• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், ஆகஸ்ட் 25, 2016

  காம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு


  பெண்கள் குழந்தைகள் பெற்றுத்தரும் இயந்திரம் அல்ல என்று பெண்ணியவாதிகள் உரக்க குரல் கொடுத்தாலும், இயற்கை என்னவோ பெண்ணை ஒரு குழந்தை பெறும் இயந்திரமாகத்தான் படைத்திருக்கிறது போலும். முன்பெல்லாம் பெண்களுக்கு மாதவிலக்கு ஒரு பிரச்சனையாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய பெண்களுக்கு மாதவிலக்கு  பிரச்சனையாக இருக்கிறது. 


  இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பெண்கள் பெரும்பாலும் கர்ப்பமான நிலையிலேயே இருந்தார்கள். அதனால் அன்றைய பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் 10 முதல் 20 தடவைகள் மட்டுமே மாதவிலக்கு பிரச்னையை சந்தித்து வந்தார்கள். ஆனால், இன்றைய பெண்கள் ஒரு வருடத்திற்கு 13 முறை மாதவிலக்கை அனுபவிக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு 2 முதல் 4 குழந்தைகள் இருந்தால் அவள் தன் வாழ்நாளில் 350 முதல் 400 முறையும், குழந்தை இல்லாத பெண்கள் என்றால் 500 முறையும் மாதவிலக்கை சந்திக்கிறார்கள்.

  கருத்தடை மாத்திரைகள் வந்த பின் தான் பெண்களுக்கு மாதவிலக்குக்குப் பின் உணர்வு ரீதியான ஏற்ற இறக்கம் உண்டு என்பதை கண்டறிந்தனர். மாதவிலக்கு முடிந்த முதல் நாளில் இருந்து 21 நாட்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் நல்ல எண்ணங்களை, மகிழ்வான உணர்வுகளை ஏற்படுத்துகிறது. பாசிட்டிவான மனநிலையை உண்டாக்குகின்றன. 


  பெண்ணின் காம உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கின்றது. மாத சுழற்சியின் நடுவில் கருமுட்டை வெளிப்படும் நாளில் அவளது காமம் உச்சக்கட்டத்தை அடைகிறது. அப்போதுதான் அவளது உடலில் டெஸ்ட்ரோஜன் என்ற ஆணுக்கான ஹார்மோன் அதிகமாக சுரக்கத்தொடங்குகிறது. இந்த ஹார்மோன் அதன் இயல்பான காம உணர்வை மேலும் தூண்டிவிடுகிறது. 

  இயற்கை மிக அற்புதமானது. பெண் விலங்குகளும் மாதவிலக்கு காலகட்டகங்களில் இது போன்ற உணர்வை சந்திக்கின்றன. அவைகளும் கருமுட்டை வெளிப்படும் காலங்களில் மட்டுமே அவைகள் ஆண் விலங்குகளை வலுக்கட்டாயமாக உறவுக்கு இழுக்கும். மனித இனத்தில் பெண்ணுக்கும் இதே உணர்வு உண்டு. 


  ஒரு பெண் மிக உன்னிப்பாக தனது உணர்வுகளை கவனித்தாலே போதும். அவள் உடலில் கருமுட்டை வெளியாகும் நேரத்தை சரியாக கணிக்க முடியும். அந்த நாளில் பெண் இயல்புக்கு மீறி உற்சாகமாக இருப்பாள். இனிமையாக பழகுவாள். ஆண்கள் மீது மதிப்பும் மரியாதையும் இனம் புரியாத ஒரு ஈர்ப்பும் ஏற்படும். ஆண்கள் மிகவும் நல்லவர்கள் என்ற நேர்மறையான சிந்தனை மலரும். தன்னை மிக அழகாக மாற்றிக் கொள்வாள். ஒரு ஆணிடம் தன்னை ஒப்படைக்க துடிப்பாள். இது எல்லாமே வெளிப்பட்டிருக்கும் கருமுட்டையை கருவாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள்தான் என்று உளவியல் கூறுகிறது. 

  இயற்கை இப்படியெல்லாம் பல மாற்றங்களை உருவாக்கினாலும் உலகம் ஒரு பெண் தாய்மையடைய ஏகப்பட்ட சம்பிரதாயங்களை வைத்திருக்கிறது. அதை மீறும் பெண்ணை சமூகம் நடத்தை மூலம் விமர்சிக்கிறது. பக்குவமற்ற கன்னிப்பெண்கள் இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். கருமுட்டை வெளிப்படும் காலத்தை கட்டுப்பாட்டோடு கடக்க வேண்டும். 

  மேலைநாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி காதலர்கள் எல்லைமீறி உறவில் ஈடுபட்டு கர்ப்பம் அடைவது இந்த கருமுட்டை வெளிப்படும் நாளில்தான் என்று  கூறுகிறது. எது எப்படி நடந்தாலும் பாதிப்பு பெண்ணுக்கு மட்டுமே என்பதால் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.   


  14 கருத்துகள்:

  1. இளம் பெண்களுக்கு நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு !கருமுட்டை வெளி வராத நாளில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைத்தால் சிக்கலில் போய் முடியும் ,கர்ப்பம் என்பது எப்போது வேண்டுமானாலும் உண்டாகலாம் !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  2. இந்தக் காலத்தில் இயற்கையும் பெண்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  3. நல்லதொரு பதிவு சகோ! இதில் கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் பெண்கள் தங்கள் கரு முட்டை உருவாகும் தினத்தை அறிந்திடலாம். மட்டுமல்ல கருமுட்டை உருவாகி காத்திருக்கும் வேளையில் உடல் வெப்பநிலை சற்றுக் கூடுதலாக இருக்கும். அது போன்று இயற்கை முறையில் கர்ப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் முடியும் அது 100% உத்தரவாஅதம் இல்லை என்றாலும் இயற்கை வழியில் பின்பற்றவும் முடியும்...

   ஆனால் இப்போது நிலைமை வேறு. பெரும்பான்மையான பெண்களுக்கு உணவுப் பழக்கம், வாழ்வியல் முறைகளினால், குறிப்பாக மன அழுத்தம்.... இந்த ஹார்மோன்கள் சற்று மாறுபட்டு மாதவிடாய் பிரச்சனைகளை உருவாக்குகிறது..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கர்ப்பத்தடையில் பெண்ணின் உடல் வெப்பத்தை வைத்து தடுக்கும் முறையும் உள்ளது. தங்கள் வருகைக்கும் விரிவான தகவல்களுக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  4. இப்பதிவுக்காக தாங்கள் தெரிவு செய்த புகைப்படங்கள் தங்களின் ரசனையைக் காட்டுகிறது.

   பதிலளிநீக்கு
  5. விழிப்புணர்வு பகிர்வு செந்தில் சார்...
   அருமை...

   பதிலளிநீக்கு
  6. கருமுட்டை தயாராக இருக்கும் அந்த 72மணி நேரத்தில் பெண் உடம்பில் ஏற்படும் வெப்ப மாறுதல் போன்றவற்றை கொண்டு ஒளிரும் காது தோடு ஒன்று கண்டுபிடிக்கப்படவிருக்கிறது அந்த நாட்களை தவிர்த்து விட்டால் கர்ப்பமில்லை கருத்தடை மருந்துகள் கருக்கலைப்பு கலைக்கும் மருத்துவர்கள் நர்சுகளின் வருமானம் போய்விடும் எனவே ஆய்வு தடைபடுவதாக கேள்விபட்டேன்

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்