Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஜொலிக்கும் ரயில் நிலையங்கள்

ம்மூர் ரயில் நிலையங்கள் எல்லாம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கை மறந்து சுத்தமாக காட்சியளிக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், உலகில் சில ரயில் நிலையங்கள் இருக்கின்றன. 'இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன?' என்று  பாடத் தோன்றும். அந்தளவிற்கு அழகில் சொக்கவைக்கும் ரயில் நிலையங்கள் அவைகள். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்..

பெர்லின் ஹோப்ட்பெஹஃப் - ஜெர்மனி 

பெர்லின் ஹோப்ட்பெஹஃப் ரயில் நிலையத்தின் வெளித்தோற்றம்
ஜெர்மனியில் இருக்கும் இந்த ரயில் நிலையம் ஐரோப்பியாவிலேயே மிகப் பெரிய பிரமாண்டமான ரயில் நிலையமாகும். நூற்றாண்டுகளைக் கடந்த இந்த பழமையான ரயில் நிலையத்தை இடித்துவிட்டு நவீன வடிவில், நவீன தொழில்நுட்பத்தில் ரயில் நிலையம் முழுவதும் மெட்டல் மற்றும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெர்லின் ஹோப்ட்பெஹஃப் ரயில் நிலையத்தின் உள்த்தோற்றம்
சூரிய ஒளி இதன் மீது பட்டதும் வைரமாக ஜொலிக்கிறது. உள்ளே சென்றால் இது ரயில் நிலையாமா? அல்லது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா? என்று வியக்கும் அளவுக்கு பளிச்சென்று இருக்கும். புதிய ரயில் நிலையம் 2006-ல் திறக்கப்பட்டது. அதற்குள் உலக சுற்றுலா வாசிகளின் மனதை வசீகரித்துவிட்டது.  

நார்த் பார்க் வே கேபிள் - ஆஸ்திரியா

'நார்த் பார்க் வே கேபிள்' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம் 
ஆஸ்திரியாவில் உள்ள இன்ஸ்பெர்க் என்ற நகரில் இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளது. நவீன தொழிநுட்பத்தில் கடல் அலைகளின் வடிவத்தில் ஆடம்பரமாக கூரை உள்ளது. எல்லாவிதமான அதிர்வுகளையும் நில நடுக்கத்தையும் தாங்கும் விதமாக கட்டப்பட்டுள்ள காஸ்ட்லியான சுரங்க ரயில் நிலையம் இது.

'நார்த் பார்க் வே கேபிள்' ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம் 

ல கேர் டி ஸ்டரஸ்பொ - பிரான்ஸ்

'ல கேர் டி ஸ்டரஸ்பொ' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம்
1883-ல் கட்டப்பட்ட இந்த பழமையான ரயில் நிலையம் 2007-ல் நவீனமயமாக புதுப்பிக்கப்பட்டது. 120 மீட்டர் உயரத்துக்கு மேல் முழுக்க முழுக்க கண்ணாடியால் போர்த்தப்பட்டதுபோல் கட்டினார்கள். வெயில் பட்டால் தங்கநிறத்தில் ஜொலிக்கும் ரயில் நிலையம் இது.

'ல கேர் டி ஸ்டரஸ்பொ' ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம்


கானாஸவா - ஜப்பான்

'கானாஸவா' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம்
இது பழமையும் புதுமையும் இணைந்த கலவையால் உருவானது. இதில் ஜப்பானின் புராதனக் கட்டடக் கலையும் மேற்கத்திய பாணி வடிவமைப்பும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டது. 14 மீட்டர் உயரமுள்ள பிரமாண்டமான நுழைவு வாயில் ஜப்பானின் பழமையால் உருவானது. இதன் மேற்கூரை 30 ஆயிரம் காண்ணாடி துண்டுகளால் ஆனது. இதுவும் சூரிய ஒளியில் ஜொலிக்கும் ரயில் நிலையம்தான்.

