விரட்டியடிக்கப்பட்ட நீர் சமூகங்கள்
"நீரைத் தவிர வேறேதும் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு இதை பராமரிக்கும் வேலையாவது கொடுங்கள்" என்று காலில் விழுந்தார்கள். முறையிட்டார்கள். போராடினார்கள். விரட்ட விரட்ட விலகாத நீர்போல மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்கள் முன்னே வந்து விழுந்தார்கள். இவர்களின் வேதனையை உணராத ஆங்கில அரசு, இனி ஏரிப் பக்கமே வரக்கூடாது என்று கட்டளையிட்டது. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.
* * * * * * *
தமிழ்நாட்டை சர்வே செய்வதற்காக 1774-ல் இந்தியா வந்த 'பெர்னார்ட்' என்ற ஆங்கிலேய இன்ஜினியர் தமிழகத்தின் நீர்நிலைகளைப் பார்த்து அசந்து போனார். அன்றைக்கு 44,000 பெரிய ஏரிகள் தமிழகத்தில் இருந்தன. "மொத்த நிலத்தின் ஐந்தில் ஒரு பங்கு நீர்நிலைகளாகவும் நீர் ஆதாரமாகவும் மாற்றியிருக்கிறார்கள்." என்று வியக்கிறார்.
இன்னொரு இன்ஜினியரான 'மேஜர் சாங்க்கே', "இந்தியர்கள் எந்தளவுக்கு நீர் அறுவடை அமைப்புகளை அமைத்திருக்கிறார்கள் என்றால், இனிமேல் புதிதாக ஒரு நீர்நிலையை அமைக்க வேண்டும் என்று நினைத்தால்கூட அதற்காக ஒரு இடத்தை தேடிக் கண்டுபிடிப்பது மிக மிகக் கடினம். அப்படி எல்லா இடங்களிலும் நீர்நிலைகளை அமைத்து மிக சிறப்பான நீர் மேலாண்மையைக் கொண்டிருந்தார்கள்." என்று பூரித்துப் போகிறார்.
ஆனால், இப்படி வியந்த ஆங்கிலேயர்களுக்கும், தொழிநுட்பம் தெரிந்த மேலைநாட்டு அறிஞர்களுக்கும் நமது நீர் மேலாண்மையை கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முடியவில்லை. அதை புரிந்து கொள்ளவும் அவர்கள் முயற்சி செய்யவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. அவர்களைப் பொருத்தவரை இந்தியர்கள் அடிமைகள்.
அடிமைகளிடமிருந்து தெரிந்து கொள்ள எந்தவொரு விஷயமும் இல்லை என்ற ஆணவமும், கோவணத்துடனும் குடுமியுடனும் திரிந்த இவர்களுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்து ஆடை அணியக் கற்றுத் தந்தவர்கள் நாம்தான் என்ற தப்பிதமும், அவர்களை சிந்திக்க விடாமல் தடுத்தது. அப்படியிருக்க அவர்களிடம் கற்றுக் கொள்ள என்ன தொழில்நுட்பம் இருக்கிறது? என்ற இறுமாப்பும் ஆங்கிலேயர்களுக்கு இருந்தது.
அதனால் ஆங்கிலேயர்கள் நம்மையும் மதிக்கவில்லை. நமது தொழிநுட்பத்தையும் மதிக்கவில்லை. தங்களுக்கு தோன்றியதையெல்லாம் செய்தார்கள். கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள்?
இந்தியர்களின் பிரதான தொழில் விவசாயம் என்பதையும், அந்த விவசாயம் செழிக்க நீர் முக்கியம் என்பதையும், அந்த நீரை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் இந்தியர்களை நினைத்தபடி ஆட்டிப்படைக்கலாம் என்றும் ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர்.
உடனே 'வருவாய் துறை' என்ற ஒன்றை உருவாக்கினார்கள். ஏரிகள், குளங்கள் என்ற எல்லா நீர்நிலைகளையும் அதன் கீழே கொண்டு வந்தார்கள். ஆங்கிலேய அரசின் அனுமதி பெறாமல் யாரும் ஏரிப் பக்கம் நடக்க கூட முடியாது என்ற கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வந்தார்கள்.
தலைமுறை தலைமுறையாக நீரோடு பந்தம் கொண்டிருந்த மக்களையும், அவற்றை கடவுளாக கொண்டாடிய மக்களிடம் இருந்து நீர்நிலைகளைப் பறித்தும் தங்கள் உயிரையே பறித்ததுபோல் துடித்துப் போனார்கள்.
