Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஆண் குழந்தைக்கும் கள்ளிப்பால்


லகில் அவ்வப்போது விசித்திரமான குற்றங்கள் நடப்பது உண்டு. அதேபோல் சில தண்டனைகளும் வித்தியாசமாக அமைவது உண்டு. அப்படிப்பட்ட தண்டனைகளில் சில...

கி.மு. 3370-ம் ஆண்டில் எகிப்தில் ஒருவர் மீது ஒன்றுக்கு மேற்பட்ட குற்றச்சாட்டு வந்தால் குற்றவாளியின் உடலை எத்தனை குற்றம் உள்ளதோ அத்தனை துண்டுகளாக வெட்டிக் கொள்வார்கள். அட்டன் என்ற பெண் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்பே இறந்து விட்டார். அவரது உடலையும் புதைத்து விட்டார்கள். அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததும், அழுகிய நிலையில் இருந்த பிணத்தை தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி தண்டனையை நிறைவேற்றினார்கள்.

அய்மன் நஜாபி, சார்வேயிட் என்ற இருவரும் இளம் காதலர்கள். அய்மன், துபாயில் வேலை செய்து வந்தார். அவரை பார்ப்பதற்காக தனது நாட்டில் இருந்து சார்வேயிட் துபாய் வந்தார். ஓட்டலில் இருவரும் சந்தித்தபோது காதல் பரவசத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அங்கே இருந்த ஒருவர் பொது இடத்தில் முத்தம் கொடுத்தது குற்றம் என போலீசை அழைத்தார். பிறகென்ன, அந்த நாட்டு சட்டப்படி இருவருக்கும் ஒரு வருட சிறை தண்டனையும், 1000 திர்காம் அபராதமும் விதிக்கப்பட்டது.


தனது சுதந்திர நாளில் கதறி அழுத ஒரு நாடு சிங்கப்பூர். குடிநீர், வேலைவாய்ப்பு உள்பட தன் அணைத்து தேவைகளுக்கும் அதுவரை அண்டை நாடான மலேசியாவையே நம்பி இருந்தது, சிங்கப்பூர். திடீரென கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தண்டனையாகவே நினைத்தார்கள் சிங்கப்பூர்வாசிகள். இப்போது உலகின் மிக முக்கிய சந்தையாக சிங்கப்பூர் வளர, அந்த சுதந்திரமே காரணமானது.

கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொல்லும் பழக்கம் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இருப்பது தெரியும். ஆனால், ஆண் குழந்தைகளை கொல்லும் 'பாப்புவா நியூ கினியா' என்ற பழங்குடி இனம் பற்றி தெரியுமா? ஆஸ்திரேலியாவின் இந்த பழங்குடி இன ஆண்கள் எப்போதும், எதற்கும் பக்கத்து கிராமங்களுடன் மல்லுக்கு நிற்பார்கள்.

கினியா இனப்பெண்கள்
தொட்டதற்கெல்லாம் குற்றம், எதற்கெடுத்தாலும் சண்டை என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சனைகளை பார்த்து பார்த்து புளித்துப்போன கினியா இனப்பெண்கள், எப்போதும் பிரச்சனைகளைக் கொண்டு வரும் ஆண்களை வெறுக்க தொடங்கினார்கள். ஆண் வர்க்கத்துக்கு தண்டனை தர முடிவு செய்தார்கள். தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகளை விஷம் கொடுத்து கொல்லத் தொடங்கினார்கள். ஆண்களாக இருப்பதால்தானே வீணாக சண்டை போட்டுக்கொண்டு எங்கள் உயிரை எடுக்கிறீர்கள். நீங்களே வேண்டாம்..! என்பதே அவர்களின் முடிவு. இந்த ஆண்சிசுக்கொலை பல ஆண்டுகள் நீடித்தது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். 




25 கருத்துகள்

  1. ஆண் சிசுக்கொலை ஆச்சர்யமாக இருக்கின்றது நண்பரே....
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கி.மு.3370-ம் ஆண்டு சரியா நண்பரே ?

      நீக்கு
    2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

      நீக்கு
    3. அவ்வளவு முன்னால் இல்லை நணபரே, அதிலிருந்து ஒரு 5000 வருடங்களை கழித்துக்கொள்ளுங்கள்!

      நீக்கு
  2. வித்தியாசமான சம்பவங்கள்தான்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்ற பழமொழி கினியா இனப் பெண்களுக்கு தெரியாது போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
  4. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டாஞ்சோறை இணைத்துக்கொண்டேன். நண்பரே!
      தகவலுக்கு நன்றி !

      நீக்கு
  5. ஆச்சரிய மூட்டும் தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை