• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, ஏப்ரல் 01, 2016

  பெண்களுக்கான சங்கடம் இது!


  பெண்களுக்கென்று சில பிரச்சனைகள் எப்போதும் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கது மாதவிலக்கு. மாத விலக்கு போலவே பெண்களை சங்கடப்படுத்தும் மற்றொரு பிரச்சனை வெள்ளைப்படுதல். பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து அவ்வப்போது வெள்ளை நிறத்தில் கஞ்சிப் போன்று வெளியேறும் திரவமே 'வெள்ளைப்படுதல்' என்கிறார்கள். 

  எல்லாப் பெண்களுக்குமே குறிப்பிட்ட சில நாட்களில் சிறிதளவு வெள்ளைப்படுதல் இயற்கையே. பெரும்பாலும் மாத விலக்கு வருவதற்கு முன் மூன்று நாட்கள் வெள்ளைப்படுகிறது. இதுவொரு யுத்தத்தின் வெளிப்பாடுதான். 

  ஒரு உயிரை உருவாக்கி வளர்க்கும் கர்ப்பப்பையின் நுழைவு வாயிலாக இருப்பது யோனிதான். அதற்குள் எந்த நோய்த் தொற்றும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கெடுதலான கிருமிகளை உள்ளே நுழையவிடாமல் தடுக்கிறது; 'லேக்டோ பாஸில்லஸ்' என்ற பாக்டீரியா. இது யோனியின் உள்புறத்தில் முழுவதுமாக பரவி நின்று உள்ளே நுழையும் நோய் கிருமிகளை தடுக்கிறது. இந்த பாக்டீரியா கர்ப்பப்பையை பாதுகாக்கும் ராணுவம். 

  இந்த 'லேக்டோ பாஸில்லஸ்' என்ற பாக்டீரியா ராணுவம் சில சமயங்களில் பாதிப்படையும் விதமாக ஏதாவது நோய் தொற்று ஏற்பட்டுவிடும். அது கொஞ்சம் சோர்ந்துவிட்டால் போதும், உடனே கெடுதல் ஏற்படுத்தும் கிருமிகளும் பூஞ்சைகளும் உற்சாகம் கொண்டு யோனிக்குள் நுழைந்து விடும். அப்படி உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்து போரிட்டு மாண்டுபோகும் பாக்டீரியாக்களே 'வெள்ளைப்படுதல்' என்ற பெயரில் வெளிவருகிறது. 


  அழிந்த கிருமிகள்தானே வெளிவருகிறது. அப்படியென்றால் வெள்ளைப்படுதல் நல்லதுதானே..? பின் ஏன் அதைப் பார்த்து இத்தனை பயம்..! குறைவான வெள்ளைப்படுதலை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. அதுவே உள்ளாடையோ, உள்பாவடையோ நனையும் அளவுக்கு வெள்ளைப்பட்டால், உடம்பில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். 

  பெண்ணின் யோனி மற்றும் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதிகளில்  இருக்கும் சுரப்பிகள் சுரக்கும் சளிப் போன்ற திரவமே வெள்ளைப்படுதலுக்கு காரணம். இரண்டு வகை காரணத்திற்காக வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது.


  முதல் காரணம், பூஞ்சை நோய்த் தொற்றினால் தயிர் ஆடைப் போன்ற வெள்ளைப்படும். கூடவே அரிப்பும் ஏற்படும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நீண்ட நாட்கள் நோய் எதிர்ப்பு மருந்துகளை சாப்பிடுவர்களுக்கும் இது வர வாய்ப்பு அதிகம். 'ஈஸ்ட்' மாத்திரைகளும் வைட்டமின் 'பி' மாத்திரைகளும் எடுத்தால் இது குணமாகிவிடும். 

  இரண்டாம் காரணம், மிக அதிகமான அரிப்பும், நுரை நுரையாக வெள்ளைப்படுதலும் வருவதைக் குறிக்கும். இது யோனியில் தங்கியிருக்கும் 'டிரைகொமானஸ்' என்ற கிருமி மூலம் ஏற்படுகிறது. பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளாதது, சுத்தமற்ற சுகாதாரமற்ற உடலுறவு மூலமும் இந்தக் கிருமிகள் யோனிக்குள் நுழைந்து விடுகின்றன. 

  பெண்ணுக்கு மட்டுமே வெள்ளைப்படுதல் என்பது ஏற்படும் என்றாலும், கூட கணவன்-மனைவி இரண்டு பேருமே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வெள்ளைப்படுதலால் உடலுறவுக்குப் பின் கணவருக்கும் ஆணுறுப்பில் அரிப்பு, எரிச்சல் ஏற்படக்கூடும். மீண்டும் கணவனிடமிருந்து மனைவிக்குள் கிருமிகள் நுழையக்கூடும். அதனால் கணவன் மனைவி இருவருமே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 


  அதிகமான வெள்ளைப்படுதல் சிக்கலமானது. அது தீவிரமான செக்ஸ் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது மட்டுல்லாமல் சிபிலிஸ், கொனோரியா, எச்.ஐ.வி. போன்ற நோய்களின் தாக்குதலாகவும் அது இருக்கலாம். அதனால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதே நல்லது.    18 கருத்துகள்:

  1. பதில்கள்
   1. நன்றி நண்பரே, வாசகர்களின் கேள்விகளுக்கு மருத்துவர்களிடம் பதில் கேட்டு வாங்கும் பொறுப்பு சில வருடங்களாக நான் செய்து வந்தேன். அப்போது மருத்துவர்கள் அளித்த பதிலையே இங்கு கட்டுரை வடிவில் தந்திருக்கிறேன்.

    நீக்கு
  2. வெள்ளை அறிக்கை போல் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டது, உங்கள் பதிவு !

   பதிலளிநீக்கு
  3. நல்ல ஒரு பதிவு. அனைவரும் தெளிவடையும்படி தெளிவாகப் பகிர்ந்துள்ள விதம் நன்று.

   பதிலளிநீக்கு
  4. அருமையான கட்டுரை சகோ! அதுவும் தமிழில் வாசிக்கும் போது...எனது மருத்துவக் கட்டுரைகளுள் இதுவும் மற்றொன்று ப்ரீ மென்சுரல் சின்ட்ரோம் மற்றும் இன்னும் சில அடக்கம். ஆனால் தமிழில் மொழி பெயர்க்கத் தெரியாமல் அப்படியே இருக்கின்றன. நீங்கள் மற்றும் சகோ க்ரேஸ், சகோ கீதமஞ்சரி எல்லோரும் மிக அழகாகத் தமிழில் அறிவியல், மருத்துவக் கட்டுரைகளை எழுதுகின்றீர்கள். வாழ்த்துகள் சகோ. நேரம் இருந்தால், நீங்கள் ப்ரீ மென்சுரல் சின்ட்ரோம் பற்றியும் எழுதுங்கள் சகோ. மிக முக்கியமான ஒன்று. இதனால் பல பெண்களுக்கு மன உளைச்சல்களும் ஏற்படுகின்றன. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் பி எம் எஸ் (ப்ரீ மென்ட்சுரல் சின்ட்ரோமையும் விட பி எம் டி டி - ப்ரீ மென்சுரல் டைஸ்ஃபோரிக் டிஸ் ஆர்டர் அதிகமாக இருக்கிறது பெரும்பான்மையான பெண்களுக்கு. ஒரு சிலருக்கு மனச் சிதைவுக்கும் உள்ளாக்குகிறது.

   நேரம் இருந்தால் எழுதுங்கள் சகோ..

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். விரைவில் வெளியிடுகிறேன்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்