நீரோடு பிறந்து நீரோடு வளர்ந்த நீரோடு தங்கள் வாழ்வை பிணைத்துக்கொண்ட 'நீர் சமூகங்கள்' தங்களின் உயிர் வேரை அறுத்ததுபோல் துடி துடித்தார்கள்.
"நீரைத் தவிர வேறேதும் எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு இதை பராமரிக்கும் வேலையாவது கொடுங்கள்" என்று காலில் விழுந்தார்கள். முறையிட்டார்கள். போராடினார்கள். விரட்ட விரட்ட விலகாத நீர்போல மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்கள் முன்னே வந்து விழுந்தார்கள். இவர்களின் வேதனையை உணராத ஆங்கில அரசு, இனி ஏரிப் பக்கமே வரக்கூடாது என்று கட்டளையிட்டது. அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.
"இந்த நீர் சமூகங்களுக்கு கிராம மக்கள் யாரும் உணவு தரக்கூடாது. தானியங்கள் கொடுக்கக்கூடாது." என்றும் உத்தரவிட்டது. நீராணிக்காரர்கள், நீர்கட்டியார், கரையர், மடையர், குளத்துப் பள்ளர் என்று ஆற்று நீரை ஏரியில் கொண்டு வந்து சேர்த்து, அந்த ஏரி நீரை வயல்களில் பாய்ச்சிய விவசாயத்திற்காகவே வாழ்ந்த ஒரு சமூகம் தனது சொந்த மக்களாலே புறக்கணிக்கப் பட்டார்கள். கிராமங்களில் இருந்து விரட்டியடிக்கப் பட்டார்கள்.
நீர் வேலைகளை தவிர வேறு எதுவும் தெரியாத நீர் சமூகத்தினர் வாழ வழியில்லாமல் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டனர். வேறு சிலர் தங்களது சொந்த கிராமங்களை விட்டு பஞ்சம் பிழைக்க வேறு ஊருக்கு குடி பெயர்ந்தார்கள்.
தங்களின் கண் முன்னே ஏரிகளும் குளங்களும் சீரழிவதை கண்டார்கள். குழந்தைப் போல நீர்நிலைகளை கவனித்த மக்கள் அவைகளின் அழிவைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தார்கள்.
நீர்நிலைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்தப் பின்தான் மேலும் பலப் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்தன.
அவற்றையும் பார்ப்போம்.
-தொடரும்
தொடர்புடைய பதிவுகள்
அன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஅய்ந்தில் ஒரு பங்கு நீர் நிலைகளாக வைத்திருந்த நம்மவர் அன்றைக்கும் குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற தகவல் மிகவும் கொடுமை...! இன்றைக்கும் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கின்ற அவல நிலை...!
த.ம.3
நீர் மேலாண்மையைத் தவிர வேறு எதுவும் தெரியாத அந்த மக்கள் பிழைக்க வேறு வழி தெரியாமலும் நீர்நிலைகளை விட்டு பிரிய முடியாமலும் தற்கொலை செய்து கொண்டார்கள். நீர் சமூகங்கள்தான் இப்படி நடந்து கொண்டதே தவிர விவசாயிகள் யாரும் அப்போது தற்கொலை செய்துகொள்ள வில்லை.
நீக்குவருகைக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!
படிக்கவே கொடுமையாக இருக்கிறது.
பதிலளிநீக்குதம +1
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குஎன்ன ஒரு வேதனை. கொடுமை கொடுமை. அன்றைக்கும் தற்கொலைகளா..இன்றைக்கும் அந்த அவலம் தொடர்கின்றதே....வேதனை...பலதகவல்கள் தெரிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குசரித்திரத்தில் இது வரை நான் அறியாத பக்கங்கள் .தொடர்கிறேன் ரசனையுடன் :)
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குகொடுமை நண்பரே
பதிலளிநீக்குகொடுமை
உண்மைதான், வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குதெரியாத ஆனால் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குவிரட்டி அடிக்கப் பட்ட நீர் சமுகங்கள்
பதிலளிநீக்குதொடர் பதிவு செல்கிறது நண்பரே தொல்லியல் ஆய்வினைப் போன்று. சிறப்பு!
நன்றி
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குதன் சொந்த மக்களாலே புறக்கணிக்கப்படுதல்,,, இது தான் இன்னமும் தொடர்கிறது வேறு விதமாக, அருமையாக சொல்லியுள்ளீர்கள், தொடர்கிறேன்.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ
நீக்குஇன்றைக்கும் சொந்த மக்களால்தான் அவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள்.
நீக்குதங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ!
நீக்குஐயோடா!படிக்கும் போதே மனம் கனக்கின்றது!இப்படியும் நடந்ததா?
