• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், பிப்ரவரி 03, 2016

  பெண்மையை அதிகரிக்க செய்யும் கல்யாண முருங்கை


  'கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும்' என்றொரு பழமொழி உண்டு. கல்யாண முருங்கையின் மகத்துவம் அப்படிப்பட்டது. சித்த மருத்துவம் இதைப் பற்றி பக்கம் பக்கமாக பேசுகிறது. அதில் பெண்களுக்காக பிரத்யேகமாக படைக்கப்பட்ட ஒரு தாவரம் என்று கல்யாண முருங்கையை சொல்கிறது. பெண்மை சார்ந்த எந்த நோயும் இந்த செடி இருக்கும் வீடுகளில் வராது என்பது காலங்காலமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் ஐதீகம். 

  கல்யாண முருங்கை
  ஒரு பெண்ணுக்கு பெண்மையை அளித்து, அவளை அழகாக காட்டுவது ஹார்மோன்தான். இதை 'நாளமில்லா சுரப்பி' என்கிறார்கள். இந்த சுரப்பில் ஏதேனும் கோளாறு இருந்தால் அந்தப் பெண் பெண்மை குறைவு உடையவராகவே இருப்பார். அதை நிவர்த்தி செய்யக்கூடிய தன்மை இந்த கல்யாண முருங்கை இலைக்கு உள்ளது. 

  இந்த இலையை அடையாக செய்து சாப்பிடலாம், தோசையாகவும் செய்யலாம். சூப்பாகவும் பருகலாம். இதனால் பெண்மைக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பெண்ணின் அழகும் கவர்ச்சியும் கூடும்.


  பெண்மைக்கு மட்டுமல்ல, குழந்தைப் பேறுக்கும் இது உதவுகிறது. இன்றைய பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் அதிகம் இருக்கிறது. அவற்றை இந்த கல்யாண முருங்கை இலை அற்புதமாக குணப்படுத்துகிறது. கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி சரியாக இருக்க 'எண்டோமேர்டியம்' என்ற சதைப் பகுதி கர்ப்பப்பையின் உள்ளே வளருகிறது. இந்த சதை வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான் கரு அதனுடன் ஒட்டி குழந்தையாக உருவெடுக்கும். 

  இன்று பெண்கள் துவர்ப்பான, நார்ச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வதில்லை. துரித உணவு,  மன அழுத்தம் போன்ற பலவற்றாலும் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய கருப்பை உட்புற சதை வளர்ச்சி ஏற்படுவதில்லை. அது பெரும்பாலும் குறைவுடையதாகவே உள்ளது. அதனால் கரு உருவாகாத நிலை, உருவான கருவும் வளர்ச்சி அடையாமல் சிதைவுறும் நிலை உருவாகிறது. 

  இதனால் பெண் தாய்மை அடைய முடியா நிலை ஏற்படும். இதற்கு கல்யாண முருங்கை மரத்தின் பட்டையை கொஞ்சம் எடுத்து லேசாக இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டச் செய்தபின் அதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கருப்பையின் உட்புறச் சதை வளர்ச்சி மேம்படும். கரு உருவாகும். உருவான கருவும் கர்ப்பப்பையில் நிலைத்து நின்று வளர்ச்சிப் பெறும்.  


  பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் காலங்களில் வாயிற்று வலி, உதிரப்போக்கு அதிகமாக இருந்தால் அதை சரிசெய்ய இதன் இலை போதும். வலி பறந்து போகும். இன்றைய பெண்கள் வலிக்கு வலி மாத்திரையை பயன்படுத்துகிறார்கள். அது கர்ப்பப்பையை தளர்த்தி, சினைப்பையையும் தளர்த்திவிடும். இதனால் வீரியமிக்க கருமுட்டை உருவாகாமல் போகும். மலட்டுத்தன்மை ஏற்படும். அதனால் வலி மாத்திரைகளை தவிர்க்க வேண்டும். 

   நமது முன்னோர்கள் வீட்டில் அழகுக்காக வளர்த்ததாக நினைத்த கல்யாண முருங்கையில் இத்தனை நன்மைகள் இருக்கின்றன.  முழுக்க முழுக்க பெண்மையை மெருகேற்றி தாய்மையை உருவாக்கவே வளர்க்கப்பட்டிருக்கிறது. நாமும் நமது வீடுகளில் அழகுக்காக குரோட்டன்ஸ் போன்ற எதுக்கும் உதவாத செடிகளை வார்ப்பதற்கு பதிலாக கல்யாண முருங்கையை வளர்க்கலாம். நமது பெண்களின் பெண்மையை அதிகப்படுத்தியது போலும் இருக்கும், வீட்டுக்கு அழகும் கிடைக்கும்.!



  26 கருத்துகள்:

  1. அருமையான தகவல். அப்பா ஆயுர்வேத மருந்துகளை விற்றவர் மட்டுமல்ல அப்போதெல்லாம் ஆயுர்வேத சித்த மருந்துகளுக்கான பயிற்சி எடுத்துச் சான்றிதழ் கொடுப்பது உண்டு அதைப் பெற்று கிராமங்களில் மருந்து கொடுத்துவந்தவர். அதனால் பல இயற்கை மருந்துகளுடனான பரிச்சயம். நல்ல பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

   கீதா: எனக்கு எங்கள் குடும்ப மருத்துவர் - ஆயுர்வேத மருத்துவர் உயிருடன் இருந்தவரை அவர்தான் எனக்கு வைத்தியம் பார்த்தவர். அவரிடமிருந்து நிறைய தெரிந்து கொண்டேன். அதில் இந்த முருங்கையின் கஷாயமும் ஒன்று. இப்போது அவர் உயிருடன் இல்லை. என்ன வேதனை என்றால் எங்களுக்கு எல்லாம் மருந்து கொடுத்து, பல அறிவுரைகள் வழங்கியவர், பல மருத்துவக் குறிப்புகள், கட்டுரைகள் குறித்து என்னுடனும், மகனுடனும் பேசியவர், விவாதம் செய்தவர், என் மகன் ஆங்கில மருத்துவ அடிப்படையில் வேலை செய்தாலும் இயற்கை மருத்துவத்தால் விலங்குகளைக் குணப்படுத்துவதை அறிந்து கொள்ள அவருடன் கருத்துப் பறிமாற்றம் செய்தல் என்றிருந்த நண்பர், தனக்கிருந்த சர்க்கரை நோய், இரத்த அழுத்தத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டு 48 வயதிலேயே மரணம். இன்றும் நாங்கள் அவரது இழப்பை நினைத்து வேதனை அடைவது உண்டு.

   நல்ல தகவல் சகோ...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கருத்துக்கும் பகிர்வுக்கும் முதல் வருகைக்கும் நன்றி துளசி சார், கீதா மேடம்!

    நீக்கு
  2. அட! இந்த முருங்கைக்கு இத்தனை சக்தி உண்டா?

   முருங்கையிலும் எத்தனை முருங்கை,கல்யாணமுருங்கை,முள்முருங்கை,சாதாரண முருங்கை இலை யில் சுண்டல் செய்தால் எங்களுக்கு பிடிக்கும்.

   கல்யாணமுருங்கை மரத்தை ஊரில் கண்டுப்பதே இல்லப்பா!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இனிமேலாவது கண்டு கொள்ளுங்கள்! வருகைக்கு நன்றி!

    நீக்கு
  3. கல்யாண முருங்கையின் பயன்கள் அறிந்து கொண்டேன்.

   தம +1

   பதிலளிநீக்கு
  4. பெண்களுக்கு பயனுள்ள நிறைய விடயங்கள் சொன்ன சித்த வைத்திய நண்பருக்கு நன்றி
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உங்கள் எண்ணப்படி சித்த வைத்தியராக மாறினாலும் நல்லதுதான். பல வைத்திய தகவல்களையே பதிவுகளாக சொல்லிவிடலாமே..!
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  5. இதையெல்லாம் பாக்கிய ராஜ் சொன்னாதான் கேப்பாங்க நம்ம ஜனங்க. அதான் அப்பவே முந்தானை முடிச்சு படத்திலேயே சொல்லிட்டாரே.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம், சினிமாவில் வந்ததால்தான் அவ்வளவு மக்களை சென்றடைந்தது. வருகைக்கு நன்றி காரிகன்!

    நீக்கு
  6. இது பாக்கியராஜ் முருங்கை இல்லை ,முள்ளு முருங்கை தானே :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம், இதை முள்ளு முருங்கை என்றும் சொல்வார்கள். வருகைக்கு நன்றி!

    நீக்கு
  7. பயனுள்ள பதிவு நண்பரே
   அறியாத செய்தி அறிந்து கொண்டேன்
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
  8. சிறப்பான தகவல்கள். எங்களது நெய்வேலி வீட்டின் வாசலில் இந்த கல்யாண முருங்கை மரம் இருந்தது.....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கொடுத்து வைத்த வீடு. பல இடங்களில் இதை தேவையற்றது என்று பிடுங்கி எறிந்திருக்கிறார்கள். வருகைக்கு நன்றி!

    நீக்கு
  9. முள்முருங்கை சளியை போக்கவும் செய்யும். ஆகையால் சளி பிடித்தாலும் மற்ற நாட்களிலும் செய்வோம்.

   இவ்வளவு விபரங்கள் தங்களால் அறிந்து கொண்டோம். மிக்க பயனுள்ள பதிவு சகோ.

   நன்றி தம .௯

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பெண் குழந்தைகள் இருந்தால் இந்த செடியின் இலையில் தோசை செய்து கொடுத்துவருவது மிகவும் நல்லது. வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  10. வணக்கம் சகோ,

   மிகவும் பயனுள்ள தகவல் கொண்ட பதிவு, இந்த மரத்தின் கொட்டைகளை வைத்து தரையில் தேய்த்து சூடு வைத்து விளையாடுவோம் சின்ன வயதில்,, அது தானே இது,,

   பயனுள்ள பதிவு, நன்றி நன்றி,,

   பதிலளிநீக்கு
  11. அருமையான தகவல். பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்