காணும் பொங்கல் தை மாதத்தின் மூன்றாம் நாள் வருகிறது. இதுவொரு சுற்றுலா நாள். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வகையில் அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்வது நமது பாரம்பரியம். தங்கள் இல்லத்தில் தயாரித்த உணவு வகைகளை குடும்பத்துடன், பக்கத்து வீட்டாருடன், உரிமையுள்ள உறவுகளுடன் அருகிலுள்ள நதிக்கரை, கடற்கரை, கோயில் திருத்தலங்கள் சென்று மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் ஒரு உற்சாகம். அதனால்தான், அதனை சுற்றுலா திருவிழாவாக கொண்டாடுகிறோம்.
இந்த காணும் பொங்கலுக்கு காணக்கூடிய இடங்களில் கன்னியாகுமரி மிக முக்கியமானது. இந்தியாவின் கடைக்கோடி சுற்றுலாத்தலம். இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா, அரபிக்கடல் என மூன்றும் கூடி கும்மாளம் போடும் இடம். சூரியன் உதிப்பதையும் மறைவதையும் ஒரே இடத்தில் பார்க்க முடிகிற வசீகரம் மிக்க சுற்றுலாத்தலம்.
காணும் பொங்கலுக்கு நாமும் கன்னியாகுமரியை ஒரு வலம் வருவோம்.
1. சுசீந்தரம் தானுமலையான் கோயில்
தானுமலையான் கோயில் |
நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி போகும் பாதையில் வருகிறது சுசீந்திரம். இங்கிருக்கும் தானுமலையான் கோயில் புகழ்பெற்ற ஒரு ஆன்மிகதலம். இங்கு சிவன், விஷ்ணு, பிரம்மன் என்று மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. இந்தக் கோயிலின் இசைத்தூண்கள் மிகப் பிரசித்துப் பெற்றவை.
தானுமலையான் கோயில் தெப்பக்குளம் |
இந்த சின்னக் கோயில் 1964-ல் காஞ்சி காமகோடி பீடம் பிரதிஷ்டை செய்து உருவாக்கிய ஆலயம்.
கன்னியாகுமரியின் அடையாளமாக இருக்கும் அய்யன் திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் மண்டபம்.
3. சன்ரைஸ் பார்க்
சூரிய உதயத்தை கண்டு ரசிக்க உருவாக்கப்பட்ட பூங்கா |
5. காந்தி நினைவு மண்டபம்
மகாத்மா காந்தி இரண்டுமுறை கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறார். அவரின் மறைவுக்குப் பின் அவருடைய அஸ்தி இங்கு கரைக்கப்பட்டது. அஸ்தி கரைப்பதற்கு முன் அது வைக்கப்பட்ட பீடமே பின்னாளில் காந்தி நினைவு மண்டபமாக மாறியது. முக்கடல் சங்கமத்திற்கு போவதற்கு முன் காந்திக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அஸ்திக் கலசத்தில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ம் தேதி சூரிய ஒளிக்கதிர்கள் விழும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
6. நடைபாதை கடைகள்
காந்தி, காமராஜர், விவேகானதர், திருவள்ளுவர் ஆகியோரின் நினைவு இடங்கள், மண்டபங்கள், சிலை எல்லாம் ஒரே ஃபிரேமில்
7. காட்சிக் கோபுரம்
கடலுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோபுரத்தில் பௌர்ணமி அன்று சூரியன் மறைவதையும் சந்திரன் உதிப்பதையும் ஒரே நேரத்தில் பார்க்கலாம். உயரத்தில் இருந்து கடலையும் கன்னியாகுமரியையும் பார்ப்பதே தனியழகு தான்.
8. அரசு அருங்காட்சியகம்
மரவேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள், உலோக வார்ப்பு சிற்பங்கள், கற்சிற்பங்கள், இசைக்கருவிகள், பழங்குடியினர் பயன்படுத்திய பொருட்கள், ஆயுதங்கள், ஓவியங்கள், திருவாங்கூர் மணர்கள் பற்றிய வரலாற்றுச் சுவடுகள் பலவும் இங்கிருக்கின்றன. புதியதொரு வரலாற்று அனுபவம் பெற இந்த இடம் போதுமானது.
9. தேவிகுமரி பகவதி கோயில்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரசுராமரால் நிறுவப்பட்டது, தேவிகுமரி பகவதி கோயில். இங்கு தமிழரின் பாரம்பரிய உடையான பாவாடை தாவணி உடுத்தி, கையில் ஜெபமாலையுடன் தேவி கன்னியாகுமரி காட்சி தருவது தனிச்சிறப்பு.
10. கன்னியாகுமரி தேவி
இந்த ஊரையும் கடலையும் காத்து நிற்கும் தெய்வம் என்பதால் இந்த தெய்வத்தின் பெயரே ஊருக்கும் வைத்துவிட்டார்கள்.
11. தேவசகாயம் உறைவிடம்
கிறிஸ்துவ மதத்தை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்த தேவசகாயத்தின் உறைவிடம் இது.