பதிலளிநீக்குநம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை!
நீக்குஅறியாத விபரம் அறிந்தேன் நண்பரே நன்றி தொடர்கிறேன்
பதிலளிநீக்குதமிழ் மணம் 10
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
தங்களுக்கும் புத்தாண்டு வாழத்துகள் நண்பரே!
நீக்குஅன்பு நண்பரே,
பதிலளிநீக்குவணக்கம்.
"இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
தங்களுக்கும் புத்தாண்டு வாழத்துகள் நண்பரே!
நீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களுக்கும் புத்தாண்டு வாழத்துகள் நண்பரே!
நீக்குஅன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதங்களுக்கும் புத்தாண்டு வாழத்துகள் சகோ!
நீக்குமன்னிக்கவும். அன்புள்ள நண்பரே இந்த பதிவினிலும் நான் உமது கருத்தில் மாறுபடுகின்றேன். ஏனெனில் ஆங்கிலேயர் அன்னியர்களாக இருந்தபோதும், அவர்கள் வருகைக்குப் பிறகுதான் ஆறு, வாய்க்கால், குளம், ஏரி, போன்ற நீர்நிலைகள் பாதுகாக்கப் பட்டதாக படித்ததாக நினைவு. இன்றைக்கும் உள்ள மேட்டூர், முல்லைப் பெரியாறு போன்ற பிருமாண்ட அணைகளை அவர்கள்தான் கட்டினார்கள். மேஸ்திரி, லஸ்கர் போன்ற பதவிகளை கீழ்நிலை மக்களுக்குத் தந்தார்கள். (இன்று, தூர் வாராமலேயே தூர் வாரியதாக கணக்கு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள்.)
பதிலளிநீக்குநண்பரே, நீங்கள் மட்டுமல்ல. நானும் அப்படித்தான் நினைத்தேன். நாம் மட்டுமல்ல, எல்லோருமே அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் எழுதிய சரித்திரத்தை படித்து வளர்ந்த நாம் அப்படிதான் பேசுவோம். இந்த தொடரின் நோக்கமே அப்படி மறைக்கப்பட்ட சரித்திரத்தை சொல்வதும். நாம் மிகப் பெரிய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் என்பதை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்வதும்தான். தொடர்ந்து வரும் பதிவுகளில் உங்கள் கேள்விக்கான விடை உள்ளது நண்பரே, கருத்துக்கு நன்றி!
நீக்குஇந்த தகவல்களுக்கான ஆதரங்களையும் குறிப்பிடுங்கள். That increases the credibility of the articles.
நீக்குHope you don't mind it.
நண்பரே,
நீக்குஇந்த தொடர் விவசாயிகளுக்காக எழுதப்படுவது. இதில் ஆங்காங்கே ஆதாரங்கள் கொடுத்துக் கொண்டிருந்தால் அது ஆய்வுக் கட்டுரை போல் ஆகிவிடும். அதனால்தான் வெகுஜன பத்திரிகைகளிலும் எளிய மக்களுக்கான பத்திரிகைகளிலும் நாங்கள் ஆதாரங்கள் தருவதில்லை. அவர்களுக்கு வேண்டியது தகவல்தானே தவிர ஆதாரங்கள் இல்லை.
இந்த தொடரில் சில வாய்வழித் தகவல்களும் இருக்கின்றன. கிராமத்து மக்களிடமும் விவசாயிகளிடமும் இருந்து பெற்றது. பழ.கோமதிநாயகம் அவர்கள் எழுதிய 'தமிழர் பாசன வரலாறு' என்ற நூலில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. காலச்சுவடில் வெளிவந்த இயற்கை நியதிகளின் மீறல், இந்திய வேளாண்மையின் சரிவு, அவலநிலையில் தமிழக ஆறுகள் ஆகியவற்றிலிருந்தும், இன்னும் பல தரவுகளில் இருந்தும் இந்த தகவல்களை கடந்த இரண்டு வருடங்களாக திரட்டி வைத்திருந்தேன். 'நிலமும் நீரும்' என்ற தொடர் எழுதுவதற்காக திரட்டினேன்.
சென்னை வெள்ளம் வந்தவுடன் அதை நீருக்கான தொடராக மாற்றி எழுதினேன். புத்தகமாக வெளியிட்டால் இறுதியில் ஆதாரங்களை கொடுக்கலாம். ஆதாரங்களின் பட்டியல் மிகப் பெரியது.
தங்களின் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி நண்பரே!
நன்றி நண்பரே, கண்டிப்பாக வருகிறேன்.
பதிலளிநீக்குகருத்துரையிடுக