• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், ஜூலை 12, 2016

  நாம் வாழ நம் பூமி வேண்டும்..!  மீப காலங்களில் சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து ஏற்படும் ஆபத்துகளைப் பார்க்கும்போது மனதில் பெரும் அச்சம் தோன்றுகிறது. சுற்றுச் சூழலில் ஏற்படும் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்படுவது பூமிதான். இந்த பூமியில்தான் நாம் தொடர்ந்து வாழ்ந்தாக வேண்டும்  பூமியை சுரண்டி பணம் ஈட்டியப் பின் அந்தப் பணத்தைக் கொண்டு வேறு ஒரு கிரகத்தில் நாம் வாழப்போவதில்லை. அதற்கான வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை. அதனால் வேறெங்கும் போக முடியாது. இந்த பூமியில்தான் வாழ்ந்தாக வேண்டும். அப்படியென்றால் அந்த பூமியை நாம் எந்த அளவிற்கு காக்க வேண்டும்.


  நாம் எவ்வளவுதான் கோடி கோடியாக சம்பாதித்து பணம் சேர்த்தாலும் அவற்றை அனுபவிக்க நாளைக்கு நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் பூமி வேண்டும். இயற்கை கொடுத்த அந்த அற்புத வாழ்வாதாரத்தை சுடுகாடாக மாற்றிவிட்டு, வெறும் பணத்தை மட்டும் வைத்து எந்த பெரிய கடைகளிலும் இயற்கையை விலைக்கு வாங்க முடியாது. அதனால் நாம்தான் மாறியாக வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

  வேறு வழியில்லை. “நீ உயிரோடிருக்க வேண்டுமானால் இதைச் செய்துதான் ஆக வேண்டும்” என யாராவது துப்பாக்கி முனையில் மிரட்டினால், அது எப்பேர்ப்பட்ட வேலையாக இருந்தாலும் செய்துதான் முடிப்போம். அப்படி, இயற்கை நம்மை இப்பொழுது மரண விளிம்பில் நிற்க வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறது. அந்த உண்மையை உணர்ந்து மாறாவிட்டால் பூமி துளியும் தயங்காமல் நம்மை தள்ளி விட்டு விடும் என்று மேலும் பயமுறுத்துகிறார்கள் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள். 


  இதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் செய்யவேண்டியது என்று சிலவற்றை வரையறை செய்கிறார்கள். அதன்படி முதலில் பிளாஸ்டிக் போன்ற செயற்கை மூலப் பொருட்களைக் கொண்டு உருவாகப்படும் பொருட்களை தவிர்ப்போம். இயற்கைப் பொருட்களையே முடிந்த அளவு பயன்படுத்துவோம். செயற்கைப் பொருட்களை தவிர்த்தாலே மக்காத குப்பைகள் உருவாகாது. இது பூமிக்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மை. இயற்கைப் பொருட்களையும் ஒரேயடியாக இந்த தலைமுறையிலேயே செலவழித்து தீர்த்துவிடாமல் குறைவாக பயன்படுத்தினால் இயற்கை நம்மை கைவிடாமல் வெகு நாட்கள் காக்கும். 

  இரண்டாவது தண்ணீர், மின்சாரம், எரிபொருள் என்ற எல்லாவற்றையும் சிக்கனாமாக பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டைக் குறைக்க குறைக்க உற்பத்தியின் அளவு குறையும் இதனால் இயற்கையை சுரண்டும் பாதிப்பும் குறையும். தொழிலுக்கோ வேலைவாயப்புக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்கடுத்து குப்பையைக் குறைப்பது. நாம் வெளியில் கொட்டும் குப்பை குறைய குறைய பூமித்தாய் மனம் மகிழ்வாள். நிலம், நீர், காற்று என எல்லாவற்றையும் தூய்மையாக நமக்கு வழங்குவாள். 


  இதோடு நம் கடமை முடிந்து போய்விடவில்லை. சுற்றுச் சூழலைப் பற்றியும், உலக வெப்பமயமாதலைப் பற்றியும் புத்தகங்கள், விழிப்புணர்வு கட்டுரைகள் படிக்கவேண்டும். மற்றவர்களுக்கும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நாமும் நம்மை சுற்றியுள்ளவர்களும் மாறினால்தான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்று மேலும் அவர்கள் கூறுகிறார்கள். 

  ஆட்சியாளர்கள் கிடக்கட்டும், அவர்களை பின்னால் பார்த்துக் கொள்ளலாம். நாம் முதலில் மாறுவோம். நம் பிள்ளைகளை மாற்றுவோம். சுற்றுச்சூழல் குறித்த மாற்றத்தை நாமே தொடங்குவோம்..!   19 கருத்துகள்:

  1. சுவரிருந்தால்தானே சித்திரம் வரையமுடியும்? நல்ல சிந்தனை பதிவு .

   கோ

   பதிலளிநீக்கு
  2. எப்படியோ அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்வாதாரம் கஸ்டம்தான் நல்ல பதிவு
   த.ம. 2

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. நல்ல பகிர்வு. எத்தனை எத்தனை குப்பைகளைச் சேர்த்து அழிவினை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறோம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  4. அருமையான பகிர்வு... நாம் சுற்றுச் சூழலை மாடுபடுத்தி மிக மோசமான எதிர்காலத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. வேதனையான பாதைவில் விரைவாய் சென்று கொண்டிருக்கிறோம்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  6. நிச்சயமாக அனைவரும் செயல்படுத்த வேண்டிய செயல்.... சிறப்பான பகிர்வு..

   பதிலளிநீக்கு
  7. 2035 கருத்துப்படம் கண்டேன். அனைத்தும் அதில் அடங்கிவிட்டன.

   பதிலளிநீக்கு
  8. ஒவ்வொருவரும் உணர்ந்து திருந்த வேண்டும் நல்ல பகிர்வு.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  9. அட! சகோ! எங்களின் மீள் பதிவு ஒன்று இன்று... அதாவது எங்களின் வலைப்பூ தொடங்கிய போது எழுதிய பதிவு அப்போது அவ்வளவாக அறிமுகமாகாத சமயம். அந்தப் பதிவு பூமித்தாயின் கண்ணீர் இன்று மீள் பதிவாக வெளியாகியுள்ளது.

   நம் பூமித்தாய் பொறுமையானவள்..அவளைக் காக்கவில்லை என்றால் அவள் நமக்குச் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை நான் அனுபவிக்க மட்டுமே அனுபவித்து அதைக் காத்து எதிர்காலச் சந்ததியினருக்கு அளிக்கும் கடமையும் உண்டு நமக்கு. அதை விட்டு அவள் சொத்தை அழித்தால் அவள் நிரந்தரமாக மிரட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை...

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்