Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

காதலைச் சொல்ல தயக்கமா..! - 2


முந்தைய பதிவை படிக்காதவர்கள் இங்கே கிளிக் செய்து படிக்கவும்..



அந்தச் சம்பவம் இதுதான்.

விஜய்யும், அனாமிகாவும் காதலர்கள். உயிருக்குயிராய் காதலித்த இவர்களுக்குள் பிரிவு. வழக்கம்போல் காதலிதான் பின்வாங்கினாள். இத்தனைக்கும் அனாமிகா வசதியற்ற சாதாரண குடும்பத்துப் பெண். விஜய்யோ பத்து தலைமுறைக்கு படுத்துச் சாப்பிட்டாலும் கரையாத சொத்துக்கு சொந்தக்காரன்.


அனாமிகா மீதான காதலை தன் குடும்பம் ஏற்றுக் கொள்ளாதபோது தனது சொத்தையும் சொந்தங்களையும் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். கூலி வேலைக் கூட செய்தான்.

விஜய்யைப் போல அனாமிகாவால் அவளது குடும்பத்தை விலக்க முடியவில்லை. அதனால் விஜய்யை விலக்கி வைத்தாள். இந்த பிரிவை விஜய்யால் தாங்க முடியவில்லை. நாட்கள்தான் நகர்ந்ததே தவிர அனாமிகாவிடம் இருந்து எந்தவொரு பாசிட்டீவான ரிப்ளையும் வரவில்லை.

விரக்த்தியின் எல்லைக்கு சென்ற விஜய் காதலி அனாமிகாவை படம் பார்ப்பதற்காக வெகுநாட்கள் கழித்து தியேட்டருக்கு கூப்பிட்டான். இதுதான் கடைசிமுறை இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தான். விஜய்யின் உத்தரவாதத்தால் தியேட்டருக்கு வந்தாள் அனாமிகா.


அது ஜெயம் ரவியும் த்ரிஷாவும் நடித்த 'சம்திங் சம்திங்' படம். கிட்டத்தட்ட விஜய்யின் கதைதான் அந்தப் படமும். ஒரு பணக்காரப் பையன் ஏழைப் பெண்ணின் காதலுக்காக குடும்பத்தை விட்டு வெளியே வந்து கஷ்டப்படுவதுதான் கதை.

திரையில் படம் ஓட.. ஓட.. காதலிக்கு தாங்கள் காதலித்த தருணங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர.. படம் முடியும்போது கட்டுக்கடங்காத கண்ணீருடன் மீண்டும் தன் காதலைச் சொன்னாள், அனாமிகா!


இதற்காக காத்திருந்தது போல் அவள் சொன்ன மறுநொடியில் தியேட்டர் முழுவதும் விளக்குகள் எரிந்தன. அலங்கரிக்கப்பட்ட சீரியல் செட் லைட்டுகள் சூழலை மாற்றின. திரையில் த்ரிஷா முகத்திற்குப் பதில் அனாமிகா முகம் தெரிந்தது. கண்ணீருடன் அவள் 'ஐ லவ் யூ' சொன்னாள். தியேட்டர் ஸ்பீக்கரில் அது ஒலித்தது. அவளுக்குத் தெரியாமலேயே தியேட்டருக்குள் ஒரு கேமரா அவர்களை படம் பிடித்து 'லைவாக' திரையில் காண்பித்தது.

"என்ன இது..?" என்று பிரமித்துப் போய் திரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஆளுக்கொரு 'பொக்கே'யை அனாமிகா கையில் கொடுத்து வாழ்த்துச் சொன்னார்கள். அனாமிகாவுக்கு காண்பது கனவா..! அல்லது நனவா..! என்று பிடிபடவில்லை.

நடப்பது எல்லாம் நனவுதான். புரபோஸல் பிளானரின் திட்டப்படி விஜய்க்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டதுதான் அந்தப் படம். ஒரு தியேட்டரை வாடகைக்கு எடுத்து, அதற்கு நண்பர்களையும் துணை நடிகர்களையும் வரவழைத்து, நண்பர்கள் கையில் பூங்கொத்து கொடுத்து தியேட்டரில் படம் பார்க்க வைத்தது, கேமரா மூலம் தியேட்டர் திரையில் லைவாக காதலை சொல்ல வைப்பது எல்லாமே புரபோஸல் பிளானரின் ஏற்பாட்டின்படியே நடந்தது. இதில் எதுவுமே அனாமிகாவுக்கு தெரியாது.

இதற்கு மொத்தமாக 10 லட்சம் ரூபாய் செலவானது. அதில் 2 லட்சம் புரபோஸல் பிளானருக்கான கட்டணம். இப்போது விஜய்யும் அனாமிகாவும் இணைபிரியா தம்பதிகள்.


இப்படி விமானத்தில் காதலைச் சொல்வது, கப்பலில் சொல்வது, கடலுக்கடியில் சொல்வது என்று வசதிக்கு ஏற்றபடி ஏராளமான ஐடியாக்களை அள்ளித் தெளிக்கிறார்கள் புரபோஸல் பிளானர்கள். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நண்பர்கள் தங்கள் நண்பனுக்கு சாதகமான விஷயங்களை மட்டுமே யோசிப்பார்கள். புரபோஸல் பிளானர்கள் இருவருக்கும் சாதகமானவற்றையே செய்வார்கள்.


சிறிய தவறு நேர்ந்தாலும் ஒட்டுமொத்த காதலையும் வாழ்வையும் சிதைத்து விடும் அபாயமும் இதில் உண்டு. அதனால் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய வேலை இது.

உங்கள் காதலை காதலியிடம் சொல்லத் தயக்கம் இருந்தால்.. தயங்காமல் புரபோஸல் பிளானரிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களுக்காக காதலைச் சொல்லக் காத்திருக்கிறார்கள். அதற்கான ஏராளமான திட்டங்களை உங்கள் பட்ஜெட் படி தருவார்கள். உங்கள் பர்ஸும் கனமாக இருக்கவேண்டும்.




15 கருத்துகள்

  1. புளிசேப்பக்காரன் வாழ்க்கை மாதிரி இருக்கின்றது வாழ்க அந்த தம்பதிகள்.

    நண்பரே எல்லாமே சரிதான் இவர்களின் முகவரி தரவில்லையே எனக்கு அவசியம் தேவைப்படுகிறது 14 வட்ச ரூபாயில் உடையெடுக்க சொன்னாலும் செய்வோம் பணம் பிரச்சினை இல்லை இந்த அரசாங்கம் செலவை கவனித்துக்கொள்ளும்
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவரே, நிறைய பணம் இருந்தால் எனக்கு ஒரு 10 லட்சம் கொடுங்கள். ஒரு மாசமா கண்ணுலே காசே தட்டுப்பட மாட்டேங்குது.

      நீக்கு
  2. வங்கி வரிசையில் நிற்கும் போதே லவ் வந்ததுதான் இன்றைய என் பதிவின் ஹைலைட்ஸ் >>>http://www.jokkaali.in/2016/11/blog-post_23.html காதலுக்கு ஏது இடம் பொருள் ஏவல் :)
    அதிக செலவில்லாத காதல் இல்லையா இது :)

    பதிலளிநீக்கு
  3. செலவு செய்து தரகர் போட்டு
    காதல் வேண்டுமா? - அது
    உருப்படாது - நானும்
    ஒருத்தியை விரும்பி
    நண்பரைத் தரகராக்க
    நண்பரோ - அவள்
    தன்னை விரும்புவதாகச் சொன்ன
    பட்டறிவைப் பகிர்ந்தேன்!

    பதிலளிநீக்கு
  4. புதுமை ப்ளஸ் சுவாரஸ்யம். ஆனால் காஸ்ட்லி! ஏழைக் காதலர்கள் என்ன செய்வார்கள்!

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழைக் காதலர்கள் தங்கள் சொந்த ஐடியாவையே உபயோகித்துக்கொள்ள வேண்டியதுதான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  5. ‘பணம் பத்தும் செய்யும்’ என்பது இதுதானோ? எப்படியோ உண்மைக் காதலர்கள் இணைந்துவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் அன்றைக்கு காசு இருந்திருந்தால் காதலி கிடைச்சிருப்பாள்.....அப்பவும் சரி..இப்பவும் சரி..என்னிடம் காசு இல்லீயே.... வாழ்க! காதல்!!!

    பதிலளிநீக்கு
  7. எனக்கும் அன்றைக்கு காசு இருந்திருந்தால் காதலி கிடைச்சிருப்பாள்.....அப்பவும் சரி..இப்பவும் சரி..என்னிடம் காசு இல்லீயே.... வாழ்க! காதல்!!!

    பதிலளிநீக்கு
  8. தொடர்க ஜி ... சுவாரஸ்யமான தகவல்கள்

    பதிலளிநீக்கு
  9. காஸ்ட்லிதான்!!! இது ரொம்பவே காஸ்ட்லிதான்...என் வட்டத்தின் இளசுகளில் ....ஒரு சோடிக்காக 3 லட்சம் வரை செலவழித்தார்களாம். அது முதலில் பாதிதான் வெற்றியடைந்ததாம் அதனால் மீண்டும் தொடர்ந்ததால் அடுத்த பாதியும் சேர்த்து 3 லட்சம்....அதற்குப் ப்ளான் செய்தது என்னைப் போல் ஒருவராம் அதனால் அவருக்கு 1 1/2 லட்சமாம்....அப்போது நினைத்துக் கொண்டே என்னிடம் வந்தவர்கள் சாதாரணமானவர்கள்....நட்பு வேறு.. பாவம் செலவழிக்க முடியாதவர்கள்..ஆனால் அது வெற்றி அடையாத கேஸ்....இந்த 3 லட்சம் பற்றி அவர்கள் சொன்னதும்....அட! அப்ப நாம கூட கவுன்சலிங்க் இலவசம் என்று சொல்லி ப்ளானர் ஆரம்பிக்கலாமோ என்று நினைத்தேன்...ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை