுர கலசங்களில் சேர்த்து வைப்பார்கள். இதில்தான் இரண்டாவது வாழ்வியல் முறை இருக்கிறது.

அன்றைய வீடுகள் எல்லாம் 7 அடி உயரத்தில்தான் பெரும்பாலும் இருந்தன. வசதிபடைத்தவர்களின் வீடுகள் கூட 10 அடி உயரத்தில்தான் கட்டப்பட்டன. மன்னர்களைத் தவிர மற்றவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டக்கூடாது என்ற விதி இருந்தது. அதனால், வீடுகள் குறைவான உயரத்திலே இருந்தன.
  

அந்த வீடுகள் கூட வலிமையான வீடுகள் இல்லை. வெறும் மண்ணைக் குலைத்துக் கட்டியவை. பனை ஓலை, தென்னனை ஓலைகளால் வேயப்பட்டவை. கொஞ்சம் அதிகமான மழை பெய்தாலே கரைந்து விடும் தன்மைக் கொண்டவை. அப்படியிருக்கும்போது வெள்ளம் வந்தால் இந்த வீடுகள் எப்படி தாங்கும்?

உயரமான வீடுகளும் சுண்ணாம்பு கொண்டு கட்டப்படும் சுவர்களும் அரசர்களுக்கும் ஜமின்தார்களுக்கும்  மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. சாதாரண மக்கள் மண் சுவர்களில்தான் வீடு கட்டவேண்டும் என்ற சட்டம் இருந்தது.

சாதாரண மக்கள் தங்களின் வீடுகளின் கூரைகளில் ஒரு பானை கட்டி அந்த பானையில்தான் தானிய விதைகளை சேர்த்து வைப்பார்கள். ஒவ்வொரு பருவத்திலும் விவசாயம் தொடங்கும் போது அந்த விவசாயத்திற்கு உயிர் கொடுப்பது இந்த விதைகள்தான். எந்த கஷ்டத்திலும் அந்த விதை தானியங்களை உணவுக்கு பயன்படுத்த மாட்டார்கள். விற்பனை செய்யமாட்டார்கள்.

விதைக்காக சேமித்து வைத்திருக்கும் தானியங்களையோ நெல்லையோ விற்பது கேவலமான ஒன்றாக இருந்தது. ஒரு குடும்பம் விதை தானியங்களை விற்றால் அந்தக் குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது என்று அர்த்தம். இந்த சூழலில் பெரும் வெள்ளம் வந்தால் வீடும் விதை நெல்லும் அடித்துக் கொண்டு போய்விடும். 

ஊரிலுள்ள அனைத்து வீடுகளிலும் அடுத்த வெள்ளாமைக்காக சேர்த்து வைத்திருந்த விதைகள் எல்லாம் வெள்ளம் கொண்டுபோன பின்  ஊரில் யாரிடமும் விதைகள் இருக்காது. இப்போது போல் வேறு ஊரில் இருந்து வாங்குவதெல்லாம் அப்போது நடைமுறையில் இல்லாத ஒன்று. 

வெள்ளம் வடிந்த பின் மீண்டு வந்த மக்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் தானிய விதைகள் எதுவும் இருக்காது. அன்றைய மக்களின் தொழிலே விவசாயம்தான். அதனால்தான் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் மூழ்காத உயரத்திற்கு கோபுரங்களை கட்டி அதன் உச்சியில் கலசங்களை வைத்தார்கள்.


இந்த கலசங்களில் நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள் என்ற ஒன்பது வகை தானியங்களையும் சேர்த்து வைப்பார்கள். ஒவ்வொரு தானியமும் அந்த ஊரின் மக்கள்தொகையைப் பொறுத்து 3 கிலோவில் இருந்து 5 கிலோ வரை ஒரு முடிப்பாக துணியில் கட்டி கோபுரக் கலசங்களில் சேர்த்து வைப்பார்கள்.

இப்படி சேர்த்து வைக்கும் தானியங்களின் முளைப்புத் திறன் 12 வருடங்கள் மட்டுமே இருக்கும். அதனால்தான் கோயில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற நடைமுறையை கொண்டு வந்தார்கள். அப்போது பழைய தானியங்களை எடுத்துவிட்டு புதிய தானியங்களை மீண்டும் சேர்த்து வைப்பார்கள். அடுத்த 12 வருட தானிய விதை சேமிப்புக்கு கவலையில்லை. 

ஒவ்வொரு தானியத்திலும் குறைந்த பட்ச அளவான 3 கிலோ கலசங்களில் சேர்த்து வைத்திருந்தாலே அந்த தானியங்களை கொண்டு 30 ஏக்கர் நிலத்தில் விளைச்சல் செய்து விடலாம். இப்படி விவசாயம் அழியாமல் காப்பதற்காக நம் முன்னோர்கள் கலசங்களை உபயோகித்தார்கள்.

இன்றைக்கு அந்த நிலைகள் எல்லாம் மாறிவிட்டதால் சம்பிரதாயத்திற்காக நவதானியங்கள் கலசங்களில் வைக்கப் படுகின்றன.

இன்னும் பேசுவோம்.

                                                                                                                            - தொடரும்.



தொடர்புடைய பதிவுகள்


37 கருத்துகள்

  1. மிகவும் பயனுள்ள பல தகவல்களை, அழகான படங்களுடன் தந்துள்ளீர்கள்.

    நம் முன்னோர்கள் மிகவும் யோசித்து, திட்டமிட்டு செய்துள்ள இவ்வாறான செயல்களில் சமுதாயக் கண்ணோட்டம் நிறைந்துள்ளன.

    வியப்பளிக்கும் செய்திகளைப் பகிர்ந்து கொண்டுள்ளதற்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  2. தமிழ்மணம் வாக்களிக்க எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது!?
    நல்லது நண்பரே! இதைநான் பலஆண்டுகளாகத் தமிழக மேடைகளில் பேசி வருகிறேன். கூடுதல் செய்தி ஒன்று - “வரகு, தினை, கொள், அவரை“ இந்நான்கே அன்றைய பழந்ததமிழகச் சிறுதானிய வகைகள். அவ்வளவும் இன்று சர்க்கரை நோயாளிகளின் உணவு என்றாகி நட்சத்திர விடுதிகளில் நாகரிக இருள்போர்த்தி நாலாயிரம் ரூபாய் உணவாகிவிட்டன. ஆனால், இன்றும் ஏழைகளின் தினசரி உணவு இதுவே! இட்லியைப் பார்ககத்தான் தீவாளிப் பண்டிகை! இயற்கையான நோயெதிர்ப்புக் கொண்ட வேப்ப மரத்தை வாசலில் வைத்ததும், சாணத்தை வாசலில் கரைத்துத் தெளிப்பதும், இன்னபிற வாழ்வியலை ஒட்டிய சங்கதிகள் ஏராளம்.. அருமையான தொடர், தொடர்ந்து எழுதுங்கள். தொடர்வேன் நன்றியும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல தகவல்களை தங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  3. நிறைய தகவல்கள். பகிர்வினுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு தகவல்களும் பிரமிப்பாக இருக்கின்றது விளக்கம் அருமை தொடர்கிறேன் நண்பரே
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  5. இவை குறித்து அறிந்திருக்கின்றேன்! கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கான காரண காரியங்களுடன் கலசங்கள் தாங்கும் தானியங்களில் அவசியமும் புரிந்திடும் படியாய் தொடரும் பதிவு!

    இன்னும் தொடருங்கள்.....!

    பதிலளிநீக்கு
  6. ஏற்கெனவே நான் படித்திருக்கும் இந்தத் தகவல்கள் மிகச் சிறப்பான தகவல்கள். முன்னோர்களின் வழக்கங்களில் நாம் காரணத்தை விட்டு விட்டோம். காரியத்தை மட்டும் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.
    தம +1

    பதிலளிநீக்கு
  7. கோபுரம், கலசம், கும்பாபிஷேகம் போன்றவை நமது முன்னோர்களின் வாழிவியலுடன் கலந்த ஒன்று என்பதை வாசித்திருக்கின்றோம் நண்பரே! அருமையான தகவல்கள். நாம் அதற்கான முக்கியத்துவத்தைவிட்டு விட்டு கும்பாபிஷேஷம் எல்லாம் கொண்டாடுகின்றொம் ஆனால் தானியங்கள்??? எதற்காக என்ற காரணங்களை நாம் வலிமையாகப் பின்பற்றியிருந்தோம் என்றால் இன்று நாம் எங்கேயோ சென்றிருக்கலாம்...இப்போதும் நாம் எங்கே செல்லுகின்றோம் என்பதே தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

    விவசாயத்தை அழியாமல் காக்க... இடிவிழாமல் காக்க முன்னோர்கள் பயன்படுத்திய முறை வியப்பின் சரித்திரக் குறியீடுதான்...!

    த.ம.9

    பதிலளிநீக்கு
  9. ஒவ்வொரு பதிவிலும் தகவல்களை சேமித்துத் தருகிறீர்கள்...
    தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  10. மிகுந்த வியப்புடனும், ஆச்சரியத்துடனும் படித்தேன் நண்பரே...

    கோயில் கலசங்களுக்கும் இப்படி ஒரு சமூக காரணம் இருப்பது இதுநாள்வரையிலும் எனக்கு தெரியாது !

    மிக அவசியமான அருமையான தொடர்...

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  11. கோவில் கலசத்தில் அன்று தானியங்களை சேமித்து வைத்த காலம் போய், இன்று பூசா (டெல்லி), கோவை மற்றும் பிற விவசாயக் கல்லூரி போன்ற இடங்களில் எல்லா விதிகளையும் பூச்சிக்கொல்லி மருந்து தடவி, பெரிய, தாழ்வு நிலையில் பெரிய கொள்கலன்களில் சேர்த்து வைக்க ஆரம்பித்து வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், கோபுரக் கலசங்களின் சிறப்பு குறைந்து போய் இன்று அதனுள் சம்பிரதாயத்துக்காக வெறும் நவதானியங்களை வைக்கும் பழக்கம் வந்துவிட்டது. அந்த தானியங்களும் thirஅனுடன் முளைக்கும் தகுதி படித்தவை அல்ல. மற்றும் கோவில் கோபுரங்களை விட பல உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள் இடிதாங்கிகளுடன் வந்த பின்னர், கோபுரம் மற்றும் கலசங்களின் மகாத்மியம் குறைந்து போனது தான் உண்மை! அப்புறம் கும்பாபிஷேகம் எப்படி 12 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும்? நூற்றுக்கணக்கான கோவில்களில் 12 ஆண்டுகள் கழிந்தபின்னரும், கோபுரம், கலசமும் சிதிலமடைந்து, குடமுழுக்குப் பண்ணாமல் இருப்பதுதான் இன்றைய யதார்த்தம் !

    பதிலளிநீக்கு
  12. அற்புதமான தகவல்கள் ஐயா. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

  13. நமது மூதாதையர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் காரணம் உண்டு என்பதை விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். பலருக்குத் தெரியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  14. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காரணம் இருந்திருக்கிறது.

    சிறப்பான தகவல்கள்..... நடுவில் விடுபட்ட பகுதிகளையும் விரைவில் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள தகவல்கள் செந்தில் சார்...
    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  16. உண்மை இப்படியிருக்க ,நம் கவிஞர்கள் ..கோபுரம் கண்டவன் கலசம் என்றான் ,தங்கத்தினால் கலசம் வைத்த கோபுரம் என்று வேறு எதற்கோ ஒப்பிட்டு பாடி மகிழ்கிறார்கள் ,அதையும் நம் கேட்டு மகிழ்கிறோம்:)

    பதிலளிநீக்கு
  17. அறிந்த செய்தி. இருந்தாலும் தங்களது எழுத்தின்மூலம் கூடுதலாக பலவற்றை அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. எவ்வளவு தகவல்கள்.

    அறிந்தனவற்றை மேலும் அறியவும் அறியாதன அறிந்து கற்கவும்!

    தங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்கிறேன் நண்பரே!

    அலைபேசி வாயிலாக என்பதால் அந்நேரங்களில் கருத்திட முடிவதில்லை.

    பொறுத்தாற்றுங்கள்.

    நன்றி.

    த ம +

    பதிலளிநீக்கு
  19. நீர்வழிச் சாலை தொடரின் தொடர்ச்சி பதிவு எப்பொழுது வரும் நண்பா ..?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இரண்டு வாரங்களில் மீண்டும் தொடரும். தங்கள் ஆர்வத்திற்கு நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை