Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

'ஃபிளாஷ் பேக்' எனும் சினிமா புரட்சி !

ன்றைய சினிமாவில் எதற்கெடுத்தாலும் ஒரு 'ஃபிளாஷ் பேக்'கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் இந்த 'ஃபிளாஷ் பேக்' உத்தி கண்டுபிடிக்கப் படாத காலங்களில் சினிமா என்பது ஒரு போரடிக்கும் சமாச்சாரமாகவே இருந்தது. ஒரு கதையை சொல்லவேண்டுமென்றால் அதன் தொடக்கத்தில் இருந்து வரிசை கிரமமாகத்தான் சொல்லவேண்டும். 'எடிட்டிங்' என்ற தொழில்நுட்பமும் அப்போது இல்லை. அதனால் காட்சிகளையும் கதையின் படியே எடுக்க வேண்டியிருந்தது. 

ஃபிளாஷ் பேக் உத்தியில் புதிய வடிவத்தை தந்த 'ஜிகர்தண்டா'
ஒரு ஹீரோ கஷ்டப்பட்டு பெரிய பணக்காரனாக மாறுகிறான் என்றால், அவன் சிறுவனாக இருந்தது. பல வேலைகளை செய்தது, வளர்ந்து பணம் சேர்த்தது, பணக்காரன் ஆனது என்று படிப்படியாக தான் காட்ட முடியும். ஆனால், இப்போது அப்படியில்லை, எடுத்தவுடன் ஹீரோவை பெரிய பணக்காரனாக காட்டிவிட்டு, அதன்பின் சின்ன 'ஃபிளாஷ்பேக்'கில் அவன் கஷ்டப்பட்டதையும் காட்டிவிடலாம். 

'ஃபிளாஷ் பேக்' என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள். இதை சினிமாவில் முதன் முதலாக பயன்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கிய 'ரோஷோமான்' படத்தில் இந்த நுட்பத்தை பயன்படுத்தினார். 

முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய 'ரோஷோமான்'
படத்தில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள். அதனைத் தொடர்ந்து ஒரு கொலையும் நடக்கிறது. அந்த கொலையை அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரையும் விசாரிக்கும் போது நான்கு பேரும் அவரவர்கள் கோணத்தில் அந்த சம்பவத்தை விவரிப்பார்கள். 

நான்கு கோணங்களில் கதை நகரும். கிளைமாக்ஸ் வரை கொலையாளி யார் என்பது சஸ்பென்ஸ்..! இதுதான் அந்த படத்தின் கதை. இந்தக் கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க 'அந்த நாள்' என்ற படம் வந்தது. 

முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய தமிழ் படம் 
திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்படும் அகிரா குரோசோவா இயக்கிய மிகச் சிறந்த படம் இது. இதன் மூலம் அவர் கொண்டுவந்த புதிய சிந்தனையான 'ஃபிளாஷ்பேக்' என்ற யுத்தி லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்த அசையும் காட்சிகளுக்கு அடுத்து, இது ஒரு பெரிய புரட்சியாக சினிமாவில் கருதப்பட்டது. 

அதிகமான ஃபிளாஷ் பேக்கை கொண்ட 'பாகுபலி'
திரைக்கதையில் சில விஷயங்களை மறைத்துவைக்க ரசிகர்களுக்கு படத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பெரும்பாலான இயக்குனர்களுக்கு இன்று வரை 'ஃபிளாஷ்பேக்'தான் பயன்படுகிறது.




இந்த பாடலே ஒரு பிளாஷ் பேக்தான் அதற்குள் மற்றொரு பிளாஷ் பேக்கை அற்புதமாக சொன்ன பாடல் 



19 கருத்துகள்

  1. அந்த நாள் என்பதற்கு ஒரு ’ஃபிளாஷ்பேக்’ அழகாக சொன்னீர் ஐயா.தெரிந்துக் கொண்டேன் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. அருமை.புதிய தகவல்.ராமாயணம் மகாபாரதத்தில் ஏராளமான பிளாஷ் பேக் காட்சிகள் உள்ளனவே.அதை திரையில் பயன்படுத்தும் எண்ணம் யாருக்கும் தோன்றவில்லை போலிருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
      உண்மைதான் நண்பரே, ஆனால் நம்மவர்கள் முயற்சிக்கவே இல்லை.!

      நீக்கு
  3. அருமையான தகவல். விருமாண்டியின் அடிப்படையும் ரோஷோமான் அவரவர் கோணத்தில் நடந்ததை விவரிப்பது...இல்லையா

    பதிலளிநீக்கு
  4. முரளி சகோவின் கருத்தும் அதானே என்று சொல்ல வைக்கிறது. நம் புராணங்களே ஃப்ளாஷ் பேக்தான்....

    பதிலளிநீக்கு
  5. மீள் காட்சி (Flash back) பற்றிய ஒரு மீள் காட்சி தந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. அறியாத விடயம் அறிந்தேன் நண்பரே நன்றி
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  7. அருமையான தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

      நீக்கு
  8. ப்ளாஷ்பேக்கைப் பற்றிய ஒரு ப்ளாஷ்பேக். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

      நீக்கு
  10. நம் வாழ்க்கையை உயிரோட்டமாய் வைத்திருப்பதே நமது பிளாஸ்பேக்குகள்தான். ' பழசை திரும்பிப் பார்க்கணும் ' என்று யாரோ சொன்னதை தூண்டலாக எடுத்துக் கொண்டு இந்த பிளாஸ்பேக் உத்தி உருவாகியிருக்குமோ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை