Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வரப்போகும் பட்ஜெட் வாழ்வா? சாவா? பட்ஜெட்!



2017-ம் ஆண்டின் ஆரம்ப கட்டத்தில் பல்வேறு பொருளாதார புள்ளி விவரங்களும், வளர்ச்சியை உறுதி செய்வதாக அரசு அறிவித்திருந்தது. தென்மேற்கு பருவமழை சிறப்பானதாக அமைந்தது மற்றும் 7-வது சம்பள கமிசன் நடைமுறைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் நுகர்வு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல், எதிர்பார்த்ததைவிட பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி வசூல் அதிகரிப்பும் பெருத்த நம்பிக்கையை தருவதாக அமைந்திருந்ததை மறுக்கமுடியாது.

இவ்வளவு சாதகமான அம்சங்கள் இருந்தும், இந்தியப் பொருளாதாரம் மந்த கதிச்சூழலை நோக்கி நகர்வதற்கான காரணம் புரியவில்லை. ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்கு முன்பாகவே 2016-17 நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டில் இருந்த 7.6 சதவிகிதம் என்பதைவிட குறைந்து 7.1 சதவிகிதமாக இருக்கும் என முன்கூட்டிய வளர்ச்சி மதிப்பீடுகள் வெளியிடப்பட்டன என்பதை நோக்கும்போது, அதனை துல்லியமாக உணர முடிகிறது.


அதனால்தான் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் வளர்ச்சியின் விகிதம் மேலும் சரிவடையக்கூடும் என தற்போது அஞ்சப்படுகிறது. 2015-16ல் 8.8 சதவிகிதமாக இருந்த தொழில்துறை வளர்ச்சி தற்போது 6.1 சதவிகிதமாகவே இருக்கும் எனவும், சேவைகள் துறை கடந்த ஆண்டு வளர்ச்சி விகிதமான 8.6 சதம் என்பதிலிருந்து நடப்பாண்டில் 6.8 சதமாக குறையும் என்றும் புள்ளி விவரங்களிலிருந்து தெரிய வருகிறது.

இந்நிலையில், பேரியல் பொருளாதாரக் காரணிகள் சிறப்பாக அமைந்திருந்தபோதும், வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்படுவது எதனால் என்பதை அரசு கவனமாக ஆராய வேண்டியுள்ளது. ரூபாய் மதிப்பிழப்பு அடிப்படையிலான வளர்ச்சியின் வீழ்ச்சியானது தற்காலிகமானது என்றே எடுத்துக் கொண்டாலும், அதற்கு முன்னதாகவே மந்த கதிச்சூழல் உணரப்பட்டது நிலைமையை சிக்கலாக்கியே உள்ளது. குறைந்த வட்டிக்கு கடன் வசதிகள் கிடைத்தபோதிலும், வங்கிக் கடன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. அதேநேரம், தொழில்துறையின் உற்பத்தித் திறன் பயன்பாடு பெரிய அளவில் மாற்றிமின்றி தொடர்கிறது. வங்கிகளின் வாராக்கடன்கள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இதனின்றும் வரும் நாட்களில்  வீழ்ச்சியின் அளவு அதிகரித்துவிடாமல் இருக்கத் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நுகர்வுத் தன்மை குறைவு, அதன் அடிப்படையில் பெட்ரோலியப் பொருள் வரி வருவாய் சரிவு, பெரு நிறுவனங்களின் வருவாயில் வீழ்ச்சி என தொடர்ச்சியாக பொருளாதாரத்தில் சங்கடங்கள் நிலவி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவில் டெனால்டு டிரம்ப் அதிபரான பின்னர், அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக நமது ஏற்றுமதியும், தொழில்துறை மற்றும் சேவைகள் துறை உள்ளிட்ட அனைத்தும் சங்கடமான சூழல்களை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் பல்வேறு நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

இந்நிலையில், வங்கிகளில் பெருமளவில் குவிந்துள்ள டெபாசிட்டுகளின் அடிப்படையில் பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும் என்றும், அதன் அடிப்படையில் நுகர்வு போக்கில் மறுமலர்ச்சி ஏற்படும் என்றும் அரசு எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.


அதுமட்டுமல்லாமல், குறைந்த வட்டி விகிதங்களின் காரணமாக தொழில்துறை முதலீடுகள் அதிகரிக்கும் என்றும், அதன் மூலம் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கம் நிகழும் என்றும் அரசு எதிர்பார்ப்பது ஏற்கத்தக்கதுதான் என்றாலும், அவற்றிற்கான சவால்களும் இல்லாமல் இல்லை. மதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னர், நுகர்வுச் சந்தையில் மெத்தனம் தொடரும் நிலையில், குறைந்த கடன் வட்டி விகிதங்களும் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.

2019-ல் பொதுத்தேர்தல்களை எதிர் நோக்கியுள்ள மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு வரப்போகும் பட்ஜெட் வாழ்வா? சாவா? என்கிற அடிப்படையிலேயே அமைந்திருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

சவால்களை சந்தித்து அருண்ஜேட்லி வெற்றி பெறுவாரா என்பது வரும் நாட்களில் தெரியக்கூடும்.

கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 


* * * * * * * * * *

ல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் மதுரைக்கு வந்த இரண்டு ரயில்களை சிறைப்பிடித்து போராட்டம் செய்த போராட்டக் காட்சிகள்..!

தைப் புரட்சி - 2017 பாகம்-1




6 கருத்துகள்

  1. அருண்ஜேட்லி வெற்றி பெறுகிறாரோ இல்லையோ
    மக்கள் வெற்றி பெற வேண்டுமே

    பதிலளிநீக்கு
  2. பொருத்திருந்து பார்ப்போம் நண்பரே
    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. நல்ல பகிர்வு. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கும், என்ன கிடைக்கும் என்று.....

    பதிலளிநீக்கு
  4. புகழ்வாய்ந்த (எனக்கும் பிடித்த) பொருளாதார வல்லுனரான கேய்ன்ஸின் தியரி கடைப்பிடிக்கப்படவேண்டிய நேரம் என்று நினைத்த நேரம்....பொருளாதாரத்தின் நிலைமை மந்தமாக இருக்கும் போது முடுக்கிவிட அவர் சொல்லியிருக்கும் முறைகள்..இப்போது அதுதான் கையிலெடுக்கப்பட்டிருக்கிறது போலும். பார்ப்போம் பட்ஜெட் எப்படி என்ன சொல்லப் போகிறது என்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அருண் ஜெட்லி என்னமோ பண்ணட்டும்...
    ஆனா இந்த அரசைப் பொறுத்தவரை ஏழைகளை வதைப்பதைக் கொள்கை ஆக்கிக் கொண்டிருக்கிறது... மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை