• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், ஏப்ரல் 21, 2016

  நகைச்சுவையின் மற்றொரு அடையாளம்

  ருசில திறமைசாலிகள் அவர்கள் காலத்தில் கொண்டாடப்படாமல் போவதற்கு மற்றவர்களின் மிதமிஞ்சிய புகழ் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும். நகைச்சுவையின் உச்சக்கட்டத்தில் சார்லி சாப்ளின் கோலோச்சிய காலக்கட்டத்தில் அவரைப் போலவே ஒரு திறமையான நடிகர் சினிமாவில் இருந்தார். அவர் பெயர் பஸ்டர் கீட்டன். 

  பஸ்டர் கீட்டன்
  நாடக குழுவில் வேலைப்பார்த்த ஒரு தம்பதியருக்கு மகனாக 1895-ல் இவர் பிறந்தார். தன்னுடைய மூன்று வயதிலேயே மேடை ஏறிய இவர். அதன்பின் மேடையை அமைக்கும் நிர்மாண வேலையில் ஈடுபட தொடங்கினார். 1917-ல் நாடகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சினிமா பக்கம் திரும்பினார். 

  அவர் ஹாஸ்பிட்டாலிட்டி
  சார்லி சாப்ளினைப் போலவே இவரும் தன்னுடைய முதல் படத்தை தானே நடித்து, தானே இயக்கி, தானே கதையும் எழுதி உருவாக்கினார். 1920 முதல் 1923 வரை 19 படங்களை உருவாக்கி வெளியிட்டிருந்தார். எல்லாமே துண்டு ரீல் எனப்படும் சிறிய படங்கள். முழுநீளப் படம் என்றால் அவர் 1923-ல் வெளியிட்ட 'தி த்ரீ ஏஜஸ்' படத்தைச் சொல்லலாம். இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்றது. 

  தி த்ரீ ஏஜஸ்
  அதே ஆண்டில் இவர் உருவாக்கிய மற்றொரு படம் 'அவர் ஹாஸ்பிட்டாலிட்டி' என்பது. இதில் தென் அமெரிக்காவில் ரயில் பாதை அமைக்கும் காலத்தில் அங்கு வேலை செய்யும் ஒரு குடும்பத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். நடிப்பிலும் கதை அமைப்பிலும் பிரமாதப்படுத்தி இருக்கும் கீட்டனுக்கு இதுவும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. 

  ஷெர்லக் ஜூனியர்
  மூன்றாவதாக கீட்டன் எடுத்த படம் 'ஷெர்லக் ஜூனியர்'. ஐரோப்பாவின் மிகப் பெரிய கலைப்படம் என்று பெயர் எடுத்தது. யதார்த்த படங்களின் முன்னோடி என்று இதைச் சொல்லலாம். நகைச்சுவையிலும் வித்தியாசமான நவீன கலை வெளிப்பாட்டை இந்த படத்தின் மூலம் வெளிக் கொண்டு வந்தார். 

  1928-ல் இவர் உருவாக்கிய 'தி கேமரா மேன்' என்ற படம் கீட்டனின் சொந்த வாழ்க்கையையே சொன்னது. 1933-ல் பேசும் படங்கள் வரத் தொடங்கின.  மௌன படங்களில் சாதனை புரிந்த கீட்டனுக்கு பேசும் படத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்வதில் பெரும் தடுமாற்றம் இருந்தது. 

  தி கேமரா மேன்
  அளவற்ற மதுவுக்கு அடிமையாகி இருந்த காரணத்தால் ஸ்டுடியோக்களின் விதிமுறைகளுக்கு ஏற்ப அவரால் நடக்க முடியவில்லை. அவரின் ஒப்பந்தங்கள் தொடர்ந்து ரத்தாகிக் கொண்டே இருந்தன. சார்லி சாப்ளின் போலவே இவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவாதால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை உண்டாக்கினார். இப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்த போதும் அவர் காலத்தின் சிறந்த கலைஞராக மதிக்கப்பட்டார்.    ஷெர்லக் ஜூனியர் (1924)  31 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான தகவல்கள். 4வது படத்தில் அவர் தன் ஜாடையில், நம் சந்திரபாபு அல்லது நாகேஷ் போலவும் கொஞ்சம் தோற்றமளிப்பதாகத் தெரிகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உன்மைதான அய்யா! பின்பற்றியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  2. தெரியாத தகவல்கள்
   தெரியத் தந்தமைக்கு நன்றி நண்பரே....

   பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல்கள். வை, கோபாலகிருஷ்ணன் சார் சொல்லி இருப்பது போல நாகேஷ் இவர் பாணியைக் கொஞ்சம் பின்பற்றியிருப்பாரோ என்று தோன்றுகிறது.

   தம +1

   பதிலளிநீக்கு
  4. அறியாத தகவல்தான் நண்பரே... பிறகு வந்து படம் பார்ப்பேன் பகிர்வுக்கு நன்றி
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
  5. நல்ல தகவல். அந்த சான்ஞ்சு இருக்கும் புகைப்படத்தைப் பார்க்கும் போது நாகேஷும் இப்படி இவரைப் போன்று கொஞ்சம் செய்ய முயற்சி செய்திருப்பது போல் தோன்றுகிறது...நன்றி பகிர்விற்கு...

   பதிலளிநீக்கு
  6. அருமையான பகிர்வு

   உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
   http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எனது பதிவுகளை பதிவிடலாம் என்று வந்தபோது எனது பிரவுசரில் இருக்கும் அட் பிளாக்கை நீக்க வேண்டும் என்று வருகிறது. அதனால் பதிவிட முடியவில்லை. அந்த செட்டிங்க்சை மாற்றுங்கள் நண்பரே!

    நீக்கு
  7. கீட்டனைப் பற்றி பேசக்கூட ஆளிருப்பது மகிழ்ச்சி. அவரும் ஒரு மேதை. எப்போதோ அவரைப் பற்றி ஒரு ஆங்கில புத்தகம் படித்திருக்கிறேன். கேமரா மேன் படம் தேடித் பார்த்து விட வேண்டியதுதான்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் ஆதங்கமே அந்த கலைஞனின் உயரத்தை சொல்கிறது.
    வருகைக்கு நன்றி மோகன்ஜி!

    நீக்கு
  8. சூரிய ஒளியின் முன் சந்திர ஒளி போல தெரியாமல் போய் விட்டதே அவர் திறமை :)

   பதிலளிநீக்கு
  9. இவ்வாறான ஒரு நடிகரைப் பற்றி இதுவரை நான் அறியவில்லை. சில கோணங்களில் சார்லி சாப்ளின் போலவே உள்ளார். பகிர்வுக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அவரது படங்களிலும் அவர் நடிப்பு சார்லியையே நினைவூட்டும்.
    வருகைக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  10. வெற்றியாளர்களை மட்டுமே நாம் அடையாளம் காணக்கூடிய வகையில் நமது சமூக அமைப்பு நம்மை மூளை சலவை செய்கிறது. தாமஸ் ஆல்வா எடிசனின் விளக்கு வெளிச்சத்தில் உண்மையான அறிவியல் மேதையான டெஸ்லா காணாமல் போனது நினைவுக்கு வருகிறது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை, உண்மை வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுகிறோம். திறமையாளர்களை அல்ல.
    தங்கள் வருகைக்கு நன்றி!

    நீக்கு
  11. தெரியாத புதுத் தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  12. அதிகம் அறியப்படாத சாதனையளர்கள் பற்றிய விரிவான பதிவு. தொடரட்டும்

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்