Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஒரு பர்கரின் விலை ஒரு லட்சம்..!



ணக்காரர்களுக்கான ஓர் உலகம் உலகின் ஒரு பகுதியில் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இங்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. பெருமையும் அந்தஸ்தும்தான் தனி அடையாளம். அப்படி அந்தஸ்தை தூக்கி நிறுத்தும் ஒரு அடையாளங்களில் உணவும் உண்டு. அத்தகைய உணவுகளில் ஒன்றுதான் 'கிளம்பர்கர்..!'

மேற்கு லண்டனில் செல்சியா என்ற இடத்திலுள்ள ஹொங்கி டோங்க் என்ற உணவகம் 2014-ல் உலக சாதனை படைப்பதற்காக இந்த விலையுயர்ந்த பர்கரை செய்தது. அதற்கு கிடைத்த வரவேற்பை வைத்து அதன்பின் ஆர்டரின் பெயரில் இந்த பர்கரை விற்பனை செய்து வருகிறது. இதன் விலை 1,100 பவுண்ட். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மதிப்பு கொண்டது. சரியாக சொல்வதென்றால் ரூ.97,900. சேவை வரி தனி. அதையும் சேர்த்தால் ரூ.1,01,176/- அம்மாடியோவ்..!


இவ்வளவு விலைகொடுத்து வாங்க இந்த பர்கரில் அப்படியென்ன சிறப்பு உள்ளது? என்று பார்த்தால் இந்த பர்கர் உலகில் மிகச் சிறந்த உணவு மூலப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. உப்பு என்ற ஒன்றை எடுத்துக்கொண்டால் கூட உலகத்திலேயே மிகச்  சிறந்த உப்பான இமயமலை உப்பையே பயன்படுத்துகிறார்கள். கடலில் எடுக்கப்படும் உப்பைவிட உப்பு மலைகளில் இருந்து எடுக்கப்படும் உப்பு மிகவும் சுத்தமானதாகவும் முதன்மையானதாகவும் இருக்கும். அந்த பாறை உப்புக்களிலும் முதலிடத்தில் இருப்பது இமயமலையில் கிடைக்கும் பாறை உப்பே! அதைத்தான் இதில் உபயோகிக்கிறார்கள். 

அதைப்போலவே, நியூசிலாந்தில் உள்ள மானின் மாமிசம்தான் உலகிலே சிறந்ததாக கருதப்படுகிறது. அந்த இறைச்சியை 60 கிராம் இதில் சேர்கிறார்கள். கனடாவில் கிடைக்கக்கூடிய சிங்கஇறால்தான் இறால் வகையில் உலகிலேயே சிறந்தது அதை இதில் சேர்கிறார்கள். ரஷ்யாவின் பெலூகா காவியர் சேர்க்கப்படுகிறது. ஈரானின் குங்குமப்பூ. கோபே வாகியு மாட்டிறைச்சி தூள், பர்கரின் மையத்தில் கருப்பு ஆமையின் உடல் பகுதிகள் வாசத்திற்காக சேர்க்கப்படுகின்றன. 


பர்கரின் மேற்புறத்தில் அவித்து வறுக்கப்பட்ட வாத்து முட்டைகளை தங்க காகிதத்தில் சுற்றி மாப்பிள் சிரப்புடன் மங்கோ சேம்பைனுடன் மேலும் பல நாட்டு சிறப்பு உணவுகளுடன் சேர்த்து இதை பரிமாறுகிறார்கள். மொத்தம் 220 கிராம் எடையும், 2618 கலோரி சக்தியும் கொண்டது இந்த பர்கர். அப்படியே நீங்களும் லண்டன் பக்கம் சுற்றுலா சென்றால் இந்த பர்கரை சுவைத்து வாருங்கள். 






17 கருத்துகள்

  1. பதிவைப் படித்து முடிக்கையில்
    நாவூறுது - ஆனால்
    ஏழைகளுக்கு இது எட்டாப்பழம்!

    பதிலளிநீக்கு
  2. தொண்டையைத் தாண்டிவிட்டால் எல்லாமே நரகல்தான் ,இதுக்கா இந்த விலை :)

    பதிலளிநீக்கு
  3. இதோ புறப்பட்டு விட்டேன் நண்பரே ஹொங்கி டோங்க் ஹோட்டலுக்கு....
    இப்பதிவை கடந்த வாரம் போட்டிருந்தால் மீண்டும் விமான செலவு வந்திருக்காது.
    த.ம.3

    பதிலளிநீக்கு
  4. நான் இதனை உண்பதில்லை. ஆகவே நான் தப்பித்தேன்,செலவு செய்யவேண்டிய அவசியமில்லை.தம4

    பதிலளிநீக்கு
  5. இன்றைய அவசர சூழலில் அனைவரும் அதனையே நாடிச் செல்கின்றனர் ஐயா.நன்றி

    பதிலளிநீக்கு
  6. பர்கர் சாப்பிட்டதே இல்லை....

    கீதா: பர்கர் வீட்டிலும் செய்வதுண்டு. என்ன சைவ பர்கர். ஒரு பர்கர் சாப்பிட்டாலே போதும் அவ்வளவுதான்...

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பழைய பதிவுகளையும் வாசிக்கிறோம். தாமதத்திற்கு மன்னிக்கவும். வேலைப்பளு..

    பதிலளிநீக்கு
  8. ஒரு லட்சம் ரூபாய் ஒரு பர்கர்.... உலகின் பல பகுதிகளிலிருந்தும் மூலப்பொருட்கள்....

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை