• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், ஜனவரி 13, 2016

  முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் ராஜ நாகம்  லகில் கிட்டத்தட்ட 2,900 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. இவற்றில் 10 செ.மீ. நீளம் கொண்ட 'நூல்' பாம்பு முதல் 28 அடி நீளம் கொண்ட 'அனகோண்டா' பாம்பு வரை வகை வகையாய் இருக்கின்றன. 

  இந்த பாம்பு இனங்களுள் ஒரேயொரு இனம் மட்டும்தான் பறவைகளைப் போல் கூடு கட்டி முட்டை இட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கும். அந்த பாம்பினத்தின் பெயர் ராஜநாகம். இந்த வகைப் பாம்புகள் இந்தியா, மலேசியா,  தென்சீனா, வியட் நாம் போன்ற நாடுகளிலும், தெற்கு ஆசியப் பகுதிகளிலும்,  வடக்கு ஆப்பிரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளிலும்  காணப்படுகின்றன.


  இந்த ராஜ நாகத்திலும் 200 இனங்கள் உள்ளன. இவைகள் மற்ற பாம்புகளைவிட புத்திசாலிகள். இவற்றின் கண்பார்வை மிகக் கூர்மையானது. 330 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளைக்கூட தெளிவாக துல்லியமாக பார்க்கமுடியும். இரவிலும் இதன் பார்வை படு தெளிவு. ராஜ நாகம் எப்போதும் மற்ற பாம்புகளையே உணவாக உட்கொள்ளும். அப்படி பாம்புகள் கிடைக்காத போது ஓணான், அணில், பறவைகள் போன்றவற்றை உண்ணும். 


  ராஜ நாகங்களில் ஆண், பெண் இரண்டுமே இணைவதற்கு முன்பு ஒருவிதமான புனுகு வாசனையை வெளிப்படுத்தும். இதுவே நாகப்பாம்பு என்றால் உளுந்து வாசனை வரும். இந்த வாசனை வைத்துதான் கிராமப்புறங்களில் பாம்பு இருப்பதை கண்டுபிடித்து விடுகிறார்கள். 


  ராஜ நாகங்களில் ஆண், பெண் இணை சேர்ந்தப் பின் 2 மாதம் கழித்து பெண் முட்டையிடும். அந்த முட்டைகளை அடைகாப்பதற்காக இலை, செத்தை, மரக் குப்பைகளை சேர்த்து கூடு கட்டும். அதன்பின் அடை காக்கும். ஆண் பாம்பு பெண்ணையும் முட்டைகளையும் பாதுகாக்கும். 60 - 90 நாட்களில் குஞ்சுகள் வெளிவரத் தொடங்கும். அவைகள் 50 செ.மீ. நீளம் இருக்கும். முட்டையில் இருந்து குஞ்சுகள் வந்ததும் தாய் விலகி விடும். குஞ்சுகள் தன்னந்தனியாக சுயமாக வளரும். இந்த குஞ்சுகளின் விஷம் கூட பெரியப் பாம்புகளின் விஷம் போலவே வீரியமாக இருக்கும். 


  ராஜ நாகம் சாதரணமாக 18 அடி வளரக்கூடியது. நுனிவாலை மட்டும் தரையில் பதித்து நேராக நிமிர்ந்து 6 அடி உயரத்துக்கு எழுந்து நின்று மனிதனை ஆட்டம்காண வைக்கும் வல்லமை அதற்கு உண்டு. உலகிலேயே கொடுமையான விஷம் கொண்ட பாம்புகளில் இதுவும் ஒன்று. இந்தப் பாம்புகள் 20 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியது. 


  சாதாரணமாக மனிதனைப் பார்த்ததும் பயந்து ஒதுங்கிக்கொள்ளும் தன்மைக் கொண்டது. சீண்டினால் நேருக்குநேராக எதிர்த்து தாக்கும் தன்மைக் கொண்டது. இது ஒருமுறை கடித்தால் 7 மி.லி. விஷத்தை செலுத்தும். அது 20 மனிதர்களைக் கொல்ல போதுமானது. ஒரு யானையையும் கொல்லும். அந்த கடி 1.5 செ.மீ. ஆழமான காயத்தை ஏற்படுத்தும். விஷம் நேரடியாக மைய நரம்பு மண்டலத்தை தாக்கும். முதலில் கண் பார்வை மங்கும், தலைச் சுற்றி, கை கால்களை அசைக்க முடியாத பக்கவாதம் ஏற்படும். இதய ரத்தக் குழாய்கள் சிதைந்து, கோமா நிலை ஏற்படும். மூச்சு திணறி மரணம் சம்பவிக்கும். 


  ராஜ நாகம் கடித்தால் அதிகபட்சமாக 15 நிமிடங்கள் வரை உயிர் இருக்கும். இது கடித்தவர்களில் 80 சதவீதம் பேர் மரணத்தையே தழுவியிருக்கிறார்கள். அத்தனை கொடிய விஷம் கொண்டது இந்தப் பாம்பு.  54 கருத்துகள்:

  1. விஷத்தைக் கக்கிடும் படு பயங்கரமான செய்திகளாக உள்ளன. முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்ற செய்தியும் ஆச்சர்யமாக உள்ளது. ராஜநாகப் பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாம்பு இனங்களில் இன்னும் சில வகைகள் கூட முட்டையிடுகின்றன. ஆனால் அவைகள் அடைகாப்பதில்லை. ராஜநாகம் மட்டுமே முட்டையிட்டு அடைகாக்கும் குணம் கொண்டவை.
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  2. படங்கள் அனைத்தும் பயங்கரமாகவும், மிக நன்றாகவும், கலப்படமே இல்லாத தெளிவான விஷத்தன்மையுடனும் உள்ளன. :) பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. //கலப்படமே இல்லாத தெளிவான விஷத்தன்மையுடன்//
    படங்களில் உள்ள அச்சத்தை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள். நன்றி அய்யா!

    நீக்கு
  3. படங்களும் தகவல்களும் அச்சுறுத்துகின்றன! போனவாரம்தான் ஒரு பாம்பை அடிச்சேன்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  4. ராஜநாகம் பற்றிப் படித்திருக்கிறேன். என்றாலும் இவ்வளவு துல்லியமான தகவல்களுடன், மேலதிகத் தகவல்களுடன் அமைந்த தங்கள் பதிவில் நிறைய தெரிந்து கொண்டேன்.
   தொடர்கிறேன்.
   தம

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  6. படித்திருக்கிறேன் என்றாலும் சுவாரஸ்யமான தகவல்கள்.
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. பதில்கள்
   1. அந்தப் பெண்ணின் தைரியத்தை சொல்கிறீர்களா!

    நீக்கு
  8. ஆத்தாடி பிரமிப்பான தகவல் நண்பரே..
   தமிழ் மணம் 5

   பதிலளிநீக்கு
  9. குஞ்சுகளின் விஷம் கூட வீரியமா ?கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போலவா :)

   பதிலளிநீக்கு
  10. குஞ்சுகளின் விஷம் கூட வீரியமா ?கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போலவா :)

   பதிலளிநீக்கு
  11. பாம்புகள் முட்டை இட்டு குஞ்சுகள் பொரிப்பது சின்ன வயதில் நான் ஊரிலிருக்கும் போதே கேள்விப்பட்ட விடயம் தானே?இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது என புரியவில்ல்லை. பாம்பு முட்டையும் கோழி முட்டை போல் இருக்கும் ஆனால் அளவில் சிறியதாய் இருக்கும். கோழிக்கூண்டுக்குள் போய் முட்டை யிட்டு விட்டு கோழி முட்டையை அபேஸ் செய்யும் புத்திசாலி பாம்புகளும் உண்டே!

   அம்மன் கோயிலில் இருக்கும் நாகத்துக்கு பால் வைக்கணும் என வெள்ளிக்கிழமைகளில் புதுசட்டியை வாங்கி வந்து பாலை ஊற்று தருவார் அம்மம்மா. கொண்டு போய் ஆல மரத்தின்கிளைகளில் பால் சட்டி விழுந்து உடையாமல் பத்திரமாக வைத்து விட்டு வருவோம்...! மறு நாள் காலையில் போனால் சட்டியில் பால் இருக்காது.

   ஆனால் பாம்புக்கு பால் வாசனை பிடிக்காது என படித்தறிந்ததிலிருந்து நாங்கள் கொண்டு வைத்த பாலை யார் குடித்திருப்பார் எனும் கேள்வி எனக்குள் எழுவதுண்டு. மண்ச்ட்டி என்பதால் சட்டியில் ஊறி இருக்குமா எனவும் புரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

   பாம்பென்றால் படையே நடுங்கும் எனில் எனக்கு படங்களில் பாம்பையும் கரப்பானையும் பார்த்தால் அருவருப்பில் உடலே ஒடுங்கும்.பத்தடி தள்ளி நிற்கும் நான் உங்களுக்காக தைரியமாய் பாம்மை பற்றி படித்ததும் இல்லாமல் கருத்தும் இட்டிருக்கின்றேன்.

