Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பள்ளிகளில் பாடமாக கூட்டாஞ்சோறு..!


ர் எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம் என்று இதனை சொல்லலாம். தனது எழுத்தை அடுத்த தலைமுறையினர் படிக்கிறார்கள் என்பது வானில் சிறகடித்து பறக்கும் உணர்வுக்கு சமமானது. எனக்கும் அப்படியோர் உணர்வு ஏற்பட்டது, சிங்கப்பூரிலிருந்து வந்த அழைப்பின் மூலம்..!

சரியாக இரண்டு மாதத்திற்கு முன்பு ஓர் அழைப்பு. சத்யா என்பவர் பேசினார். தான் ஓர் ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். கூட்டாஞ்சோறைப் பற்றி வியப்போடு பேசினார். எப்படி தகவல்களை திரட்டுகிறீர்கள் என்ற தொழில் ரகசியத்தை கேட்டார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடித்த அந்த உரையாடலில் உங்கள் தகவல்களை எங்கள் பள்ளியில் பாடமாக வைத்திருக்கிறோம் என்ற நம்பமுடியாத தகவலை சொன்னார். 


எப்படி ஒரு வலைத்தளம் ஒரு பள்ளிக்கூடத்தில் பாடமாக இருக்கும் என்ற வியப்போடு அவரிடம் விளக்கம் கேட்டேன். அப்போதுதான் அவர் சிங்கப்பூரின் கல்வி முறையை விளக்கினார். பாடப்புத்தகத்தை படித்து அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் சொல்லும் நமது கல்வி முறையிலிருந்து அது முற்றிலும் மாறுபட்டிருந்தது. 

அங்கு பாட நூல்கள் கிடையாது. ஏதாவது ஒரு நல்ல தகவல்களை கொடுத்து, அதை மாணவர்கள் படிக்க வேண்டும். பின் அந்த தகவலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். அதனை கொண்டு மதிப்பெண்கள் தரப்படும். இதுதான் அவர்கள் முறை. இது ஆறாம் வகுப்பு வரை நடைமுறையில் இருக்கிறதாம். 

தகவல்களுக்கான பதில்கள் மட்டுமல்லாமல், புதிய தகவல்களை தேடிக் கொண்டு வருவதும் மாணவர்களின் பணிகளில் ஒன்று. இந்த தகவல் திரட்டுக்கும் 'கூட்டாஞ்சோறு' மாணவர்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. அதனால் மாணவர்கள் பலர் கூட்டாஞ்சோறில் வித்தியாசமான தகவல்களை தேடுகிறார்கள். 


இது இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்தது. கடந்த வாரம் மற்றோர் அழைப்பு. அதுவும் சிங்கப்பூரிலிருந்துதான். அந்த அழைப்பும் அதே நிகழ்வைத்தான் சொன்னது. ஆக மொத்தம் தற்போது இரண்டு பள்ளிக்கூடங்களில் 'கூட்டாஞ்சோறு' பாடமாக உள்ளது. இது எனது பொறுப்பை இன்னும் அதிகரித்துள்ளது. தேடலை கூட்டியுள்ளது. அரிதான தகவல்களை தரவேண்டும் என்ற ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.

எனக்கு நெருடலாக இருந்த ஒரு விஷயத்தையும் அவர்களிடம் கேட்டேன். மாணவர்களாக பரிந்துரை செய்யும் இந்தத் தளத்தில் சில பாலியல் தகவல்களையும் கொடுத்துள்ளேனே, அது அவர்களை பாதிக்கும் என்றேன். உங்கள் தளத்தில் வெகு சில பதிவுகள்தான் பாலியல் பற்றி இருக்கிறது. அதுவும் தகவல் தருவதாகத்தான் இருக்கிறது. மற்ற தளங்களில் மோசமான தகவல்களை தெரிந்து கொள்வதை விட உங்கள் தளம் பயனுள்ள தகவல்களை தருகிறது. மேலும் நாங்கள் பாலியல் கல்வியையும் நடைமுறை படுத்தியுள்ளோம். அதனால் அது சம்பந்தமான தகவல்களையும் தாருங்கள் என்று கூறினார்கள். 

இனி அது நோக்கி பயணிக்க வேண்டும்.

