நாடுகளுக்கிடையே நடக்கும் விளையாட்டுப்போட்டிகள் பெரும்பாலும் நட்புறவை வளர்க்கவே நடத்தப்படுகின்றன. அனால் சில விளையாட்டுகள் வினையில் முடிகின்றன. அப்படியொரு விளையாட்டுதான் 1969, ஜூன் 27-ம் தேதி நடந்தது.
எல் சால்வடார் என்ற நாடும் ஹோண்டுராஸ் என்ற நாடும் உலகக்கோப்பை கால் பந்தாட்டப்போட்டியில் கலந்து கொண்டன. 1970-ம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்தாட்டத்திற்கான தகுதிச்சுற்று போட்டி, 1969-ம் ஆண்டு நடைபெற்றது. உலகக் கோப்பையை வாங்குவதற்கு அனைத்து நாடுகளும் கடுமையாக மோதின. அப்படி நடந்த போட்டிகளில் எல் சால்வடார், ஹோண்டுராஸ் நாடுகளின் அணிகள் மோதின.
ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்போது இரண்டு நாடுகளும் இரண்டு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. அந்த நேரத்தில் ஹோண்டுராஸ் அணியை சேர்ந்த ஒரு விளையாட்டு வீரர் முரட்டுத்தனமாக விளையாடிய காரணத்தால் அந்த அணிக்கு தண்டனையாக எதிரணியான எல் சால்வடார் 'ஃபெனால்டி கிக்' தரப்பட்டது. இதன் காரணமாக எல் சால்வடார் அணி மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அப்போது அங்கிருந்த இரண்டு நாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இது அப்படியே விளையாட்டு அரங்கத்தை கடந்து இரண்டு நாட்டு மக்களுக்கு மத்தியிலும் பரவியது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இரண்டு நாட்டுத் தலைவர்களும் ஒருவரையொருவர் குறை கூறி அறிக்கை போர் நடத்தினார்கள். இது உச்சக்கட்டத்தை அடைந்தது.
ஜூலை மாதம் மூன்றாம் தேதி இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டது. இந்த யுத்தத்தை சரித்திரத்தில் கால்பந்து யுத்தம் என்றும் 100 மணி நேர யுத்தம் என்றும் அழைக்கிறார்கள். ஏனென்றால், இது 100 மணி நேரத்தில் முடிவுக்கு வந்த யுத்தம். இந்தப் போரில் 2,000 போர் வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க இரு நாடுகளுக்கும் அளித்து வந்த எல்லா உதவிகளையும் நிறுத்தியது. கிட்டத்தட்ட பொருளாதார தடை விதித்தது போல்தான்.
இதனால் இரு நாட்டு மக்களுக்குத் தேவையான உணவு கிடைக்காததால் மேலும் மக்கள் பட்டினியால் இறந்து போனார்கள். கடைசியாக வேறுவழியில்லாமல் போர் முடிவுக்கு வந்தது. ஒரு விளையாட்டு போராக உருமாறி ஆயிரக்கணக்கான உயிர்களை பழிவாங்கியது சரித்திரத்தில் முதல் முறை.
கால்பந்து விளையாட்டு ஒரு சாக்காகத்தான் இரு நாடுகளுக்கும் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே புகைச்சல் இருந்துகொண்டே இருந்திருக்கிறது. எல் சால்வடார் நாட்டைவிட்டு ஹோண்டுராஸ் ஐந்து மடங்கு பெரிய நாடு. ஆனால், மக்கள்தொகை குறைவு. இயற்கைவளம் நிறைந்த ஹோண்டுராஸ் நாட்டிற்கு எல் சால்வடார் நாட்டிலிருந்து நிறைய மக்கள் சட்டவிரோதமாக குடியேறினார்கள்.
ஒரு கட்டத்தில் ஹோண்டுராஸ் மக்கள்தொகையில் எல் சால்வடார் மக்கள் 60 சதவீதம் என்ற மிதமிஞ்சிய அளவில் இருந்தார்கள். இவை எல்லாம் சேர்ந்துதான் யுத்தமாக மாறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். எப்படியோ விளையாட்டு வினையானது.
போட்டி போரில் முடிந்த செய்தி இதுவரை அறியாதது நண்பரே
பதிலளிநீக்குவியப்பாகத்தான் இருக்கிறது
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குஎன்னவொரு கொடூரம்...!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குகால் பந்து கால் பங்குதான் காரணம் ,முக்கால் பங்கு பழைய பகைமையா இருக்கும் )
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குபோரில் முடிந்த விளையாட்டு.... கொடுமையான விஷயம்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குவிளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல் வேறு விதமாகப் பார்த்தால் இது போல் தான் நடக்கும். சிலரின் நடவடிக்கையால் ஒன்றுமறியா பலரின் உயிர் பறிபோனதுதான் மிச்சம்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நீக்குபோட்டி, பொறாமை இருந்தால் இப்படி அழிவை சந்திக்க வேண்டும்.
பதிலளிநீக்குவிளையாட்டு ரசனை வெறியாக மாறினால் கஷ்டம் தான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நீக்குஇதைத்தான் விளையாட்டு வினையானது என்பார்களோ.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நீக்குவிளையாட்டுப் போட்டி
பதிலளிநீக்குபோராக மாறியதால்
அறுவடையாக மக்கள் சாவு!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
நீக்குஎன்ன ஒரு கொடூரம், விளையாட்டு வினையாகும் என்பது மெய்யோ...
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குகருத்துரையிடுக