Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எனது 200-வது பதிவு..!



திவுலகில் நுழைந்து ஒண்ணேகால் வருடம் ஓடிவிட்டது. அதற்குள் எத்தனையோ அரிய தோழமைகளை இந்த பதிவுலகம் எனக்கு தந்துவிட்டது. அது ஒரு குடும்பம் போன்ற உன்னதத்தை தோற்றுவித்தது என்றால் மிகையில்லை.



எனது எழுத்துக்களை சேகரித்து வைக்கும் இடமாகத்தான் இந்த வலைப்பூவை தொடங்கினேன். அந்த சேமிப்பு கிடங்கை உயிரோட்டம் நிறைந்த இல்லமாக மாற்றியவர்கள் நீங்கள்தான். 

பலநாட்கள் பணிக்காகவும், பயணத்துக்காகவும் அலைந்து களைத்து வலைப்பக்கமே வரமுடியாமல் போனாலும், வீட்டுக்கு வந்தவுடன் முதல் வேலையாக நண்பர்களின் பதிவுகளை படித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பேன். அதற்கு காரணம் அக்கறையுடன் நீங்கள் இடும் பின்னூட்டங்கள்தான்.


எங்கிருந்தாலும் எங்கு சுற்றினாலும் அது என்னை ஒரு மாயக் கயிற்றின் மூலம் உங்களோடு கட்டிப்போட்டு வைத்திருந்தது. அந்தக் கயிற்றில் இருந்து விடுபட நான் என்றுமே நினைத்ததில்லை. அந்த மாயக் கயிறு மேலும் மேலும் என்னை உற்சாகப் படுத்திக் கொண்டே இருக்கிறது. 

எனது வலைப்பூ தொடர்ந்து உயிர்ப்போடு இயங்கி வருவதற்கு தாங்கள் அனைவரும் அளிக்கும் பின்னூட்டமே காரணம். இந்த பின்னூட்டங்கள் மட்டும் இல்லையென்றால் நான் 50 பதிவைக் கூட கடந்திருக்க மாட்டேன்.

முகநூல், ட்விட்டர் போன்ற எதிலுமே எனக்கு இப்படியொரு உள்ளார்ந்த பிடிப்பு ஏற்படவில்லை. அது கிடைத்தது இங்கு மட்டும்தான். அதற்கும் தங்கள் அனைவரின் ஒத்துழைப்பே காரணம்.

200 பதிவுகள் எழுத வாய்ப்பளித்த உறவுகள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!



                              நன்றி..! நன்றி..!! நன்றி..!!! 



47 கருத்துகள்

  1. வாழ்த்துக்கள் நண்பரே
    தங்களின் எழுத்துலகப் பயணம் தொடரட்டும்
    புத்தம் புது உச்சங்களை எட்டட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் முத்தான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. தங்களின் வெற்றிகரமான 200-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். மேலும் தொடர்ந்து பல பயனுள்ள பதிவுகள் தர தங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஏற்படட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  3. உங்கள் வேகம் என்னை பிரமிக்க வைக்கிறது ,செந்தில் குமார் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே நாளில் நான்கைந்து பதிவுகள் இடும் பதிவர்கள் இருக்கும்போது இரண்டு நாள், மூன்று நாட்களுக்கு ஒருமுறை பதிவெழுதும் நான் எப்படி வேகமாவேன்.?

      நீக்கு
    2. அப்படி பதிவுகள் போட்டாலும் கூட ,தமிழ் மணத்தில் உங்களைப் போல் ..நான்காம் இடத்தைப் பிடிப்பது என்பது நடவாத காரியமாச்சே :)

      நீக்கு
    3. தமிழ்மணத்தில் 4-வது இடம் என்பது இயல்பாக அமைந்து விட்ட ஒன்று. அதற்காக நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த இடத்தை கொடுத்தது கூட தங்களைப் போன்ற நண்பர்கள்தான் பகவான்ஜி!
      மீள் வருகைக்கும் நன்றி!

      நீக்கு
  4. 200 விரைவில் அடுத்த இலக்கை பிடிக்க எமது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே
    த.மவ.போ

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் சகோ,

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள தகவல்கள், முதலில் படிக்கும் போது எனக்கு அதிசயமாக இருந்தது, பின்னர் தான் தெரிந்தது, தாங்கள் இதழியல் துறை என்று,,,
    தாங்கள் இன்னும் பல பயனுள்ள தகவல்கள் தரும் பதிவுகளைப் படைக்க வாழ்த்துக்கள்,, தொடருங்கள் சகோ,

    பதிலளிநீக்கு
  6. உங்களின் வெற்றிகரமான 200-வது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. வெற்றிகரமான 200வது பதிவுக்கு இனிய வாழ்த்துக்கள்!! 200 லிருந்து2000 பதிவு தொடர நல்வாழ்த்துக்கள்!! நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வலிபோக்கரே!

