• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, செப்டம்பர் 30, 2016

  சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்?  நாம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் உடலிலுள்ள தசைநார்கள் இயங்குகின்றன. அப்படி ஒவ்வொரு இயக்கத்திற்கும் குளுக்கோஸ் எனும் சக்தி செலவாகிறது. இந்த குளுக்கோஸ் நாம் சாப்பிடும் உணவான அரிசி, கோதுமை, கிழங்குகள், பழங்கள், இனிப்பு போன்ற பொருட்களில் அதிகமாக இருக்கின்றன. இதில் இருக்கும் மாவுச் சத்தை செரிமானத்தின் மூலம் குளுக்கோஸாக மாற்றி குடல் உறிஞ்சிக் கொள்கிறது. சிறுகுடலில் இருந்து ரத்தத்தின் மூலம் ஈரலுக்குச் செல்கிறது. ஈரல் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் குளுக்கோஸை பகிர்ந்து கொடுக்கிறது. 


  ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் உடலின் திசுக்களுடன் சென்று திசுக்களை வேலைப் பார்க்க வைப்பதற்காக 'இன்சுலின்' என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. இன்சுலின் ஹார்மோன் கணையத்தின் சில குறிப்பிட்ட திசுக்களிலிருந்து ஊற்றாய் ஊறி (சர்க்கரை) ரத்தத்தில் கலந்து கொள்ளும். உடலில் உள்ள திசுக்களுக்கு எவ்வளவு குளுக்கோஸ் வேண்டுமோ அந்த அளவிற்கே இன்சுலின் சுரக்கிறது. அந்த இன்சுலின் எல்லா திசுக்களுக்கும் சரிவிகிதத்தில் அனுப்பப்படுகிறது.  

  ஏதாவது ஒரு காரணத்தால் இன்சுலின் சுரப்பு குறைந்துவிட்டால் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் திசுக்களை சென்றடையாமல் அப்படியே ரத்தத்தில் தங்கி விடுகிறது. திசுக்களுக்கு குளுக்கோஸ் சென்றடையாததால் உணவில்லாத மனிதன் போல திசுக்கள் அசதியிடனும் சக்தியற்றும் இயங்குகிறது. அதனால் எல்லா திசுக்களும் மிக விரைவிலே முதுமை அடைகிறது. 


  ரத்தத்தில் தொடர்ந்து தேங்கிக்கொண்டே வரும் குளுக்கோஸ் ரத்தத்தை அடர்த்தி மிக்கதாக கெட்டியாக மாற்றிவிடுகிறது. அதனால், மெல்லிய சிறு சிறு ரத்தக் குழாய்களில் ரத்தம் புகமுடியாமல் பல பகுதிகளுக்கு ரத்த ஓட்டமே தடைப் பட்டுவிடும்.

  இந்த தடைபடுதல் மூளையில் ஏற்பட்டால், அது பக்கவாதத்தில் கொண்டுபோய் விடுகிறது. இதயத்தில் நடந்தால் மாரடைப்பாக மாறுகிறது. சிறுநீரகங்களில் நடந்தால் சிறுநீரக செயலிழப்பாக தோன்றுகிறது. இதே பாதிப்பு கண்களில் ஏற்பட்டால் பார்வை பாதிக்கப்படுகிறது. கால் விரல்களில் இந்த பாதிப்பு ஏற்படும்போது ரத்த ஓட்டம் செல்லாத பகுதிகள் அழுக்கத் தொடங்குகின்றன. அதனால் அந்தப் பகுதியை வெட்டி எடுக்க வேண்டிய நிலை வருகிறது. சர்க்கரை நோய் பெரிதும் பாதித்தவர்களின் கால் விரல்களை வெட்டி எடுப்பது இதனால்தான்.  


  குளுக்கோஸ் சத்து திசுக்களுக்கு சென்று சேராததால் திசுக்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதனால் புண்கள் ஆறுவதும் தடைப்படுகிறது. இதுதான் சர்க்கரை நோயின் முழுப்பரிமாணம். ரத்தத்தில் சர்க்கரை அளவு 150 மில்லி கிராமுக்கு மேல் இருந்தால் ரத்தத்தின் பளபளப்புத் தன்மை மாறத்தொடங்குகிறது. உணவு உட்கொள்வதற்கு முன் ரத்தத்தில் 60 லிருந்து 100 மில்லி கிராம் சர்க்கரை இருப்பது இயல்பானது. உணவு உண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு கொஞ்சம் கொஞ்சமாக ஏறுகிறது. அப்படி முழுமையாக ஏறிய நிலையில் 120 முதல் 150 வரை இருக்கலாம். சர்க்கரை நோய் இத்தனை மாற்றங்களை உடலில் ஏற்படுத்துவதால்தான் உணவு விஷயத்தில் அளவாகவும், போதிய உடற்பயிற்சி செய்தும் சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.   இந்த பதிவையும் படியுங்கள்..

  இன்சுலின் செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம்..!  


  32 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ளதோர் பதிவு. படங்களும் தகவல்களும் வழக்கம்போல மிகச் சிறப்பாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  2. பயனுள்ள பதிவு.

   இனிப்பை அறவே நிறுத்தும் மன உறுதி இருக்க வேண்டும். நிறைய பேர் கொஞ்சம் இனிப்பு சாப்பிட்டு விட்டு மாத்திரையை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். இதன் மூலம் கொஞ்ச நஞ்சம் கணையம் வேலை செய்வதை கெடுத்துக்கொள்வது மட்டுமல்ல, இதனால் ஏற்படும் பின் விளைவுகள் அதிகம் என்பதும் தெரிவதில்லை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்சுலின் சுரப்பு அதிகம் இருக்கும் வரை எவ்வளவு இனிப்பு வேடுமானாலும் சாப்பிடலாம் ஒன்றும் ஆகாது. இன்சுலின் சுரப்பு குறைந்தால்தான் ஆபத்து. அது குறையாமல் பார்த்துக்கொள்ளும் சக்தி உடல் உழைப்புக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் கடின உழைப்பாளர்களை சர்க்கரை அவ்வளவு எளிதில் அண்டுவதில்லை.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  3. பய்னுள்ள பகிர்வு
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  4. நல்ல விளக்கம் செந்தில் குமார், அருமையான தகவல் அலசல்.

   கோ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  5. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  6. இக்காலத்தில் உடல் உழைப்பு குறைந்ததும் சர்க்கரை நோய் அதிகரித்ததற்குக் காரணம் என்கிறார்கள். சர்க்கரை நோய் பற்றி விழிப்புணர்வூட்டும் பதிவு. நன்றி செந்தில்!

   பதிலளிநீக்கு
  7. இதயத்தில் இருந்து தூரத்தில் இருப்பவை கால் ,கை விரல்கள் .அவைகளுக்கு போதுமான அளவுக்கு ரத்தம் கிடைக்காத நிலையில் முதலில் பாதிப்பு அடைகின்றன !
   மின்சாரம் போதுமான அளவுக்கு கிடைக்காத இடத்தில் டிரான்ஸ்பார்மர் வைத்து இழுப்பதைப் போல .காலில் வைத்துக் கொள்ளும் டிரான்ஸ்பார்மர் கண்டுபிடிக்கப் பட்டால் நல்லது :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்படியொரு கருவியை பகவான்ஜி கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்!

    நீக்கு
   2. யார் கண்டு பிடித்தாலும் ராயல்டி எனக்கு வந்திடணும்:)

    நீக்கு
   3. யார் கண்டு பிடித்தாலும் ராயல்டி எனக்கு வந்திடணும்:)

    நீக்கு
  8. அருமையான உளநல வழிகாட்டல்
   பயன்மிக்க பதிவு

   பதிலளிநீக்கு
  9. சர்க்கரை நோயைப்பற்றிய எளிய விளக்கம். இன்சுலினை எப்படிச் செலுத்துகிறார்கள் என்று கோடிகாண்பித்திருக்கலாம். இரவு உணவு மிக மிக்க் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும், எந்த சாப்பாட்டுக்கு அப்புறமும் குறைந்தது 200 மீட்டர் வெறும் நடை நல்லது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதை தனிப் பதிவாக தரலாம் என்றிருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  10. சர்க்கரை நோய் பற்றிய நல்லதொரு விளக்கம். பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு
  11. விளக்கம் அருமை. சர்க்கரை நோய் என்பதை விட அது நம் உடலின் மெட்டபாலிசத்தில் ஏற்படும் மாறுதல்கள்...குறைபாடு. ஆனால் அது பல நோய்களுக்கும் வழி வகுக்கும் சரியாகப் பராமரிக்கப்படவில்லை என்றால்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்