• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், நவம்பர் 03, 2015

  பெண்களுக்கான ஸ்பெஷல் மது

  யாராவது ஒழுங்காக இருந்தால் நம்மாள்களுக்கு பிடிக்காதே, உடனே அவர்களையும் கெடுத்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு துடிப்பார்கள். ஆண்கள்தான் கெட்டு சீரழிந்து போய்விட்டார்கள் பெண்களாவது ஒழுங்காக இருக்கிறார்களே என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டால் அவர்களையும் சீரழிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. .  

  சினிமாவுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அள்ளிக் கொடுத்து, அள்ளிக் கொடுத்து குடிப்பதை ஒரு சாதாரண நிகழ்வு போல் மாற்றிய நிறுவனங்கள், இப்போது பெண்களுக்கு தனி உரிமை என்ற தாக்கத்தை சொல்லி அவர்களையும் குடிக்க வைக்க புதிய வழிமுறையை கண்டுபிடிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் பெண்களுக்கான பீர். இது கெடுதல் இல்லாத நல்ல பீர்.   


  மதுவகையில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை. 

  இது ஒரு மாயைதான். மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரிலும் உண்டு. இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் கூட பீர் குடிக்கிறார்கள், இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பீர் கெடுதல் இல்லை என்ற தவறான சித்தாந்தம்தான்.

  இந்த நிலையில் கெடுதல் செய்யாத ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உணவியல் நிபுணர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு பயோ-டெக்னாலஜி என்ற நவீன தொழில்நுட்பம் கைக்கொடுத்தது. இந்த பீரில் கொஞ்சம் கூட ஆல்கஹால் இல்லை. அதனால் எவ்வளவு குடித்தாலும் மயக்க உணர்வு, போதை போன்றவை ஏற்படாது.

  பார்லி, மாவுப் பொருட்கள், முசுக்கொட்டைக் காய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டே இந்த பீரை தயாரிக்கிறார்கள். பெண்கள் விரும்பி குடிக்கும் வகையில் இது தயாரிக்கப் பட்டிருப்பதால் இதற்கு பெயரும் 'லேடி பேர்டு பயோ-பீர்' என்று பெண்கள் சம்மந்தப்பட்ட பெயரையே வைத்திருக்கிறார்கள்.


  சாதாரண பீர்கள் கொழுப்புச் சத்துகளை அதிகரிக்கும். ஆனால் இந்த பீர்கள் கொழுப்பு சத்தினை சேர விடாமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது, அதனால் அல்சரைக் குணப்படுத்துகிறது. வயதான ஆண்களுக்கு ஏற்படும் மூட்டு வலியையும் தடுக்கிறது. இப்படி ஏகப்பட்ட பயன் இருப்பதால் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பயன்படுத்தலாம் என்கிறது கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.
  33 கருத்துகள்:

  1. சிகரெட் குடிக்கும் பழக்கத்தை கைவிடுவதற்காக ஒரு சிகரெட் உள்ளதாகக் கேள்விப்பட்டேன். அதுபோல இதுவும் வித்தியாசமாக உள்ளது. நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  2. பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் என்பது பழையகாலங்களில் நடைபெற்றது அவங்க எல்லாம் இப்போது எனக்கு இணையாக சில நேரங்களில் இன்னும் அதிகமாக ரம் விஸ்கி வோட்கா குடிக்கிறாங்க

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நான் இந்தியப் பெண்களைப் பற்றி சொல்கிறேன் நண்பரே! நீங்கள் அமெரிக்கராக பதிலளிக்கிறீர்கள்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  3. சில பெண்கள் ஆண்களுக்கு நிகர் என்ற போதையில் சில தப்பிதமான் ஆண்களின் செயல்களை பின் பற்றுகின்றனர். ஆனால் திரும்பி பார்க்கும் ஒரு சூழல் வரும். மாற்றம் வரும். ஒரு வேளை ஒரு தலைமுறை காத்திருக்க வேண்டும் அதன் பாதக சாதக சூழலை புரிந்து உணர

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நவீன தொழில்நுட்பத்திற்கும் தாராளமயமாக்களுக்கும் பலியாகிய தலைமுறைகள் நாமும் நமக்கு பிந்திய தலைமுறையும் தான். இவர்களில் ஏற்படும் பாதிப்பை வைத்து இனி வரும் தலைமுறைகள் தங்களை திருத்திக் கொள்ளும்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  4. இதையும் டாஸ்மாக்கிலே விற்கிறாங்களா? தமிழகத்திலேயே சில கூலித்தொழிலாளி பெண்கள் மது அருந்துவதை நேரிடையாக பார்த்து இருக்கிறேன்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இனிமேல்தான் வர உள்ளது. டாஸ்மாக்கில் வருவதற்கான வாய்ப்பு குறைவு. போதையில்லாத மது இங்கு விற்பனை ஆவது சந்தேகமே!
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
   2. ஹஹஹஹ் அது சரி! நண்பர்கள் இருவருக்கும் ஒரு விஷயம்....சென்னையில் மருந்துக் கடைகளின் அருகிலேயே எலைட் டாஸ்மாக் கடைகள் இருக்கின்றது தெரியுமா...அதுவ்ம் ஷாப்பிங்க் காம்ப்ளெக்சில்....பெண்கள் உள்ளே சென்றதைப் பார்க்க நேரிட்டது. வாங்கினார்களா என்று தெரியாது...(மால்கள் இல்லையா அதனால்...) இப்படி மால்கள், ஷாப்பிங்க் காம்ப்ளெக்சில் கூட விற்க முடிகின்றது என்றால் யார் இதற்குக் காரணம்?!!! ஐயோ சாமி வேண்டாம்யா நான் ஏதோ சொல்லப் போக அப்புறம்....வினைதான்...ஹஹஹ்

    கீதா

    நீக்கு
   3. அரசுதான், சொல்லிவிடுங்கள். இதுக்கெல்லாம் கேஸ் போடமாட்டார்கள். மது விற்பனைக்கு டார்கெட் வைத்து, அது குறைந்தால் பணியாளர்களை தண்டிப்பது இங்கு மட்டுமே நடக்கும் கூத்து. அரசாங்கம் டார்கெட் வைக்க நிறைய துறைகள் இருக்கு. இதிலே நமது அரசின் லட்சணம் தெரியவில்லையா?

    நீக்கு
  5. நண்பரே/சகோ உங்கள் ஆதங்கம் புரிகின்றது. காலம் மாறிக் கொண்டு வருவது தெரிகின்றது..அதுவும் மிகவும் மோசமாக...ம்ம் குடிக்க வேண்டும் என்று பெண்களும் விரும்புவதால்தானே பன்னாட்டு நிறுவனங்களும் தூண்டில் போடுகின்றன. அவர்கள் மனதில் திடம் இருந்தால் அவர்களையும் மீறி இல்லை தூண்ட முடியாதுதானே. பெண்களும் அதை விரும்புவதால்தான் இப்படி...இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் பொருந்தும்.

   சங்க இலக்கியங்கள் சொல்லுவது என்னவென்றால் ஔவைப்பாட்டியும் அரசர்களுடன் குடித்ததாகத்தான் சொல்லப்படுகின்றது. அன்றைய காலகட்டத்திலும், பண்டைய தமிழர்களிடையேயும் மது அருந்தும் பழக்கம் இருக்கத்தான் செய்தது. அதுவும் ரோமாபுரியிலிருந்து வந்த (இப்போதைய வார்த்தையில் வெளிநாட்டுச் சரக்கு??!!) மதுபானங்களை அருந்தியதாக. வழிபாட்டில் கூட அதைப் படைத்ததாகவும் சொல்லப்படுகின்றது. இப்போதும் கூட கிராமங்களில் படையல்களில் மதுவும் இடம் பெறுகின்றது. உங்களுக்கும் தெரிந்திருக்கும்.

   இடையில் தமிழகத்தில் விரவிய சமண பௌத்த சமயங்கள் தான் கள்ளுண்ணாமையை பரப்பின. அப்படித்தான் கள்ளுண்பது தவறு என்ற கருத்து ஏற்பட்டு தமிழ்நாட்டில் இருந்த சைவ, வைணவ சமயங்களும் அதை ஏற்று கொள்கையாகக் கடைப்பிடித்து அறிவுரை செய்யத் தொடங்கின அதுவும் பாபம் என்ற அடிப்படையில்.

   அப்போதும் பெண்கள் குடித்தார்கள் இப்போதும் குடிக்கின்றார்கள். அது தவறு என்பது இடையில் தான் வந்தது. ஆண்களும் குடிக்கக் கூடாது என்று. ஆனால் நமது சமூகத்தின் பார்வை ஆண், பெண் உரிமைகளாகப் பார்ப்பதால்...

   எனவே இப்போது நாம் பெண்கள் மது அருந்துவதைச் சொல்ல முடியாது காலம் காலமாக இருந்து வருவதுதான்.....கூலி வேலை செய்யும் பெண்கள் குடிக்கின்றார்கள். என்ன அவர்கள் குடிப்பது நாட்டுச் சரக்கு. நவநாகரீகப் பெண்கள் குடிப்பது "நல்ல சரக்கு". அஹஹஹ்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நானும் படித்திருக்கிறேன். நமது மூதாதையர்கள் உபயோகித்திருந்தாலும் மது ஒன்றும் பெருமைப் பட்டுக்கொள்ளும் நல்ல விஷயமில்லை. ஆல்கஹாலை கொஞ்சம் சாப்பிட்டாலும் அந்தந பாதிப்பு மிக அதிகமே. அதை முற்றிலுமாக தவிர்ப்பதே நல்லது.
    வருகைக்கு நன்றி துளசி சார்!

    நீக்கு
   2. நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும். பெருமைப் பட்டுக் கொள்ள வேண்டியது இல்லைதான். பாதிப்புகள் அதிகமே. அதன் சீரழவித்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றோமே. சொல்ல வந்தது இதுதான் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகின்றது என்று..ஆனால் இப்போது அரசும் ஆதரவளிக்க எல்லோரும் தள்ளாட ஆரம்பித்து தமிழகமே தள்ளாடுகின்றது. எங்கள் ஊரில் கள்ளு ஒழிப்பு என்று இருந்தாலும் இங்கும் விற்கப்படுகின்றதுதான். இருந்தாலும் வெளியில் அவ்வளவாக இல்லை என்றாலும் வீட்டிற்குள் கல்சர் என்று அருந்துகின்றார்கள்தான். தமிழ்நாட்டிலிருந்தும் வருகின்றது...

    நீக்கு
  6. இப்படி அருந்துவதால் பின்விளைவுகள் நிறைய உண்டுதான் சகோ. என்னதான் ஆல்கஹால் குறைவு என்றாலும். ..

   என்ன சொல்ல என்று தெரியவில்லை சகோ..நான் ஒவ்வொரு முறை மருந்து வாங்கச் செல்லும் போதும் அதன் அருகிலேயே பளபளப்பான டாஸ்மாக்கை (எலைட்) பார்க்க நேரிடும் போது மனம் வேதனைப்படுவது உண்மை..அதுவும் பிரபலமான ஷாப்பிங்க் காம்ப்ளெக்சில்....நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றது என்று...

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நான் சிறுவனாக இருக்கும்போது தெருவுக்கு ஒரு குடிகாரன்தான் இருந்தான். இன்று தெருவுக்கு ஒருவர்தான் குடிக்காமல் இருப்பார் போல் தெரிகிறது. மதுவை பொதுவுடமையாக மாற்றிய பெருமை அரசுக்கே சேரும்.

    நீக்கு
  7. ஆணுக்கு தனி ,பெண்ணுக்கு தனி ,அப்புறம் ஒண்ணு பாக்கி இருக்கே :)

   பதிலளிநீக்கு
  8. வணக்கம் நண்பரே..
   இது ஒரு ஏமாற்று வேலைக்கான தொடக்கமே இந்தப் பழக்கத்துக்கு போனவர்கள் அதையும் குடித்துப் பார்ப்போமே என்ற நிலைக்கு நாளை வரமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? இங்கிலீஷ் கலாச்சாரத்தை நாம் என்று பின்பற்றத் தொடங்கினோமே.. அன்று முதலே நாம் குழியில் விழுந்து விட்டோம் இது எதுவரை போகுமோ....
   தமிழ் மணம் 6

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கில்லர்ஜி இது ஆங்கிலக்கலாச்சாரம் இல்லை ஜி. அதற்கு முன்பே இங்கும் இருந்தது, தமிழ் கலாச்சாரத்திலும். வெளிநாட்டவரின் படையெடுப்பால் இன்னும் கூடியது. பின்னர் தானே ஆங்கிலேயர்கள்....

    நீக்கு
  9. அடுத்து குழந்தைகளுக்கு என்று வரும்.... பன்னாட்டு என்றால் பன்னாடை என்றுதான் அர்த்தம்.. நண்பரே

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வரலாம் யார் கண்டது. ஒருவேளை இப்போதே கூட இருக்கலாம்.

    நீக்கு
  10. அப்படின்னா இந்த தீபாவளி எங்களுக்குலாம் ஸ்பெஷல் தீபாவளியா?! இனி டாஸ்மாக் வியாபார டார்கெட் இரு மடங்காகுமே! இதனால் நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை தீட்டலாமில்ல?!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கண்டிப்பாக ஸ்பெஷல் தீபாவளிதான். ஆனால் விற்பனைக்கு வந்துவிட்டதா என்பதுதான் தெரியவில்லை.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  11. வட இந்தியாவில் பல இடங்களில் குடிப்பதில் ஆண் பெண் பாகுபாடு கிடையாது. திருமணங்களில் நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன்! இதில் இந்த விளம்பரங்களும் வந்துவிட்டால் குற்ற உணர்வின்றி குடிக்கலாம் எனும் வசதி! :(

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம் நண்பரே, நாடு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது.

    நீக்கு
  12. ரெம்ப முக்கியம், சில நேரம் நம்ம பெண்களூக்கு இதெல்லாம் குடிக்காமலேயே போதை தலையில் ஏறிக்கிடக்கும் .இதையும் குடிச்சிட்டால்.. உலகம் உருப்படும்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முக்கியமில்லை என்றுதான் சொல்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் நுகர்வோர்களாகவே பார்க்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பெண்களையும் இந்த வட்டத்துக்குள் கொண்டு வரத் துடிக்கின்றன. அதன் முதற்கட்ட முயற்சிதான் இப்போது சினிமா ஹீரோயின்கள் குடிப்பதுபோல் காட்டுவது.

    வருகைக்கு நன்றி நிஷா!

    நீக்கு
  13. அதெல்லாம் சரிங்க.. அங்கே மழை வெள்ளம் என ஊரே உலகமே பதறிட்டிருக்கே! நீங்க எப்படி இருக்கின்றீர்கள்! உங்க பக்கம் எல்லோரும் நலமா?

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்