'கானாஸவா' ரயில் நிலையத்தின் நுழைவாயில்


ஆன்ட்வெர்ப் சென்ட்ரல் - பெல்ஜியம்

'ஆன்ட்வெர்ப் சென்ட்ரல்' ரயில் நிலையத்தின் வெளித் தோற்றம் 
இந்த ரயில் நிலையம் பார்ப்பதற்கு தேவாலயம் போலவே ஜொலிக்கும் அழகான ரயில் நிலையம். அரைவட்ட கோள வடிவில் மேற்கூரையும், பிரமாண்டமான தூண்களும் காண கண் கோடி வேண்டும். பக்கவாட்டில் உள்ள கட்டிடங்களின் சிறுசிறு மேற்கூரைகள் மையக்கூரையோடு இணைக்கப்பட்டுள்ளன. இதை ரயில் நிலையங்களின் தேவாலயம் என்று சொல்கிறார்கள்.

'ஆன்ட்வெர்ப் சென்ட்ரல்' ரயில் நிலையத்தின் உள்த் தோற்றம் 

நம்ம ஊர் ரயில் நிலையங்களும் இப்படி ஜொலிப்பது எப்போது?




16 கருத்துகள்

  1. செய்திகளும் படங்களும் மிக அழகாக உள்ளன. தலைப்பைப் போலவே ஜொலிக்கின்றன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் ஜொலிக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. படங்கள் அழகு....
    நம்மூரிலா...? அது இப்போது சாத்தியமில்லை...
    ஒரு விமான நிலையத்தை சரியாக கட்ட முடியவில்லை... உடைந்து விழுவதில் சதம் அடிக்கப் போகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ரயில் நிலையங்களும் கண்ணாடியால் ஆனவைகல்தான். ஒருமுறை கூட உடையவில்லை. நமோ 100-யை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

      நீக்கு
  3. அழகான படங்கள்..நம்மூரிலா...விமான நிலையமே சரியாக இல்லை. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படும் மேல் தளத்தில் விருந்தினருக்கு அவசர இயற்கை உபாதைகளைக் கூட கழிக்க முடியாது. கழிவறைகள் இல்லை. கீழ் தளத்திற்குத்தான் செல்ல வேண்டும். இப்படியாகத்தான் இருக்கிறது நம்மூர் சேவைகள் எல்லாம். அதைப் போல தலைநகர் டெல்லி ரயில் நிலையத்தில் கழிவறை வசதிகள் மிக மிக மிக மோசம்.

    முதலில் ஒரு நல்ல தலைவர் இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டும்...அப்போதுதானே இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவச கழிப்பறை கட்டாயமாக இருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், பல இடங்களில் இது மீறப்பட்டு கட்டணக் கழிப்பிடங்கள் மட்டும் அமைக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் அதுவும் இருப்பதில்லை. மக்களின் தேவைப் பற்றி கண்டுகொள்ளாத அரசுகள் இருக்கும்வரை இப்படிதான். நீங்கள் சொன்னதுபோல் நல்ல தலைவர் நமக்கு வாய்க்கவில்லை என்பதே உண்மை.

      நீக்கு
  4. நன்றி நண்பரே !

    100 % உண்மையை சொன்னீர்கள் - சரியான தலைவர்கள் இந்தியாவில் உருவாகட்டும். பின்பு எல்லா மாற்றங்களும் உருவாகும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே, நல்லவர்களை அரசியலில் வாக்களித்து தேர்ந்தெடுப்போம். அப்போதுதான் மாற்றம் வரும்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு

  5. இந்த படங்களைப் பார்த்ததும் நம் நாட்டில் இது போன்ற காட்சிகளை எப்போது பார்க்கபோகிறோம் என்ற ஏக்கப் பெருமூச்சே வெளிப்படுகிறது. அழகான படங்களையும் தகவலையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. நம்மூரு ரயில் நிலையங்களும் அழகுறத்தான் கட்டப்படுகின்றன சகோ. தொகுத்து ஒரு நாள் போடணும். புகைப்படங்கள் அங்கங்கே இருக்கு :) ஆனா பராமரிப்புத்தான் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் தெரியும் சகோ! நமது ரயில் நிலையங்களும் அருமையாக இருக்கின்றன. ஆனால், இப்படி நவீன வடிவமைப்பில் நம்மிடம் ரயில் நிலையங்கள் இல்லை என்பதே உண்மை.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  7. அருமையான தகவல் .......மிகவும் வித்தியாசமான தகவல்களை பதிவு செய்கிறீர்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. அருமையான தகவல் .......மிகவும் வித்தியாசமான தகவல்களை பதிவு செய்கிறீர்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை