• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, ஏப்ரல் 23, 2016

  ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் இந்திய விவசாயிகள்..!

  பஞ்சாப் விவசாயி
  க்கள் ஒருஇடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்தல் என்பது பெரும்பாலும் பஞ்சம் தலைவிரித்து ஆடும் காலங்களில் நடைபெறும். ஆனால், மித மிஞ்சிய மனிதனின் ஆசைக் கூட குடிபெயர வைக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் பஞ்சாப் விவசாயிகள். 

  இந்தியாவிலேயே விவசாயத்தில் செழுமையும் தன்னிறைவும் கொண்ட ஒரே மாநிலம் பஞ்சாப்தான். அப்படிப்பட்ட அந்த மாநில விவசாயிகள்தான் தங்களின் விளைநிலத்தை விற்றுவிட்டு நாட்டைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவிற்கு சென்று குடியேறுகிறார்கள். இதன் பின்னணியில் செழுமையும் பேராசையும்தான் இருக்கிறது. 

  கதிரடித்தல்
  பஞ்சாப்பில் விளைநிலங்களின் விலை நாளுக்குநாள் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே போகிறது. அங்கு ஒரு ஏக்கர் விளைநிலம் 20 லிருந்து 30 லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் போட்டிப்போட்டு இந்த நிலத்தை வாங்குகிறாகள். அவற்றை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்கிறார்கள். அதனால், இங்கு விவசாய நிலங்கள் எல்லாம் படுவேகமாக வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. அதிக பணத்திற்கு ஆசைப்படும் விவசாயிகள் தங்கள் சொந்த நாட்டில் உள்ள சொந்த நிலத்தை விற்பனை செய்துவிட்டு ஆஸ்திரேலியாவில் சென்று குடியேறி விடுகிறார்கள். 


  ஆஸ்திரேலிய இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது. இந்தியாவின் மக்கள் தொகை 128 கோடி என்றால் அங்கு 2.40 கோடிதான். அங்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அங்கிருக்கும் விவசாயிகள் 500, 1000 ஏக்கர் நிலங்களை வைத்து பிரமாண்டமாக விவசாயத்தை செய்து வருகிறார்கள். அங்கு நிலங்களின் விலையும் மிகக் குறைவு. 

  ஆஸ்திரேலியாவின் இயந்திர விவசாயம்
  பஞ்சாப்பில் 5 ஏக்கர் நிலத்தை விற்றால் போதும் ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கிவிடலாம். அங்கு 85 சதவீத விளைநிலங்கள் பயிரிடப்படாமல் சும்மாவே கிடக்கிறது.  இந்தியாவில் இருந்து சென்று ஒருவர் ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினால் உடனே அந்த நாட்டு அரசு அங்கேயே வாழ்வதற்கான குடியுரிமையை வழங்கி விடுகிறது. ஏகப்பட்ட சலுகைகளை வழங்குகிறது. எப்படியாவது தங்கள் பூமியை உணவு உற்பத்தி களஞ்சியமாக மாற்ற துடியாய் துடிக்கிறது. 


  இந்தியாவோ நிலங்களை எல்லாம் வீடுகளாக கட்டி கான்கிரீட் காடாக நாட்டை மாற்ற போட்டிப் போடுகிறது. மேலும், பஞ்சாப்பில் விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதிலும் பெரும் பிரச்சினை இருக்கிறது. சரி வேளாண் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என்றால் அவர்களின் நிலம் எல்லாம் சிறிது சிறிதாக இருக்கிறது. அதனால் இயந்திர வேளாண்மையும் அவர்களுக்கு ஏற்றதாக இல்லை. இதுவும் அவர்கள் வெளியேற ஒரு காரணம். 


  ஆனால், ஆஸ்திரேலியா அப்படியல்ல. அங்கு நிலங்கள் எல்லாம் மிக மிகப் பெரியவை. அங்கு இயந்திரம் இல்லாமல் விவசாயம் என்பதே சாத்தியம் இல்லாதது. விதைப்பது முதல் அறுப்பது வரை எல்லாமே இயந்திரங்கள் தான். பண்ணை இயந்திரங்களை வைத்தே எல்லா வேலையையும் முடித்துவிடலாம். காய்கறி மற்றும் பழவகைகள் பயிரிட ஏற்றதாக அந்த மண் இருக்கிறது. 


  ஆஸ்திரேலியா விவசாயத்திற்கு ஏற்ற தேசம். விவசாயம் மட்டுமல்லாமல் அதன் உபதொழில்கள் ஆன பால் பண்ணை வைத்து, ஜெர்சி, ஹோல்ஸ்டீன், பிரீஸின் போன்ற உயர்ரக பசுக்களை வளர்க்கவும் ஏற்ற இடம். பஞ்சாபிகள் ஏற்கனவே கடுமையான உழைப்பாளிகள். கேட்கவா வேண்டும் தங்களின் சொந்த நிலங்களை விற்று விட்டு ஆஸ்திரேலியாவுக்கு பறக்கிறார்கள். இன்னும் கொஞ்ச காலத்தில் ஆஸ்திரேலியா ஒரு பெரிய பஞ்சாப்பாக மாறி உலக நாடுகள் அனைத்துக்கும் உணவளிக்கலாம்..! 

