Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்

சுற்றுலாவில் மிக முக்கியமான ஒரு பங்கு ஹோட்டல்களுக்கு உண்டு. தங்குவதற்கு நல்ல இடமும், ருசியான உணவும் கிடைத்து விட்டாலே போதும் சுற்றுலாவில் பாதி நிறைவடைந்த திருப்தி ஏற்பட்டு விடும். அதிலும் நமக்கு பிடித்தமான சூழலில் ஹோட்டல் அறைகள் இருந்தால் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லாமல் போய் விடும். அப்படி தீம் ஹோட்டல்களை உலகம் முழுவதும் அமைத்திருக்கிறார்கள், அந்தந்த துறைகளில் விருப்பமானவர்கள். அந்த ஹோட்டல் பற்றி இங்கே...

1. வி 8 ஹோட்டல் - ஜெர்மனி

கார் பிரியர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்ட 4 ஸ்டார் ஹோட்டல் இது. மொத்தம் 34 அறைகள் இருக்கின்றன. அதில் 10 அறைகள் வின்டேஜ் கார்கள், கிளாஸிக் கார்கள், ஸ்போர்ட்ஸ் கார்கள் வடிவமைப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன. படுக்கைகள் ஒவ்வொன்றும் ஒரு வின்டேஜ் காரை நினைவுப்படுத்துகின்றன. வி8 என்பது கார்களில் பொருத்தப்படும் இன்ஜினின் பெயர். அதே பெயரை ஹோட்டலுக்கு வைத்து விட்டார்கள். ஹோட்டல்களுக்குள் நுழைந்தால் ஏதோ வின்டேஜ் கார் ஷோரூமுக்குள் புகுந்து விட்டது போல் கார்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஹோட்டல் அமைந்திருக்கும் இடமும் புகழ்பெற்ற கார் சந்தையான ஸ்டூர்ட்கார்டில் உள்ளது. ஜெர்மனியின் பழைய விமான நிலையம் இந்தப் பகுதியில் முன்பு இருந்ததால் பாரம்பரியமும் கொண்டதாக இருக்கிறது.

தீம் ரூம்களில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு 175 யுரோ கட்டணமாக பெறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.13,475.



2. ஜம்போ ஸ்டே- ஸ்வீடன்

கார் பிரியர்களுக்கு வி8 ஹோட்டல் என்றால் விமான பிரியர்களுக்கு ஜம்போ ஸ்டே. ஸ்வீடனில் உள்ள இந்த ஹோட்டல் 747 போயிங் ஜம்போ விமானத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஜம்போ நிறுவனத்தின் முதல் பிராபர்டி இது. 1972-ல் தயாரிக்கப்பட்ட இந்த விமானம் ஓய்வுக்குப் பின் ஹோட்டலாக மாற்றப்பட்டு விட்டது. மொத்தம் 29 அறைகள் இதில் உள்ளன. ஒவ்வொரு அறையும் 6 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. நவீன வசதிகள் கொண்டதாகவும் இருக்கின்றன.

இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,505. 



3. ட்ரீ ஹோட்டல் - ஸ்வீடன்

வனத்தின் நடுவே மரங்களின் மீது பறவைகள் கூடுகளில் வாழ்வது போல் ஓர் நாள் வாழ வேண்டுமா உங்களுக்காகவே இருக்கிறது ட்ரீ ஹோட்டல். பறவைகளின் கூடுகளைப் போலலே இதை அமைத்திருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளுடன் சேர்ந்து நான்கு பேர் கொண்ட குடும்பம் தங்கும் விதமாக இந்த ஹோட்டல் அறைகளை அமைத்திருக்கிறார்கள். 17 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய அறைகள். ஜன்னல்கள் உண்டு. அதன்மூலம் வெளியில் இருக்கும் இயற்கையை ரசிக்கலாம். ஜன்னல்கள் இருப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது.

ஒரு குடும்பம் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.7,500. கட்டணம்.



4. ஐஸ் ஹோட்டல் -வடக்கு ஸ்வீடன்

ஹோட்டல்கள் எல்லாமே நிரந்தரமாக இருப்பதைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஒவ்வொரு வருடமும் புதிதாகக் கட்டப்படும் ஒரு ஹோட்டலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகின் முதல் ஐஸ் ஹோட்டல் இதுதான். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் இந்த ஹோட்டல் கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பொருள் ஐஸ் கட்டிகள்தான். அருகில் ஓடும் டோர்ன் நதி டிசம்பர் மாதத்தில் மைனஸ் 5 டிகிரிக்கு சென்று விடுவதால் ஆற்று நீர் முழுவதும் உறைந்து பனிக்கட்டியாக மாறி விடும். இப்படி மாறியவுடன் பனிச்சிற்ப கலைஞர்களுக்கு அழைப்பு விடுவார்கள். அவர்கள் வந்து விதவிதமாக அறைகளை உருவாக்குவார்கள். இந்த ஹோட்டல் ஏப்ரல் மாதம் வரை செயல்படும். அதன்பின் வெப்பம் அதிகமாவதால் பனிக்கட்டிகள் உருகி, மீண்டும் நதி ஓடத் தொடங்கும்.

பனிக்கட்டியிலேயே செய்யப்பட்ட கட்டில்கள், மேஜை, சேர்கள் இருக்கும். இதில் தங்குவது மிக வித்தியாசமான ஒரு அனுபவமாகும். ஹனிமூனைக் கொண்டாட இளம் ஜோடிகள் இங்கு வருகிறார்கள். இந்த இடம் நார்தன் லைட்ஸ் உருவாகும் இடம் என்பதால் இரவில் வானில் தெரியும் வர்ண ஜாலங்களை பார்த்து மகிழலாம்.

இருவர் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.22,552-ல் இருந்து ஆரம்பமாகிறது.




5. டாக் பார்க் இன் -அமெரிக்கா

அமெரிக்காவின் முக்கியமான லேண்ட் மார்க்காக டாக் பார்க் இன் ஹோட்டல் இருக்கிறது. ஒரு நாய் நிற்பது போல் கட்டப்பட்ட இந்த ஹோட்டலில் தங்குவது கொண்டாட்டத்தின் உச்சம் என்று சொல்கிறார்கள். ஹோட்டலின் வெளிப்பகுதியும் அறைகளின் உட்பகுதியும் நாய்களை நினைவுப்படுத்தும் விதமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.6025. 


7 கருத்துகள்

  1. அழகான புகைப்படங்களுடன் விரிவான விளக்கம் நண்பரே ஜெர்மனில் உள்ள இடத்தின் பெயர் ஸ்டூட்கார்ட் நானும் அந்த சிட்டியில்தான் தங்கினேன்
    த.ம.1

    பதிலளிநீக்கு
  2. தீம் மிகவும் வித்தியாசமாகத் தான் இருக்கின்றது. பல ஹோட்டல்கள் பற்றித் தெரிந்துகொண்டேன். நன்றி செந்தில்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. ஜெர்மனியில் உள்ள அந்த ஊரை ஸ்டட்கார்ட் என்றும் சொல்வார்கள் எனக் கேள்வி. படங்களும் தகவல்களும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ட்ரீ ஹோட்டலுக்ம், ஐஸ் ஹோட்டலும் மிகவும் பிடித்திருக்கிறது. அருமையான தகவல்கள்! டேடித் தேடித் தருகிறீர்கள். படங்கள் அழகு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை