Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஜாதிக்காக அடித்துக்கொள்வதுதான் நல்ல நகைச்சுவை..!


னிதன் முதலில் பேசிய மொழி தமிழ் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். அதோடு அவனின் மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்கள். அதன்படி பார்த்தால் 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பஞ்சம் அங்கிருந்த மனித இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக வேறு இடம் நோக்கி நகர்த்தியது. 


அடுத்த ஆயிராம் ஆண்டில் இப்போதைய ஆஸ்திரேலியாவை சென்றடைந்தான். வழியில் அவன் தங்கி பெருகிய இடங்கள் ஏராளம். அந்த இடங்களில் மேற்குத்தொடர்ச்சி மலையும் ஒன்று. அந்த ஆதிமனிதனின் மரபணுத் தொடர்ச்சி ஒன்று இன்றைய தமிழர்கள் சிலருக்கும் இருக்கிறது. 

முதலில் மரபணு என்கிற டி.என்.எ. குற்றவாளிகளை கண்டுபிடிக்கப் பயன்பட்டது. அதன்பின் குழந்தை யாருடையது? கொல்லப்பட்டது யார்? கற்பழிப்பு வழக்குகள் போன்றவற்றில் உதவி வந்தன. இன்று அது ஆயிரக்கணக்கான வருடங்கள் பின்னால் சென்று மனித சரித்திரத்தின் சங்கிலி தொடர்பை தெரிந்துகொள்ளும் அளவிற்கு மிகப் பெரிய தொழில்நுட்பமாக வளர்ந்திருக்கிறது. 

மனித இனத்தின் இடப்பெயர்ச்சிப் பற்றி உலகம் முழுவதும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி உலகம் முழுக்க உள்ள 1 லட்சம் ஆண்களிடம் இருந்து டி.என்.எ. மாதிரிகள் திரட்டியிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 9,000 மாதிரிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வு 'ஒய்' குரோமோசோம் அடிப்படையில் நடத்தப்பட்டதாகும். ஒய் குரோமோஸோம் என்பது ஆண்களுக்கானது. அதனால் இது ஆண்கள் சம்பந்தப்பட்ட ஆய்வு. 


அதன்படி ஜாதி என்பது ஒரு சமூக கலாசார அமைப்பு மட்டுமே. அதில் ஏகப்பட்ட கலப்புகள் இருக்கின்றன. ஆய்வுப்படி, எந்தவொரு ஜாதியும் மரபணு ரீதியில் தூய்மையானது அல்ல. எல்லாவற்றிலும் பல்வேறு காலக்கட்டங்களில் பலவித கலப்பு ஏற்பட்டிருக்கிறது. இன்று ஒரு ஜாதியில் பிறந்த ஒருவர் ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பு வேறொரு ஜாதியில் இருந்திருக்கிறார். அதிலும் இன்றைக்கு அவர்  சார்ந்த ஜாதிக்கு எதிரியாக நிற்கும் ஜாதியிலிருந்தே அவர் வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


அதனால் ஜாதி பெருமை பேசி ஜாதிக்காக மனிதர்கள் அடித்துக் கொள்வது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் மிகப் பெரிய நகைச்சுவையான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஜாதி, கோத்திரம் என்பதெல்லாம் பெரிய புனிதமில்லை. எல்லாம் மனித சரித்திரத்தோடு ஒப்பிடும்போது மிக சமீபமாக வந்ததுதான் ஜாதிய அமைப்பு. அதாவது, ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதே. அதற்கு முன்பு இந்த அமைப்பு இருந்ததில்லை. 

70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வந்த ஆதிமனிதன் விட்டுச் சென்ற மரபணுக்களின் மிச்சம் இன்னும் தொடர்கிறது. இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே மிகவும் பழமையான ஆதிகுடிகளில் முதன்மையானவன் தமிழன் என்பதும் அவன் பேசிய தமிழ் மொழியே ஆதி மனிதன் பேசிய முதல் மொழி என்பது அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. 

ஆனாலும், பழம்பெருமை பேசுவதில் யாருக்கும் சளைக்காத நாம் இதை ஏனோ கொண்டாடத் தவறிவிட்டோம். 




