• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, மார்ச் 06, 2016

  உலகிலேயே மிகப் பெரிய முத்து

  சிப்பிக்குள் தோன்றும் கெட்டியான பொருளே முத்து. ஏதாவது ஒரு பொருள் சிறிய முத்துச்சிப்பியின் ஓட்டுக்குள் புகுந்துவிடும். அது ஒரு சிறிய மணற் துகளாக கூட இருக்கலாம். சிறிய புழுவாகவும் இருக்கலாம். உள்ளே நுழைந்த அது உறுத்திக் கொண்டே இருக்கும். அப்போது சிப்பி அதைச் சுற்றி ஒரு சுவர் அமைக்கும். இந்த சுவர் ஒவ்வொரு அடுக்காக படிந்து கொண்டே வரும். அதுவே உருண்டை வடிவம் பெற்று முத்தாகிறது.


  கடலுக்குள் ஓடுகளை பாதுகாப்பு கேடயமாக கொண்டுள்ள உயிரினங்கள் லட்சக்கணக்கில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் முத்துச்சிப்பி. சிப்பிகளிலில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. அவைகள் 2.5 செ.மீ. முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை.

  சிப்பிகளின் ஓடு, இரு பகுதிகளைக் கொண்டது. இரு பகுதிளும் ஓரத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். சிப்பி தனது பருவ காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளும். முட்டையிலிருந்து வெளிவரும் சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசிமுனை அளவே இருக்கும். 

  ஒரு நாள் கழித்தே ஓடு உண்டாகும். இரண்டு வாரங்களில் நீந்தத் தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் அது முழு வளர்ச்சி அடையும்.

  மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில்தான் கிடைக்கின்றன. அரேபியர்கள் கடலில் முத்து குளிப்பதை முக்கியத் தொழிலாக வைத்திருக்கிறார்கள். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் சிப்பி கிடைக்கிறது.


  பிலிப்பைன்ஸ் தீவில் முத்துக்குளிக்க சென்ற மீனவர்கள் கடலுக்குள் ஒரு மனிதன் இறந்து கிடப்பதைக் கண்டார்கள். அந்த மனிதனின் கை பெரிய சிப்பியின் அடியில் சிக்கிக் கொண்டு எடுக்க முடியாமல் போராடி இறந்திருந்தார். அந்த மனிதரையும் சிப்பியையும் மேலே கொண்டு வந்தார்கள். 

  அப்படி வெளிவந்த அந்த சிப்பிதான் உலகிலேயே மிகப் பெரியது. இதன் நீளம் 25 செ.மீ., குறுக்களவு 18 செ.மீ.,  எடை 8 கிலோ. இந்த சிப்பியின் வயது 400 வருடங்கள், முத்தின் முதிர்ச்சி 360 வருடங்கள்.  இதுதான் உலகிலேயே மிகப் பெரிய முத்து என்பது குறிப்பிடத்தக்கது.   11 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.தகவலுக்கு நன்றிகள் ஐயா.இன்னும் இந்த முத்து உள்ளதா..??ஐயா..

   பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல்...முத்து பற்றிய செய்திகள் ஆர்வமூட்டுகிறது ...

   பதிலளிநீக்கு
  3. அவர் எப்போ கடலுக்குள் போனார், எப்போ இவர்கள் கண்டனர் எனும் தகவல்கள் எதுவும் இல்லையா சகோ, அருமையான தொகுப்பு, தங்கள் பதிவுகளில் பல புதிய தகவல்கள்,,,
   நன்றி.

   பதிலளிநீக்கு

  4. உலகத்திலேயே மிக பெரிய முத்தைக் கண்டு வியந்தேன்.தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  5. அரிய தகவல் தந்த பதிவுலகின் முத்து எஸ். பி. செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
  6. அறியாத தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  7. இந்த நீர்ருயிர் - மட்டி எனவும் அழைப்பர். இதன் ஓடுகளைச் சிப்பி என்பர். முத்துக்குளித்தல் அரபியர் மாத்திரலல்ல! தமிழகமும் இருந்து இப்போ தொலைத்து விட்டது. கீழைத்தேயங்கள் எங்குமிருந்துள்ளன. இப்போது ஜப்பான் முத்துச் சிப்பி வளர்ப்பில் நவீன முறைகளைப் புகுத்தி பெரிய சந்தையை உருவாக்கியுள்ளது.
   நீங்கள் 2 ம் படத்தில் காட்டியுள்ள இராட்சத மட்டிகள் முத்து உருவாக்குமா தெரியவில்லை. இவற்றின் வாயுள் கைவிட்டு அவை மூடி விட்டால் எடுக்க முடியாது. இங்குள்ள பல தேவாலயங்களின் வாசலில் இதன் ஓடுகள் சுவரில் பொருத்தி அதனுள் நீர் விட்டு வைத்துள்ளார்கள். (பக்தர்கள் தலையில் தெளிப்பதற்கு)
   நீங்கள் குறிப்பிடும் இந்த 8 கிலோ முத்தைக் காட்சிப்படுத்தலாமே தவிர, வேறு பயனில்லை எனக் கருதுகிறேன். நான் கண்ட முத்துச் சிப்பிகள் ஒரு சாண் நீளமானது. தட்டையானது. முத்துக்கள் ஒரு கடலை அளவிலும் அதனிலும் சிறிய அளவிலுமே இருந்தன.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்