சாலை பாதுகாப்பு வாரம் (10-16 ஜன. 2016)
உலகிலேய மோசமான டிரைவர்கள் இருபது இந்தியாவில்தான் என்கிறது ஒரு ஆய்வு. அதேபோல் உலகிலே அதிக வாகன விபத்துக்கள் நடப்பதும் இந்தியாவில்தான் என்று மேலும் அந்த ஆய்வு கூறுகிறது. இதற்கு காரணமாக அவர்கள் சொல்வது குடிபோதையில் மிதக்கும் டிரைவர்கள், அதற்கடுத்த காரணம் முறையான ஓட்டுனர் பயிற்சி இல்லாமை. மூன்றாவது டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் உள்ள குளறுபடிகள்.
உலகிலேயே அதிக சாலைக் கொலைகள் இந்தியாவில்தான் நடைபெறுகின்றன. சாலை கொலையாளிகள் அதிகம் இருக்கும் நாடு இந்திய என்கிறது அந்த ஆய்வு.
இந்தியாவில் இருக்கும் வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 1.30 கோடி தான். இவை வருடத்துக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் மரணங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால், 25 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கும் அமெரிக்காவில் வருடத்துக்கு 41 ஆயிரம் மரணங்களே நிகழ்கின்றன. இந்தியாவில் 100 கார்களுக்கு ஒரு சாலை மரணம் ஏற்படுகிறது. அமெரிக்காவில் 5 ஆயிரம் கார்களுக்கு ஒரு மரணமே ஏற்படுகிறது.
ஏன் இந்த வித்தியாசம்? அமெரிக்கர்கள் குடிப்பதில்லையா? அவர்கள் வேகமாக கார் ஓட்டுவதில்லையா? என்ற கேள்வி நமக்கு தோன்றத்தான் செய்கிறது. வளரும் நாடுகளில் வாகனங்களின் சராசரி வேக வரம்பே இந்தியாவைவிட அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 300 கி.மீ.க்கு மேல் வேகமாக செல்லக்கூடிய வாகனங்களும் சாலைகளும் உள்ளன. ஆனால், அவர்கள் எப்படி தொடர்ந்து விபத்துக்களை கட்டுக்குள் வைத்துக் கொள்கிறார்கள்?
அமெரிக்காவில் சாதாரண டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கே கடுமையான விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் உள்ளன. இளைஞர்கள் உரிமம் பெற்ற முதல் ஆண்டு வாகன ஒட்டுதலில்தான் நிறைய விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதை தெளிவாக கணித்த வளர்ந்த நாடுகள், அந்த காலக்கட்டத்தில் அவர்கள் மட்டும் தனியாக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதித்து சட்டங்களை இயற்றி உள்ளன. அனுபவம் வாய்ந்த டிரைவர்களை கூடவே வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் பைக் என்றால் 125 சிசி-க்கு மேல் ஓட்டுவதற்கு லைசென்ஸ் கொடுப்பதில்லை. சாலை மரணங்களை குறைப்பதற்கு பல நாடுகள் கோடிக்கணக்கில் செலவழிக்கின்றன. ஆல்கஹால் சென்சார் கருவிகள், சீட் பெல்ட், அலாரங்கள், ஆட்டோமேடிக் ஸ்பீடு கண்ட்ரோல் போன்றவற்றை கண்டுபிடித்து வருகின்றன.
பத்து ஆண்டுகளில் சாலை மரணங்களை 20 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமேரிக்கா முடிவு செய்திருக்கிறது. இங்கிலாந்து 40 சதவீதத்தை இலக்காக வைத்திருக்கிறது. மலேசியா போன்ற நாடுகள் கூட 10 ஆயிரம் வாகனங்களுக்கு 3 விபத்துக்களாக குறைப்பதில் உறுதியுடன் உள்ளன.
ஸ்வீடன் போன்ற நாடுகளில் சாலை மரணம் 1997-ல் இருந்து பூஜ்ஜியமாக வைத்திருக்கிறது. அங்கு விபத்தால் ஒரு மரணம் கூட நிகழவில்லை. இதன் மூலம் சாலைவிபத்து முற்றிலும் தடுக்கக் கூடியதே என்று இந்த நாடு உலகத்துக்கே நிரூபித்து காட்டியுள்ளது.
குடிபோதை இல்லாமல், சிறந்த திறமைமிக்க டிரைவர்கள் தங்கள் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், தற்கொலை செய்ய விரும்பி வாகனம் முன்விழும் நபரைக் கூட காப்பாற்ற முடியும். உலகின் மோசமான டிரைவர்கள் என்ற பெயரை இந்திய டிரைவர்கள் உடைக்கவும் முடியும். சாலை விபத்துக்களில் உலகில் முன்னணி நாடாக இருக்கும் இந்தியாவை பின்னுக்கு தள்ளவும் முடியும்.
அருமையான பதிவு நண்பரே உலகிலேயே 0 பாய்ண்ட் விபத்து நடப்பது ஸ்வீடன் நாட்டில்தான் அதனைப்பற்றி விரிவாக எழுதிக்கொண்டு இருக்கின்றேன் நண்பரே....
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
முதல் வருகைக்கும் முதல் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே! ஸ்வீடனைப் பற்றி எழுதுங்கள்.
நீக்குமிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல்களாக உள்ளன. இந்தியாவின் இன்றைய சாலைகளும், சாலைப் பராமரிப்புகளும், இன்னும் எவ்வளவோ முன்னேற்றம் காணப்பட வேண்டியதாக உள்ளன.
பதிலளிநீக்குஉண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குவிவேக் ஒரு படத்தில் சொல்லுவார் - லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டு, ரைட்ல கையக் காட்டிடு, ஸ்ட்ரெய்ட்டா போறவன் - என்று. என்னைப் பொருத்தவரையில், விபத்துகளுக்கு முழுமுதற் காரணம், சாலை விதிகளை பின்பற்றாதது, அதாவது தெனாவட்டாக, அவர் மட்டுமே சாலையில் செல்லுவதாகக் கருதிக் கொண்டு வண்டி ஓட்டுவது. அடுத்து செல்போன் பேசிக் கொண்டுக் ஓட்டுதல். சாலை விதியைப் பின்பற்றாவதருக்கு சிறை தண்டனையும், செல்போன் பேசிக் கொண்டு ஓட்டுபவருக்கு தூக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். எனக்கு அவ்வளவு ஆத்திரம். சாலை சரியில்லை, உரிமம் வழங்குவதில் முறைகேடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே. வண்டி ஓட்டும் ஒவ்வொருவருக்கும் சுயக் கட்டுபாடு என்பது 100% இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குகண்டிப்பாக சுயக்கட்டுப்பாடு அதிகம் வேண்டும். வருகைக்கு நன்றி!
நீக்குமிகவும் அருமையான பதிவு. சில புள்ளிகளை நான் எடுத்துக் கொள்ளலாமா தோழர்
பதிலளிநீக்குதாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தோழரே!
நீக்குநம் அரசாங்கங்கள் உள்ள வேலையையே ஒழுங்காகச் செய்வதில்லை. இது போல எல்லாம் யோசித்துச் செயல்பட ஆரம்பித்து விட்டால் எவ்வளவோ நன்றாயிருக்குமே..
பதிலளிநீக்குதம +1
நன்றாகத்தான் இருக்கும். பார்ப்போம்.
நீக்குஅருமையான பதிவு சகோ
பதிலளிநீக்குநீண்ட காலத்திற்குப் பின் வலைப்பக்கம் வந்து கருத்திட்டதற்கு நன்றி சகோ!
நீக்குஅருமையான பதிவு சகோ
பதிலளிநீக்குநன்றி சகோ!
நீக்குதேவையான அருமையான பதிவு நண்பர்.
பதிலளிநீக்குநண்பர் ஒருவர் அனுப்பிய இந்திய தமிழ்பதிவு ஒன்று இன்று தான் படித்தேன். 2500 km தூக்காம கார் ஓட்டியதை ஒரு சாதனையாக சொல்லும் அபந்த இந்திய பதிவு.தவறுகளை சாதனைகளாக நினைக்கும் மனநிலையும் மாற வேண்டும்.
சரியாக சொன்னீர்கள். இதுமட்டுமல்ல நிறைய தவறுகள்தான் சாதனையாகவே உள்ளது. வருகைக்கு நன்றி!
நீக்குஅமெரிக்காவில் நடை முறையில் இருக்கும் சில. ஓட்டுனர் குடித்திருக்க வேண்டாம். திறந்த நிலையில் ஆல்கஹால் பாட்டில் இருந்தாலே அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வண்டி ஓட்டி விபத்து நிகழ்ந்தால், அதுவும் மற்றவர் மரணம் அடைந்தால், அது கொலை எனக் கருதப் படும். அதற்க்கு ஏற்றார் போல் தண்டனை உண்டு. குடித்து விட்டு வண்டி ஓட்டினால் உரிமம் ரத்து செய்யப் படும். அமெரிக்காவில் மிகச் சில நகரங்களில் மட்டுமே பொது வாகன சேவை என்பதால், வண்டி ஓட்ட முடியவில்லை என்றால், அலுவலகம் செல்வது முதல் அனைத்துமே பாதிக்கப் படும் என்பதால், அதன் பாதிப்பு வாழ்வில் பெருமளவு பிரதிபலிக்கும். அதே போல அபராதத் தொகை மிக மிக அதிகம்.
பதிலளிநீக்குவிபத்துகள் குறைவதற்கு இவையும் காரணம் என நினைக்கிறேன்.
மது அருந்தாமல் வாகனம் ஒட்டினாலே நிறைய விபத்துக்களை தடுத்துவிடலாம். இங்கு மதுவும் லஞ்சமும் தலைவிரித்து ஆடுகிறது. இவர்களால் எதிரே எந்த தவறும் செய்யாமல் சாலையில் வருபவர்கள் பாதிக்கப் படுகிறார்கள்.
நீக்குநம்ம ஊர் ஜனத்தொகை கூடுதல் ,அதே விகிதத்தில் ,சாவு எண்ணிக்கையும் கூடத்தானே செய்யும் :)
பதிலளிநீக்குஅதனால்தான் ஒரு லட்சம் பேருக்கு இத்தனை விபத்து, ஆயிரம் வாகனங்களுக்கு இத்தனை விபத்து என்று வைத்திருக்கிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் பார்த்தால் எல்லாவற்றிலும் இந்தியாவும் சீனாவும் முதலிடத்தில் இருக்கும்.
நீக்குவருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
அதிர்ச்சி தரக்கூடிய ஆனால் உண்மையான செய்திகள். கவனக்குறைவும், அலட்சியமும் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம்.
பதிலளிநீக்குஉண்மைதான். மாற வேண்டும்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நம் நாட்டிற்கு இலக்கு வேறு பல விசயங்களில்...
பதிலளிநீக்குஎத்தனை பேர் இறந்தார்கள் என்பது முக்கியமில்லை. டாஸ்மாக்கில் நாம் முதலிடத்தில் இருக்கிறோமோ. இலக்கை அடைந்தோமா என்பதே முக்கியம்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
அனைவரும் படிக்க வேண்டிய பதிவு!பயன்மிகு பதிதிவு!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குமற்ற நாடுகள் சாலை விபத்தில் உயிர் இழப்போரை பூஜ்ஜியத்தில் வைத்திருக்கும்போது
பதிலளிநீக்குநம்மால் முடியாதா?
மற்ற நாடுகள் பற்றிப் படிக்கப் படிக்க ஏக்கமாக இருக்கிறது நண்பரே
தம +1
வெளிநாடுகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றால் இந்த மாதிரி விஷயங்களில் பின்பற்றவேண்டும். அதைவிட்டு அவர்கள் செய்யும் தவறுகளை மட்டும் நம் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். வருகைக்குநன்றி நண்பரே!
நீக்குபொருத்தமான வேளையில் பொருத்தமான கட்டுரை.!
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே!
த ம
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
நீக்குவருந்த வைக்கும் உண்மை! சிறப்பான பதிவு! நன்றி!
பதிலளிநீக்குவருத்தம் தான் நண்பரே! வருகைக்கு நன்றி!
நீக்குசகோ நீங்கள் சொல்லியிருக்கும் அந்த மூன்று காரணங்களும் தான் காரணம். ஹும் இந்தியா இது போன்ற தேவையற்றவற்றில் எல்லாம் முதலிடம்!!! வேதனைக்குரியது. எங்கள் பதிவுகள் இதைப் பற்றி முன்பு இரண்டோ மூன்றோ உள்ளது. அதுவும் இந்தியாவில் தமிழ்நாடுதான் முதலிடம் சகோ. இதைப் பற்றிய இடுகையும் எங்கள் தளத்தில் போட்டோம்.
பதிலளிநீக்குகீதா: அமெரிக்காவில் கடுமையான சட்டங்கள் ஓட்டுவதில் உண்டு. அங்கு அவ்வளவு எளிதாக அதுவும் கலிஃபோர்னியா மாநிலத்தில் எல்லாம் உரிமம் வாங்கிவிட இயலாது. அங்கு பொது போக்குவரத்தும் எல்லா மாநிலங்களிலும் கிடையாது என்பதால் அங்கு செல்பவர்கள் கண்டிப்பாக உரிமம் பெற்றே ஆக வேண்டியதுண்டு. மட்டுமல்ல இங்கிருந்து தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்குச் செல்பவர்கள் கூட இங்கு கார் ஓட்டியிருந்தாலும் அங்கு சென்று ஓட்ட முடியாததால், பொது போக்குவரத்து இல்லை என்றால் குழந்தைகளை நம்பி வார இறுதி விடுமுறை வரைப் பொறுமை காத்து வெளியில் செல்ல வேண்டும் என்பதால் மிகவும் பொழுது போகாமல் கஷ்டப்படுபவர்களும் உண்டு. சிங்கப்பூரிலும் கடுமையான விதிகள்தான். அத்தனை எளிதாகக் காரும் வாங்கிட முடியாது உரிமமும் பெற்றுவிடமுடியாது. மிகக் மிகக் கடுமையானது. ஆனால் பொதுப் போக்குவரத்து நன்றாக இருப்பதால் இங்கிருந்து செல்பவர்கள் எளிதாக உணர்வார்கள். சிங்கப்பூர் மலேசியா எல்லாமே அந்த விதத்தில் சிறப்பானவை. அது போன்று லண்டன். அங்கும் பொதுப் போக்குவரத்து நன்றாக இருக்கும். அங்கெல்லாம் விபத்துகளில் மாட்டிக் கொண்டால் மிகப் பெரிய விபத்தென்றால் அவ்வளவுதான். சிரைவாசம், அபராதம் நம் சொத்தையே எழுதிவைக்கும் நிலை...உரிமம் ரத்து என்று.... சிறிய விபத்து என்றாலே நமது லைசன்சில் ஒரு கருப்புப் புள்ளி வைத்துவிடுவார்கள். அதுவும் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு சட்டங்கள்.
இங்கு போல் தலையைக் கூடக் காட்டாமல் உரிமம் பெற முடியாது எந்த ஊர்களிலும். இந்தியா அதிலும் டாப்!!!!! எப்போது இதற்கெல்லாம் விடிவுகாலம் வருமோ தெரியாது...நீங்கள் சொல்லி இருப்பது போல் ஸ்வீடன் போன்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் நல்ல முறையில் உயிருக்கு மதிப்பு கொடுத்து விதிகள்.
நம்ம ஊரில் இது போன்ற கடுமையான விதிகள் வந்தால் மட்டுமே சாலை விபத்துகளைக் குறைக்க முடியும். வேகத்திற்கான தடைகள், ஆங்காங்கே சைன் போர்டுகள், நல்ல சாலைகள் எல்லாமெ அவசியமாகப்படுகின்றது. லா என்ஃபோர்ஸ்மென்ட் நம்மூர்ருக்கு எல்லாவற்றிலும் மிக மிகத் தேவை.
அருமையான பதிவு
தங்களின் விரிவான பின்னூட்டம் பல விவரங்களை தெரிவிக்கிறது. நம் நாட்டிலும் சட்டங்கள் கடுமையானால் ஓரளவு விபத்துகள் குறையும். செய்வார்களா!
நீக்குவருகைக்கு நன்றி நண்பர்களே!
இங்கே இப்போதெல்லாம் வாகன அனுமதிப்பத்திரத்துக்காக சட்டங்களில் ரெம்ப இறுக்கம். சாரதி அனுமதிப்பத்திரம் எடுத்து மூன்று வருடங்கள் விபத்துகளில் மாட்டக்கூடாது,ஒரு மாதத்துக்குள் மூன்று தடவை சிக்னல் விதிமீறல் கூடாது ஸ்பீட் லிமிட் அதிகமானால் லைசென்ஸ் பறிமுதல் என ரெம்ப இறுக்கி கொண்டு வருகின்றார்கள்.
பதிலளிநீக்குஇந்தியாவின் நிலை யோசனைக்குரியதே!மனித உயிர்களுக்கு அத்தனை தான் மதிப்பு. ஸ்பெயின் ஹைவேக்கள் மிக விசாலமைனவை என்பதோடு ஹைவேக்களில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது பனிக்கட்டி மழையும் கொட்ட ஆரம்பிக்கும் தீடிர் தீடிரென கால நிலை மாறி பனிக்கட்டி மழை கொட்டினாலும் அங்கே விபத்துகள் குறைவே!
உணமைதான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தியாவும் அப்படி மாறிடும் பொன்னாள் எந்நாளோ?
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் அங்குள்ள நடைமுறைகளை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி நிஷா!
அருமையான கட்டுரை.விதிமுறைகளை பின்பற்ற சிறிதும் விருப்பம் இல்லாதவர்களாக இருப்பது விபத்துகளுக்கு காரணம்.லசன்சே இல்லாம போறோமா ஐம்பதோ நூறோ கொடுத்தா விட்டுடப் போறான் என்ற மனோபாவம் எல்லோரிடத்தும் அமைந்திருப்பது தவிர்க்கப் படவேண்டும்
பதிலளிநீக்குநீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குபயனுள்ள பதிவு நண்பரே..
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குபலருக்கும் பயனுள்ள வகையில் இப்பதிவு அமைந்துள்ளது ஐயா.
பதிலளிநீக்குகருத்துரையிடுக