• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, மே 06, 2016

  மது தயாரிக்க ஒரு பல்கலைக்கழகம்

  ம்மூரில் மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்று எல்லா கட்சிகளும் ஒற்றைக் காலில் நிற்கின்றன. இங்கு என்னவென்றால் மது தயாரிக்க தனிப் பல்கலைகழகமே வைத்திருக்கிறார்கள்.

  இப்போது கல்லூரிகளில் மாணவர் சேர்கை நடைபெறும் காலம். எல்லோரும் அவரவர்களுக்கு பிடித்த பாடத்திட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ள பிரிவில் போட்டி போட்டுக் கொண்டு சேருவார்கள்.


  ஆனால், ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் 'எடித் கோவன் பல்கலைக்கழகம்'. இந்த பல்கலைக்கழகம் பீர் தயாரிக்க கற்றுத்தருகிறது. 'கம்பெனிகளில் தயாரித்து வரும் பீர்களில் வர்த்தக நோக்கம் நிறைய இருக்கும். நீங்கள் நினைப்பதுபோல் அது தரமானதாக இருக்காது. போதையை அதிகமாக்க ஏதேதோ வஸ்துகளை கலப்பார்கள். அந்த கலப்பட சமாச்சாரமெல்லாம் இல்லாமல் தரமான பீர் வேண்டுமானால் அதை நீங்கள் தான் சொந்தமாக  தயாரிக்க வேண்டும். அதை தயாரிக்க நாங்கள் சொல்லித்தருகிறோம். இப்படி நீங்கள் தயாரிக்கும் பீரை அக்கம் பக்கத்திலும் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்." என்கிறார்கள் இந்தப் பல்கலைக்கழகத்தினர். இவர்கள் பீர் தயாரிப்பில் பேச்சுலர் டிகிரியைக் கொடுக்கிறார்கள். 

  மாஸ்டர் டிகிரி வேண்டும் என்பவர்களுக்கு பிரிட்டனில் ஒரு பல்கலைக்கழகம் இருக்கிறது. அதன் பெயர் 'நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம்'. இது பீர் தயாரிப்பில் மாஸ்டர் டிகிரியைக் கொடுக்கிறது. பள்ளியில் உணவு அறிவியல் பாடம் எடுத்தவர்களுக்குதான் இங்கு இடம். அடிப்படை அறிவும், ஆர்வமும் இருந்தால் எந்தவித நன்கொடையும் வாங்காமலேயே கல்லூரியில் இடம் கொடுத்து விடுகிறார்கள்.

  வீட்டில் தயாரிக்கப்படும் பீர்
  மதுவில் ஏகப்பட்ட வகைகள் இருக்கிறது. அப்படியிருக்க பீருக்கு மட்டும் அப்படியென்ன தனி முக்கியத்துவம் என்று கேட்பவர்களுக்கு உலகில் அதிகமான மக்களால் விரும்பி அருந்தப்படும் மதுபானம் பீர்தானாம். கிட்டத்தட்ட கி.மு.9000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பீர் குடிக்க கற்றுக்கொண்டான். எகிப்து, மெசபடோமிய முன்னோர்கள் ஆதிகாலத்திலேயே பீரை தயாரித்து இருக்கிறார்கள். 

  ஒயினுக்கு மதம் சார்ந்த ஒரு அங்கீகாரம் இருக்கிறது. புனித நூல்களில் கூட ஒயின் சிறப்பான பானமாக சொல்லப்படுகிறது. அதனால் அதனை வீட்டில் தயாரித்துக் கொண்டாலும், ஒயின் தாயரிக்க கற்றுக் கொடுத்தாலும் அதற்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால், பீரின் நிலைமை அப்படியில்லை. நீண்ட நெடிய வரலாறு இதற்கு இருந்தாலும் கூட பீர் தயாரிக்க கற்றுக்கொடுப்பதை தொடர்ந்து எதிர்த்தே வருகிறார்கள்.

  வீட்டில் தயாரிக்கப்படும் பீர்
  இப்போது எதிர்ப்பையும் மீறி கற்றுத்தர பல்கலைக்கழகங்கள் முன்வந்துவிட்டன. இந்த பாடத்திட்டத்தில் பீரின் வரலாறு, தயாரிப்பு முறை அனைத்தும் தியரியாக கற்றுத்தரப்படுகின்றன. பார்லி, ஹாப்ஸ், ஈஸ்ட், தண்ணீர் இந்த நான்கின் கூட்டுக்கலவை தான் பீர். முதலில் தண்ணீரில் பார்லியை மசிய வைக்க வேண்டும். அதன்பின் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த பின்பு ஈஸ்ட் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விட வேண்டும். கடைசியாக ஹாப்ஸ் என்ற தாவர வகையை சேர்த்தால் பீர் தயார். இவையெல்லாம் எந்த விதத்தில் எப்படி சேர்க்க வேண்டும் என்பதுதான் பாடமே. 

  இவற்றையெல்லாம் படித்து மார்க் எடுத்த பின் செய்முறை பயிற்சி  வகுப்பில் நல்ல பீரை தயாரித்து கொடுக்க வேண்டும். கச்சிதமாக தயாரித்த பீர் நன்றாக நுரைக்கும். பீரை ஓரிரு நாளில் தயாரித்துவிட முடியாது. தயாரித்த பீரை கொஞ்ச நாட்கள் அப்படியே விட்டு வைத்து பார்வையிடுகிறார்கள். பீர் நன்றாக இருந்தால் பிராக்டிகலில் முழு மதிப்பெண்களை அள்ளலாம். பீர் தயாரிக்கும் இந்த வகுப்பிலோ பலகலைக்கழக வளாகத்திற்குள்ளோ மாணவர்கள் பீர் குடிக்க அனுமதியில்லை. 

  செய்முறை பயிற்சி
  22 கருத்துகள்:

  1. போட்டி போட்டுக்கொண்டு மதுவிலக்குக்கு முயற்சி பெரிய அளவில் (?) நடைபெற்றுவரும் நிலையில் தங்கள் பதிவு ஊக்கத்தைத் தருகிறது.

   பதிலளிநீக்கு
  2. அறியாத தகவல்
   வியப்பாக இருக்கிறது நண்பரே
   இதுபோன்ற பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்கு வந்தால்
   எப்படிஇருக்கும்என்று கற்பனை செய்து பார்த்தேன்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இங்கு கல்லூரிகளை நடத்துபவர்களே மது வியாபாரிகள்தான். படமாகவும் இதைக் கொண்டு வந்தால் அவ்வளவுதான். காய்ச்சுவதும் அருந்துவதும் ஒரே இடமாக மாறிவிடும்.
    வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. ’மது தயாரிக்க ஒரு பல்கலைக்கழகம்’

   மதுரம் (மது + ரம்) ஆன பதிவாக உள்ளது.

   பதிவினைப் பார்த்ததும் ப(கு)டிக்க வேண்டும் போல ஒரு ‘கிக்’ ஏற்படுத்தியுள்ளது.

   பகிர்வுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆஹா, பதிவுக்கு ஏற்ப கருத்தை பகிர்ந்த அய்யாவுக்கு நன்றிகள்!

    நீக்கு
  4. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  5. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  6. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  7. அறியாத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி! இது பற்றி நம் மக்களுக்கு முன்பே தெரிந்திருந்தால் இங்கும் கல்லூரியில் பாடமாக வைத்திருப்பார்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  8. நம்மூர் பல்கலைக் கழகத்தில் ஜோதிடமே கற்றுத் தரும்போது ,பீர் என்றால் பரவாயில்லை:)
   இரண்டுமே மூளையை மழுங்கடிக்க கூடியவைதானே :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  9. அறியாத தகவல். அடுத்த வருடமே தமிழ் நாட்டிலும் இப்படி ஒரு கல்லூரி தொடங்கினாலும் தொடங்கலாம்! :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  10. ஐயையோ...இப்படிப் போட்டு அம்பலப்படுத்திட்டீங்களே ஹஹஹ்ஹஹஹ் இல்ல தமிழ்நாட்டுல ஆரம்பிச்சுடுவாங்களோனு பயமா இருக்கு...

   கீதா

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்