29 கருத்துகள்

  1. உண்மைதான் நண்பரே ஒவ்வொரு மனிதனும் தான் இந்த ஜாதி என்று பெருமை பேசிக்கொள்கிறான் உண்மையில் அவன் குலம் அறிந்தவன் இறைவன் மட்டுமே உலகம் முழுவதும் தவறுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்கள். எனினும் இந்த ஆராய்ச்சி விவரங்கள் எங்கிருந்து எடுக்கப் பட்டது என்றும் சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'தினத்தந்தி'யில் நிறுவன பெயர்களை வெளியிடக்கூடாது என்ற நிலை இருந்தபோது எழுதிய கட்டுரை அதனால் பெயரில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகளோடு சேர்த்து விரிவான பதிவொன்று எழுதலாம் என்றிருக்கிறேன். அப்போது அத்தனையும் குறிப்பிடுகிறேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  3. அருமையான பொருண்மையினைத் தெரிவு செய்து பகிர்ந்த விதம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  4. எப்போதும் எதிலும் நமக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை விலக்கிவைப்பதுதானே நம் வழக்கம். இதில் மட்டும் விதிவிலக்கா என்ன..

    சிந்திக்கவைக்கும் பகிர்வு. நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு
  5. கீதையே சாதி உண்டு ..பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு என்று சொல்லி விட்டது. பிறகு இதெல்லாம் கீதையின் மேன்மையை குறைக்கும் கருத்து. அதை வைத்து தான் இன்றைய இந்தியா இயங்குகிறது. அறிவியல் விளக்கம் கொடுத்தாலும் இதையெல்லாம் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஊடகங்கள் ஏற்காது.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  7. எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு. உங்களின் இந்தக் கட்டுரையைப் படித்து முடிந்ததும், எனக்கு ’ நாலாம் தலை முறையைப் பார் நாவிதனும் சித்தப்பா ஆவான் “ - என்ற பழமொழிதான் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவுக்கு பொருத்தமான பழமொழியை நினைவு படுத்தியதற்கு நன்றி! ஆக, பழந்தமிழர்கள் ஜாதியில் கலப்பு இருக்கிறது என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார்கள். இன்றைய அரசியல்வாதிகள்தான் ஜாதி உணர்வை தூண்டிவிட்டு குளிர் காய்கிறார்கள்.
      தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. நல்ல தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! இந்த ஆராய்ச்சி யாரால் எப்போது நடத்தப்பட்டது என்பதையும் சொல்லியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் ஸ்ரீராம் பின்னூட்டத்திற்கு அளித்த பதிலே தங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. எவன் சொல்றான் நாம்தான் மூத்த குடி என்று ?சாதிப் பெருமையைப் போலவே இதையும் சொல்லிக் கொள்கிறோம் :)

    பதிலளிநீக்கு
  10. இந்த உண்மை சாதி வெறி கூட்டத்துக்கு புரியுமா....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பதால் இது புரியாது..!

      நீக்கு
  11. ஆம் நண்பரே!
    உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
    தலைமுறைகள் பலகடந்தோம்
    குறைகளைந்தோம் இல்லை.

    த ம

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  12. சாதிக்காகச் சண்டை வேண்டாம் - ஆனாலும்
    பாரதியார் சொல்லிவைச்ச மாதிரி - சாதிகள்
    இரண்டு உண்டு என்று அறிவோம் - அவை
    ஆண் சாதி, பெண் சாதி என்போம் - இவை
    சமஉரிமை பெற்றால் சண்டைகள் வராதாம்!

    பதிலளிநீக்கு
  13. மிகவும் அருமையான பதிவு நண்பரே!

    சாதி என்பது தொன்மை வாய்ந்தது இல்லை என்று தன் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலில் கால்டுவெல் முதலில் கூறினார். இப்பொழுது அதையே அறிவியலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், இன்றைய அறிவாளிகள், படித்தவர்கள், இளைஞர்கள் இன்றும் சாதியைப் பிடித்துக் கொண்டுதான் தொங்குகிறார்கள். சில நாட்களுக்கு முன் தந்தி தொலைக்காட்சியில் பேசிய பா.ஜ.க மாநிலச் செயலாளர் வெளிப்படையாகக் குலக்கல்வி முறையையும், சாதியத்தையும் ஆதரித்துப் பேசினார். எவன் கண்டு கொள்கிறான்?

    சமூக விழிப்புணர்வுப் பதிவுகளும் நீங்கள் எழுத வேண்டும் என்று என் போன்றோர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்படிப்பட்ட நறுக் சுருக் பதிவுகளையும் நீங்கள் எழுத முன்வந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி! இதுவரை தமிழறிஞர்களின் மடலாடல் குழுக்களில் மட்டுமே இருந்த ஒரு தகவலைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததற்கு மீண்டும் நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் விரிவான நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  14. நல்லதொரு பகிர்வு.

    சாதிகள் இல்லை என்று சொன்னாலும், சாதிப் பெயராலேயே அரசியல் நடத்தும் காலம் இது. எத்தனை சொன்னாலும் திருந்தப் போவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அக்ருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  15. உலகில் முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி தமிழ் என்ற செய்தி மிக்க உவகை தருகிறது.தமிழனின் புகழைத் தரணியெங்கும் பரப்புவோம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை