Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஆண்களை மிஞ்சும் பெண்களின் வலிமை!

து ஆண்களுக்கு கொஞ்சம் கசப்பானா சங்கதியாகத்தான் இருக்கும்! இருந்தாலும் என்ன செய்ய..? உண்மை அப்படித்தானே இருக்கிறது..!!

ஆரோக்கியம் என்ற விஷயத்தில் ஆணையும் பெண்ணையும் ஒப்பிட்டால், ஆணை விட பெண்ணே வலிமையானவள். நோய் நொடிகள் அண்டாத, நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வது பெண்கள்தான். ஆண்கள் இந்த விஷயத்தில் பலவீனமானவர்கள்தான்..! நோஞ்சான்கள் என்று கூட சொல்லலாம்..!

ஆணின் பலமெல்லாம் உடலுக்கு வெளியேதான். உடலுக்குள் அவன் 'பப்பு' எதுவும் வேகவில்லை. அதில் பெண் விஞ்சி நிற்கிறாள்.  பெண்ணைவிட எல்லா விஷயத்திலும் 25 சதவீதம் கூடுதலானவன் ஆண். உதாரணத்திற்கு ஒரு ஆண் 100 கிலோ எடையை தூக்கினால், பெண்ணால் 75 கிலோதான் தூக்க முடியும். அவ்வளவுதான் அவர்கள் பலம். சக்தி எல்லாமே அதற்குமேல் அவளால் தூக்க முடியாது. 


இதெல்லாம் உடலுக்கு வெளியே நடக்கும் சங்கதிகள். உடலுக்குள் என்று எடுத்துக் கொண்டால், பெண்ணை அடித்துக் கொள்ளவே முடியாது. ஆணால் நெருங்கக்கூட முடியாது. பைத்தியம், திக்குவாய், பிறவி ஊனம், காக்கை வலிப்பு போன்ற குணப்படுத்த சிரமப்படும் நோய்கள் எல்லாம் ஆண்களைத்தான் அதிகம் தாக்கும். சராசரி ஆயுளிலும் கூட ஆணைவிட பெண் கூடுதலாக 8 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்கிறாள்.

தாய்மை என்ற பேற்றிற்காக பெண்ணுக்கு ஆரோக்கியத்தை இயற்கை அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறது. 'இம்முனோகுளோபின்' என்ற எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட ரத்த புரதம் பெண்களின் உடலில் மட்டுமே அதிக அளவில் உள்ளது. ஆணுக்கு ஏதோ பேருக்கு கொஞ்சம் இருந்துட்டுப் போகட்டுமே என்று இயற்கை விட்டு வைத்திருக்கிறது. 


ஆண், பெண் பாலினத்தை நிர்ணயிக்கும் 'எக்ஸ்', 'ஒய்' குரோமோசோம்களில் கூட பெண்ணினத்தை உருவாக்கும் 'எக்ஸ்' (X) குரோமோசோமே வலிமையையும் ஆரோக்கியமும் முழுமையான வளர்ச்சியும் கொண்டது. ஒரு பெண் உருவாக இரண்டு 'எக்ஸ்' குரோமோசோம்கள் தேவை. அப்படியென்றால் இரட்டிப்பு ஆரோக்கியம் பெண்ணுக்கு..!

ஆண் உருவாக ஒரு 'எக்ஸ்' (X), ஒரு 'ஒய்' (Y) என்று இரண்டு குரோமோசோம்கள் தேவை. இதில் 'ஒய்' அரைகுறையாக வளர்ச்சியடைந்த ஒரு  குரோமோசோம். அது முழு வளர்ச்சியடையாத ஆரோக்கியமற்ற ஒன்று. அதனால்தான் மருத்துவ உலகம்  மூளியாக்கப்பட்ட ஒரு பெண்ணே ஆண் என்கிறது. பெண் ஆரோக்கியத்திற்கு இதுதான் மிகப்பெரிய காரணம்.

மேலும், தற்காப்பு சக்தியை அதிகம் உண்டாக்கும் 'ஹீமோபைலியா ஜிடென்ராஸ்' என்கிற ஹார்மோன் எப்போதும் கருவுற்ற தாயின் உடலில் இருந்து கருவில் உள்ள குழந்தை பெண்ணாக இருந்தால் மட்டுமே அக்குழந்தைக்கு செல்கிறது.


இது ஒரு போதும் தாயிடம் இருந்து ஆண் குழந்தைக்கு செல்வதில்லை. எப்படி ஆண் குழந்தையைத் தவிர்த்து, பெண் குழந்தைக்கு மட்டும் இந்த தற்காப்பு சக்தி பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக ஒரு பெண் குழந்தையைக் கூட விட்டுவிடாமல் கொண்டுபோய் சேர்க்கிறது  என்பது விஞ்ஞானத்திற்கே இன்னும் புலப்படாத ஒரு புதிராக இருக்கிறது.

இதனால்தான் பெண் குழந்தைகள் சரியான சாப்பாடு இல்லையென்றாலும், நோய்வாய்ப்படும் போது சரியான கவனிப்பு இல்லையென்றாலும் கூட கடுமையான பாக்டீரியாக்களின் தாக்குதல்களை சமாளித்து வாழ்ந்து விடுகின்றன. எல்லாம் அடுத்த சந்ததியை ஆரோக்கியமாக உருவாக்க வேண்டும் என்று பெண்ணுக்கு இயற்கை தந்திருக்கும் கொடை.

உடல்  வலிமை வேறு, உடலின் எதிர்ப்புச் சக்தி வேறு. வலிமையை ஆணுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை பெண்ணுக்கும், இயற்கை அளித்துள்ளது. நீண்ட நாட்கள் வாழ இயலாமல், நோய்களை தாங்கிக் கொள்ளவும் முடியாத இந்த வலுவற்ற ஆண்கள், பெண்களின் வலிமையை உணர்ந்து அனுசரித்து வாழ வேண்டும் என்பதுதான் ஆண்களுக்கு இயற்கை இட்டிருக்கும் கசப்பான நியதி.

சரி, அப்படியென்றால் ஆணுக்கென்று எந்த பெருமையும் இல்லையா என்று கேட்டால்... இயற்கை இருக்கிறது என்ற பதிலைத்தான் தருகிறது. வலிமையான வெளிப்புற உடலும், வாழ்நாள் முழுவதும் உடலுறவில் ஈடுப்பட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடிய சக்தியும் ஆணுக்கு மட்டுமே உண்டு. குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்ணால் இது முடியாது. 

இதுவும் கூட மனித இனம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக இயற்கை தொடர்ந்து பெண்களை தாய்மை அடையச் செய்வதற்காக ஆணுக்கு கொடுத்த சிறப்புதான். 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற சங்கதியெல்லாம் இயற்கையிடம் கிடையாது. அதற்கு இனத்தைப் பெருக்க வேண்டும் என்பதுதான் ஒரே அசைன்மெண்ட். காதல், கல்யாணம், கற்பு என்பதெல்லாம், மனித வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மிக மிக சமீபமாகத்தான், மனிதன் சொத்து சேர்க்கத் தொடங்கியப் பின் ஏற்படுத்திக் கொண்ட நாகரிக நாசுக்குகள்..!

இதுவொரு மீள் பதிவு.


அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!


15 கருத்துகள்

  1. வாழ்க பெண்மை! கற்பு, ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் சுயநலத்தின் வெளிப்பாடோ!

    தம இன்னும் சப்மிட் ஆகவில்லையே...

    பதிலளிநீக்கு
  2. மகளிர் தினத்தில்
    பெண்களைப் போற்றும் ஓர் பதிவு
    அருமை நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  3. ஆஹா...இப்படியெல்லாமிருக்கா....நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  4. மீள்பதிவாயினும் மீண்டும் மீண்டும் பதியவேண்டிய சிறந்த பதிவு நண்பரே!
    இயற்கையே பெண்ணிலிருந்து, பெண்ணுக்குக் கடத்தும் அந்த பாதுகாப்புச் சக்தி இதுவரை நானறியாத செய்தி! அருமையான பதிவு. மிகச்சிறந்த மகளிர்தினச் செய்தி! வாழ்த்துகள், நன்றியுடன் த.ம.3

    பதிலளிநீக்கு
  5. #நாகரிக நாசுக்குகள்#
    இப்போதான் புரிகிறது ,ஆதிகால மனிதன் அதிக சந்தோசமாய் இருந்த ரகசியம் :)

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு ஐயா.பெண்களை குறித்த அறிய தகவலுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு சகோ.. தங்கள் பதிவுகளின் மூலம் தமிழில் அறிவதும் அழகாக இனிமையாக இருக்கின்றது. பண்டெல்லாம் கல்யாணம் குடும்ப அமைப்பு என்றெல்லாம் இல்லையே. அவை எல்லாம் குழுக்கள், குடும்பங்கள் என படிப்படியாக வளர்ச்சி அடைந்த போது ஏற்பட்டவைதானே. மட்டுமல்ல முன்பு இருந்த லிவிங்க் டு கெதர் (ஆண்கள் பெண்கள் யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் ...மாறிக்கொண்டும் இருக்கலாம் ) தான் மீண்டும் இப்போது வந்துள்ளது. உடை நாகரீகம் முதல் அப்படியிருக்க ஏன் இப்போது கூக்குரல்கள். நாம் இடையில் ஏற்பட்ட மாறுதல்களுக்குப் பழகி மனம் எற்றுக் கொண்டு தலை தலைமுறையாக அந்தப் படிப்பினையைக் கொடுத்துவருவதால்தான்...இப்போதும் நம் மனம் அதற்கு உட்பட்டுவிட்டிருக்கிறது...

    நல்ல பதிவு சகோ

    பதிலளிநீக்கு
  8. நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு. மன உறுதியில் பெண்களை விஞ்ச முடியாது

    பதிலளிநீக்கு
  9. பொறாமையாக என்றாலும்
    பெருமையாகவும் இருக்கிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. மகளிர் நாளன்று பகிர்ந்துள்ள அருமையான தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. மகளிர் தினத்திற்கு ஏற்ற பதிவு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை