• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், மே 03, 2016

  ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் வேறுபாடு

  பொதுவாக ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு உடை, தலைமுடி போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட மாறுபடுகிறது. உடலைப் பொருத்தவரை பிறப்புறுப்புகள், மார்பகம், மீசை போன்றவை முக்கியமான வித்தியாசங்கள். இவைகள் எல்லாம் நமது பார்வைக்கு தெரியும் வெளிப்படையான வேறுபாடுகள். ஆனால் இவற்றையெல்லாம் விட ஆணுக்கும் பெண்ணுக்குமான உடல் வித்தியாசங்கள் ஏராளமாய் இருக்கின்றன என்று மருத்துவர்கள் பட்டியல் போடுகிறார்கள். அவற்றில் சில இங்கே பார்ப்போம்.


  ஆணைவிட பெண்ணின் இடுப்புப் பகுதி மிகப் பெரியதாக இருக்கும். இது குழந்தைப் பிறப்புக்காக இயற்கை ஏற்படுத்திய வடிவம். இதுபோக உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு செல்லின் தோற்றமும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு காரணம் குரோமோசோம்கள் இடையே உள்ள வித்தியாசம் என்கிறார்கள் மருத்துவர்கள். அதேபோல் பெண்களின் ரத்தத்தில் ஆண்களின் ரத்தத்தில் உள்ளதைவிட நீரின் அளவு அதிகம் இருக்கும். இதனால் பெண்களுக்கு 20 சதவீத சிவப்பணுக்கள் குறைவாகவே இருக்கும். பெண்கள் அடிக்கடி ரத்தசோகை பாதிப்புக்கு ஆளாவதற்கு இதுவும் ஒரு காரணம். 

  ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் தான் உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. அது குறையும் போது ஆக்சிஜனும் குறைகிறது. இந்த காரணத்தினால் தான் வெப்பம் மிகுந்த இடங்களிலும் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களிலும் பெண்கள் மயங்கி விழுகிறார்கள். ஆண்களைவிட பெண்களுக்கு நுரையீரல் சிறியதாகவே இருக்கும். பெண் நுரையீரலைவிட ஆணின் நுரையீரல் 30 சதவீதம் பெரியது. அதனால் நுரையீரல் கொள்ளளவும் அதிகமாக இருக்கும். வெளியூர் பயணங்களிலும் திருவிழா கூட்டத்திலும் பெண்கள் விரைவில் சோர்ந்து போவதற்கு இதுதான் காரணம்.


  உற்சாகம் என்ற விஷயத்தில் பெண்கள் ஆண்களை விஞ்சி நிற்கிறார்கள். இந்த உற்சாகத்திற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் தனி ஹார்மோனின் சக்திதான். நோய் என்று எடுத்துக் கொண்டாலும் கூட பெண்களை விட ஆண்களே அதிகம் மரணமடைகிறார்கள். மார்பக புற்றுநோய், பெண்ணின் பிறப்புறுப்பு நோய், கர்ப்பப்பை கட்டி போன்ற நோய்களைத் தவிர மற்ற அனைத்து நோய்களும் ஆண்களுக்கே வருகிறது. 

  வெப்பத்தால் சோர்ந்து போகும் பெண்களின் இயல்பு, வெயிலை அதிகமாக தாங்கிக் கொள்ளும் விதமாக இயற்கை அமைத்திருக்கிறது. நேரடியான வெயிலில் விரைவில் சோர்ந்து போகிறவர்கள் ஆண்கள்தான். இதற்கு காரணம் பெண்களின் உடலில் உள்ள வளர்சிதை மாற்றம்தான். வயிறு, கல்லீரல், குடல்வால் போன்ற உறுப்புகள் ஆண்களைவிட பெண்களுக்கு பெரியதாக இருக்கும். முரட்டுத்தனம் என்பதை எடுத்துக் கொண்டால் ஆண்களின் முரட்டுத்தனம் பெண்களைவிட 50 சதவீதம் கூடுதலாக இருக்கும்.


  ஆண்களைவிட பெண்களின் இதயம் எப்போதும் வேகமாக துடிக்கும். சராசரியாக ஆண்களுக்கு நிமிடத்திற்கு 72 முறை இதயம் துடிக்கிறது என்றால் பெண்களுக்கு 80 முறை துடிக்கிறது. ஆண்களின் பற்களைவிட பெண்களுக்கு பற்கள் விரைவாகவே விழுந்துவிடும். பொக்கைவாய் தாத்தாக்களைவிட பொக்கைவாய் பாட்டிகளே அதிகம். 

  ஆணைவிட பெண்ணுக்கு தலை, தண்டுவடம், கால்கள் முதலியவை மிகச் சிறியவை.  இப்படி பல விஷயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசமாகவே இருக்கின்றன.  
  26 கருத்துகள்:

  1. கடந்த பதிவுகள் பல இன்னும் படிக்கப்படாமலே இருக்கின்றது!அனைத்தையும் படிக்க வேண்டும், பார்க்கலாம்.

