• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், பிப்ரவரி 04, 2016

  சிவப்பு நிறத்தில் ஒரு காடு  ம்யூனிசம் என்றாலே எல்லோருக்கும் சிவப்பு நிறம்தான் நினைவுக்கு வரும்.
  ஆனால் கம்யூனிசம் உருவான நாடான ரஷ்யாவில் ஒரு காட்டின் நிறமே சிவப்பு என்றால் நம்ப முடிகிறது? உண்மைதான். 'வேர்ம்-உட் பாரஸ்ட்' என்று பெயர்கொண்ட இந்த காடுதான் இப்போது 'ரெஸ்ட்' என்று அழைக்கபடுகிறது.

  1986-ம் வருடத்திற்கு பின்னர்தான் இந்த பெயர் மாற்றம் ஏற்பட்டது. இப்படி காடு நிறம் மாறி போனதற்கு அணுக்கதிர்கள்தான் காரணம். சோவியத் ரஷ்யாவின் உக்ரைன் மாகாணத்தில் உள்ள செர்னோபில் அணு மின்நிலையத்தில் உள்ள ஒரு அணு உலை 1986 ஏப்ரல் மாதத்தில் வெடித்து சிதறியது. அந்த கதிர்வீச்சு பாதிப்பால் 56 பேர் உடனடியாக இறந்துபோனார்கள். 8 லட்சம் பேர் கடுமையான கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளானார்கள். எஞ்சிய மக்களை ரஷ்ய அரசு உடனடியாக வெளியேற்றியது.


  ஆனால், காடுகளை என்ன செய்ய முடியும்? மரங்களை நகர்த்த முடியாதே. அணு உலையை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவு வரை காடுகள் செழித்து வளர்ந்து இருந்தன. அந்த காடுகளில் ஏகப்பட்ட பனை மரங்கள் இருந்தன. அத்தனையும் கதிர்வீச்சு தாக்கத்தால் பட்டுபோய்விட்டன. இப்போது அந்த காட்டில் முன் எப்போதும் பார்த்திராத வகையில் வழக்கத்தைவிட பெரிய மரங்களும் வளைந்த கிளைகளை உடைய மரங்களும் முளைக்கின்றன. விலங்குகள் ஊனமாக பிறக்கின்றன.


  அழகான வண்ணப்பறவைகளின் சிறகுகளில் இப்போது வண்ணங்களே இல்லை. மனிதர்கள் செய்த தவறுக்காக ஒரு காட்டின் மரங்களும் அதில் வாழும் அப்பாவி விலங்குகளும் ஊனமாக அலைந்து கொண்டிருக்கின்றன.


  அணுக்கதிர்களால் பல நன்மைகள் இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு விபத்து என்றால் அது சுற்றுச்சூழலையே மாற்றிவிடுகிறது. அதற்கு ஏற்ப பாதுகாப்பான முறைகளை மனிதன் முழுமையாக செய்தபின் இதுபோன்ற அணு உலைகளை தொடங்குவது நல்லது. இல்லையென்றால் விலைமதிக்க முடியாத உயிர்களை வீணாக உயிர் இழக்க நேரிட்டு விடும்.
  28 கருத்துகள்:


  1. கதிர்வீச்சால் ஏற்படும் பயங்கரத்தை நினைக்கவே பயமாய் இருக்கிறது. பாதுகாப்பான முறைகளை செய்துவிட்டு அணு உலைகளை இயக்கலாம் என்ற உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன். பகிந்தமைக்கு பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாதுகாப்பு பலமாக இருந்தாலுமே இது ஆபத்தான ஒன்றாகத்தான் தோன்றுகிறது. முதல் வருகைக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  2. தேவைக்கு ஏற்ற பதிவு தற்போது தமிழத்தில் மேலும் இரண்டு அணுவுலை அனுமதிக்கப்பட்டுள்ளது. மிகவும் ஆபத்தான இவ்விடயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், பதிவுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே!

    நீக்கு
  3. அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று.அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான ஒன்று.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  4. கடைசி படத்தைப் பார்க்கவே மனம் பதறுகிறது சகோ,

   செயற்கை, வளர்ச்சி இவையெல்லாம் நம்மை இப்படித்தான் ஆக்கும்,, அருமையான பகிர்வு,,

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதைவிட மோசமான படங்களும் உண்டு. அதை மற்றொரு பதிவுக்காக வைத்திருக்கிறேன். வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  5. எந்த தூரம் கதிர்வீச்சு இருக்கிறது....அனைவரும் அறிய வேண்டிய விஷயம் நன்றி சகோ

   தம. 4

   பதிலளிநீக்கு
  6. மனிதனின் விஞ்ஞான வளர்ச்சி மனிதர்களுக்கு தருகின்ற பாதிப்புகளை உணர்ந்து பார்க்கவே மறுக்கின்றார்கள் என்பதே உண்மை வேதனையைத் தரும் பதிவு
   தமிழ் மணம் + 1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மையாகவே வேதனைதான். வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  7. நல்ல பதிவு நண்பரே/சகோ தங்களின் இறுதிக் கருத்துடனே எங்களது கருத்தும்....

   பதிலளிநீக்கு
  8. அன்புள்ள அய்யா,

   அணுக்கதிர் பாதிப்பை அனுபவப் பூர்வமாக எடுத்துக்காட்டியிருப்பதைப் பார்த்தாவது திருந்துவார்களா...?

   திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
   வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?

   நன்றி.

   த.ம.7

   பதிலளிநீக்கு
  9. கொடுமை இந்த ஆறாவது அறிவை வச்சுக்கிட்டு அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் மனித இனம் தேவையா?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எனக்கும் கூட ஒருசில சமயம் அப்படித்தான் தோன்றுகிறது. வருகைக்கு நன்றி!

    நீக்கு
  10. கொடுமை நண்பரே
   மனிதர்கள் செய்த தவறுக்காக விலங்குகளும், மரங்களும்
   ஊனமாவதா கொடுமை
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதுதானே அவைகள் என்ன பாவம் செய்தன? மனிதனின் பேராசைக்கு இந்த உலகமே அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  11. புதிய தகவல். இந்த பாதிப்பைப் பற்றி மனிதர்கள் அதிகம் பேச மாட்டார்கள். இந்த உலகம் தங்களுக்கு மட்டும்தான் என்று நினைத்துக் கொண்டிருப்பவன் மனிதன்.
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை. உண்மை.!
    வருகைக்கு நன்றி நண்பர் ஸ்ரீராம்!

    நீக்கு
  12. வணக்கம்
   சிகப்பு காடுபற்றியும் அணுஉலை பற்றியும் அறியத்தந்தமைக்கு நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்