• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

  ஆண்களின் மோசமான குணம்..!

  ண்களின் மோசமான குணங்களில் ஒன்று 'ரோடு ரேஜ்'. வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் இது. இந்த குணத்தை ரோடு ரேஜ் என்கிறார்கள் உளவியலாளர்கள். 1987-ம் ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று லாஸ் ஏஞ்சல்ஸ் சாலையில் ஒரு படப்பிடிப்பை நடத்தியது. அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஓட்டுனர்கள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்வதும், மோசமான சைகைகளைக் காண்பிப்பதும், வெறித்தனமாக வாகனங்களை ஓட்டுவதும் நடந்தது. அப்போதுதான் இத்தகைய செயல்களுக்கு 'ரோடு ரேஜ்' என்ற புதிய பெயரைக் கொடுத்தார்கள். 


  ரோடு ரேஜ் எதைக் குறிக்கிறது? முரட்டுத்தனமாக டிரைவ் செய்தல், சடன் பிரேக், சடன் ஆக்ஸலரேஷன், வாகனத்தை மோதுவது போல் பின்னால் நெருக்கமாக ஒட்டி வருவது, ரோட்டின் ஒரு லேனில் இருந்து மறு லேனுக்கு மாற்றி ஓட்டுவது, மற்ற ஓட்டுநர்களுடன் போட்டிப் போட்டுக்கொண்டு வாகனத்தை ஓவர்டேக் செய்யாமலும், பின்புறம் செல்லாமலும் சரிசமமாக ஓட்டிவருவது, எதிரே வாகனங்கள் வந்தாலும் அப்படியே தொடர்வது, சாலைகளை பிரிக்கும் மீடியன்கள் மீது ஓட்டுவது, சாலை ஓரத்தில் இருக்கும் நடைபாதையில் ஓட்டுவது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது,  மிரட்டுவது, சாலையில் செல்பவர்கள் மீது மோதுவது போன்ற எல்லாவகை அத்துமீறல்களும் ரோடு ரேஜ் வகையில்  சேர்க்கிறது.

  அமெரிக்காவில் வருடத்திற்கு 1200-க்கும் மேற்பட்ட ரோட் ரேஜ் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதிலும் சரியாக 33 வயதுள்ள ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். ரோட் ரேஜ் வழக்குகளில் 97 சதவீதம் ஆண்கள் மீதே இருக்கிறது. இதிலிருந்தே இது ஆண்களுக்கான குணம் என்று தெரியவந்தது. சரி, இது எப்படி ஆணுக்கு மட்டுமே ஏற்படுகிறது? 


  இதற்கும் ஆதி மனிதனிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது. இதுவும் ஆதி ஆணின் மரபு வழியே பெற்ற குணம்தான். வேட்டையில் போட்டிபோடுவது மனிதனுக்கு பிடிக்கும். தன்னைவிட யாரும் முதன்மையாக வந்துவிடக் கூடாது என்பதில் அவன் பிடிவாதமாக இருப்பான். இன்றைக்கு வேட்டையில்லை. ஆனால் பிடிவாதம் இருக்கிறது. வாகனம் ஓட்டுவது ஆண்களுக்கு ஒரு வேட்டையாடுவது போலவும் பந்தயம் போலவும் ஒரு போட்டியாகத்தான் தோன்றுகிறது. அப்படிதான் அதில் ஈடுபடுகிறார்கள். 


  இதற்கு முக்கிய காரணம், இன்றைய மனிதர்களிடம் பொறுமையும், சகிப்புத்தன்மையும் போய்விட்டது. உதவும் மனப்பான்மையும் இல்லை. பெரும்பாலான ஆண்களுக்கு போதிய தூக்கம் இல்லை. தங்கும் இடமும் வேலைப் பார்க்கும் இடமும் வெகு தொலைவில் உள்ளது. பலருக்கு வேலைக்குப் போவதே ஊருக்கு போவதுபோல் இருக்கிறது. இத்தனை சிரமங்கள் இருப்பதால் டென்ஷன் அதிகரிக்கிறது. வீடும், வேலை செய்யும் இடமும் அருகருகே இருக்கும்படியாக அமைத்துக் கொண்டால் ரோட் ரேஜ் குறைகிறது என்று மனநல ஆய்வு சொல்கிறது. அதனால் நல்ல மனநிலையோடு வாகனம் ஓட்டும்போது ரோட் ரேஜ் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. 


  விபத்துகள் நடப்பதற்கு இந்த மனநிலை காரணமாக அமைகிறது. இதுபோக மனநிலையின் மாற்றமும் விபத்துக்கு காரணமாக அமைகின்றன. சாலைகள் வளைந்து நெளிந்து இருவழிச்சாலையாக இருந்தபோது இந்தப் பிரச்சனைகள் குறைவு. ஆனால், நான்குவழி, ஆறு வழி என்று சாலைகள் விரிவடைந்த போது விபத்துகளும் கூடின. அப்போது இருந்த விபத்துகளின் எண்ணிக்கையைவிட இப்போது அதிகம்.

  இதற்கு மனநிலை மாற்றமும் ஒரு காரணம். நான்கு வழிச்சாலைகளில் ஒரே மாதிரியான நிலமைப்பு தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது. ஒரே மாதிரியான சாலை அமைப்பு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத, வெட்ட வெளி, கடைகள் இல்லாத வனாந்திரப்பயணம் செய்வது போல் இருப்பது டிரைவர்களுக்கு தூக்கத்தை வரவழைத்துவிடும். 


  தொடர்ந்து இதேபோன்று மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டே வாகனம் ஓட்டும்போது வண்ணங்கள் மங்கத் தொடங்கும். பகலிலே இருள் சூழ்ந்ததுபோல் தெரியத் தொடங்கும். இவையெல்லாமே விபத்துக்கு வழிவகுத்துவிடும். இவையெல்லாமே ரோட் ரேஜ் என்ற ஆண்களின் மனநிலையால் ஏற்படும் விபத்துகளாகவே உளவியல் சொல்கிறது. இதுபோக உடல்நிலை காரணமாக ஏற்படும் விபத்துகளும் உண்டு. இதில் பெரும் இடத்தப் பிடித்திருப்பது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதுதான். இவற்றையெல்லாம் மாற்றினால் விபத்துகள் குறையும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

  27 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே!

   ரோடு ரேஜ் என்னும் சொல்லுக்கு இவ்வளவு விரிந்த அர்த்தத்தை அறிந்திருக்கவில்லை.

   இதன் பின்னுள்ள உளவியலையும் அறிந்து கொண்டேன்.

   தொடர்கிறேன்.
   த ம 1

   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வணக்கம் நண்பரே,

    தங்களின் வரவு எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் வலையுலகம் வந்த தங்களை வருக வருகவென வரவேற்கிறேன். தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.
    நானும் தொடர்கிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. வணக்கம் உண்மைதாண் இன்றைய மனிதர்களிடம் பொறுமை இல்லை

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. ஆண்கள் குணமே இப்படித்தான் ,அடிக்கடி மாறும் அப்படித்தான் :)

   பதிலளிநீக்கு
  4. க்ட்டுரைக்கு நீங்கள் தெரிவு செய்த புகைப்படங்கள் மிகவும் அருமை. ரோடு ரேஜ் என்ற சொல்லின் பயன்பாட்டை இப்போதுதான் அறிகிறேன். நன்றி.

   பதிலளிநீக்கு
  5. அனைத்துப் படங்களும், அனைத்து விஷயங்களும் வழக்கம்போல அருமையோ அருமை. ரோடு ரேஜ் என்ற பெயரையும் அதற்கான விளங்களையும் இன்றுதான் தங்களின் இந்தப் பதிவின் மூலம் மட்டுமே அறிந்துகொண்டேன். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மேலே என் பின்னூட்டத்தில் ஓர் எழுத்துப்பிழை நேர்ந்துவிட்டது. வெரி ஸாரி.

    விளங்களையும் = விளக்கங்களையும்

    நீக்கு
   2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  6. 'நம்ம ஊருலயும் ரோடு ரேஜ் (முரட்டுத்தன வாகன ஓட்டம்) உண்டு (ஏதோ.. அர்ஜண்டா போயி ராக்கெட் கவுண்ட் டவுனுக்கு சிக்னல் காண்பிக்கப் போகிறமாதிரி). இதில் விட்டுப்போனது, வாகன ஹார்னை ஒரேடியாக அமுக்குவது. ரோடுல நடக்கறவங்களுக்கு இது ஒரு பெரிய இம்சை. இங்குமே, ரொம்பப் பக்கத்தில் பின்'தொடரும் வாகனங்கள் வந்தால் (கிட்டத்தட்ட பம்பரை இடிக்கும் தூரத்தில்) எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகிவிடும். உடனே ஹசார்ட் லைட் போட்டுவிடுவேன். சாலையில் வாகனம் ஓட்டுவதும் ஒரு கலைதான்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீங்கள் சொல்வது மிகவும் சரியே நெல்லை தமிழரே. இங்கு ஹாரன் அடிப்பதுபோல் மிகப் பெரிய ரோடு ரேஜ் எதுவும் இல்லை. நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. அருமையான பதிவு நண்பரே..

   எங்கள் மாணவர்களுக்கு சாலைப்பாதுகாப்பு விதிமுறைகள் என்றொரு பாடமே உண்டு.அவா்களுக்குத் தேர்வுக்கு மட்டுமன்றி நம் வாழ்க்கைக்கும் பயன்படும்விதமான பதிவு செய்தமைக்குப் பாராட்டுக்கள்.எங்கள் கல்லூரி வலையில் இந்த இடுகைக்கான தொடுப்பை நன்றியுடன் பகிர்கிறேன். நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் பதிவை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே!

    நீக்கு
  8. அருமையான திறனாய்வுக் கண்ணோட்டம்
   சிறந்த வழிகாட்டல்

   பதிலளிநீக்கு
  9. இன்றைய சூழலுக்கு ஏற்ற பயனுள்ள பதிவு ஐயா. ஆண்கள் மட்டுமில்லை பெண்களும் இன்று ரோடு ரேஜ் செய்கின்றனர் ஐயா.

   நேரம் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம் இப்போது பெண்களும் ஆண்கள் செய்யும் தவறான காரியங்கள் அனைத்தையும் பெண்ணுரிமை என்ற பெயரில் செய்ய தொடங்கியிருப்பது வேதனையே.
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வைசாலி !

    நீக்கு
  10. தில்லியிலும், வட இந்தியாவிலும் இந்த ரோட் ரேஜ் மிக அதிகம். பேசிக்கொண்டே இருப்பவர்கள் சண்டை போடுவார்கள், சண்டை வலுக்க, நாட்டுத் துப்பாக்கிகளை எடுத்து சுட்டுத்தள்ளுவதும் இங்கே நடக்கிறது.....

   பதிலளிநீக்கு
  11. இங்கு நம் மக்களும் அப்படித்தானே ஓட்டுகின்றார்கள். முக்கியமாக ஹார்ன் அடிப்பது. நாம் ரோடு ரேஜ் ஆகாமல் ஓட்டினாலும் இப்படி ஹார்ன் அடித்து நம்மை அந்நிலைக்குத் தள்ளிவிடுவார்கள்.

   கீதா: மேலே சொன்னதுடன் இதுவும்.. அது போன்று அசிங்கமான வார்த்தைகளால் திட்டுவது, நம் வண்டியை இடித்துவிட்டுச் செல்வது அல்லது கையால் கண்ணாடியை தட்டிச் செல்வது என்று நடக்கிறது. ஏதையோ பிடிக்கச் செல்வது போல அப்படி என்ன அவசரமோ...பொறுமை இல்லை என்றால் நம்மூரில் வண்டி ஓட்டுவது கடினம். இது நிச்சயமாக மன உளைச்சலைத் தருவதாகத்தான் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலும், போக்குவரத்தும் மன உளைச்சலுக்கு முக்கியக் காரணம் வகிக்கின்றன..நல்ல பதிவு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நம் மக்கள் நிறைய மாறவேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும். சாலைப் பயணம் சுகமாகும்.
    வருகைக்கு நன்றி நண்பர்களே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்