12. புனித அலங்கார உபகார மாதா திருத்தலம்
153 அடி உயரம், 153 அடி நீளம், 53 அடி அகலமும் கொண்ட இந்த மாதா ஆலயம் கோத்திக் ரோமன் கட்டடக்கலையில் கட்டப்பட்டது. கோபுரத்தின் உயரே இருக்கும் தங்க சிலுவை 10 அடி உயரம் கொண்டது.
13. பே வாட்ச்
இந்தியாவில் கடற்கரை அருகே அமைக்கப்பட்ட முதல் அம்யூஸ்மென்ட் பார்க் இதுதான். தண்ணீரில் சறுக்குவது போக பத்துக்கும் மேற்பட்ட வேடிக்கையும் குதூகலமும் நிறைந்த விளையாட்டுகள் இங்கிருக்கின்றன. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களையும் கட்டிப்போடும்.
-இன்னும் இருக்கிறது.
இதன் தொடர்ச்சி
பார்க்கவேண்டிய இடங்களாக உள்ளன. கோயில்களை நான் பார்த்துள்ளேன். பிறவற்றைப் பார்த்ததில்லை. உங்கள் பதிவு என் குறையை நீக்கியது.
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா, தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றி!
நீக்குபே வாட்ச் உட்பட சில இடங்கள் சென்றதில்லை... நன்றி...
பதிலளிநீக்குஇன்னும் கன்னியாகுமரி ஆல்பம் முடியவில்லை. தொடர்ச்சி வரும்.
நீக்குதங்களால் மீண்டும் ஒரு முறை கன்னியாகுமரிக்குசென்று வந்த உணர்வு
பதிலளிநீக்குபடங்கள்அருமை
நன்றி நண்பரே
தம +1
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குபொங்கல்... தமிழர் திருநாள்... சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனத் தமிழன் நன்றி மறவாது உறவுகளோடு உண்டு மகிழ்ந்திருக்கும் உன்னதத் திருநாள்!
அய்யன் வள்ளுவனுக்குக் கடலில்... கல்லில் வடித்த கலைஞரின் எண்ணத்தை எடுத்துக்காட்டு(ம்) சுனாமியையே எதிர்கொண்ட 133 அடி உயர அழகு சிலை.
அண்ணல் காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர், கர்மவீரர் காமராசர் ஆகியோரை நினைவுகூறும் திரிவேனி சங்கமம்.
சூர்யோதயமும் சூர்யமறைவும் பார்க்கக் கொடுத்து வைத்த இடம்...!
பாவாடை தாவணியில் பார்த்த உருவமாகக் கன்னியாகுமரி தேவிதரிசனம்...!
தேவசகாயம் பிள்ளையின் உண்டு உறைவிடம்... ஆலயம் பற்றியும் அனைத்து விளக்கங்களுடன் காணும் பொங்கலில் காண வைத்தீர்கள்!
தமிழகச் சிப்பிக்குள் கன்னியாகுமரி முத்து...!
நன்றி.
த.ம. 2
அடிக்கடி சென்று வந்தாலும் தீம் பார்க் போனதில்லை :)
பதிலளிநீக்குஅடுத்தமுறை போய்வாருங்கள்!
நீக்குநல்லதோர் பட்டியல் தோழர்
பதிலளிநீக்குபயணங்கள் தொடரட்டும்
ஆங்கிலத்தில் முயற்சி செய்தால் அடைவு அதிகரிக்கும் ...
முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்
தம +
நிகில் குறித்து சில செய்திகள்
நிகில் குறித்து இப்போதுதான் தெரிந்து கொண்டேன். உண்மையில் இந்த சமுதாயத்துக்கு தேவைப்படக்கூடிய சேவை. வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குஆங்கிலத்தில் ஆசை இருக்கிறது. ஆனால், இதுபோன்ற பல தகவல்கள் ஆங்கிலத்தில் கொட்டிக் கிடக்கின்றனவே என்றுதான் யோசிக்கிறேன். ஆலோசனைக்கு நன்றி
சகோ சகோ முதலில் உங்களுக்கு ஒரு பொக்கே! சீக்கிரம் வாங்கிக் கொள்ளுங்கள். 7 வத் ஓட்டு போட்டு தமிழ்மணத்தில் வரச் செய்தாச்சு...பின்ன எங்க ஊர் இல்லையா!!!! எத்தனை வருடங்கள்!! மீண்டும் எங்கள் ஊரைப் பற்றி இங்கு பெருமையாகச் சொல்லி படங்கள் இட்டு செய்தமைக்கு மிக்க நன்றி. ஆம் நிறைய இடங்கள் உள்ளன. கோவளம், வட்டக்கோட்டை அருமையான இடம், விவேகானந்தா கேந்திரம், ஆசாரிப்பள்ளம் பீச், முட்டம், அஞ்சுகிராமம், மண்டைக்காடு, திற்பரப்பு நீர்வீழ்ச்சி, திருவட்டார் கோயில், மாத்தூர் தொட்டிப்பாலம், பத்ம்நாபபுரம் அரண்மனை, பெருஞ்சாணி அணை, பேச்சிப்பாறை, உலக்கை அருவி, காளிகேசம், வட்டப்பாறை நீர்வீழ்ச்சி, தேங்காய்ப்பட்டணம் அங்கு ஆதாம் பாறை/ஆனப்பாறை என்று உண்டு அருமையாக இருக்கும். இப்போது அழிந்து வருவதாக நண்பர்கள் சொன்னார்கள். ஊசிக்கிணறு, ஒரு சுனை எல்லாம் உண்டு. இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. முடிந்தால் சகோ அதையும் படம் பிடித்துப் போடுங்கள் சகோ. நான் பல இடங்கள் பார்த்திருந்தாலும் என்னிடம் தகுந்த புகைப்படங்கள் இல்லாததால் பல வருடங்களுக்கு முன்னர் பார்த்ததால் இப்போது தகவல்கள் தர இயலவில்லை. தேங்காய்ப்பட்டனத்திற்கு வரலாற்றில் இடம் உண்டு. அருமையான இடம்...
