சிறைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில் 'வீட்டுச்சிறை' வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்ஞானி அல்-ஹாத்திம். கி.பி.1011-ம் ஆண்டு எகிப்தில் வாழ்ந்த போது, மன்னரைப் பற்றி ஏதோ ஏடாகூடமாக பேசப்போய், மன்னர் காலிப்பின் கோபத்துக்கு ஆளானார். தண்டனை கிடைப்பது உறுதி என்று தெரிந்தவுடன் அதில் இருந்து தப்புவதற்காக பைத்தியம் போல் நடித்தார்.
மன்னரின் உத்தரவுப்படி கி.பி.1021-ம் ஆண்டு வரை சிறையில் வைக்கப்பட்டார் அல்-ஹாத்தீம். வீட்டுச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட இன்னொரு விஞ்ஞானி கலிலியோ. "சூரியன் பூமியை சுற்றவில்லை. பூமி தான் சூரியனை சுற்றி வருகிறது" என்கிற அறிவியல் உண்மையை சொன்னதற்காக, மதத்துக்கு எதிராக பேசுகிறார் என்று கொந்தளித்த மதவாதிகள் கலிலியோவை வீட்டுக்காவலில் வைத்து விட்டார்கள்.
கலிலியோ |
இப்போது வீட்டுச் சிறை முறையை அதிகம் பயன்படுத்தும் நாடு இத்தாலி. அந்நாட்டில் கைதிகள் தண்டனை முடியும் நிலையில் இருந்தாலோ, உடல்நலக்குறைவாக இருந்தாலோ கைதிகளை வீட்டுச்சிறைக்கு மாற்றி விடுவார்கள். ஏழையாக இருந்தால் வேலைப்பார்க்க அனுமதியுண்டு. தப்பிக்க நினைத்தால் பழையபடி சிறைக்கு போக வேண்டும்.
நியூசிலாந்தில் இரண்டு வருடங்களுக்கு குறைவான தண்டனை பெற்ற கைதிகளை வீட்டிலேயே சிறை வைத்து விடுகிறார்கள். பல வருட சிறைவாசிகளுக்கு கூட எப்போதாவது மூன்று மாதங்கள் வீட்டுச்சிறையில் இருக்க அனுமதி பெறலாம். எலக்ட்ரானிக் கருவிகள் உதவியுடன் வீட்டில் இருக்கும் கைதி கண்காணிக்கப்படுவார். வீட்டுக்கு வரும் போன்களை பதிவு செய்வார்கள்.
சில நாடுகளில் கைதிகளின் கால்களில் சென்ஸார் ஒன்றை பொருத்தி விடுவார்கள். இதை கழற்ற முயற்சி செய்தாலோ, அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட ஒரு சில அடிகள் மீறினாலோ போலீசாருக்கு செய்தி அனுப்பி விடும். கைதிகள் வீட்டில் தான் இருக்கிறார்களா? என்பதை தெரிந்து கொள்வதற்காக அவ்வப்போது அவர்கள் வீட்டுக்கு போன் செய்வார்கள். போனை எடுக்காவிட்டால் அடுத்த நொடியே ஜீப் வந்து நிற்கும். கோவில், மருத்துவமனை என்று எங்கு சென்றாலும் அனுமதி வாங்க வேண்டும்.
ஆங்சான் சூகி |
இப்போது பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் தான் வீட்டுச்சிறை வைக்கப்படுகிறார்கள். வீட்டுச்சிறையில் அடைபட்டு உலகப்புகழ் பெற்றவர் மியான்மர் நாட்டை சேர்ந்த ஆங்சான் சூகி என்ற பெண் தலைவர். ராணுவ அடக்குமுறையை எதிர்த்து போராடியதற்காக கடந்த 20 ஆண்டுகளில் 14 முறை வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சமீபமாகத்தான் விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவிலும் வீட்டுச்சிறையில் ஒரு தலைவரை வைத்திருந்தார்கள். அவர் பெயர் ஷேக் அப்துல்லா. காஷ்மீர் பிரிவினையை தூண்டியதற்காக அவருக்கு அந்த தண்டனை தரப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேற்றி, தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலில் ஒரு வீட்டில் அவர் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
கொடைக்கானலில் ஷேக் அப்துல்லா சிறைவைக்கப்பட்டிருந்த கோஹினூர் பங்களா |
பாகிஸ்தானில் சுல்பிக்கார் அலி பூட்டோ, நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான், பெர்வேஸ் முஷாரஃப் ஆகியோரும் வீட்டு சிறையில் இருந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் இந்திய மாணவர்கள் சிலரின் காலில் எலக்ட்ரானிக் கருவியை பொருத்தியது அமெரிக்கா. இதுவும் வீட்டுச்சிறையின் ஓர் அங்கம் தான். எங்கே செல்கிறார்கள்? யார், யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்? என்பதை கண்காணித்து தகவல் அனுப்புவது தான் இந்த கருவியின் வேலை. ஒருவரின் சுதந்திரத்தைப் பறித்து அவரை கண்காணித்தாலே அது சிறை தான். அது வீடாக இருந்தாலும் சரி, சிறைச்சாலையாக இருந்தாலும் சரி.
அதிசயத்தகவல்கள் நண்பரே அரியத்தந்தமைக்கு நன்றி
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஅரிய தகவல்கள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஅருமை
பதிலளிநீக்குசிறந்த பதிவு
வீட்டுச்சிறை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். தற்போது தங்கள் பதிவு மூலமாக மேலும் பல புதிய செய்திகளை அறிந்தேன். நன்றி.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குவித்தியாசமான தகவல்கள்.....
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குமியான்மரின் சூகி வீட்டுக்காவல் பற்றியறிந்திருந்தேன். மற்ற விபரங்கள் எனக்குப் புதியவை. கூடுதல் தகவல்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குகருத்துரையிடுக