      நீக்கு
  8. வாழ்த்துக்கள்....இந்த அருமையான பணி தொடரட்டும் ...

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் திரு செந்தில் குமார் அவர்களே! 18 திங்களில் 200 பதிவுகள், அதுவும் பலர் அறியாத அரிய தகவல்கள் உள்ளடக்கிய பதிவுகள் எழுதியிருக்கிறீர்கள் என்பது பாராட்டுக்குரியதே. தங்களது வலைப்பூவில் 1000 ஆவது பதிவை வெளியிடும் நாள் விரைவில் வர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. பாராட்டுகள். உங்கள் ஆர்வம் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  11. 200 பதிவுகள் படைத்து சாதனை செய்த உங்களது பணி தொடர வாழ்த்துக்கள். தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் பல அரிய செய்திகளைக் கொண்டு வருகின்றன. நேர்த்தியான முறையில் புகைப்படங்களைத் தெரிவு செய்கின்றீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  12. நான் சொல்ல நினைத்ததைத்தான் பகவான்ஜி சொல்லி இருக்கிறார். உங்கள் வேகம் என்னையும் பிரமிக்க வைக்கிறது. தரமான, உபயோகமான விஷயங்களாகப் பகிர்ந்து கொள்கிறீர்கள். மென்மேலும் சிகரங்களைத் தொட வாழ்த்துகள்.
    தம +1

    பதிலளிநீக்கு
  13. எவ்வளவோ விஷயங்கள் எங்களுக்கு அறியத்தருகிறீர்கள்.....மேலும் மேலும்...தங்களின் பதிவுப்பணி சிறக்கட்டும்....தங்களின் எழுத்து ஒரு அர்ப்பணிப்பாக இருக்கிறது.வாழ்த்துகள் சகோ.

    தம +1

    பதிலளிநீக்கு
  14. அன்பு நண்பர் S.P.S. அவர்களின் 200 - ஆவது வெற்றிப் பதிவினுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  16. தங்கள் வலை... தகவல் களஞ்சியம்...

    தொடரட்டும்... பயணம்...

    இணைந்திருப்போம், இறை நாட்டம்...!

    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  17. 200க்கு வாழ்த்துக்கள் செந்தில் சார்...
    தொடருங்கள்... தங்கள் நிறைவான பகிர்வுகளை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  19. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள் அட! அதற்குள் 200வது பதிவு!!! வியப்பு! பிரமிப்பு! மகிழ்வு! ஏனென்றால் அனைத்தும் மிகவும் உயர்ந்த தரமான நல்ல பதிவுகள்!!! இன்னும் தாங்கள் பல நல்ல பதிவுகளைத் தந்து வெற்றி நடை போட வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  20. அன்புள்ள அய்யா,

    200-ஆவது பதிவு கண்டு வெற்றி நடை போடும் தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.10

    பதிலளிநீக்கு
  21. மனம் நிறைந்த வாழ்த்துகள் செந்தில்... தொடர்ந்து பதிவுகள் உங்கள் பக்கத்தில் வரட்டும்....

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  23. ஒன்றே கால் ஆண்டிற்குள் 200 பதிவுகள் எழுதுவது என்பது பெரிய விதயமே இல்லை. ஆனால், அந்தப் பதிவுகள் எப்படிப்பட்டவை என்பதுதான் கருத்திற்குரியது. அவ்வகையில் சமூக அக்கறையும், தெளிவான சொற்றொடர் அமைப்பும், அறிவார்ந்த பார்வையும், சிறப்பான நடையுமாய் இப்படிப்பட்ட பயனுள்ள பதிவுகளாக நீங்கள் 200 பதிவுகளை இந்தக் குறுகிய காலக்கட்டத்துக்குள் எழுதியிருப்பது மலைக்க வைக்கிறது. உங்களுடைய பதிவுகளில் நான் ஒன்றிரண்டைத்தான் படித்திருக்கிறேன் எனினும் அவற்றிலுள்ள கருத்தாழமும் அக்கறையும் நான் மேலே கூறிய இன்ன பிற கூறுகளும் உங்கள் எழுத்தின் மதிப்பை உணர வைத்தன. அடிக்கடி வர முடிவதில்லை. ஆனால், உங்கள் பல பதிவுகளைப் பின்னர் படிக்க எண்ணியுள்ளேன். முடிந்தபொழுதெல்லாம் வருவேன். பணிவன்பான நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உள்ளார்ந்த ஆழமான கருத்துரைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கும் எனது இதயப்பூர்வமான நன்றி அய்யா!
      எனது மற்ற பதிவுகளையும் வாசித்து தங்களின் மேலான கருத்துகளை பதிவிடும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
      நன்றி அய்யா!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை