• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், ஜூலை 07, 2016

  சுற்றுலாவை முடக்கும் தீவிரவாதம்


  மீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் நான்கில் ஒருவர் உள்ளூர் மற்றும் உலக பாதுகாப்பு காரணமாகவும், தொற்று நோய்க் காரணமாகவும் தங்களின் சுற்றுலா திட்டங்களை மாற்றிக் கொள்கிறார்கள் என்று தெரிகிறது. உலகம் முழுவதும் 2000 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் 77% பேர் தீவிரவாத செயல்பாடு அதிகம் இருப்பதால் சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்கள். அந்த இடங்களில் மேற்கொள்ளப்படும் ராணுவ கெடுபிடிகள், சண்டைகள் காரணமாக செல்ல பிடிக்கவில்லை என்று அவர்களில் 59% பேர் தெரிவித்திருந்தார்கள்.    


  தொற்று நோய்கள் காரணமாக 46% பேரும், தொடர்ந்து குற்றங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதில்லை என்று 25% பேரும், அரசியல் காரணமாக 25% பேரும் சுற்றுலா செல்வதில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 

  ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சுற்றுலா செல்ல விரும்பும் நாடுகளாக 62% பேர் கூறியிருக்கிறார்கள். 10%-க்கும் குறைவானவர்களே வடக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளுக்கும், 20%-க்கும் குறைவானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்ல விரும்புவதாக சொல்லியிருக்கிறார்கள்.


  சுற்றுலாவுக்கான திட்டமிடல்களையும் எங்கு செல்வது என்ற முடிவையும் எதன் அடிப்படையில் எடுக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, அங்கீகாரம் பெற்ற பயண ஆலோசகர்கள் தரும் தகவல் அடிப்படையில் 55% பேரும், சுற்றுலா பத்திரிகைகள், பயணக் கட்டுரைகள் தரும் தகவல்கள் அடிப்படையில் 36% பேரும் முடிவு எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சுற்றுலா தொடர்பான ஆலோசனைகளை நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து 34% பேரும், சமூக வலைதளங்களில் இருந்து 17% பேரும் பெறுவதாக கூறியிருக்கிறார்கள்.   13 கருத்துகள்:

  1. நம் நாட்டில் கூட காஷ்மீர் பயணம் செல்ல அங்கு நிலவும் பதட்ட நிலை காரணமாக பலரும் யோசிப்பதுண்டு...... பெரும்பாலான சமயங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தொந்தரவு இல்லை என்றாலும் கொஞ்சம் பயம் இருக்கத் தான் செய்கிறது மக்களுக்கு.....

   பதிலளிநீக்கு
  2. அமைதி நிலவும் இடத்தில்தானே மகிழ்வாய் பொழுதினைக் கழிக்க முடியும்

   பதிலளிநீக்கு
  3. உண்மைதான். பறவைக் காய்ச்சல் வந்த போது பயணங்கள் குறைந்தன குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்கள்..தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட அருமையான சுற்றுலாத்தலம் காஷ்மிர்..

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்