• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், பிப்ரவரி 23, 2016

  கருமுட்டை தானம் செய்யலாமா?

  ரு காலத்தில் எது தவறு என்று போதிக்கப்பட்டதோ அதுவே இன்று விஞ்ஞானத்தின் துணையோடு நவீனம் என்ற பெயரில் நடக்கிறது. சாதியை தூக்கிப்பிடிக்கும் பலரும் கூட குழந்தைக்காக இந்த நவீன சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள். வேறு இனத்தில் திருமணம் செய்வதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூட இன்று முன்பின் தெரியாதா யாரோ ஒருவருடைய உயிரணுவையோ அல்லது கருமுட்டையையோ தங்களின் வாரிசாக சுமக்கிறார்கள்.


  ரத்த தானம், கண் தானம் வரிசையில் இன்று கருமுட்டை தானமும், விந்து தானமும் சேர்ந்து கொண்டது. ஒரு ஆண் தன் மனைவியை தாய்மை அடைய வைக்க முடியவில்லை என்ற சூழல் வரும் போது விந்து தானம் மூலம் மற்றொரு ஆணின் உயிரணு அந்த பெண்ணின் கர்ப்பப்பையில் சேர்க்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதற்காக மரபு ரீதியாக குறைபாடு இல்லாத, தொற்று நோய்கள், பரம்பரை நோய்கள் இல்லாத உயிரணுக்களின் எண்ணிக்கை கூடுதலாக உள்ள ஆணிடம் இருந்து விந்து சேகரித்து பாதுகாக்கப்படுகிறது.


  போர்க்களத்தில் பணிபுரியும் ராணுவ வீரர்களும், பூச்சிக்கொல்லி நிறுவனங்களில் பணி புரிபவர்களும், கதிர்வீச்சு அபாயத்தில் வேலை செய்யும் ஆண்களும் தங்கள் விந்தை திருமணத்திற்கு முன்பே விந்து வங்கியில் சேமித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்தப் பழக்கம் மேலைநாடுகளில் சாதாரணமாக மாறி வருகிறது.

  இளமையும் வீரியமும் இருக்கும்போதே உயிரணுவை சேகரித்து வைத்துக்கொண்டு பின்னாளில் வாழ்வில் செட்டிலான பிறகு அதை பயன்படுத்தி, ஆரோக்கியமான வாரிசை உருவாக்குவது தான் இன்றைய நவீன ஆண்களின் ஃபேஷன். இதுபோக தங்களின் விந்தை தானமாக வழங்கும் ஆண்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. விந்து தானம் சுலபமானது. ஒரு ஆண் எத்தனை முறை வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருமுறை தானத்திற்கு ரூ.500-ல் இருந்து 2,000 வரை பணம் தருகிறார்கள்.


  இதுவே பெண்ணின் கருமுட்டை என்றால் அதற்கு விலை அதிகம். ஒரு முட்டைக்கு ரூ.40,000 முதல் 60,000 வரை கிடைக்கிறது. ஆனால், பெண்ணின் கருமுட்டை தானம் அத்தனை சுலபமில்லை. அதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன. கருமுட்டை தானமாக வழங்கும் பெண் 21 வயதிலிருந்து 32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆரோக்கியமான குழந்தைகளை ஒன்றிரண்டு பெற்ற பெண்ணாக இருக்க வேண்டும். எந்தவிதமான நோயும் இருக்கக்கூடாது. கருமுட்டை உற்பத்திக்கான ஹார்மோன் ஊசிப் போடப்படும். அவற்றை தாங்கும் உடல் நலம் வேண்டும். கருமுட்டை எடுப்பதற்காக நடத்தப்படும் அறுவை சிகிச்சை, மயக்க மருந்து போன்றவற்றை ஏற்றுக்கொள்ளும் திறனும் இருக்க வேண்டும். இதெல்லாம் இருந்தால் அந்தப் பெண் தனது கருமுட்டையை தனமாக தரலாம். 

  இந்தியாவில் 1986-ம் ஆண்டுக்கு பிறகுதான்  கருமுட்டை தானம் என்பது பிரபலம் ஆகத்தொடங்கியது. கருமுட்டை தானம் செய்வது தொடர்பாக சட்ட விதிமுறைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட ஒரு பெண் 6 தடவைக்கு மேல் கருமுட்டை தானம் செய்வது அவரது உடலுக்கு நல்லது அல்ல என்றும், ஒரு முறை தானம் செய்வதற்கும், அடுத்த முறை தானத்துக்கும் குறைந்த பட்சம் 6 மாதங்களாவது இடைவெளி இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். அடிக்கடி கருமுட்டை தானம் செய்யும் பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வர வாய்ப்பும் உள்ளது.

  கருமுட்டைகள் பெண் உடலில் இருந்து எடுக்கப்படும் போது அது 37 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தில் இருக்கும். அதை '0' டிகிரிக்கும் கீழே கொண்டுவந்து 'மைனஸ்194' சென்டிகிரேடுக்கு மாற்றி திரவ நைட்ரஜனில் உறைய வைக்கிறார்கள். இதை 'கிரையோலாஜிக்' என்ற நவீன கருவியில் வைத்து எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாத்து, பயன்படுத்தலாம்.


  வருங்காலத்தில் மலட்டுத்தன்மை அதிகரிக்கும் அபாயம் அதிகம் இருப்பதால், வீரியம் மிக்க ஆணுக்கும், பெண்ணுக்கும் பெரும் மதிப்பு கூடும் என்று இப்போதே மருத்துவத்துறை கணித்து வைத்திருக்கிறது.  22 கருத்துகள்:

  1. இப்போது சகஜமாகிக் கொண்டு வருகிறதுபோலும். விஞ்ஞான வளர்ச்சி.
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சகஜமாகி வருகிறது. அதை வைத்து பல மருத்துவமனைகள் கோடி கோடியாய் சம்பாதிக்கின்றன.
    வருகைக்கு நன்றி ஸ்ரீராம் ஜி!

    நீக்கு
  2. பதில்கள்
   1. வருங்காலத்தில் 20 வயதுக்குள் ஆண் தனது உயிரணுவையும், பெண் கருமுட்டையையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவேண்டும். அப்போதுதான் குழந்தை பெறமுடியும். எனவே, இது வளர்ச்சிதான்.

    நீக்கு
  3. இது ஒரு விஞ்ஞான வளர்ச்சியாக இருக்கலாம். ஆனால், இப்படிக் கொடுக்கப்படும் போது பல தணிக்கைகள் செய்யப்படலாம் - நோய்கள், ஆரோக்கியம் போன்றவை. ஆனால், மரபு ரீதியாக வரும் சில குணதிசயங்கள்? ம்ம்ம் இதை வளர்ச்சி என்பதா? இல்லை வீழ்ச்சி என்பதா??!!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. டிடி கருத்தில் வளர்ச்சி என்று கூறியிருக்கிறேன். அது வளர்ச்சி என்றால் தாங்கள் சுட்டிக்காட்டியது கண்டிப்பாக வீழ்ச்சிதான்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  4. விஞ்ஞானத்தின் வளர்ச்சியா,,,,,,,,,,,
   அல்லது
   மனிதனின் வீழ்ச்சியா,,,,,,,,,,,

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நண்பர் கரந்தையாரின் கேள்வியே எமதும்.....
    தமிழ் மணம் 7

    நீக்கு
  5. தேவைதானே கண்டுபிடிப்பின் தாய் ?விஞ்ஞான வளர்ச்சிதான் இது :)

   பதிலளிநீக்கு
  6. இந்த உலகில் உள்ள அணைத்து உயிரினங்களில், சுயநலம் அதிகம் கொண்ட உயிரினம் மனிதன் மட்டுமே!!!! ??????

   பதிலளிநீக்கு
  7. வணக்கம்
   அருமையான தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல் ஐயா.சிந்திக்க வைக்கின்றது..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்