   ஆண்,பெண் வித்தியாசங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரை அருமை, ஆனாலும் கட்டுரை முழுமையாக நிறைவு பெறவில்லை என நினைக்கின்றேன். ஆண் பெண் மூளையின் செயல்பாடு முறை, சிந்தனைத்திறன்,ஞாபக சக்தி களும் கூட வேறு பட்டிருக்கின்றது. அதனால் தான் பெண்கள் பழைய கதைகளை நினைவில் வைத்திருப்பவர்களாகவும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாகவும் இருக்கின்றார்களாம்.

   இது பற்றி நானும் எங்கோ பகிர்ந்த நினைவு, தேட வேண்டும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்னும் நிறைய இருக்கிறது. இங்கு சிலவற்றை மட்டும் தந்திருக்கிறேன். இது குறித்து ஒரு தொடர் எழுதியிருக்கிறேன். அதை பதிவிட இருப்பதால் சிலவற்றை மட்டும் வெளியிட்டுள்ளேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  2. சில விஷயங்கள் பகிர்ந்தீர்கள்...
   இன்னும் விரிவாக எழுதலாமே?
   .

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. விரிவாக தொடர் எழுதியுள்ளேன். விரைவில் பதிவிடுகிறேன். அதில் எல்லா வேறுபாடுகளும் குறிப்பிட்டுள்ளேன்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. அன்புள்ள அய்யா,

   ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பிள்ளை காண்’ என்றாலும் உடல்ரீதியில் பல வேறுபாடுகள் இருப்பதை அறியத் தந்தது கண்டோம்.

   நன்றி.
   த.ம.3

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆணும் பெண்ணும் ஒன்றல்ல, சமமுமல்ல என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  4. ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாட்டை தெரிந்து கொண்டேன் நண்பரே......

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. அறியாத விடயம் தந்தமைக்கு நன்றி நண்பரே
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  6. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. இதுவரை அறிந்திராத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  8. தலைப்பைப் படித்ததும் ,கடந்த மாதம் 'பெண் பேய் என்றாலும் இதுதானே அடையாளம்'...http://www.jokkaali.in/2016/04/blog-post_22.html ...என்ற என் பதிவு நினைவுக்கு வந்தது :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நானும் அந்த பதிவை படித்தேன்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  9. வணக்கம் ஐயா.அருமையான தகவல்களை தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வைசாலி!

    நீக்கு
  10. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு சகோதரர்

   பதிலளிநீக்கு
  11. நல்ல தகவல்கள் பதிவுகள் அருமையாக இருக்கின்றன எல்லோரும் பயன் பெரும் வகையில்.

   கீதா: பதிவு அருமை சகோ. உங்களுக்குத் தெரியாததல்ல...ஆண் பெண் உடல் கூறுகள் வித்தியாசப்பட்டாலும் மிகவும் முக்கியமான ஒன்று மூளைத்திறனும், மூளையில் செயல்படும் ரசாயன நிகழ்வுகளும். அதாவது ப்ரெய்ன் கெமிஸ்ட்ரி. எனவேதான் வளர்ப்பில் பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஆண் குழந்தைகளை வளர்ப்பதற்கும் சில வித்தியாசங்கள் அவர்களின் மன நிலை அடிப்படையில் வேண்டிவருகின்றது.இதைப் பற்றிப் பேச நிறைய உள்ளது....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இதைப் பற்றியெல்லாம் முன்பே எழுதியிருக்க வேண்டாமா? பெண் குழந்தைகள் எப்போதும் மெச்சூர்ட் ஆனவர்கள். அன்பானவர்கள். ஆண் குழந்தைகள் பெரும்பாலும் ரௌடிகள். (வாலு). அன்பைக் காண்பிக்கத் தெரியாதவர்கள்...

    நீக்கு
  12. இன்னும் கூட நிறைய உள்ளன நண்பரே! பெண்களுக்கு வழுக்கை ஏற்படுவதில்லை; ஆண்களுக்கு மட்டும்தான். பெண்கள் தலைப்பகுதியில் சுரக்கும் ஏதோ ஒரு வேதிப்பொருள் இதற்குக் காரணமாயிருப்பதாக 'கோகுலம்' சிறுவர் இதழில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் படித்ததை இன்றும் மறக்க முடியவில்லை.

   அதே போல, மூளையின் நடுப்பகுதி ஆண்களை விடப் பெண்களுக்குக் கனமாக இருக்கும் (நன்றி: சுஜாதா - தலைமைச் செயலகம்). இதனால்தான் பெண்கள் மனப்பாடக் கல்விமுறையில் எளிதில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதாக... ஐயய்யோ! நான் சொல்லவில்லை; உளவியல் மருத்துவர் ஷாலினி கூறுகிறார்.

   இன்னும் கூட நிறைய உண்டு. உங்களுக்கும் தெரிந்திருக்கும். நீளம் கருதித் தவிர்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம் நண்பரே, இன்னும் கூட நிறைய இருக்கிறது. அதனால்தான் இந்த பதிவில் கூட சில வித்தியாசங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். தங்களின் வருகைக்கும் மேலதிக தகவலுக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்