பதிலளிநீக்குகேரளாபுரம் விநாயகர் மிகவும் புகழ் பெற்றவர் நிறம் மாறுவதில்...ஆறுமாதம் கறுப்பு, ஆறு மாதம் வெள்ளை என்று...நான் கறுப்பு மட்டுமே பார்த்துள்ளேன். வெள்ளை பார்த்ததில்லை. உதயகிரி கோட்டை, குளச்சல், சொத்தவிளை பீச், நாகராஜா கோயில், சிதரால்-மலை...குலசேகரம் அருகில் சமண தொல்பொருள் என்று பட்டியல் நீள்கின்றதுதான். தோவாளை முருகன் கோயில், ஆரல்வாய்மொழி கணவாய்,.. எங்கள் கிராமம் திருவண்பரிசாரம் நம்மாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம் என்று நிறைய இருக்கின்றன..எனக்கு மகிழ்வாக இருக்கின்றது...நீங்கள் எங்கள் ஊரைப் பற்றிச் சொல்லுவதில். பல வருடங்கள் ஆகிவிட்டது சென்று.
எங்கள் கிராமத்தைப் பற்றியும் அதைச் சுற்றி உள்ள பல நல்ல அழகான இடங்கள் பற்றி மட்டுமேனும் எழுத வேண்டும் என்று ஆசைதான். ஆனால் அதற்கான நேரம் வர வேண்டும். புகப்படங்களுடன் தருவதற்கு...மிக்க மிக்க நன்றி சகோ மீண்டும் மகிழ்வுடன் ஒரு பொக்கே உங்களுக்கு!! (துளசியும் படித்த இடம் என்பதால் அவருக்கும் மிகுந்த ஈடுபாடு உண்டு ஊரின் மீது..)
கீதா
உங்கள் பதிவிர்காக காத்திருக்கிறோம் ......உங்க எழுத்திலே மகிழ்ச்சி தெரிகிறது ..
நீக்குஉங்களின் பொக்கே பெற்றுக்கொண்டேன். மனம் நிறைந்த மகிழ்ச்சியான பாராட்டுக்கு மகிழ்வான நன்றி. முழுப் பாராட்டையும் தெரிவித்து விடாதீர்கள். இதன் தொடர்ச்சி இன்னும் இருக்கிறது. அதையும் படித்துப் பார்த்து கருத்திடுங்கள்.
நீக்குதங்கள் வருகைக்கும் நன்றி அனுராதா பிரேம்!
நீக்குபடங்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குதம +1
மிக்க நன்றி !
நீக்குவணக்கம் நண்பரே கன்னியாகுமரியைப் பற்றிய கூடுதல் விபரம் அறிந்தேன் படங்கள் ஸூப்பர்
பதிலளிநீக்குத.ம.வ.போ
அழகிய சுற்றுலா தளங்கள்! படங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி! தகவல்களும் படங்களும் ஆர்வத்தை ஏற்படுத்தியது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குநான் அடுத்த தடவை இந்தியா வருகையில் கன்னியாகுமரிக்கு வரவுள்ளேன்.
பதிலளிநீக்குஅதற்கு வழிகாட்டியாகத் தங்கள் பதிவு அமைந்துள்ளது.
அருமையான படங்களுடன் சிறந்த பதிவு
மிக்க நன்றி நண்பரே! மதுரைப் பக்கம் வந்தால் கட்டாயம் தெரிவியுங்கள்!
நீக்குஅருமையான படங்கள் பார்க்க வேண்டிய இடம்...
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ!
நீக்குபோக முடியாத ஊர்களை இங்கெயே பார்த்தாகிவிட்டது.... நன்றி! ...த.ம.11
பதிலளிநீக்குஇந்தியா வந்தால் சென்று பார்க்க வேண்டிய் இடங்களில்,இதுவும் ஒன்று.அந்த ஆவலை இன்னும் அதிகரிக்க செய்யும் படியாய் விபரணங்கள் இருந்தது. நன்றி செந்தில்குமார்
பதிலளிநீக்குமிக்க நன்றி நிஷா!
நீக்குகருத்துரையிடுக