  29 கருத்துகள்:

  1. இது நமது நாட்டின் சீரழிவுக்கு வழி வகுக்குமே.... அந்த நாட்டை வளர்ப்பதற்கு நமது உழைப்பா ? இதற்கு அரசுதானே காரணம்
   த.ம. 2

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வேதனையான உண்மைதான் நண்பரே!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  2. அருமையான பகிர்வு

   உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
   http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

   பதிலளிநீக்கு
  3. ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்குபவர்களுக்கு உடனே ஆஸ்திரேலிய அரசு குடியுரிமையை வழங்குகிறது என்பது வியப்பான செய்தி. இனி நாம் பஞ்சாப் கோதுமைக்குப் பதிலாக ஆஸ்திரேலிய கோதுமையைத் தான் இறக்குமதி பண்ண வேண்டும்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இனி அதிக விலைக்கு ஆஸ்திரேலியா கோதுமை தான் வாங்கவேண்டியிருக்கும்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  4. இப்படித்தான் பின்னலாடைத் தொழில் திருப்பூரில் நசுங்கிப் போனதால் .தொழிலாளர்கள் பங்களாதேசுக்கு குடி பெயர்ந்தார்கள் .இப்போ .பஞ்சாப் விவசாயிகளுமா ?புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவை வாழவைக்கும் போல் தெரியவில்லையே !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அரசியல்வாதிகள் சுரண்டலை விட்டுவிட்டு நாட்டைப் பற்றி நினைத்து செயல்பட்டால் இது நல்ல திட்டமே! மற்ற வளர்ந்த நாடுகளுக்கு லாபமாக இருக்கும்போது இயற்கையை வியாபரமயமாய் மாற்றாமல் இருந்தால் தான் மனித இனம் வாழமுடியும்.

    நீக்கு
  5. இது போல் பிற நாடுகளிலும் வசதி இருக்கிறது - அமேரிக்கா உள்பட. ஆனால் அரசாங்கம் விற்பனைக்குத் தரும் நிலம் அவ்வளவு சுலபத்தில் விவசாயம் செய்யக்கூடியதாக இருக்காது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீங்கள் கூறுவதும் உண்மைதான் அய்யா! தங்கள் வருகைக்கு நன்றி!

    நீக்கு
  6. இந்தியாவில் அரசுக்கு விவசாயியின்
   வேதனை புரிந்திருந்தால்...
   ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்திருக்க மாட்டார்கள்
   இந்திய விவசாயிகள்...

   பதிலளிநீக்கு
  7. இங்கும் அங்கும் - நல்ல அலசல். இந்தியர்கள் மீதான தாக்குதல் நடக்கும் இடத்தில் அவ்வளவு சுலபமாக நிலம் வாங்க விடுவார்களா?

   பதிலளிநீக்கு
  8. இருந்தும் என்ன செய்ய...பட்டினியால் மாண்டவர்கள் உலகில் குறையப் போவதில்லை...

   பதிலளிநீக்கு
  9. அதிர வைக்கும் உண்மை! அங்கு விவசாயத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர். இங்கோ விவசாயத்தை குழியில் புதைக்கின்றனர். படங்களுடன் தகவல் பரிமாற்றம் சிறப்பு. என்னுடைய கதைகளை உங்கள் பத்திரிக்கையில் வெளியிட அனுமதி கோரினீர்கள் சில மாதங்கள் முன்பு. வெளியிட்டீர்களா? வெளியிட்டு இருந்தால் அவற்றின் பிரதிகளை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா? நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் இரண்டு கதைகளை மட்டும் வெளியிட்டோம் நண்பரே! இனி தேடி அனுப்புவது சற்று சிரமம். முடிந்தவரை முயற்சித்து அனுப்பி வைக்கிறேன்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  10. ஆஸ்திரேலியா மட்டுமல்ல, கானடா அமெரிக்காவில் கூட பஞ்சாபிகள் நிறைய இருக்கின்றார்கள். குறிப்பாக கானடாவில். அங்கும் கூட விவசாயிகள் பெரிய பெரிய ஏக்கர் அளவில்தான் நிலங்கள் வைத்திருப்பார்கள். துண்டு நில விவசாயம் கிடையாது. அதே சமயம் அந்த நிலங்களில் யாருமே அதாவது அரசாங்க நிலமாக இருந்தால் எளிதில் வாங்கிட முடியாது. நம்மூர் மாதிரி ஏமாற்ற முடியாது. விவசாயமும் உட்பட

   மிக நல்ல பதிவு..

   இந்தக் கருத்தை அடித்து வைத்து இணையம் சரியாக வேலை செய்யாததால், போகாமல் இதோ இப்போது மீண்டும் இணையம் வரும் சிறு இடைவெளியில் வெளியிடுகிறோம். இணையம் இன்னும் சரியாகவில்லை..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பொதுவாக அந்த நாடுகளில் நிலம் அதிகம். மக்கள் குறைவு. அதனை ஈடு செய்ய இப்படியெல்லாம் செய்கிறார்கள்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  11. புதிய செய்தி! இப்போதைக்கு ஆஸ்திரேலிய அரசு இதற்கு மறுப்பு சொல்லாவிடினும் பின்னால் அவர்களுக்கு வரப்போகும் ஒரு பிரச்சனைக்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கக் கூடும்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்குமல்லவா..!
    தங்கள் வருகைக்கு நன்றி!

    நீக்கு
  12. ஆஸ்திரேலியா தங்க நாட்டை உணவு உற்பத்தி களஞ்சியமாக மாற்ற துடிக்கிறது.
   இந்தியாவோ நிலங்களை எல்லாம் வீடுகளாக கட்டி கான்கிரீட் காடாக நாட்டை மாற்ற போட்டி போடுகிறது.

   மக்கள் மனநிலை, நாட்டின் பேராபாயம் பற்றி அருமையாக சொல்லிவிட்டீர்கள்!

   பதிலளிநீக்கு
  13. அதிரவைக்கும் தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  14. விவசாயிகள் ஆஸ்திரலியா இடப் பெயர்ச்சி புதிய தகவல்.
   நம் நாட்டு விவாயம் அழிந்து வருவது வேதனை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வேதனைதான் நண்பரே!
    தங்கள் வருகைக்கு நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்