• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், மார்ச் 30, 2016

  தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் 'சிப்ஸ்'


  விதவிதமான வண்ணமயமான காற்றடைத்த சிப்ஸ் பாக்கெட்டுகள் பெட்டிக் கடைகளில் கூட சாரை சாரையாகத் தொங்குகின்றன. இந்த 'சிப்ஸ்' ருசிக்காக ஒருவன் இறந்து போவதாக விளம்பரம் டிவியில் வருகிறது. உண்மையில் இந்த சிப்ஸை சாப்பிட்டால்தான் ஆரோக்கியம் கெட்டு மரணம் கூட வந்தாலும் வரும்போல. ஒவ்வொருநாளும் சிப்ஸ் குறித்து வரும் ஆய்வுகள் திடுக்கிட வைக்கின்றன.

  இரவில் 'சிப்ஸ்' கொறித்துக் கொண்டும், 'ஜோக்' அடித்துக் கொண்டும் டி.வி. நிகழ்சிகளை பார்ப்பது இரவின் ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்கும் என்று ஒரு ஆய்வு தற்போது தெரிவிக்கிறது.

  கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தான் நேரடியாக  டி.வி.யில் ஒளிபரப்பாகின்றன. இப்போது கூட டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டி இரவில்தான் நடக்கிறது. நல்லவேளை நள்ளிரவுக்கு முன்பே முடிந்துவிடுகிறது.    

  இப்படிப்பட்ட போட்டிகளை விளையாட்டு ரசிகர்கள் இரவு நேரத்தில் கண்விழித்து டி.வி. பார்ப்பது வழக்கம். அத்துடன் 'சிப்ஸ்' போன்ற நொறுக்குத்தீனிகளை கொறிப்பதும், குளிர்பானங்கள் குடிப்பதும் நாகரிக வழக்கமாகி வருகிறது. இது இரவு நேர ஆழ்ந்த நித்திரையை கெடுக்கும் என்கிறது ஆய்வு. 


  சிப்ஸைக் கொறிப்பதால் இரவில் அடிக்கடி  விழித்துக் கொள்வதும், தூக்கம் வராமல் புரள்வதும் நேரிடும். பொதுவாக நமது உறக்கத்தின் போதும்,  கனவு காணும் போதும், கருவிழிகள் அசையும். இரவு நேரத்தில் கொறிப்பதால், கருவிழி அசைவு குறைவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

  சராசரியாக ஒரு நாளுக்கு ஆண் என்றால் 1600 கலோரியும், பெண் என்றால் 1400 கலோரியும் உணவு தேவை. இந்த உணவில் 25 சதவீதத்துக்கு குறைவாக கொழுப்புச்சத்து இருக்க வேண்டும். ஆனால் 10 துண்டு 'சிப்ஸ்' சாப்பிட்டால் அதில் 4 கிராம் கொழுப்புச்சத்து கூடிவிடும். அதாவது நம் உடலில் உடனடியாக 36 கலோரி சேருகிறது. தினமும் ஏராளமாக 'சிப்ஸ்' சாப்பிடுவதால் சராசரியாக ஒரு பாக்கெட்டுக்கு 40 கிராம் கொழுப்பும், 360 கலோரியும் உடலில் சேர்கிறது. இதனால் மொத்த கலோரி 2 ஆயிரமாக அதிகரிக்கிறது. இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. சிப்ஸை கணக்கில் சேர்க்காமல் நாள் முழுவதும் சாப்பிடும் உணவில் கொழுப்புச்சத்து அதிகமாக இருந்தாலும், அந்தக் கொழுப்பு இரவில் ஆழ்ந்த உறக்கத்தை கெடுக்கும்.

  இந்தியாவைப் பொறுத்த வரை ஒருவரது உணவில் 45 சதவீதம் கொழுப்புச்சத்து உணவாகவே இருக்கிறது. இதனுடன் இரவு நேரத்தில் சிப்ஸ் அல்லது நொறுக்குத்தீனிகளை கொறிப்பதால் கொழுப்புச்சத்து மேலும் அதிகரித்து தூக்கத்தை கெடுக்கிறது.


  ஒருவருக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தூக்கம் தேவை. நல்ல தூக்கம் இல்லாததால் மறுநாள் பகல்பொழுதில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கபடுகின்றன. சிந்தனைத்திறன் குறைதல், கவனம் சிதறுதல், நினைவு மறதி, விபத்துக்கள் போன்றவை நிகழ்கின்றன.

  இரவு உணவு முடிந்த பின் குறைந்தபட்சம் 3 மணி நேரத்துக்குப் பிறகே தூங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாப்பிடுவதும், தூக்கம் விழிப்பதற்காக நொறுக்குத்தீனிகள் கொறிப்பதும் தூக்கத்தை கெடுக்கும். ஒருநாள் இரவின் நல்ல தூக்கம் 10 வேலை உணவு தரும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் தரும். அதனால் நல்ல இனிமையான ஆழ்ந்த உறக்கத்தை துரத்தும் சிப்ஸ்களை தவிர்ப்பது நல்லது.


  குழந்தைகளுக்கு சிப்ஸை கண்ணில்கூட காட்டி விடாதீர்கள். டி.வி.யில் எத்தனை கவர்ச்சியாக விளம்பரம் வந்தாலும் அதைப் பார்த்து குழந்தைகள் கேட்டாலும் அந்த பாழும் கொழுப்பை வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். இதுதான் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நாம் தரும் ஆரோக்கிய முதலீடு.   22 கருத்துகள்:

  1. நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்திற்கான விழிப்புணர்வு பகிர்வு.:)

   மிகவும் பயனுள்ளதோர் பதிவு.

   ஆனால் இதை நான் உணர்ந்தது மிகவும் தாமதமாக, சமீபத்தில் மட்டுமே.

   பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  2. உண்மைதான்...
   சிப்ஸ் தின்னும் பழக்கத்தை மட்டுமல்ல இரவு சாப்பாட்டுக்குப் பின்னர் நொறுக்குத்தீனியையும் குறைக்க வேண்டும் என்று சொல்லவது சரியானதே...
   நல்ல பகிர்வு.

   பதிலளிநீக்கு
  3. பலர் இந்த சிப்ஸ் - குளிர்பானம் இதிலேயே மூழ்கி விட்டார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி சமைக்க சோம்பல் பட்டுக் கொண்டு நாள் முழுவதும் இதையே சாப்பிட்டுக் கொண்டிருப்பார்....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. விளம்பர கவர்ச்சியால் பலரும் இந்த கெடுதலை சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
    வருகைக்கு நன்றி வெங்கட்ஜி!

    நீக்கு
  4. இந்த சிப்ஸின் கெடுதல் அறியாமல் பிள்ளைகளுக்கும் பாக்கெட் பாக்கெட்டாய் வாங்கித்தந்து கூடவே நாங்களும் தின்ற காலம் நினைவுக்கு வருகிறது. நல்லவேளையாக சில வருடங்களுக்கு முன்பே விழிப்பு ஏற்பட்டு சிப்ஸ் என்ற பெயரையே ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டோம். குளிர்பானங்களையும் விலக்கிவிட்டோம். அறியாத பலருக்கும் விழிப்புணர்வூட்டும் பதிவு. நன்றி செந்தில்.

   பதிலளிநீக்கு
  5. மகனுக்கும், மகளுக்கும் பிடித்த நொறுக்குத் தீனியில் இத்தனை சிக்கல்கள் இருப்பதை தங்கள் கட்டுரையில் வாசித்தறிந்தேன். இனி ”தடா” போட்டிட வேண்டியது தான்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கண்டிப்பாக தடா போட்டுவிடுங்கள். அதில் இருக்கும் அதிக உப்பும் காரமும் கேன்சரையும் உருவாக்கும் என்பது ஏற்கனவே வெளிவந்த தகவல்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்கள் தளத்தில் கருத்திட முடியவில்லையே. அதை இணையுங்கள். நன்றி நண்பரே!

    நீக்கு
  6. நல்லதொரு விழிப்புணர்வு தரும் பதிவு. பொதுவாகவே மசாலா தூவிய சிப்ஸ் போன்றவற்றை படுக்கப் போகும் போது சாப்பிடுவது நல்லதல்ல.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சரியாக சொன்னீர்கள்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  7. சார்

   உங்கள் விழிப்புணர்வு பதிவு அருமை. இன்றைய சிறுவருக்கும் இளையோருக்கும் மிகவும் தேவை. ஒரு சிறு திருத்தம். ' கலோரி ' என்ற வார்த்தை வரும் இடத்தில எல்லாம் ' கிலோ கலோரி ' என்று வரவேண்டும். நாம் எடுக்கும் உணவு கிலோ கலோரிகளில்தான் சொல்லப்பட வேண்டும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீங்கள் குறிப்பிடுவது உன்மையே! ஆனால், அதை குறியீடாக சொல்லும்போதுதான் அப்படி சொல்கிறார்கள். மற்றபடி கிலோவை இப்போது அதிகம் உபயோகிப்பதில்லை. அதனால்தான் இங்கும் குறிப்பிடவில்லை.

    நீக்கு
  8. நம் உடலுக்கு கொழுப்பு மிக அவசியம். ஆனால் அவை நல்ல கொழுப்பாக இருக்கவேண்டும். சிப்ஸ், குளிர் பானங்களில் இருப்பவை கெட்ட கொழுப்புகள்... விழிப்புணர்வு பதிவு சார்...

   பதிலளிநீக்கு
  9. பல பெற்றோர்கள் இந்த சிப்ஸ் பல பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுக்கின்றார்கள் தங்கள் குழந்தைகளுக்கு. கொழுப்புச் சத்து ஜீரணிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். அதனால்தான் பலருக்கும் நெஞ்சுக் கரிப்பு இரவில் வருகின்றது. அதனால் தூக்கமும் கெடும்..

   கீதா: நாங்கள் முதலிலிருந்தே சீக்கிரமே இரவு உணவை உண்டு விடுவதுண்டு. கொரிக்கும் வழக்கமும் இல்லை. அதுவும் குறிப்பாக இரவில்...

   நல்ல அருமையான பதிவு.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நல்லப் பழக்கம்! இன்றைய பெற்றோர்கள் அப்படி செய்வதில்லை என்பதே உண்மையாக சுடுகிறது.
    வருகைக்கு நன்றி நண்பர்களே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்