பெட்ரோல் இன்னும் எத்தனை நாளைக்கு வரும்? என்பதுதான் நடுங்கியபடி உலகம் தன்னைத்தானே கேட்டுவரும் தினப்படி கேள்வி. வானளாவ உயர்ந்துவரும் விலை. அதிகரித்து வரும் பயன்பாடு. இவையெல்லாம் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்க வைக்கிறது.
உலகம் முழுவதும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளத்தையும், அதன் சராசரி உற்பத்தியையும் ஒப்பிட்டுப்பார்த்தால் இன்னும் 40 வருடங்களுக்கு எண்ணெய் கிடைக்கும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது.
உலகம் எங்கும் சுமார் 1.24 லட்சம் கோடி பீப்பாய் எண்ணெய் இருப்பு உள்ளது. இதில் சவுதி அரேபியா 21.3 சதவீதமும், ஈரான் 11.2 சதவீதமும் இருப்பு வைத்துள்ளன. பெட்ரோல் உற்பத்தியில் சவுதி அரேபியாவே முன்னணியில் இருக்கிறது. ஒரு காலத்தில் ரஷ்யாவே உலகில் அதிக எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்தது. அவர்கள் எடுக்கும் எண்ணெய்யில் பாதிக்கு மேல் அந்த நாட்டிலேயே செலவாகிவிடுகிறது. அதனால் சவுதி அரேபியாவே இப்போது ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கிறது.
பயன்பாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் உலகம் முழுவதும் உற்பத்தியாகும் மொத்தப் பெட்ரோலில் 25 சதவீதம் அமெரிக்காவே பயன்படுத்துகிறது. அதற்கடுத்து சீனா 9.3 சதவீதமும், ஜப்பான் 5.8 சதவீதமும், இந்தியா 3.3 சதவீதமும், ரஷ்யா 3.2 சதவீதமும், ஜெர்மனி 2.8 சதவீதமும், தென் கொரியா 2.5 சதவீதமும், பிரேசில் 2.4 சதவீதம் என்ற கணக்கில் பெட்ரோலைப் பயன்படுத்துகின்றன.
எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு தினமும் 12.8 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கடுத்து ரஷ்யா 12.6 சதவீதமும், அமெரிக்கா 8 சதவீதமும், ஈரான் 5.4 சதவீதமும், சீன 4.8 சதவீதமும், மெக்சிகோ 4.4 சதவீதமும், கனடா 4.1 சதவீதமும், ஐக்கிய அரபு குடியரசு 3.5 சதவீதமும், வெனிசுலா 3.4 சதவீதமும், குவைத் 3.3 சதவீதம் என்ற அளவில் தினசரி உற்பத்தியாகிறது.
அதேபோல் ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் எத்தனை வருடங்களுக்கு எண்ணெய் எடுக்க முடியும் அதாவது எத்தனை ஆண்டுகள் எண்ணெய் வளம் இருக்கும் என்பதையும் ஆய்வு செய்து கணக்கிட்டுள்ளார்கள். அதன்படி, சவுதி அரேபியாவில் 69 ஆண்டுகளும், ஈரானில் 86 ஆண்டுகளும், ஈராக்கில் 100 ஆண்டுகளும், குவைத்தில் 115 ஆண்டுகளும், ஐக்கிய அரபு குடியரசில் 91 ஆண்டுகளும், வெனிசுலாவில் 91.3 ஆண்டுகளும், ரஷ்யாவில் 21.8 ஆண்டுகளும், லிபியாவில் 61.5 ஆண்டுகளும், கஜகஸ்தானில் 73.3 ஆண்டுகளும், நைஜீரியாவில் 41.1 ஆண்டுகளும் எண்ணெய் வளம் இருக்கும் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் எண்ணெய்க் கிணறுகள் வறண்டு வரும் அதே வேளையில் புதிய எண்ணெய்க் கிணறுகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன என்பது சற்று ஆறுதல்.
தகவல் பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குமிக்க நன்றி !
நீக்குநல்ல தகவல் பகிர்வு...
பதிலளிநீக்குமிக்க நன்றி!
நீக்குநல்ல பயனுள்ள தகவல், நானும் பெட்ரோலியத் துறையில் வேலையிலிருப்பதால் புரிந்துகொள்ள முடிகிறது. உலக எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விற்கும் விலையையும், நம் நாட்டில் பெட்ரோல் விற்கப்படும் விலையையும் அறிந்தால் கோபந்தான் வரும். ஒன்றும் செய்ய இயலாது!!
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே !
நீக்குபுதிய எண்ணெய் கிணறுகள் கண்டுபிடிப்பதால் சற்று ஆறுதல்....யாருக்கு ஆறுதல்்்????
பதிலளிநீக்குசிவப்பு சித்தாந்தத்தின் வாசனை தெரிகிறது. சுற்றுற்சூழலை எண்ணெய் உபயோகம் பாதித்தாலும், இன்றைக்கு மக்களுக்கு வாகன உபயோகத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்த எண்ணெய்தானே.
நீக்குவருகைக்கு நன்றி பகவான்ஜி!
உலக உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவுக்கா ? சுற்றுச் சூழல் கெடுவதற்கு பெரிதும் காரணமாய் இருக்கும் அமரிக்காவுக்கு என்ன தண்டனை தருவது :)
பதிலளிநீக்குமிகப் பெரும் பாதிப்பை அமெரிக்காதான் ஏற்படுத்துகிறது. நாமெல்லாம் இப்போதுதான் காரை பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். அவர்கள் 50 வருடங்களுக்கு முன்பே பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள்.
நீக்குபயமுறுத்தும் தகவல்கள். கவலையுற வைக்கும் புள்ளி விவரங்கள். மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க வேண்டிய நேரம் நெருங்கி வருகிறது.
பதிலளிநீக்குஉண்மை. சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத மாற்று எரிபொருளுக்கான காலம் வந்துவிட்டது.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
விரிவான கருத்து எழுதி வெளியிடும் போது வெளியாகாமல் ...ம்ம்ம் ப்ளாகர் என்னவோ தகராறு செய்ய...
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. சிறப்பான பதிவும் கூட
கீதா: பூமித்தாயின் சொத்துகள் நமக்காக அவற்றை அவள் கொடுத்திட நாம்மனிதர்களோ அதனைச் சீரழித்து, பூமியையே புகை மயமாக்கி...இன்னும் பெட்ரோல் வேண்டும் வேண்டும் என்றால் எங்கிருந்து வரும்...நாம் தான் அனைத்தையும் சுரண்டிக் கொண்டுவிட்டோமே. ராமர்பிள்ளையின் கண்டுபிடிப்பு உபயோகமாக இருக்கும் என்றால் இப்போதேனும் வெளிவந்தால் நல்லதாக இருக்கும்....
கருத்துரையிடுக