• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, ஜனவரி 09, 2016

  'பிரமோன்ஸ்' எனும் தகவல் தொடர்பு
  விலங்குகள், பூச்சிகள், சிற்றுயிர்கள் போன்றவைகள் தங்களுக்குள் எந்தவொரு ஓசையும் இன்றி அமைதியாக பரிமாறிக்கொள்ளும் ஒருவகை தகவல் தொடர்பே 'பிரமோன்ஸ்' எனப்படுகிறது. இது கண்களுக்கு புலப்படாது. இது ஒருவகை ஹார்மோன் போன்றது என்கிறார்கள் ஆய்வாளர்கள். உடலுக்குள்ளே உற்பத்தியாகி உடலுக்குள்ளே செயல்படுவதை ஹார்மோன் என்கிறோம். 


  அதுவே ஒரு உயிரினம் அதன் உடலுக்குள் உற்பத்தி செய்து காற்றில் வெளியேற்றப் பட்டு, அதை தனது கூட்டத்திற்கோ, இனத்திற்கோ தகவலாக தெரிவிப்பது 'பிரமோன்ஸ்' எனப்படும். இதற்கு நல்ல உதாரணம் தெரு நாய்கள். பெண் நாய் இனப்பெருக்கத்திற்கு தயாரானதும் ஒருவித பிரமோன்ஸை காற்றில் வெளியேற்றுகிறது. இந்த தகவல் ஒரு கி.மீ. சுற்றளவுக்கு காற்றில் பரவும். 

  அந்த சுற்றளவுக்குள் எத்தனை ஆண் நாய்கள் இருக்கின்றனவோ அத்தனைக்கும் இந்த தகவல் போய்சேர்ந்துவிடும். ஒரு பெண் உறவுக்கு தயாராக இருக்கிறாள் என்றதும், அடுத்த நொடியே காதல் வயப்பட்ட ஆண் நாய்கள் மகிழ்ச்சியோடு பெண் நாய் இருக்கும் இடத்தில் கூடிவிடும். அங்கு ஏற்கனவே மற்ற ஆண் நாய்கள் சண்டையிட்டு கொண்டிருக்கும். அந்த நாய்களில் எது வலிமையானதோ? எந்த நாய் வெற்றி பெறுகிறதோ? அந்த ஆண் நாய்க்கு உறவு கொள்ள பெண் நாய் அனுமதியளிக்கும். தனது வாரிசை வலிமையாக உருவாக்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடு இது. 

  இந்த 'பிரமோன்ஸ்' ஏதோ உடலுறவுக்கு மட்டும் பயன்படும் சங்கதி என்று நினைத்துவிடாதீர்கள். இது எந்த விதமான தகவல்களாகவும் இருக்கலாம்.எச்சரிக்கை விடுப்பது, உதவிக்கு அழைப்பது, இனப்பெருக்கதிற்கு தயார் என்று அறிவிப்பது, தாயும்-பிள்ளையும் இணைப்பது, வழிநடத்தி செல்வது என்று பலவகையான தகவல்கள் பல்வேறு வித பிரமோன்களால் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன.

  தேனீக்களில் ஒன்றை சீண்டினால் கூட ஒட்டுமொத்த தேனீக்களும் ஒன்று சேர்ந்து நம்மை தாக்குவதுகூட அந்த ஒரு தேனீ தனக்கு ஆபத்து என்று மற்ற தேனீக்களுக்கு பிரமோன்களை அனுப்புவதுதான். 

  இந்த பிரமோன்ஸ் மூலம் பலவித ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இவற்றைக்கொண்டு விவசாயத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது, யானை போன்ற வனவிலங்குகளை கட்டுப்படுத்துவது போன்றவற்றை செய்யமுடியும் என்கிறார்கள். அதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.


  மனிதர்களிடம் பிரமோன்ஸ் இருக்கிறதா என்ற ஆய்வும் நடைபெறுகிறது. பாக்டீரியா பாதிக்காத வியர்வை மணம் எதிர் பாலினத்தவற்கு பாலியல் உணர்வை தூண்டுவதாக சொல்கிறார்கள். அதேபோல் பெண்களின் கண்ணீரிலும் ஒருவித 'பிரமோன்ஸ்' இருக்கலாம் என்று கூறுகிறார்கள். அது ஆண்களின் பாலியல் எண்ணத்தை தடுத்து குறைப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

  மனிதர்கள் மீதான இந்த ஆய்வுகள் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால் இனி வாசனை திரவியங்களில் 'பிரமோன்ஸ்' என்ற வஸ்துவையும் கலந்து விடுவார்கள். ஆண்களும் பெண்களும் இந்த வாசனையில் மயங்கி பின்தொடர்வது அதிகரிக்கும்.


  படங்கள்: கூகுள் இமேஜ்


  44 கருத்துகள்:

  1. ஐந்தறிவுக்கே இருக்குன்னா ஆறறிவுக்கு இல்லாமலா போய்விடும் ?சீக்கிரமே கண்டு பிடிப்பார்களாக :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முதல் வருகைக்கு நன்றி நண்பரே, ஐந்தறிவுக்குத்தான் நிறைய விஷயங்கள் தெரிகின்றன. நாமெல்லாம் கருவிகளோடு வாழ்வதால் நமக்கு அந்த பவர் எல்லாம் விட்டுப் போய்விட்டது.

    நீக்கு
  2. கருத்தை போட்டு விட்டு பார்த்தால், பெண்ணின் படம் மாறிவிட்டதே ,ஏன் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அந்தப் படம் பொருத்தமாக இல்லை என்பதால் மாற்றிவிட்டேன். கண்ணீரோடு இருக்கும் பெண்ணின் படம் அங்கு இருப்பதுதான் பொருத்தம் என்று மாற்றிவிட்டேன்.

    நீக்கு
  3. எத்தனை துறைகள்தான் உங்கள் வசம் இருக்கின்றன.

   விசாலமான வாசிப்பு. வியப்பு.

   அறிவை விரிவு செய் அகண்டமாக்கு என பாரதிதாசன் உங்களைப் பார்த்தால் சொல்லி இருக்க மாட்டார் என்று தோன்றுகிறது.

   த ம +

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிகப் பெரிய வார்த்தைகளை சொல்கிறீர்கள் நண்பரே, நான் அந்த அளவிற்கு இல்லை. தாங்கள் கூறியதுபோல் வர முயற்சிக்கிறேன்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  4. பிரமோன்ஸ் பற்றி அறியத்தந்துள்ளீர்கள். இது மிகவும் புதிய தகவல்களாகவும், சுவாரஸ்யமாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி அய்யா! தங்களின் வருகையும் கருத்தும் உற்சாகம் அளிக்கிறது.

    நீக்கு
  5. வியப்பிற்குரிய செய்திகள் அணிவகுக்கும் பதிவு அல்லவா தங்களின் பதிவு
   அறியாத செய்திகள்அறிந்தேன்நன்றி நண்பரே
   தம +1

   பதிலளிநீக்கு
  6. அருமையான தகவலை பகிர்ந்துகொள்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை.பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு
  7. ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது நண்பரே...இந்த பிரமோன்ஸ்

   பதிலளிநீக்கு
  8. ஆச்சரியமாய்த்தான் இருக்கிறது நண்பரே...இந்த பிரமோன்ஸ்

   பதிலளிநீக்கு
  9. பிரமோன்ஸ்.... வித்தியாசமான தகவல். நன்றி நண்பரே.....

   பதிலளிநீக்கு
  10. இந்தப் ஃபெர்மோன்ஸ் தான் பெண்கள் கூந்தல் ரகசியத்தைப் பற்றிய விவாதத்தில் அன்று முக்கண்ணனின் மூன்றாவதுகண்ணைத் திறக்கவைத்து, நெற்ற்க்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று பேசவைத்தது. இதைப் பற்றிய ஒரு பதிவு எங்கள் தளத்தில் எழுதியிருக்கின்றோம் ஒரு சின்ன நகைச்சுவையுடன்.

   ஸ்கங் எனும் விலங்கு தன்னைத் தாக்க வரும் எதிரியை விரட்ட ஒரு வித வாயுவை வெளியேற்றும். அது மிக மிக வாடை அடிக்கும். எதிரிகள் கூட அருகில் வர முடியாத அளவிற்கு. ஆம் பெண் நாய்களின் ஃபெர்மோன்ஸ் தான் ஆண் நாய்களை இழுத்து பல ஆண் நாய்களுக்குள் சண்டைகளும் நடக்கும். இது இனப்பெருக்க ஃப்ரெமோன்ஸ். தேனீக்களது எச்சரிக்கை - அலார்ம் வகை ஃபெர்மோன்ஸ்

   ஃபெர்மோன்ஸில் வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதத்தில் உதவும். எழுத நினைத்து அதை நகைச்சுவையுடன் முடித்துக் கொண்டோம். பதிவு நீண்டுவிடும் என்பதால். அதில் நான் வகைகள் குறித்தும் எழுதி வைத்து தொடராக வெளியிடாமல் வைத்துவிட்டேன்.

   தாங்கள் தமிழில் அழகாக சுருக்கமாக எழுதுகின்றீர்கள். எனக்கு அந்தத் திறமை இல்லாததால் பல தகவல்கள் பாதியாக எழுதப்பட்டு அப்படியே இருக்கின்றன. தொடராக எழுதினால் எவ்வளவு தூரம் ரீச் ஆகும் என்று தெரியவில்லை. ஒரு தயக்கம் இருக்கின்றது.

   அருமையான பதிவு எல்லோரும் அறியத்தக்க வகையில். பாராட்டுகள் சகோ..

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பல தகவல்களை தாங்கள் அறிந்து வைத்திருப்பது பிரமிக்க வைக்கிறது. முடிந்த வரை எல்லாவற்றையும் எழுதுங்கள். வாசிக்க காத்திருக்கிறோம். வருகைக்கு நன்றி நண்பர்களே!

    நீக்கு
  11. விளக்கவுரை அருமை நண்பரே ஆச்சர்யமான தகவலும்
   தமிழ் மணம் 11

   பதிலளிநீக்கு
  12. அசத்துங்கள் செந்தில்ஜி ...
   உண்மையில் இது பெரும் தமிழ்சேவை...
   வாய்ப்பும் நேரமும் இருந்தால் வகுப்பிலேயே பகிரலாம்
   தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி
   தம +

   பதிலளிநீக்கு
  13. சிறந்த அறிவியல் பதிவு
   மூளைக்கு வேலை தரும் பதிவு
   சிந்திக்கச் சிறந்த அலசல்
   தொடருங்கள்

   பதிலளிநீக்கு
  14. ஆச்சர்யமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  15. அன்புள்ள அய்யா,

   ‘பிரமோன்ஸ்’ பற்றிய பல தகவல்களை அறிந்து கொள்ளச் செய்தீர்கள்.

   நன்றி.
   த.ம.14

   பதிலளிநீக்கு
  16. பிரமோன்ஸ் பற்றிய பல புதிய தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி செந்தில்.

   உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருப்பின் தொடரவும்.

   http://geethamanjari.blogspot.com.au/2016/01/blog-post.html

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி சகோ! தொடர் பதிவை தொடர முயற்சிக்கிறேன்.

    நீக்கு
  17. சுவாரஸ்யமான தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள் ...!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்