   அதனால் எனக்கு பொங்கல் ஒரு பார்சல் அனுப்பி விடுங்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துங்கள்.

   அப்படியே ஆல்ப்ஸ் மலைப்பக்கம் காற்று வாங்கவும் வாருங்கள்.சமீபப்பதிவுகளில் உங்கள் பின்னூட்டம் மிஸ்ஸிங்க்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பள்ளிப்பருவத்து நிகழ்வுகள் பலவற்றை உங்கள் பதிவுகளும் பின்னூட்டங்களும் நினைவுப் படுத்துகின்றன. கிராமத்தில் இது சாதாரணம். ஆனால், நகரத்தில் இது அதிசயம். அதிலும் இன்றைய குழந்தைகள் இயற்கையை விட்டு வெகுதூரம் சென்று விட்டார்கள். ஒரு குழந்தையிடம் அரிசி எங்கிருந்து வருகிறது என்று கேட்டால், சூப்பர் மார்கெட் என்று பதில் சொல்கிறார்கள். இயந்திரம் மூலம் அரிசி உருவாக்கப்படுவதாக கூறுகிறார்கள். அதனால் இது ஒரு அதிசயமான தகவலே.
    பாம்பு என்ற அறுவருப்பையும் கடந்து கருத்திட்டதற்கு நன்றிகள் பல.

    நீக்கு
   2. சகோதரி நிஷாவுக்கு! இப் பதிவில் பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதில் என்ன? ஆச்சரியமுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். எல்லாப் பாம்பும் முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதில்லை. பல பாம்பு வகை குட்டியாக ஈனும்... அதனால் தான் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்.
    பாம்புக்கு பால் வார்ப்பது, நம் பல இட்டுக்கட்டிய கதைகளில் ஒன்று. இயற்கையில் அப்படி ஏதுலில்லை.

    நீக்கு
   3. பாம்பு பாலையும் குடிக்காது. முட்டையையும் சாப்பிடாது. ஆனால் அதற்குப் பின்னே பெரும் ஆச்சரியம் ஒன்றிருக்கிறது. அதைப் பற்றியும் பத்திரிகையில் எழுதியிருக்கிறேன். மற்றொரு சந்தர்ப்பத்தில் அதை இங்கே பகிர்கிறேன்.
    விளக்கத்துக்கு நன்றி யோகன்.

    நீக்கு
   4. தமிழ் மணம்வாக்கிட்டேன் செந்தில்குமார்.

    நீக்கு
   5. பாம்புக்கு பால் வாடையும், முட்டை வாசனையும் பிடிக்காது என்பதை அறிவேன், நான் கேட்டது,பாம்பு பால் குடிக்கும் என நம்பி நாம் சட்டியில் வைத்த பால் என்ன ஆகி இருக்கும் என்பதே!

    அத்தோடு நம் முன்னோர் இட்டுக்கட்டிய கதைக்கும் காரணம் உண்டென்பதையும் அவர்கள் இட்டுகட்டிய கதைகள் பல அறிவியல் பூர்வமானவை என்பதையும் கூட நான் நன்கறிவேன்.

    முற்காலத்தில் கோயில்களைசுற்றி புதர்களூம்,அடர்ந்த மரங்களும் இருந்ததனால் பாம்புகள் அதிகமாயிருந்தது.பால் வாசனை பாம்புகளின் இனப்பெருக்கத்தை தடுக்கும் என்பதனால் தான் அப்படி சொல்லி இருப்பார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நிஜக்காரணமும் மறைந்து தானிருக்கின்றது. இருக்கும் பாம்புக்கு பால் வாசனை பிடிக்காது எனில் யாரேனும் கோயிலுக்கும் செல்லும் போது காசு கொடுத்து பாலை வாங்கி விரயமாக்குவார்களா? அதனால் தான் கடவுள் நம்பிக்கையை சொல்லி மக்களுக்கு பாதுகாப்பையும் கொடுத்தார்கள் என நான் நினைக்கின்றேன். அதே போல் பாம்புப்புற்றுகளுக்கு பால் வார்ப்பதும் அப்படித்தான் இருக்கும்.

    அத்தோடு இப்பதிவின் முதல் பின்னூட்டம் பாருங்கள். பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் எனும் செய்தி ஆச்சரியமானது என இருக்கின்றது.அதனால் தான் நான் என்பின்னூட்டத்தில் இதில் என்ன் ஆச்சரியம் என கேட்டேன். நீங்கள் கூறிய விபரங்களை நானும் அறிவேன் எனினும் விளக்கத்துக்கு நன்றி.

    நீக்கு
   6. முட்டைக்கு நீங்கள் சொன்ன காரணம்தான் சரியானது. வருகைக்கு நன்றி

    நீக்கு
  12. பதில்கள்
   1. தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    நீக்கு
  13. Internal Server Error- ஓட்டு போட்டால் இப்படிவருகிறது பிறகு முயற்சிக்கிறேன் நண்பரே.... முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் ராஜ நாகம் பாலூட்டி வகைக்கு வந்துவிட்டதோ...????

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாலூட்டி வகையில்லை பறவைகள் வகை.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  14. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
   மகிழ்வோடு நவில்கின்றேன்
   கனிவோடு ஏற்றருள்வீர்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மிக்க நன்றி நண்பரே,
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

    நீக்கு
  15. இந்த ராஜநாகங்கள் வண்டலூர் மிருகக் காட்ச்சிச் சாலையில் ஒரு வருடத்திற்கு முன் கொஞ்சம் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன. ஹஹ முட்டை இட்டுவிட்டு அதை அடை காக்க ஒரே இரைச்சல் அலம்பல்கள்!!! கூண்டுக்குள் எலிகள் வந்தால் தின்றுவிடும். ஆம் மிக மிகக் கொடிய விஷம் பொருந்தியவை. விரியனும் கூட குட்டிகளே மிகவும் விஷம் வாய்ந்தவை. ஆனால் ராஜநாகம் ரொம்பவே. நல்லவரையும் விட...எனவே தான் ராஜ என்று சொல்லுவதுண்டு என்று கேட்டதுண்டு நல்லவராவது கொஞ்சம் நல்லவர் ஆனால் ராஜா போட்டுத் தள்ளுவதில் கில்லாடி.

   ஊரில் பல கோழி முட்டைகள் காணாமல் போயிருக்கின்றன. பின்னர்தான் கண்டு பிடித்தது அவை ராஜநாகத்தின் வேலை என்று.

   ரசித்தோம் பதிவை...

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முட்டைகளை பாம்புகள் சாப்பிடுவதில்லை. ஆனால் அதற்குப் பினும் நம் முன்னோர்களின் அறிவு இருக்கிறது. அதைப் பற்றியும் பதிவு இருக்கிறது. விரைவில் பதிவிடுகிறேன். வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
   2. https://www.youtube.com/results?search_query=egg+eting+snake//
    பாம்பு முட்டை சாப்பிடுவதை, குடிப்பதையல்ல! இத் தொடுப்பில் காணவும்.

    நீக்கு
   3. முட்டையை அப்படியே விழுங்கும் என்பது தெரியும். யூடியூப் ஒப்பனாகவில்லை.

    நீக்கு
  16. பதில்கள்
   1. மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்!

    நீக்கு
  17. நீங்கள் போட்ட 6 ஆம் படத்தில் உள்ளதை அதன் முழு விபரணச்சித்திரமே பார்த்துள்ளேன். பிரமிப்பானவையே ! யுருயூபில் கொட்டிக்கிடக்கிறது. கேரளாவில் ரமேஷ் என்பவர் இப்பாம்பைக் கையாள்வதில் இதுவரை திறமைசாலியாக உள்ளார்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் மேலதிக தகவலுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  18. இப்பதிவில் பாம்பு முட்டையை அடைகாப்பதற்கு "இலை, செத்தை,மரக் குப்பைகளைச் சேர்த்து கூடு கட்டும்". இதில் "செத்தை" எனும் சொல் புழக்கத்தில் இல்லாமலே போய் விட்டது. பதிவில் பார்த்தபோது மிக மகிழ்வாக இருந்தது.நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    நீக்கு
  19. வணக்கம்
   அண்ணா
   பாம்புபடங்கள் தகவல் அனைத்தையும் பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்