==============================================================


மேலும் எனது பதிவுகளை 'யூ-டியூப்' மூலம் காணொளியாக கொடுக்கலாம் என்ற ஒரு யோசனையும் இருக்கிறது. அதன் முதல் முயற்சியாக எனது மகள் வானொலியில் நிகழ்த்திய புத்தக மதிப்புரை ஒன்றை எனது சொந்த முயற்சியில் காணொலியாக மாற்றியுள்ளேன். நண்பர்கள் பார்த்து கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

இதோ அந்த காணொலி 






33 கருத்துகள்

  1. இதை விட ஒரு வலைப்பதிவருக்கு வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்... எனது மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்...

    தேடுதல் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் தோழரே!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  2. அண்ணே!
    வாழ்த்துகள் அண்ணே!
    நம்ம வலைப்பதிவர்களுக்குத் தங்கள் பணிி
    நல்லதோர் எடுத்துக்காட்டு!

    பதிலளிநீக்கு
  3. மிக மகிழ்ச்சி நண்பரே தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள்! நண்பரே! சகோ!

    தங்கள் மகளின் குரலையும் கேட்டாயிற்று காணொளியில்....அருமை!! மகளுக்கும் வாழ்த்துகள் !!

    பதிலளிநீக்கு
  5. சிங்கப்பூரின் ஆரம்பக் கல்வியில் ’கூட்டாஞ்சோறு’ தமிழ் வலைத்தளத் தகவல்கள் முக்கியமாக இடம் பெற்றிருப்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது தங்களுக்கு ஒரு மாபெரும் அங்கீகாரம் மட்டுமே. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    காணொளியும் பார்த்தேன். இதுவரை மறைக்கப்பட்டு வந்துள்ள நம் தமிழக வரலாறு பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்களாகவே உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா! இதன் மூலம் எனது பொறுப்பு கூடியுள்ளதாகவே நான் நினைக்கிறேன்.
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  6. பள்ளி மாணவர்களுக்கான தளமாக உங்கள் வலைத்தளம் பரிந்துரை ஆனதில் மிக்க மகிழ்ச்சி. இனி கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை, உண்மை!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  7. ஆகா! இதுவன்றோ சாதனை! மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களை நினைத்தால்! பெருமகிழ்ச்சி! பெருமகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே !
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  8. நம்ப முடியாத தகவல் தரும் உங்களுக்கே நம்ப முடியாத தகவலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நம்பமுடியாததுதான்..!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் நண்பரே
    தங்களின் உழைப்பிற்கும் நேர்மையான எழுத்திற்கும்
    கிடைத்திருக்கும் அங்கீகாரம் நண்பரே
    தொடரட்டும் சாதனைகள்
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  10. மனம் நிறைந்த வாழ்த்துகள் செந்தில்.... உங்கள் உழைப்பிற்குக் கிடைத்த பரிசு/அங்கீகாரம் இது. மேலும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே!
      தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  11. வாழ்த்துகள்
    பலருக்கு வலைத்தளம் என்பது ஒரு பொழுதுபோக்கு அதாவது just time pass!
    சிலருக்கு தங்களின் ஆதங்கத்தை கொட்டித்தீர்க்க ஒரு வடிகால்.
    ஆனால் உங்களுக்கோ அது ஒரு ஜீவன். தகவல்களை அள்ளித்தரும் ஒரு அட்சயபாத்திரம்.
    உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த ஒரு அங்கிகாரம் மிகவும் சரியானதே!
    மீண்டும் வாழ்த்துகள்.
    உங்களின் மகளின் குரலை நான் ஏற்கனவே வாட்ஸாப்பில் கேட்டுவிட்டேன். இந்த பதிவை பார்த்தபின் தான் தெரிந்தது உங்களின் மகள் என்று. மிகவும் நேர்த்தியான தமிழ் உச்சரிப்பு. சிறந்த புத்தக மதிப்பீடு. அவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரியப்படுத்துங்கள்.
    இந்த புத்தகத்தை கண்டிப்பாக வாங்க முடிவெடுத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் மகிழ்ச்சி செந்தில்! உங்கள் உழைப்புக்கும் எழுத்துக்கும் கிடைத்த அங்கீகாரம் இது! யூ டியூப் கேட்டேன். தங்கள் பெண்ணின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாகவும் திருத்தமாகவும் உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் தங்கள் வலைப்பூ மென்மேலும் தகவல்களை அள்ளித் தரட்டும்! எதிர்காலத்தில் தமிழில் நம்பகத்தன்மை கொண்ட ஒரு விக்கிப்பீடியாவாக உங்கள் வலைப்பூ திகழும் என்பது என் நம்பிக்கை!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை