ஒருவரின் உடல், மனம், வாழ்க்கை பாதிக்கப்படும் வகையான எந்த நிகழ்வுக்கும் தவறான ஒரு தீர்ப்பு அல்லது முடிவுதான் காரணம் என்பதை உணரும் போது பாதிக்கப்பட்ட நபருக்கு அவரின் பாதிப்புக்கு ஏற்றவாறு இழப்பீடு வழங்கப்படும். இதனையே நஷ்டஈடு என்கிறார்கள். அப்படிப்பட்ட தனி நபர் இழப்பீட்டில் மிக அதிகமான இழப்பீடை பெற்றவர் ஜோசப் என்பவர்.
சம்பந்தமே இல்லாமல் குற்றவாளி கூண்டில் ஏறி, தண்டனை பெறும் சம்பவம் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தனது அன்பான குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார் ஜோசப். சராசரி வருமானம் கொண்ட குடும்பம். தனது குடும்பத்தில் ஏற்படும் திடீர் பணநெருக்கடியை சமாளிக்க அவ்வப்போது கந்துவட்டிக்கர்களிடம் கடன் வாங்குவது அவரது வழக்கம்.
அப்படிதான் ஒருமுறை 400 டாலர் பணத்தை ஒரு கந்துவட்டிகாரனிடம் வாங்கியிருந்தார் ஜோசப். குடும்பத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஜோசப்பால் சொன்னபடி வட்டித்தொகையை குறிப்பிட்ட நாளில் கட்டமுடியவில்லை. அதற்காக ஜோசப் வீட்டிற்கு அடியாட்கள் சிலரை அனுப்பி பணத்தை வாங்கி வரும்படி கந்துவட்டிக்காரன் சொல்லியிருந்தான்.
அடியாட்கள் வீட்டுவாசலில் நின்று கொண்டு திமிராக பேசினார்கள். ஜோசப்பை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரையும் மனைவியையும் தவறாக பேசினார்கள். மனைவியின் நடத்தையை விமர்சித்தார்கள். ஜோசப்பும் பொறுத்து பொறுத்துப் பார்த்தார். வாய்ச்சண்டை கைகலப்பாக .மாறியது. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஜோசப் ஒரு உருட்டுக்கட்டையை எடுத்த அடியாட்களை அடிக்கத் தொடங்கினார். உக்கிரமான அந்த அடியை தாங்கமுடியாமல் அடியாட்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடத்தொடங்கினார்கள். ஜோசப்பும் விடாமல் வீதியில் ஓட ஓட அடியாட்களை அடித்து விரட்டினர்.
இந்த விஷயம் விபரீதமானது. ஏனென்றால் அடியாட்களை கந்துவட்டிக்காரனுக்காக அனுப்பி வைத்தவன் பார்போஸா என்ற ரவுடி. இவன் கொலை செய்வதில் கில்லாடி. 30-க்கும் மேற்பட்ட கொலைகளை அசால்டாக செய்தவன். தனது அடியாட்களை ஜோசப் அடித்து அனுப்பியது அந்த ரவுடி மனதில் வஞ்சகமாக வளர்ந்தது. உடனே ஜோசப்புக்கு பார்போஸா ஒரு கடிதம் எழுதினான். அதில் 'சரியான நேரத்தில் உனக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது' என்று மட்டும் எழுதி அனுப்பியிருந்தான். அப்போது அந்தக் கடிதத்தின் அர்த்தம் ஜோசப்புக்கு புரியவில்லை.
சில வருடங்கள் கழித்து, அதாவது 1965-ல் எட்வார்ட் டீக்கன் என்பவரை ஒரு மாபியா கும்பல் சுட்டுத் தள்ளியது. இந்த வழக்கில் சாட்சியாக நீதிமன்றத்துக்குப் போனான் பார்போஸா. நீதிமன்றத்தில் இந்தக் கொலையை செய்தது ஜோசப்தான் என்று கூறினான்.
அவ்வளவுதான் ஜோசப்பை ஜீப்பில் அள்ளிப்போட்டுக் கொண்டு போனது போலீஸ். ஜோசப் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார், என்னென்னவோ முறையிட்டார். போலீஸ் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. சிறையில் தள்ளியது. 35 வயதில் தனது குடும்பத்தை பிரிந்து சிறைக்குப் போனார். சிறையில் இருந்தபடியே வெளியே வருவதற்காக ஆதாரங்களை திரட்டினார்.
30 வருடங்கள் சிறையிலேயே கடந்தது. ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கவில்லை. கடைசியில் திடீரென்று விடுதலை செய்தனர். அதற்கு காரணம் ஜோசப் சிறைக்குள் இருந்தபடியே தனது வழக்கறிஞர் மூலம் திரட்டிய ஆதாரம்தான். ஜோசப்பின் வக்கீல் முதல் தகவல் அறிக்கையை யதேச்சையாக புரட்டிக்கொண்டிருந்தபோதுதான் ஒரு ஆதாரம் கிடைத்தது. முதலில் தயாரிக்கப்பட்ட எப்.ஐ.ஆர்.-ல் ஜோசப் பெயர் இல்லை. இரண்டாவதாக உருவாக்கப்பட்ட எப்.ஐ.ஆர்.-ல் வலுக்கட்டாயமாக அவர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இதுதான் ஜோசப் விடுதலையாக காரணமாக இருந்தது.
இதையே ஆதாரமாக வைத்து ஜோசப் வெளியே வந்து பொய் வழக்கு போட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 101 மில்லியன் டாலர் தொகையை நஷ்டஈடாக பெற்றார். நமது இந்திய மதிப்பில் ரூ.67,670 கோடி. உலகிலேயே அதிக அளவில் பெறப்பட்ட தனி நபர் நஷ்டஈடு இதுதான். ஆனால், இளமை இழந்தபின் வரும் வெறும் பணத்தை வைத்து என்ன செய்வது என்று வருத்தப்பட்டார் ஜோசப்.
இந்தப் பதிவை காணொலியாகவும் காணலாம்.
* * * * * * * * *
இந்தப் பதிவை காணொலியாகவும் காணலாம்.
யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய நஷ்டஈடு
ஜோசப் அவர்களின் கதையைக்கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. இளமையை இழந்தபின் கிடைத்துள்ள ஏராளமான நஷ்டஈடு, அவர் நினைப்பது போலவே பயனற்றதுதான்.
பதிலளிநீக்குசாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.
பதிலளிநீக்குஇந்த சாது மிரண்டதில் வீடு கொள்ளாத அளவிற்கு பணம் கிடைத்தது.
அதைக் கொண்டு அவர் தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யலாம்.
அத்தனை பணம் கிடைத்தாலும் நிம்மதி இல்லாமல் போயிற்று....
பதிலளிநீக்குதன்னைப் போல் வேறு யாருக்கும் தண்டனை கிடைக்காமல் இருக்க பாடுபடலாம்.....
பணம் கிடைத்தும் நிம்மதி இல்லை...அவரது இறுதி வரிகள் இளமை போனபின்....
பதிலளிநீக்குபயனற்றது என்று சொன்னாலும் அதையும் பயனுள்ளதாக மாற்ற பல வழிகள் உள்ளதே. மனமிருந்தால் வழி பிறக்கும்
இளமை... குடும்ப வாழ்க்கை இழந்த பின் கிடைத்த பணம் நிம்மதியை கொடுக்காதே...
பதிலளிநீக்குகருத்துரையிடுக