இந்தியா எப்போதுமே வன்முறையை நாடாத அமைதி நாடு. உலகில் பல நாடுகள் புரட்சிகளை, போராட்டங்களை நடத்தி பெற்ற சுதந்திரத்தை இந்தியா அஹிம்சையில் செய்து சாதித்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் அதே அஹிம்சை முறையில் தான் கையில் எடுத்துள்ளார்கள் அன்னா ஹசாரே போன்றவர்கள்.
அதேபோல்தான் நிலவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயன்று வந்தன. இதற்காக அமெரிக்க விண்வெளி மையமான நாசா நிலவின் தரை பகுதியில் ஓர் ஏவுகணை தாக்குதல் தொடுத்து ஆய்வு செய்ய முடிவெடுத்தது. ஏவுகணை தாங்கிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி வைத்தது.
'ஏவுகணையை கொண்டு தாக்கும் போது ஆறு மைல் உயரத்துக்கு தூசு, வாயு போன்ற பொருட்கள் வெடித்து கிளம்பும். அதன் தொடர்ச்சியாக நீர் இருந்தால் வெளியேவரும்' என்பது நாசாவின் திட்டம்.
நிலவில் இப்படி ஏவுகணை மோதி ஆய்வுகள் நடத்திக்கொண்டு இருக்கும் போதே மறுபக்கம் இந்தியா அனுப்பிய சந்திராயன், நிலவில் நீர் இருப்பதற்கான ஆதரங்களை முதன் முதலாக கண்டுபிடித்து அனுப்பி வைத்தது. சந்திராயன் அனுப்பிய தகவல்களை தீவிரமாக ஆராய்ந்த நாசா 2009 செப்டம்பரில் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.
ஒருபக்கம் வன்முறையாக அமெரிக்கா ஏவுகணையை கொண்டு நிலவை தகர்த்துக் கொண்டிருக்கும் போது எந்தவித தாக்குதலும் நிலவில் நடத்தாமல் அஹிம்சை முறையில் நீர் இருப்பதை கண்டுபிடித்திருப்பது இந்தியாவின் சிறப்பான சாதனை.
சுதந்திரம் முதல் நிலவில் நீர் இருப்பது வரை சாத்வீகமான முறையில் அஹிம்சை வழியில் தெரிந்து கொண்டு உலகுக்கு அறிவித்தது. அதையே விஞ்ஞானமும் செய்கிறது.
மிக மிக அருமையான தகவல்...அதைச் சொன்னவிதம் மிகவும் ஈர்க்கிறது.
பதிலளிநீக்குஒரு சிறு திருத்தம் நண்பரே! விடுதலை பெற்றது முதல் நிலவில் நீரைக் கண்டுபிடித்தது வரை இன்னா செய்யாமைக் கொள்கையைக் கடைப்பிடித்த இந்தியா என்பதை விட விடுதலை பெறவும் நிலவில் நீரைக் கண்டுபிடிக்கவும் மட்டும் இன்னா செய்யாமையைக் கடைப்பிடித்த இந்தியா எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும். காரணம், இடையில் வேறு எதிலும் இந்தியா அப்படி ஒன்றும் இன்னா செய்யாமைக் கொள்கையைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. நிலவின் உயிரே இல்லாத வெற்றுத் தரை மீது காட்டிய இரக்கத்தை இந்தியா காசுமீர் மக்கள் மீதோ இன்ன பிற வடகிழக்கு மாநில மனிதர்கள் மீதோ ஈழத் தமிழர்கள் மீதோ காட்டுவதில்லை! இவ்வளவுதான் இந்தியா!
பதிலளிநீக்குஏதோ மனதில் வலித்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்!
உண்மைதான் நண்பரே. ஒத்துக்கொள்கிறேன். துயரம்தான்.
நீக்குநல்ல ஒப்புமை
பதிலளிநீக்குவாழ்த்துகள்
தம +
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
நீக்குநல்ல பகிர்வு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !
நீக்குபுதுமையான விதத்தில் தகவலை அளித்துள்ளீர்கள்!
பதிலளிநீக்குஇந்தியாவின் சாதனைக்கு பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குகருத்துரையிடுக