• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, அக்டோபர் 07, 2016

  உலகின் மிகப் பெரிய ஆலமரம்


  உலகின் மிகப் பெரிய ஆலமரம்
  லமரத்துக்கு ஆங்கிலத்தில் 'பானியன்' என்று பெயர். முன்னொரு காலத்தில் 'பனியர்' என்ற இந்து வியாபாரிகள் சிலர் பாரசீக வளைகுடாவில் 'பர்தர் அப்பாஸ்' என்ற துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஆலமரத்தின் அடியில் கோவில் கட்டி வழிபட்டு வந்தார்கள். இதனால் ஆலமரத்திற்கு அந்த பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.


  கொல்கத்தா ஹவுராவில் உள்ள ஆச்சார்ய ஜெகதீஷ் சந்திரா போஸ் தாவரவியல் தோட்டத்தில் இருக்கும் ஆலமரம் தான் மிகப் பெரியது. 1782-ல் ஓர் ஈச்ச மரத்தின் மேல் விழுந்த விதையில் இருந்து இந்த மரம் முளைத்துள்ளது. பிறகு அது வளர்ந்து பிரமாண்டமான மரமாக வடிவம் எடுத்தது. 


  இதன் குறுக்களவு கிழக்கு மேற்காக 91 மீட்டர், அதாவது சுமார் 300 அடி நீளம் கொண்டது. வடக்கு தெற்காக 87 மீட்டர். அதாவது 285 அடி அகலம் கொண்டது. மேலே உள்ள தலைப் பகுதியின் சுற்றளவு 285 மீட்டர் ஆகும். அதாவது 935 அடி. வேரூன்றிய விழுதுகள் மட்டும் 2,880, மரம் அமைந்திருக்கும் மொத்த நிலப்பரப்பு 4 ஏக்கர். அதாவது 18,918 சதுர மீட்டர் பரப்பளவில் பிரமாண்டமாக வளர்ந்திருக்கிறது. மரத்தின் உயரம் 25 மீட்டர். இந்த மரம் 1864 மற்றும் 1867 ஆகிய இரண்டு ஆண்டுகளில் வீசிய கொடூர புயல்களையும் தங்கி நின்றது. இந்த மரத்தின் கீழ் 7 ஆயிரம் பேர் தாராளமாக அமர்ந்து இளைப்பாறலாம்.


  தற்போது கின்னஸ் ரிக்கார்ட் ஏற்படுத்தி உலகில் மிகப் பெரிய ஆலமரமாக இருப்பது ஆந்திர மாநிலத்தின் ஆனந்தபூர் மாவட்டத்தில் கதிரி என்ற நகரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள ஆலமரம்தான். இதற்கு 'திம்மம்மா மாரிமானு' என்று பெயர். தெலுங்கு மொழியில் 'மாரி' என்பது 'ஆல' என்பதையும், 'மானு' என்பது மரத்தையும் குறிக்கிறது. இந்த மரம் 7 ஏக்கர் பரப்பளவில் விழுதுகள் பரப்பி உலகின் மிகப் பெரிய மரமாக இன்று திகழ்கிறது.

  இந்த மரத்திற்கு முன்பு மகரஷ்டிரவிலுள்ள சதாரா மாவட்டத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அது கிழக்கு மேற்கில் 134 மீட்டராகவும், வடக்கு தெற்கில் 180 மீட்டராகவும் இருந்தது. இதன் மேல் பகுதி சுற்றளவு 481 மீட்டர் இருந்தது. இப்போது உலகின் மிகப் பெரிய மரமாக இருக்கும் கொல்கத்தா மரத்தைவிட அளவில் பெரியது. ஆனால், ஒரு புயல் தாக்கியதில் மரம் பெரும் சேதம் அடைந்தது. தற்போது அந்த மரம் உயிர்ப்போடு இல்லாததால் இரண்டாம் இடத்தில் இருந்த இந்த மரம் முதலிடத்தை பிடித்துக் கொண்டது. 

  பொதுவாக ஆலமரம் 30 மீட்டர் உயரம் வரை வளரும். கிளையில் இருந்து விழுதுகள் எனும் ஒட்டு வேர்கள் உண்டாகும். இவை மேலிருந்து கீழாக நீண்டு வளரும். அவை நிலத்தை தொட்டதும், நிலத்துள் ஊடுருவிச் சென்று சாதாரண வேர்களைப் போலவே நீர் முதலிய உணவுப் பொருள்களை உறிஞ்சி வளர்ந்து கொண்டே செல்லும். ஒரு ஆலமரத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழுதுகள் இருப்பதுண்டு.

  கட்டடத்தின் மீது விதை விழுந்து முளைத்த ஆலமரம்
  ஆலமரம் அத்தி, மல்பெர்ரி ஆகிய மரங்களின் இனத்தைச் சேர்ந்தது. இது பனை போன்று வேறு இன மரங்களின் மீதோ அல்லது கட்டடங்கள் மீதோ விதை விழுந்து முளைக்கும். இதனால் கட்டிடமே இடிந்து விழும் நிலையும் ஏற்படும். இப்படி முளைக்கும் ஆலங்கன்றின் வேர்கள் அவை வளர்ந்த மரத்தைப் பற்றிக் கொண்டு பூமியை நோக்கி வேர்விடும். வேர் நிலத்தில் ஊன்றியவுடன் நன்கு வளர ஆரம்பிக்கும். அது வளர வளர ஆதாரச் செடி பட்டுப் போய் விழுதுகள் வலுப்படும். மரமும் பிரமாண்டமாய் வளரும்.

  சென்னை அடையாறு ஆலமரம்
  இந்தியாவின் தேசிய மரமாக ஆலமரம் உள்ளது. சென்னை அடையாறில் 450 வருடங்களை கடந்த மிகப் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. இது உலகின் மிகப் பெரிய ஆலமரம் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

  பொதுவாகவே ஆலமரம் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலைகள் சளித் தொந்தரவை நீக்கக்கூடியது. பட்டைகள் உடலுக்குள் உருவாகும் புண் போன்ற காயங்களை சரியாக்கக்கூடியது. ஆலமரத்தில் இருந்து வழியும் பால் வாய்ப்புண்ணை குணமாக்கக் கூடியது. ஆலமரத்தின் பட்டைகள் ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும். விந்துவை கெட்டிப்படுத்தும். 

  இத்தகைய மருத்துவ குணங்கள் இருப்பதால் பல கோயில்களில் ஸ்தல விருட்சமாகவும் ஆலமரங்கள் உள்ளன. 
  22 கருத்துகள்:

  1. இந்த மெகா ஆலமரம் ஏனோ இன்னும் தமிழ் படம் எதிலும் தலை காட்டவில்லை :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நீங்கள் ஒரு படம் எடுத்து காட்டிவிடுங்கள் ஜி!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. பிரமிப்பான தகவல் நண்பரே...
   மரமே தனி காடுபோல் உள்ளதே ?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அதுதான் பிரம்மாண்டமே!
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  3. நான் இந்த இடத்திற்குச் சென்று மரத்தினைப் பார்த்திருக்கிறேன். அப்பாடி..... எத்தனை எத்தனை விழுதுகள். அதன் கீழே என்னவொரு நிழல்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்னும் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி வெங்கட்!

    நீக்கு
  4. ஆலம் விழுகள் போல ஆயிரமாயிரம் தகவல்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

   படிக்கப்படிக்க மிகவும் வியப்பான செய்திகளாக உள்ளன.

   பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  5. சகோ நல்ல தகவல். இந்த ஆலமரத்தைப் பற்றி அறிந்திருந்தாலும் நேரில் கண்டதில்லை. ஆனால் அடையார் ஆலமரத்தைக் குறித்துப் படங்களுடன் எழுதி வைத்துள்ளேன். சமீபத்தில். அதைத் தங்கள் சுற்றுலா இதழிற்கு அனுப்பலாமோ என்று தனியாக வைத்துள்ளேன். அருமையான இடம்...ஏனோ யாரும் அவ்வளவாகக் கண்டு கொள்வதில்லை. ஆனால் இதையும் உலகிலேயே பெரிய மரம் என்று சொல்கின்றார்கள். மிக்க நன்றி சகோ.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அடையாறு ஆலமரம் அநேகமாக இரண்டாவது பெரிய மரம் என்று நினைக்கிறேன். இந்த மரம் பிரபலமடையாதற்கு அது இருக்கும் இடமும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த இடம் கிருஸ்துவ இறையியலுக்கு சொந்தமானதாக இருக்கிறது. போதாதக்குறைக்கு ஆவிகள் நடமாட்டம் வேறு இங்கிருப்பதாக கதைகள் உண்டு. அதனாலே இந்த இடத்திற்கு செல்ல மக்கள் தயங்குகிறார்கள்.
    தங்கள் வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  6. ஆல மரத்தைப் பற்றி ஆழமான அருமையான செய்திகள், புகைப்படங்கள். நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா!

    நீக்கு
  7. ஆல மரம்..பற்றிய தகவல் அருமை நண்பரே....பாலங்களில் மேல் வளருவதும் ஆல மரங்கள் தானா..? நண்பரே...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பாலங்களில் வளரும் மரங்களில் 90 சதவீதம் ஆலமரங்களே, வெகு அபூர்வமாகவே வேம்பும், மற்ற சில மரங்களும் வளரும்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  8. அருமையான தகவல்...
   பகிர்வுக்கு நன்றி செந்தில் சார்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்!

    நீக்கு
  9. உலகின் மிகப் பெரிய ஆலமரம் பற்றியறிந்தேன். படத்திலேயே பிருமாண்டமாக உள்ளது நேரில் பார்த்தால் எப்படியிருக்கும்? அடையாறு ஆலமரம் காற்றிலி விழுந்துவிட்டதாகவும், கிரேன் மூலம் தூக்கி நிறுத்தியும் பிழைக்கவில்லை என்று சில ஆண்டுகளுக்கு முன் செய்தி படித்தேன். அது உண்மையில்லையா? Thesophical society உள்ளே அந்த மரம் இன்னும் உயிருடன் இருக்கின்றதா? தகவல் அறிய ஆவல். பகிர்வுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  10. கல்கத்தா ஆலமரத்தின் புகைப்படங்களை இச்சுட்டியில் காணலாம்:
   https://goo.gl/photos/SMuZpLrvFQJKN6Ly9

   - ஞானசேகர்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நண்பர் ஞானசேகருக்கு நன்றி! இணைப்பை வழங்கியதற்கு..!

    நீக்கு
  11. 1989-ல் வந்த புயலால் மரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. பின் அதையும் தாங்கி நின்றுவிட்டது. இப்போதும் இருக்கிறது.
   வருகைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்