•  கூட்டாஞ்சோறு

    பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

    வெள்ளி, நவம்பர் 18, 2016

    நகரும் இரும்புக் கோட்டை


    போர்களில் இப்போது ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், யுத்தக்களம் வரை சென்று எதிரிகளை பந்தாடுவதில் பீரங்கிகளை சுமந்து செல்லும் டாங்குகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட கவச வாகனங்களையே டாங்குகள் என்கிறோம். இவைகள் போர்க்களத்தில் எதிரிகளுக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக விளங்குகிறது. 

    லிட்டில் வில்லி
    உறுதியான கணம் மிகுந்த உருக்கு இரும்புத் தகடுகளால் இது உருவாக்கப்படுகிறது. விஷேசமான சங்கிலிகள் பொருத்தப்பட்ட பல சக்கரங்களை கொண்ட வாகனம் இது. சமதளமற்ற தரையின் மீது மிக வேகமாக செல்ல இந்த சக்கரங்கள் துணை செய்கின்றன. இதனை இயக்கவும் இதன் மூலம் மற்ற போர் செயல்களை செய்யவும் பல போர்வீரர்கள் இந்த டாங்குகளுக்கு தேவைப்படுகிறார்கள்.

    பிக் வில்லி
    பழங்காலங்களில் குதிரைகளால் இழுக்கப்படும் ரதங்களில் இருந்தவாறு எதிரிகளுடன் சண்டை செய்தனர். சுமார் கி.பி.800-ம் ஆண்டுகளில்தான் அசீரிய மக்கள் போர்க்களத்தில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்தார்கள். அதன்பின் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவ கேப்டன் எப்.ஜே.பூலர் என்பவர்தான் 1913-ல் நகரும் இரும்புக்கோட்டை ஒன்றை உருவாக்கும் யோசனையை தெரிவித்தார். அப்போது உலகம் முழுவதும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அதனால் இவர் யோசனைக்கு யாரும் செவி கொடுக்கவில்லை. 

    எப்போதுமே பெரிய டாங்க்
    ஆனால், சில மாதங்களிலேயே 1914 ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் உலகப் போர் தொடங்கிவிட்டது. உடனே நகரும் இரும்புக்கோட்டைக்கான ஆராய்ச்சி வெகு வேகமாக தொடங்கியது. இந்த ஆராய்ச்சி படு ரகசியமாக நடந்தது. இந்த ஆராய்ச்சி வெளியில் தெரிந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை உணர்ந்த இங்கிலாந்து ராணுவம் பொய்யான ஒரு செய்தியை பரப்பியது. ஒழுகாத தண்ணீர்த் தொட்டி ஒன்றை உருவாக்குவதிலேயே ராணுவ என்ஜினீயர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பரப்பியது. 1916-ல் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட நகரும் இரும்புக்கோட்டை வெளிவந்த போது அதனைப் பார்த்த மக்கள் அதை புதுவகையான தண்ணீர்த் தொட்டி என்றே நினைத்தனர். தொட்டி என்ற பெயரில் 'டாங்க்' என்றே அழைத்தனர். அந்த பெயரே அதற்கு நிலைத்துவிட்டது. 

    தற்போதைய பெரிய டாங்க்
    இந்த முதல் டாங்குக்கு 'லிட்டில் வில்லி' என்று பெயரிட்டது இங்கிலாந்து. இது போருக்கு அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. அதனால், அதில் பல மாற்றங்கள் செய்து 'பிக் வில்லி' என்ற பெயரில் 10 ராணுவ வீரர்கள் உள்ளே இருந்து பணியாற்றும் விதமாக மற்றொரு டாங்க் உருவாக்கப்பட்டது. இந்த டாங்குகள் 1916 செப்டம்பர் 15-ம் தேதி பிரான்ஸ் நாட்டிலுள்ள 'சோம்' என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்டன. 

    மொத்தம் 49 டாங்குகள் இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன. அதில் 17 டாங்குகளின் இன்ஜின்கள் சரியாக வேலை செய்யவில்லை. 18 டாங்குகள் போர்முனைக்கு செல்லமாட்டோம் என்று அடம்பிடித்து கிளம்பாமல் நின்றுவிட்டன. 5 டாங்குகள் யுத்தகளத்தில் போரில் ஈடுபட்டிருந்த போதே நடுவில் செயலற்று நின்று போயின. வெறும் 9 டாங்குகள் மட்டுமே கடைசிவரை நன்றாக போரிட்டன.  

    லேசான டாங்க் 
    தற்போது டாங்குகள் பல மாற்றங்கள் பெற்றுவிட்டன. ஆனாலும் மூன்று ரகங்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. லேசான டாங்குகள் என்பது எப்படிப்பட்ட இடத்துக்கும் சுலபமாக எடுத்துச் செல்ல வசதியானவை. விமானங்கள் மற்றும் கப்பல் மூலம் ஏற்றி செல்ல எளிதானது. மலைப்பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. வேகமாக செயல்படக்கூடியவை. 

    நடுத்தர டாங்க் 
    அடுத்தது நடுத்தர டாங்குகள். இவைகள் சமவெளிகளில் சாதாரண யுத்த நடவடிக்கைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுபவை. கனமான டாங்குகள் எப்படிப்பட்ட தாக்குதல்களையும் தங்கக்கூடியது. போர்முனைகளில் அதிரடி தாக்குதலுக்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள். மிக மிக மெதுவாக நகரும் தன்மை கொண்டது.

    வைஜெயந்த்
    சென்னை ஆவடியில் உள்ள டாங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை 1966-ல் இருந்த செயல்பட்டு வருகிறது. இது 'வைஜெயந்த்' என்ற பெயரில் டாங்குகளை தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. 
    19 கருத்துகள்:

    1. அரிய செய்தி நண்பரே புகைப்படங்களும் அருமை சற்றுமுன்தான் ஒரு காணொளி கண்டேன் அதில் நகரும் டாங்குகள் தண்ணீரில் இறங்கி மிதந்து மறுமுனைக்கு செல்கின்றது எவ்வளவு மாற்றங்கள்
      த.ம.1

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

        நீக்கு
    2. சுவாரஸ்யமான தகவல்கள். டாங்க் என்று ஏன் பெயர் வந்தது என்கிற தகவலும் அறிந்து கொண்டேன். தம+1

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

        நீக்கு
    3. பதில்கள்
      1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

        நீக்கு
    4. பதில்கள்
      1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

        நீக்கு
    5. வணக்கம் தோழர்,
      விரிவான செய்திகள் தோழர் ...
      வாழ்த்துகள் ...
      மாடர்ன் டாங்க்குள் குறித்தும் எழுதுங்கள்... அப்பாச்சி ஹெலி குறித்தும்

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. இன்னொருமுறை கண்டிப்பாக எழுதுகிறேன்.
        தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

        நீக்கு
    6. டாங்க் பெயர்க்காரணம் அறிந்தேன். பீரங்கியைப் பற்றிய பதிவினைக் கண்டதும் பல ஆண்டுகளுக்கு முன் நான் படித்த இரு செய்திகள் நினைவிற்கு வந்தன. 1) ஒரு நாட்டில் அணிவகுப்பின்போது பீரங்கி வரிசையாகப் போய்க்கொண்டிருக்கும்போது முக்கியமான அரசியல் தலைவரை பீரங்கியின் மூலம் சுட்டு அவர் இறந்துவிட்டதாகவும், அதற்குப் பின்னர் அணிவகுப்பின்போது பீரங்கியின் துப்பாக்கி போன்ற நீட்டிக்கொண்டிருககும் பகுதியை திசை மாற்றி செல்லும்படி வைத்தார்கள் என்பர். 2)ஈராக் போரின் போய் அட்டை பீரங்கிகளைக் கொண்டு உண்மையான பீரங்கி என்று அமெரிக்கப்படையை ஏமாற்ற ஈராக் ஒரு உத்தியைக் கடைபிடித்ததைப் பற்றி படித்தேன்.

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. அறியாத தகவல்கள்.
        வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

        நீக்கு
    7. வில்லி என்று பெயர் வைத்ததில் ஆணாதிக்க மனப்பான்மை இருக்கிறதே :)

      பதிலளிநீக்கு
    8. நகரும் இரும்புக் கோட்டைகள் ஏன் tank என அழைக்கப்படுகிறது என்ற தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

      பதிலளிநீக்கு
      பதில்கள்
      1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

        நீக்கு
    9. பதில்கள்
      1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

        நீக்கு
    10. அறியாத தகவல்கள் நண்பரே/சகோ....டாங்க் என்பதன் காரணம் புரிந்தது...நல்ல தகவல்கள்

      பதிலளிநீக்கு

    இப்போது இணையத்தில்

    பந்திக்கு வந்தவர்கள்

    நண்பர்கள்