• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, அக்டோபர் 08, 2016

  5 லட்சம் ஹிட்ஸ்..!  'கூட்டாஞ்சோறு'

  வலைப்பதிவு ஆரம்பித்து இன்றோடு ஒர் ஆண்டு 11 மாதங்கள் முடிந்து விட்டன. இரண்டாம் பிறந்தநாள் கொண்டாட இன்னும் ஒரு மாதம் பாக்கியிருக்கிறது. அதற்குள் தங்களின் பேராதரவோடு 5 லட்சம் பார்வைகளை கடந்திருக்கிறது. 

  இன்று அதாவது 08-10-2016 மாலை 3 மணி 45 நிமிட நேரத்தில் வலைத்தள பார்வைகள் 5,00,550 கடந்திருக்கிறது. சரியாக 700 நாட்கள் - 100 - வாரங்கள் - 16,800 மணிகள்10.08.000 நிமிடங்கள் - 6,01,80,000 வினாடிகள் ஆகின்றன. 

  அதன்படி சராசரியாக

  ஒரு மாதத்திற்கு 
  21,763 
  பார்வைகள்,

  ஒரு வாரத்திற்கு 
  5,005 
  பார்வைகள்,

  ஒரு நாளைக்கு 
  715 
  பாரவைகள்,

  ஒரு மணி நேரத்தில் 
  30 
  பார்வைகள் 

  பெற்றிருக்கிறது.  அதிக பார்வைகள் பெற்ற மாதங்கள் 
   டாப் 5 மாதங்கள்

  (1)
  2016 - ஏப்ரல்
  53,998
  பார்வைகள் 

  (2)
  2016 - செப்டம்பர்
  51,132
  பார்வைகள் 

  (3)
  2016 - மே
  34,582
  பார்வைகள் 

  (4)
  2016 - ஆகஸ்ட் 
  33,336
  பார்வைகள் 

  (5)
  2015 - ஏப்ரல்
  32,562
  பார்வைகள் 

  * * * * * * * *

  இதுவரை 
  329 
  பதிவுகள் 
  வெளியாகியுள்ளன.

  சராசரியாக 
  ஒரு பதிவு 
  1,521
  பார்வைகள்
  பெற்றுள்ளன.

  * * * * *


  அதிக பார்வை பெற்ற பதிவுகள் 
  டாப் 5 பதிவுகள்

  (1).
  http://senthilmsp.blogspot.com/2015/04/blog-post_18.html
  25,769
  பார்வைகள் 
  கூட்டாஞ்சோறில் இதுவரை வெளியான 329 பதிவுகளில் மிக அதிகமாக அதாவது 25,769 பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பது இந்தப் பதிவுதான். இது வெளியான அன்றே 15,000-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
  * * *


  (2)
  http://senthilmsp.blogspot.com/2016/08/blog-post_17.html
  6,507
  பார்வைகள்
  பதிவிட்ட ஒரு மாதத்துக்குள் 6,507 பார்வைகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்த பதிவு. மனிதர்களுக்கு பிரமாண்டங்களின் மீது மிகப் பெரிய ஆர்வம் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்த பதிவு.
  * * *


  (3)
  http://senthilmsp.blogspot.com/2016/04/blog-post_97.html
  6,464
  பார்வைகள் 
  மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் தேசியளவில் செய்த சாதனைப் பற்றிய பதிவு. புதுமைகளும் கண்டுபிடிப்புகளுக்கும் மக்களின் ஆதரவு என்றும் இருக்கும் என்பதை நிரூபணம் செய்த பதிவு.
  * * *

  (4)
  http://senthilmsp.blogspot.com/2016/04/blog-post_3.html
  6,249
  பார்வைகள்
  பாலியல் சம்பந்தமான பதிவுகள் எப்போதும் மக்களின் பேராதரவை பெரும் என்பதில் சந்தேகமில்லை. அதை நிரூபணம் செய்த பதிவு இது.
  * * *

  (5)
  http://senthilmsp.blogspot.com/2016/05/blog-post_3.html
  6,097
  பார்வைகள்
  ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலியல் வேறுபாடுகள் எப்போதுமே உலக அளவில் ஹிட் அடிக்கக்கூடியது. அதனால்தான் இங்கேயும் ஹிட் அடித்திருக்கிறது.

  * * * * * 

  முதன்மை என்று ஒன்றிருந்தால் கடைசி என்று ஒன்றும் இருக்குமல்லவா. அப்படி 200-க்கும் குறைவான பார்வைகளைப் பெற்று கடைசி ஐந்து இடங்களில் இருக்கும் பதிவுகள் இங்கே..

  லீஸ்ட் 5 பதிவுகள்

  (1)
  http://senthilmsp.blogspot.com/2014/12/blog-post_3.html
  153
  பார்வைகள்
  கூட்டாஞ்சோறு வலைப்பூவில் மிகக் குறைவான பார்வைகளைப் பெற்ற பதிவு இதுதான். வெறும் 153 பேர் மட்டுமே இதனை படித்திருக்கிறார்கள். சிவபெருமான் மதுரையில் புரிந்த திருவிளையாடல் பற்றிய பதிவு இது. ஆரம்பகால பதிவு என்பதும் ஒரு காரணம்.
  * * *

  (2)
  http://senthilmsp.blogspot.com/2014/11/blog-post_21.html
  166
  பார்வைகள்
  இந்தப் பதிவும் தொடக்க காலத்தில் பதிவிட்டதுதான். அப்போது தமிழ்மணத்தில் கூட்டாஞ்சோறு பதிவுகள் இணைக்கப்படவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
  * * *

  (3)
  http://senthilmsp.blogspot.com/2014/12/blog-post.html
  174
  பார்வைகள்
  சித்தர் வடிவில் சிவபெருமான் நிகழ்த்திய இந்த திருவிளையாடல் தொடராக வெளிவந்த போது பெரும் வரவேற்பு பெற்றது. அதுவே பதிவாக வந்தபோது கண்டுகொள்ளப் படவில்லை.
  * * *

  (4)
  http://senthilmsp.blogspot.com/2015/01/blog-post_26.html
  186
  பார்வைகள்
  மும்பைக்கு அருகே நடைபெறும் இந்த திருவிழா பற்றிய பதிவுக்கு குறைவான பார்வையே கிட்டியது.
  * * *

  (5)
  http://senthilmsp.blogspot.com/2015/01/blog-post_81.html
  200
  பார்வைகள்
  கடற்கரை நகரமான விசாகப்பட்டணம் பற்றிய ஒரு சிறிய பதிவு. ஆனாலும் அதிகமானவர்களை சென்று சேரவில்லை.

  * * * * *

  பதிவுகளை தொடர்ந்து எழுதுவதற்கு பதிவர்கள் அளிக்கும் உற்சாகமூட்டும் பின்னுட்டங்களும் கருத்துக்களும் மிக முக்கியமான காரணம். இதுவரை 7,622 கருத்துக்கள் கூட்டாஞ்சோறுக்கு வந்திருக்கின்றன. ஒரு பதிவுக்கு சராசரியாக 23 கருத்துக்கள். இதில் அதிக கருத்துக்களை பெற்ற முதல் ஐந்து பதிவுகள் இங்கே.

  டாப் 5 கருத்துக்கள்

  (1)
  http://senthilmsp.blogspot.com/2015/09/blog-post_28.html
  82 
  கருத்துக்கள் 
  கடந்த ஆண்டு நமது வலைப்பதிவர் சந்திப்பை ஒட்டி நடத்தப்பட்ட மின் இலக்கிய போட்டியில் சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைப் போட்டியில் 'இருட்டு நல்லது' என்ற இந்த கட்டுரை முதல் பரிசுப் பெற்றது. நமது வலைப்பதிவர்களின் வாழ்த்துக்களால் இந்த பதிவு கருத்துரையில் முதலிடம் பிடித்தது.
  * * *

  (2)
  http://senthilmsp.blogspot.com/2015/04/blog-post_18.html
  74
  கருத்துக்கள்
  பெண்ணுறுப்பு சிதைவு என்ற இந்த கொடூர சடங்கை ஒழிக்க வேண்டும் என்று உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னும் பல நாடுகள் இதை தடை செய்யாமல் சடங்கு என்ற போர்வையில் பெண்களை சீரழித்துக் கொண்டிருக்கிறது. பதறச்செய்யும் இந்த பதிவுக்கு அதிகமான கருத்துரைகள் வந்திருக்கின்றன.
  * * *

  (3)
  http://senthilmsp.blogspot.com/2015/06/blog-post_7.html
  60
  கருத்துக்கள்
  இன்றைய விஸ்வரூப மக்கள்தொகை பெருக்கம் எந்தவிதமான பாதிப்பை எதிர்காலத்தில் உருவாக்கும் என்பது குறித்து விரிவாக பேசும் பதிவு இது. இதற்கும் ஏராளமான கருத்துக்கள் எழுதியிருந்தனர்.
  * * *

  (4)
  http://senthilmsp.blogspot.com/2015/11/blog-post.html
  56
  கருத்துக்கள்
  புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் திருவிழா பற்றி எழுதிய இந்த பதிவும் ஏகப்பட்ட பதிவர்களின் கருத்தை தாங்கி வந்திருந்தது.
  * * *

  (5)
  http://senthilmsp.blogspot.com/2016/01/blog-post_13.html
  54
  கருத்துக்கள்
  ராஜ நாகம் பற்றி பல கட்டுக்கதைகள் உண்டு. அதற்கெல்லாம் விடை தரும் விதமாக அமைந்தது இந்தப் பதிவு பதிவர்களின் கருத்துறைகளில் ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறது. 

  * * * * *


  உலகம் முழுவதும் ஏராளமான பார்வையாளர்களை பெற்றிருந்தாலும் அதில் முன்னணியில் இருக்கும் ஐந்து நாடுகள்.

  டாப் 5 நாடுகள்

  (1)
  இந்தியா
  2,92,096

  (2)
  அமெரிக்கா
  56,751

  (3)
  ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
  18,294

  (4)
  சிங்கப்பூர்
  15,905

  (5)
  கனடா
  10,332

  * * * * *

  நமது பதிவுகளை பதிவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது இந்த உலாவிகளும் இயக்க முறைமைகளும் தான். இவைகள் இல்லையென்றால் சிகரம் தொட முடியாது. அந்த தொழில்நுட்பத்தில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் நுட்பங்கள். 

  டாப் 5 உலாவிகள்

  (1)  
  குரோம்
  3,10,936 (62%)


  (2)  
  ஃபயர் ஃபாக்ஸ்
  74,927 (15%)


  (3) 
  யுசி ப்ரவுஸர்
  27,864 (5%)


  (4) 
  சஃபாரி
  20,673 (4%)


  (5) 
  மொபைல் சஃபாரி
  17,207 (3%)

  * * * * *

  டாப் 5 இயக்க முறைமைகள்

  (1) 
  விண்டோஸ்
  2,55,388 (52%)


  (2) 
  ஆண்ட்ராய்ட்
  1,74,077 (36%)


  (3) 
  ஐஃபோன்
  16,766 (3%)


  (4) 
  மெக்கிண்டோஷ்
  11,425 (2%)


  (5) 
  ஐபாட்
  11,151 (2%)

  * * * * *

  எத்தனை தொழில்நுட்பங்கள் நமது பதிவை பதிவர்களிடம் கொண்டு சேர்த்தாலும் பதிவர்களான தங்கள் அனைவரின் பேராதரவும் ஒத்துழைப்பும் இல்லாமல் எந்தவொரு இலக்கையும் எட்ட முடியாது. 5 லட்சம் என்ற பெரும் எண்ணிக்கையை குறுகிய காலத்தில் எனது வலைத்தளத்துக்கு தந்து பெருமை சேர்த்த வலையுலகின் பதிவர்கள் அனைவருக்கும்


  கோடான கோடி நன்றிகள்..!
  42 கருத்துகள்:

  1. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மாபெரும் சாதனைக்கும், அதனை இங்கு எடுத்துக்கூறியுள்ள தங்களின் தனித்திறமைக்கும் என் பாராட்டுகள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை என்று தங்களை போன்ற மூத்த பதிவர்கள் குறிப்பிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நம் பதிவர்களின் தொடர் ஆதரவே இந்த உயரத்தை எட்ட உதவியது. பின்னூட்டங்களின் வழியாக தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா!

    நீக்கு
  2. பதில்கள்
   1. மனம் நிறைந்த வாழ்த்துகள் நண்பரே மேலும் சிகரம் தொட அட்வான்ஸ் வாழ்த்துகளும்...
    த.ம.2

    நீக்கு
   2. எனது பதிவுகள் அனைத்துக்கும் தவறாது வருகைதந்து கருத்திட்டு வாக்களித்து வரும் நண்பர் கில்லர்ஜிக்கு கோடான கோடி நன்றிகள்!

    நீக்கு
  3. வாழ்த்துக்கள் உங்களது அயராது உழைப்பு
   என்றும் வீன் போகாது

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் கோடான கோடி நன்றிகள் நண்பரே!

    நீக்கு
  4. பதில்கள்
   1. பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொண்டிருக்கும் போதும் கூட தவறாமல் பதிவுகளுக்கு வருகை தந்து கருத்து தெரிவிக்கும் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் வெங்கட்ஜி!

    நீக்கு
  5. நண்பருக்கு முதலில் வாழ்த்துகள் (கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு என்றாலும்) திறமை எங்கிருந்தாலும் வாழ்த்தணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்கல்ல..?
   உங்களின் அபார வலைவளர்ச்சிக்கான காரணங்கள் ஐந்து (நீங்க மட்டும்தான் 5,5ஆ போடுவீங்களா?)
   (1) உங்களின் எளிய -சிக்கலில்லாத- அழகுத்தமிழ் நடை
   (2)எடுத்துக் கொள்ளும் வித்தியாசமான விடயங்கள்
   (3)அதற்கான உங்களின் கடும் உழைப்பு
   (4)மிகப் பொருத்தமான தலைப்பு-படங்கள் தேர்வுசெய்தல்
   (5)பகுத்தறிவுக்கு ஒவ்வாத,சாதிமதம் சார்ந்த பதிவுகளை எழுதாமை
   இவைமட்டுமன்றி அசராத உங்கள் தொடர் பதிவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
   என்றாலும், பலப்பல வகைவகையான தகவல் களஞ்சியமாக விளங்கும் தங்களின் தொடர் படிப்பே இதன் அடிப்படை என்பதற்காகவும், பரபரப்பான திரைப்பட ஊடகச் செய்திகளை நீங்கள் எழுதியதே இல்லை என்பதற்காகவும் சேர்த்தே பாராட்டுகிறேன். என்றாலும், இந்தியா-தமிழகத்தைப் பாதிக்கும் எரியும் பிரச்சினைகள் எதுபற்றியும் உடனடியாகத் தங்கள் கருத்தைத் தெரிவிக்காமல், உங்கள் சார்புத்தன்மையைக் காட்டிக் கொள்ளாதிருத்தல் ஒன்றே எனக்கு உங்களின் பதிவுகள் மீது வருத்தம் தருவதாக இருந்தாலும், அது ஒன்றும் பெரிய பிழையன்று. காலப்போக்கில் நல்லவற்றைப் பாராட்டும் தங்களைப் போன்றோர், முன்வந்து தவறுகளைச் சுட்டி நல்வழிகாட்டுவீர்கள் எனும் நம்பிக்கையும் எனக்குண்டு. தங்களின் பதிவுகள் இளைய பதிவர்களுக்குப் பாடக்குறிப்பாக அமையும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. தங்கள் எழுத்துப் பணிகள் தொடரவேண்டும் என வாழ்த்துகிறேன்.வணக்கம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மறந்துவிட்டேன், மன்னிக்கவும். த.ம.எங்கே? (அதிகப் பார்வை பட்டதைப் போலக் குறைந்த பார்வை கண்டதையும் எழுதிய தங்கள் பண்பும் ஒருவகைப் பெருமைதான்) தமிழ்மணத்தை மீட்டுத்தருக! வாக்களிக்க இயலவில்லை

    நீக்கு
   2. முத்துநிலவன் ஸார்.. நிறைய தளங்களில் முதலிலேயே தம வாக்களித்து விட்டு, பின்னரே பின்னூட்டம் இடவேண்டும். இல்லாவிட்டால், வாக்குப்பட்டை காணாமல் போய்விடும்! இல்லாவிட்டால் மறுபடியும் தளத்தைப் புதிதாகத் திறந்து வரவேண்டும்!

    நீக்கு
   3. நன்றி ஸ்ரீராம் அய்யா. வாக்களித்து விட்டேன் (ஒவ்வொன்னாக் கத்துக்கறதுக்கு ஒரு வாழ்க்கை போதாது போல..கல்வி கரையிலங்கறது சரிதான்)அனேகமாக உங்களின் பத்துலட்சமாவது பார்வை பற்றிய பதிவில் அதிகப் பின்னூட்டம் பெற்று முதலிடத்தில் இருப்பதாக இந்தப் பதிவே இருக்கப் போகிறது நண்பர் செந்தில்குமார் அவர்களே! மீண்டும் என் வாழ்த்தும், வணக்கமும்.

    நீக்கு
   4. முதலில் தங்கள் வருகைக்கும் திறனாய்வு பின்னூட்டத்திற்கும் நன்றி அய்யா! என் பதிவுகளை பற்றி நானே அறியாத பல சங்கதிகளையும் எனக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி அய்யா! ஐந்து ஐந்தாக என்ன, எந்த எண்ணிலும் கருத்து சொல்லக்கூடிய பன்முக வித்தகர் அய்யா தாங்கள்! எனது வித்தியாசமான பதிவுகள் எதுவாக இருந்தாலும் அதற்கு வருகை தந்து முத்தாய்ப்பாக தங்கள் கருத்துக்களை அளிப்பது எனக்கு எப்போதும் பிடிக்கும். அதற்காகவே தங்கள் கருத்துரையை எதிர்பார்த்திருப்பேன்.

    இந்தியா, தமிழகம் முழுவதும் பற்றி எரியும் பிரச்சனைகளை எழுதுவதில்லை என்பதே தங்களின் வருத்தமாக தெரிவித்திருந்தீர்கள். அதற்கு காரணமும் இருக்கிறது. அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் எனது பதிவுகள் பெரும்பாலும் ஏற்கனவே எழுதி வைத்தவைதான். அதனால்தான் நமது சக பதிவர்களின் பதிவுகளை படித்தபோதும் பின்னூட்டம் இடமுடிவதில்லை. அப்போதைய பிரச்சனைகளை நான் எழுத முயற்சிக்கும்போது அந்த பிரச்சனையின் வீரியம் குறைந்திருக்கும். மேலும் இன்றைய வலைப்பதிவுகளில் பாதிக்கு மேல் அன்றைய பிரச்சனைகளை அலசும் வலைபூக்களாகவே இருக்கின்றன. பல்வேறு கோணங்களில் அவர்கள் எழுதுகிறார்கள். அதைவிட நாம் ஒன்றும் பெரிதாக எழுதிவிடப்போவதில்லை என்பதும் ஒரு காரணம்.

    அதுமட்டுமல்ல எனது பதிவுகளில் 90 சதவீதம் நான் ஏற்கனவே எழுதி பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளே.அதுவும் ஒரு காரணம். இத்தனை பாதகங்கள் இருந்தாலும் சென்னை வெள்ளத்தின்போது நீர்வழிச்சாலை என்று ஒரு தொடர் பதிவே எழுதினேன். தற்போதைய காவிரி பிரச்சனை குறித்தும் எழுதினேன். முடிந்தவரை எழுதுகிறேன். இருந்தாலும் தங்களின் ஆலோசனைக்கும் வழிகாட்டுதலுக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
   5. இப்போது தமிழ்மணத்தில் வாக்களிப்பது மிக சிரமமான காரியமாக இருக்கிறது. நண்பர் ஸ்ரீராம் கூறியதுபோல்தான் வாக்களிக்க வேண்டியிருக்கிறது. அந்தமுறையை தெரிந்துகொண்டு மீண்டும் வருகை தந்து வாக்களித்த தங்களுக்கும் அறிவுரை தந்த ஸ்ரீராமுக்கும் நன்றிகள். பத்து லட்சம் பார்வைக்கும் இப்போதே அட்சரம் தந்துவிட்டு வாழ்த்திய தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா!

    நீக்கு
   6. பொறுப்பான பதில் நண்பர் செந்தில்குமார் அவர்களே! இந்தப் பொறுப்பு உங்கள் எழுத்திலும் தெரிவதுதான் இந்தச் சாதனையின் அடிப்படை. தினமும் ஏதாவது எழுதினோம் என்றில்லாமல், தினமும் புதிய புதிய செய்திகள் அது என்றோ எழுதியதாக இருப்பினும் இன்றும் பொருந்துமாறுள்ளது என்பது அதன் தேவையின் காரணம் அப்படித் தேர்வுசெய்யும் தங்கள் மதிநுட்பம். தொடரட்டும் வெற்றிப்பயணம்.

    நீக்கு
   7. தங்களின் மீள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  6. வாழ்த்துக்கள் சார்....
   தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கோடான கோடி நன்றிகள் குமார்!

    நீக்கு
  7. மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கோடான கோடி நன்றிகள் மதுரைத் தமிழரே !

    நீக்கு
  8. வாழ்த்துகள். அசுர சாதனை. மென்மேலும் உயர வாழ்த்துகள்.

   வழக்கம் போல தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எனது பதிவுகள் அனைத்துக்கும் தவறாது வருகை தந்து, பின்னூட்டமிட்டு, வாக்களித்து, தொடர் ஆதரவு தந்து கொண்டிருக்கும் நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்!

    நீக்கு
  9. மனம் நிறை வாழ்த்துகள் நண்பரே!

   உங்களின் எழுத்தாற்றலின் ரசிகன் நான்.

   மென்மேலும் உயரங்களைத் தொடவேண்டும் .

   த ம

   நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மனம்நிறைந்த கருத்துக்கும் கோடான கோடி நன்றிகள் நண்பரே!

    நீக்கு
  10. பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் கோடான கோடி நன்றிகள் நண்பரே!

    நீக்கு
  11. தங்கள் படைப்பாற்றல் தரமானது
   தாழ்ந்த பார்வை எண்ணிக்கை
   உயர்ந்த பார்வை எண்ணிக்கை
   வேறுபாடின்றி வெளியிட்டது போல
   தங்கள் பதிவில் காணப்படும்
   உண்மைத் தன்மை
   வாசகர் நம்பிக்கை வைக்க
   சான்றானதால் தான்
   தங்கள் தளத்திற்கான
   பார்வை எண்ணிக்கை அதிகம் என்பேன்!
   தங்கள் வெற்றியை
   வலைப்பதிவர்கள் வழிகாட்டலாக ஏற்று
   முன்னேற வாழ்த்துகிறேன்.
   தங்களது
   உண்மை நிறைந்த வெளியீடும்
   நம்பிக்கை தரும் பதிவுகளும்
   மேலும் பல வெற்றிகளைக் குவிக்க உதவும்...
   தங்களது
   கடின உழைப்பைப் பாராட்டுவதோடு
   தங்களது முயற்சிகள் யாவும்
   வெற்றி பெற வாழ்த்துகிறேன்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் கோடான கோடி நன்றிகள் நண்பரே!

    நீக்கு
  12. முதலில் மனமார்ந்த வாழ்த்துகள்! அபார சாதனை எனலாம். தங்களின் பதிவுகள் இத்தனைப் பார்வையாளர்களைப் பெற்றிருப்பதில் வியப்பே இல்லை ஏனென்றால் அத்தனைப் பதிவுகளும் தரமான பதிவுகள்! எத்தனை தகவல்கள், எத்தனை கட்டுரைகள். தங்கள் பதிவுகள் இத்தனைப்பேரை அடைந்துள்ளது குறித்துமிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்களும் தங்கள் பதிவுகளை ஆர்வத்துடன் விரும்பி வாசிப்பவர்கள்.

   மேன்மேலும் பல சாதனைகள் புரிந்து வலையுலகில் எழுத்துலகில் உயர்ந்திட எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுகள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் கோடான கோடி நன்றிகள் நண்பர்களே!

    நீக்கு
  13. எழுத்துலகில் சிகரத்தை தொட வாழ்த்துகள் நண்பரே...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே !

    நீக்கு
  14. குறுகிய காலத்தில் இமாலயச் சாதனை! இன்னும் பல சிகரங்களை நீங்கள் தொடவேண்டும் செந்தில்! வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் கோடான கோடி நன்றிகள் !

    நீக்கு
  15. கடந்து வந்த பாதையை ,பிரித்து மேய்ந்து விட்டீர்கள் !
   சிதைவு பதிவில் வந்த படங்கள் மறக்கவே முடியாதவை ,அதிலும் ..அந்த பிளேட் ,இன்னும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது !
   ஒயினுக்கு ஏன் பார்வைகள் கிடைக்கவில்லை என்று புரியவில்லை !கண்ணுக்கு குளிர்ச்சியாய் படம் போட்டும் :)
   தங்களின் அபார வளர்ச்சி ,த ம முதல்வனான என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறது !
   மேலும் வளர் வாழ்த்துகள் !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஒயினுக்கு பார்வைகள் கிடைக்காததற்கு ஆரம்பகால பதிவு என்பது மட்டுமே காரணம்.
    தினந்தோறும் பதிவு. அனைத்து பதிவுகளும் வாசகர் பரிந்துரையில் வந்துவிடுகிறது. என்பதால் தங்களை நெருங்கக்கூட முடியாது. எனக்கு வாக்குகள் மிகக் குறைவாகவே வருகிறது. மேலும் வாக்குகள் அளிப்பதிலும் சிரமம் இருக்கிறது.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் கோடான கோடி நன்றிகள்!

    நீக்கு
  16. நம்பவே முடியவில்லை நண்பரே! உண்மையிலேயே மலைக்கச் செய்யும் சாதனை இது! இரண்டு ஆண்டுகள் முடியும் முன்னே ஐந்து இலட்சம் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத எண்ணிக்கை! என் உள்ளம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

   வெற்றிகரமாக வலைப்பூ நடத்துவது எப்படி என ஒரு மாதத்துக்கும் மேலாக இணையம் முழுவதும் அலசி ஆராய்ந்து படித்து விட்டு அதன் பின் வலைப்பூத் தொடங்கியவன் நான். நான் படித்த வரை, நம் வலைப்பூவுக்கு ஆட்களை வரவழைக்க எத்தனையோ தொழில்நுட்பங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் விட முதன்மையானது நாம் எழுதும் பதிவுதான் என்பார்கள். 'Content is King' என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதை நீங்கள் சிறப்புற உறுதிப்படுத்தி விட்டீர்கள். தவிரவும், மேலே நம் முத்துநிலவன் ஐயா கூறியிருக்கும் அத்தனையும் உண்மையே! எளிய நடை, தெரியாத விதயங்கள் என எழுதுவதோடு தொடர்ந்தும் பதிவுகள் இடுகிறீர்கள். இவையே உங்கள் வெற்றிக்குக் காரணம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. தொடரட்டும் உங்கள் சாதனைகள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும், உளமார்ந்த பாராட்டுக்கும் கோடான கோடி நன்றிகள் நண்பரே!

    நீக்கு
  17. தங்கள் வலைப்பதிவு 5 இலட்சம் பார்வைகளைக் கடந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துகள்! இதுபோன்று இன்னும் பல நல்ல அரிய தகவல்களைத் தொடர்ந்து இவ்வலைப்பதிவில் பகிர வேண்டுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்!!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எழுதுகிறேன் நண்பரே!
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்