• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், ஜனவரி 12, 2017

  எனது 400-வது பதிவு!


  'கூட்டாஞ்சோறு' 400 பதிவுகளைக் கண்டிருக்கிறது. சமீபகாலமாக பல்வேறு பணிகள் குறுக்கிடுவதால் முன்புபோல் வலைப்பூவில் முழுமையாக பணியாற்ற முடியவில்லை. நண்பர்களின் பதிவுகள் பலவற்றை அலைப்பேசி வாயிலாக வாசித்த போதும் முன்பு போல் கருத்திட முடியவில்லை. எனது பதிவுக்கு கருத்திடும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்க இயலவில்லை. ஆனாலும் தொடர்ந்து தங்கள் கருத்துக்களை வழங்கி வரும் பதிவுலக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல!


  இன்றைய கணக்குப்படி இதுவரை 7,13,925 பார்வைகள் கூட்டாஞ்சோறுக்கு கிடைத்திருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் பார்வைகளின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்திருக்கிறது. கூட்டாஞ்சோறுக்கு கருத்துரைகளும் வாக்குகளும் குறைவாக இருந்த போதும் நாளுக்கு நாள் புதுப்புது பார்வையாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு தினமும் அதிகரித்துக்கொண்டே செல்லும் பார்வைகளின் எண்ணிக்கையே சாட்சியாக இருக்கிறது. 

  சமீபத்தில் முத்துநிலவன் அய்யா அவர்களின் முயற்சியால் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் பல வழிகளில் எனக்கு உதவியாக இருந்தது. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கூகுளில் வார்த்தைகள் மூலம் தேடும்போது நமது வலைப்பூ வருவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கூறிய தொழிநுட்பங்கள் பயன் தந்திருப்பதாகவே தோன்றுகிறது. அந்தப் பயிற்சிக்குப்பின் பதிவிட்ட அனைத்துப் பதிவுகளும் நண்பர் கற்றுத்தந்த தொழில்நுட்ப அடிப்படையிலேயே பதிவிட்டு வருகிறேன். அது நல்ல பலன் தந்திருப்பதாக தோன்றுகிறது. பயிற்சி அளித்த அனைவருக்கும் நன்றி!


  இந்த ஆண்டு எனது பதிவுகள் சிலவற்றை காணொலியாக மாற்றி யூடியூப்பில் வெளியிடலாம் என்றிருக்கிறேன். இது பள்ளிகளுக்கு பயன்படும் என்று சில ஆசிரிய நண்பர்கள் கூறினார்கள். அதற்கான முதல் முயற்சியாக இந்த காணொலியை முயற்சித்துள்ளேன். பார்த்து கருத்திடுங்கள். அப்படியே சேனலையும் subscribe  செய்து விடுங்கள். புதிதாக பதிவேற்றும் காணொலி உடனுக்குடன் உங்களை வந்தடையும். 


  தொடர்ந்து கூட்டாஞ்சோறுக்கு வருகை தந்து கருத்திட்டு ஆதரவு அளித்துவரும் அத்தனை அனுபுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல கோடி!


  அன்புடன்,
  எஸ்.பி.செந்தில் குமார்.
  14 கருத்துகள்:

  1. மிகக்குறுகிய காலத்தில் 400-ஆவது பதிவினை எட்டியுள்ள தங்களுக்கு என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

   வெறும் எண்ணிக்கையில் மட்டுமல்லாது தரத்திலும் தங்கள் பதிவுகள் அனைத்தும் தங்கமாகவே உள்ளன. VERY VERY INFORMATIVE & EXCELLENT.

   ஸ்பெஷல் பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். தேங்கி விடாமல் மேற்கொண்டு பத்திரிக்கை உலகில் உள்ள தன்மைக்குப் போல உங்கள் எழுத்து நடைகளை மாற்றி அனைவருக்கும் உங்கள் எழுத்து சென்று சேரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

   பதிலளிநீக்கு
  3. மனமார்ந்த வாழ்த்துகள்! விரைவில் தங்களின் பதிவு ஆயிரத்தைத் தொட வாழ்த்துகிறேன். காணொளி அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
  4. மனமார்ந்த பாராட்டுகள் செந்தில்.. காணொளி முயற்சி மிக அருமை.. பேசுபவர் சற்று நிறுத்திப் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.

   பதிலளிநீக்கு
  5. வாழ்த்துகள்

   காணொளி முயற்சி வெற்றிபெற வாழ்துகள்

   பதிலளிநீக்கு
  6. தங்கள் தகவல் தேடும் முயற்சி
   தங்கள் ஓயாத பதிவிடும் பணி
   எல்லாமே இவ்வெற்றிக்கு உந்துசக்தி
   வெற்றி நடை போட வாழ்த்துகள்

   பதிலளிநீக்கு
  7. நானூறு ஐநூறாக ஆயிரமாக வளர்ந்திட வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
  8. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். உங்கள் புதிய முயற்சிகளும் வெற்றி பெறட்டும்....

   பதிலளிநீக்கு
  9. 400 ஆவது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்