• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், நவம்பர் 02, 2015

  பிறப்பா.. வளர்ப்பா..?!

  "எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே,அவர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னை வளர்பதிலே...."  என்று ஒரு சினிமா பாடல் உள்ளது. ஒரு மனிதன் நல்லவனாவது அவன் வளரும் சூழ்நிலையிலேயே உள்ளது என்பதை விளக்கும் பாடல் அது. 


  இது உண்மை தானா என்று கண்டறிவதற்காக விஞ்ஞானிகள் சோதனை நடத்தினார்கள். சூழ்நிலை தான் மனிதனை உருவாக்கிறது. உயிரியல் விஞ்ஞானம் புது உயிர்களை மட்டும் உருவாக்க முடியுமே தவிர, பிறந்த உயிருக்கு வலுவான நல்ல பண்புகளை போதிக்க முடியாது.

       
        ஒரே பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு  இடையே பல்வேறு மாறுபட்ட பண்புகளையும் குணங்களையும் நாம் காண்கிறோம். அதிலும் குறிப்பாக தாயின் ஒரே கரு முட்டை இரண்டாக பிளவுட்டு வளர்ந்து  வரும் இரட்டை குழந்தைகள் கூட தோற்றத்தில் ஒரே மாதிரி அச்சாக ஒத்து இருந்தாலும், அவர்களின் பண்புகளும், பழக்க வழக்கங்களும் மாறுபடக்காரணம் என்ன என்று ஆராய்ந்தால், அது சூழ்நிலைதான் என்பதை தயங்காமல் சொல்லலாம்.


       சாண்டாக், நெல்சன் என்ற இரண்டு உளவியல் அறிஞர்கள் 1993-ம் ஆண்டு ஒரே தோற்றத்துடன், ஒரே பிரவசத்தில் பிறந்த மூன்று குழந்தைகளை தங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு ஹென்றி, ஜான், பிரட் என்று பெயரிட்டார்கள். மூவரையும் மாறுபட்ட சூழ்நிலையில் வளர்த்தார்கள்.

       பின்னாளில் அவர்கள் பெரியவர்களானதும், முதல் குழந்தை ஹென்றி, மிகுந்த சுயநலமிக்கவனாகவும், இரண்டாவது குழந்தை ஜான், பெற்றோர்களை போற்றி பாதுகாப்பவனாகவும், மூன்றாவது குழந்தை பிரட், சமூக நல மனப்பான்மை கொண்ட தொண்டனாகவும் வளர்த்திருந்தார்கள்.

       மூவரும், மூன்று விதமாக வளர்ந்ததற்கு, அவர்கள் வளர்ந்த சூழ்நிலை தான் காரணம். அமெரிக்காவின் நியுயார்க்கில் பிறந்த, அமெரிக்க பாரம்பரியம்மிக்க ஒரு குழந்தையை, 6-வது மாதத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள ஒரு வீட்டில் வளர்ந்தால், அந்த குழந்தை தனது 5-வது வயதில் 'எங்க தல எங்க தல டி.ஆரு சண்டே மண்டே ..' என்று அப்போதைய குத்துப் பாட்டுதான் பாடுமே ஒழிய, ஆங்கில பாடலை பாடாது.


       ஒரு குழந்தை எங்கு வளர்கிறதோ, அந்த குணத்தையே அது பெறுகிறது. தீவிரவாதிகள் உருவாவதற்கு காரணம், அவர்கள் வளரும் சூழ்நிலை தான் என்றார்கள், உளவியல் விஞ்ஞானிகள். சரியான உளவியல் சிகிச்சை கொடுத்தால், இவர்களையும் சாதாரண மனிதர்களைப்போல, மனித தன்மை கொண்டவர்களாக மாற்ற முடியும் என்றும் கூறுகிறார்கள்.

  அதனால் குழந்தைகள் நல்லவர்களாக வளர்வதற்கு வளரும் சூழ்நிலைதான் காரணமே தவிர பிறப்பு அல்ல. பிறப்பால் ஒருவன் பெரிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வளர்ப்பு சரியாக இல்லையென்றால் நல்லவனாக உருவாக மாட்டான் என்பதுதான் உண்மை.  38 கருத்துகள்:

  1. அருமையான விடயம் நண்பரே உண்மை எந்தக் குழந்தையும் வளரும் சூழலிலேயே அது செல்கிறது ஒரு மதத்துக் குழந்தையை வேறு மதத்து வீட்டில் வளர்த்தால் அதன் சூழலே வரும் எல்லாம் வளர்ப்பின் விதமே... கட்டுரை நன்று
   தமிழ் மணம் 1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உடனடி வரவுக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. பதில்கள்
   1. நீண்ட நாட்களுக்கு பின் வருகை தரும் தங்களை வரவேற்கிறேன்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  3. இதைப்பற்றி பல பதிவுகள் உள்ளன சகோதரரே... (இணைப்புகள் அதிகம்... க்கும்...[!])

   நன்றி.. தொடர வாழ்த்துகள்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஏற்கனவே இதை தினம் ஒரு தகவலில் பகிர்ந்திருந்தேன். அதை மீண்டும் இங்கே பதிவிடுவதால் (தளங்களை ஒன்றாக்கும் முயற்சியால்) படித்த உணர்வு வருவது நிச்சயம்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  4. மரபியல், சூழலியல் என இரு காரணிகள் குழந்தைகளின் தன்மையைத் தீர்மானிக்கின்றன எனப் பயிற்சியில் படித்தது.

   தங்களது தகவல் படித்ததை நினைவுபடுத்தியது.

   தொடர்கிறேன்.

   ( த ம எனக் குறிப்பிடாவிட்டாலும் நிச்சயம் உண்டு)

   நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  5. உண்மை நண்பரே
   உண்மை
   அருமையான பகிர்வு
   தீவிர வாதிகள் உருவாகவும் சூழ்நிலைகளும்,வறுமையுமே காரணம்
   தம +1

   பதிலளிநீக்கு
  6. நேத்து தான் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பதிவை போட்டேன்...
   நன்று...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் பதிவைக் கண்டேன். நன்று!
    தளத்தை தொடர்கிறேன்.

    நீக்கு
  7. #நல்லவர் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்க்கையிலே #
   கவிஞர் சொன்னதும் பொய்யே பொய்யே :)

   பதிலளிநீக்கு
  8. சூழ்நிலை சூத்திரம்தான் தீர்மானிக்கிறது
   உண்மை நண்பரே!
   த ம +
   நட்புடன்,
   புதுவை வேலு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நிச்சயமாக, தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  9. பதில்கள்
   1. என்னுடைய கணிப்பு அல்ல. ஆய்வின் முடிவு!
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  10. அன்புள்ள அய்யா,

   ஆறு கரை அடங்கி நடந்திடில்
   காடு வளம் பெறலாம்
   தினம் நல்ல நெறிக்கண்டு பிள்ளை வளர்ந்திடில்
   நாடும் நலம் பெறலாம்
   பாதை தவறிய கால்கள் விரும்பிய
   ஊர் சென்று சேர்வதில்லை
   நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவள்
   பேர் சொல்லி வாழ்வதில்லை

   சூழ்நிலைதான் நல்ல மனிதனையோ தீயமனிதனையோ பெற்று எடுக்கின்றது.

   த.ம.8

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. புலமை பித்தனின் அற்புதமான வரிகளில் மிளிரும் பாடல் அது. எனக்கு மிகவும் பிடித்த பாடல். அதில் வரும் இந்த பதிவுக்கு பொருத்தமான வரிகளை எடுத்துக்காட்டிய தங்களுக்கு நன்றி அய்யா!

    நீக்கு
  11. இதனைத்தான் நம்ப வள்ளுவர், “நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு.” என்றார்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இப்போது ஆய்வு மூலம் நிருபித்த உண்மைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் சொல்லியிருப்பது அதன் சிறப்பை காட்டுகிறது.

    நீக்கு
  12. நல்ல பதிவு. உண்மைதான் நண்பரே! சூழல் என்பது மிக மிக முக்கியம் ஒரு குழந்தைகள் வளர்வதற்கு. அருமையான பதிவு.

   எங்கள் தளத்திலும் ஒரு சில உண்டு...நிகழ்வுகளுடன் சில....கீதாவின் அனுபவத்தில் சில என்று.

   ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றீர்களோ? இன்னும் கொஞ்சம் விரிவாக (எங்களைப் போல் நீ.....ளமாக என்று சொல்லவில்லை)...தொடராக எழுதியிருக்கலாமோ! ஏனென்றால் மிக மிகத் தேவையான பதிவு இப்போதைய காலகட்டத்திற்கு என்பதால்...உங்களால் முடியும்..

   மிக்க நன்றி நண்பரே.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இது நான் தினம் ஒரு தகவலில் எழுதிய தகவல் கொடுக்கப்பட்ட இடத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதால் சுருக்கமாக எழுதியிருக்கிறேன். இன்னொன்று இந்த பதிவு அந்த ஒரு ஆய்வை மட்டும் மையமாக வைத்து எழுதப்பட்டது. தொடராக எழுத இதில் நிறைய விஷயங்கள் இருப்பது உண்மைதான்.

    நீக்கு
  13. சூழ்நிலையே காரணம் என்பது உண்மையே. சற்று மாறுபட்ட சூழலில் குழந்தை வாழ நேரிடும் நிலையில் நாம் பக்குவப்படுத்தினால் குழந்தையின் மனதில் சில மாற்றங்களைக் கொணர்ந்து நெறிப்படுத்த முடியும் என்பது என் நம்பிக்கை.

   பதிலளிநீக்கு
  14. செந்தில் சகோ நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் சரிதான். அதுவும் அமெரிக்கக் குழந்தை இங்கு வளர்ந்தால்...குத்துப்பாடல் ...ஹஹஹஹ் நச்!! உண்மைதான்...

   என்றாலும் ஒரு சில இங்கு பின்னூட்டமாக இடலாம் என்று நினைத்தேன் ஆனால் வழக்கம் போல் மிகவும் பெரிதாக பதிவு போல் ஆகிவிடுமோ என்பதால் யோசிக்கின்றேன்.

   சூழ்நிலை என்பது ஒரு பக்கம். மரபும் உண்டு. அதற்கு உதாரணம். தத்தெடுத்து, நல்ல குடும்பத்தில், மிக மிக நல்லவிதமாக வளர்க்கப்பட்டக் குழந்தை, வளர்ந்து வரும் போது மாறியது உண்டு. அதே போன்று நல்லவனாக/ளாக வளர்ந்த குழந்தைகளும் உண்டு. சொந்தக் குழந்தை என்றாலும்,

   மரபும் உண்டு, சூழலும் உண்டு. அதைவிட.....

   உளவியலும் மூளையின் சித்து வேலைகளுக்கு அடிமையான ஒன்றே.

   இதே உளவியலின் அடிப்படையில்தான் தத்துவாளர்கள் சொல்லுவது..."accept people as they are" அப்ப்டிச் செய்தால் சண்டைகள் சச்சரவுகள் இருக்காது....மனிதம் வளரும். என்று...ஆனால் அது யதார்த்தத்தில் வராத ஒன்று. அதற்கு விடை இதற்கு முந்தைய வரி...

   எங்கள் தளத்திலும் சில பதிவுகள் உண்டு. உளவியல் நிகழ்வுகளின் அடிப்படையில், எனது அனுபவ ரீதியில். நிறைய சொல்லலாம். ம்ம்ம பின்னூட்டம் பதிவாகிவிடும் அபாயம் ஹஹஹஹ.

   மிக்க நன்றி நண்பரே! நான் தனிப்பட்ட முறையில் ஆர்வத்துடன் படித்த ஒரு சப்ஜெக்ட் பற்றிப் பேசியதற்கு...பாராட்டுகள். நல்ல பதிவு..இன்னும் பேசுங்கள்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எழுதுங்கள் நீளமான பின்னூட்டமாக இருந்தாலும் அசராமல் படிப்போம். இந்த பதிவு ஒரு ஆய்வை பற்றி மட்டும் சொல்லும் பதிவு. மற்றபடி இதிலும் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டு.
    எவ்வளவுதான் நினைத்தாலும் உங்கள் அளவுக்கு பின்னூட்டம் எழுத முடியவில்லை. அதன் ரகசியத்தை எனக்கும் சொல்லிக்கொடுங்களேன்.!

    நீக்கு
  15. சூழ்நிலைதான் எல்லோரையும் மாற்றுகிறது! உண்மைதான்! சிறப்பான பகிர்வு!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  16. பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  17. சூழ்நிலை தான் ஒரு மனிதனின் நடத்தையை / எதிர்காலத்தை உருவாக்குகிறது என்பது சரியே. தகவலுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  18. பிறப்பை குழந்தைகளின் விட வளர்ப்பு முக்கியம் என்பதைச் சொன்ன பதிவு. பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்