எந்த அச்சுறுத்தலுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் அஞ்சுவதில்லை என்பதற்கு கோலாவின் வியோ பாக்கெட் பால் தமிழகத்தில் புகுந்திருப்பதே சாட்சி. ஜல்லிக்கட்டுக்கான எழுச்சி வெற்றிகரமாக முடிந்து ஓரிரு நாட்கள் கூட ஆகவில்லை அதற்குள் கைவரிசையை காட்டுகிறது கோலா. தமிழகத்திலுள்ள பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கிறது கொக்கோ-கோலாவின் வியோ பால்.
இது ஒரு லிட்டர் ரூ.125 என்ற விலையில் விற்கப்படுகிறது. அறிமுக சலுகையாக ஒரு லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம். அதனால் விற்பனை களைக்கட்டுகிறது. இந்தியாவின் முதல் குடிக்கும் பாலாக விற்பனைக்கு வந்திருக்கிறது. அதாவது குளிர்பானம் போல் இந்தப் பாலை அப்படியே அருந்தலாம். இந்தப் பால் குழந்தைகளையும் இளைஞர்களையும் சுறுசுறுப்பாக வைக்கக்கூடியது. அதேசமயம் அது தரக்கூடிய பக்கவிளைவுகள் பயங்கரமானவை.
வியோவில் அப்படியென்ன கோளாறு இருக்கிறது என்று கேட்கலாம்? இந்தப் பால் மரபணு மாற்றப்பட்ட மாடுகளில் இருந்து கறக்கப்படுகிறது. பாலை அதிகமாக சுரக்க வைப்பதற்காக இதன் மரபணுவில் பெண்மைக்கான ஹார்மோன் அதிக அளவில் ஏற்றப்பட்டுள்ளது. இது மார்பு புற்றுநோய், குடல் புற்றுநோய், விதை புற்றுநோய் போன்றவற்றை உருவாக்கக்கூடியது. அமெரிக்க ஆண்கள் மத்தியில் விதைப் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு இந்தப் பாலும் ஒரு காரணம் என்று மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. இதனால் இந்தப் பாலை ஐரோப்பா உட்பட 27 நாடுகளில் நிரந்தர தடை செய்திருக்கிறார்கள்.
இப்படி மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்வதற்கு எந்தவொரு பன்னாட்டு நிறுவனங்களும் தயங்குவதில்லை. இந்தியர்கள் உயிர் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.
எங்கள் பாலை குடித்தால் உங்கள் குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடுவார்கள் என்ற வாசகத்தோடு நம் உயிரோடு விளையாட இந்தப் பால் வந்திருக்கிறது. பெற்றோர்களுக்கு இதன் தாக்கம் தற்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மேல்நாடுகளில் கடுமையாக தடை செய்த பாலை கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல் இந்தியாவில் விற்பனை செய்ய ஒரு நிறுவனம் முயல்கிறது என்றால் அதற்கு காரணம் அரசியல்வாதிகள் கொடுக்கும் இடம்தான்.
உலகப் புகழ்பெற்ற 'டைம்' இதழ் உலகில் மிக மோசமான பானங்களில் முதல் இடத்தை 'வியோ' பாலுக்கு கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட பாலைத்தான் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது கோலா நிறுவனம். இந்த பாலுக்கு ஆதரவு தராமல் நமது நாட்டு மாடுகளின் பாலுக்கு ஆதரவு தந்து நம் ஆரோக்கியத்தையும் நமது பாரம்பரியத்தையும் காப்போம்!
உலகப் புகழ்பெற்ற 'டைம்' இதழ் உலகில் மிக மோசமான பானங்களில் முதல் இடத்தை 'வியோ' பாலுக்கு கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட பாலைத்தான் இப்போது இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது கோலா நிறுவனம். இந்த பாலுக்கு ஆதரவு தராமல் நமது நாட்டு மாடுகளின் பாலுக்கு ஆதரவு தந்து நம் ஆரோக்கியத்தையும் நமது பாரம்பரியத்தையும் காப்போம்!
* * * * * * * * * *
கோலாவின் 'வியோ' எனும் விஷப் பால்
மிகவும் பயனுள்ள எச்சரிக்கையாகக் கொடுத்துள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்குமக்களுக்கு நல்ல எச்சரிக்கை.....
பதிலளிநீக்குஅனைவருக்கும் புரிந்தால் நல்லது.
மக்கள் அனைவரும் இதை புறக்கணிக்க வேண்டும் நான் நிச்சயம் புறக்கணிப்பேன்
பதிலளிநீக்குகுடியரசு தின வாழ்த்துகள் நண்பரே
நல்ல பதிவு. நல்ல எச்சரிக்கை. இங்கு கேரளத்தில் வந்ததாகத் தெரியவில்லை...என்றாலும் எங்கள் ஊரில் எல்லாம் நாங்கள் கறந்த பால்தான் வாங்குகிறோம்...
பதிலளிநீக்குகீதா: சகோ! மிக அருமையான பதிவு. இந்த வியோ மில்கை உள்ளே விட்டது யார் அரசுதானே?! 100 % தாராளமயமாக்கல் அதுவும் விவசாயத்துறையில். இது ஒரு நாட்டிற்கு நல்ல பொருளாதாரக் கொள்கையே இல்லை. மட்டுமல்ல இப்போது நம் நாட்டில் கிடைக்கும் பால் எல்லாமே கலப்பினபால்தான். வெகு குறைவான சதவிகிதமே நாட்டு மாட்டுப் பால். என் மகனின் பாடத்தில் வந்ததுதான். அவன் சொல்லுவது இப்படிப் பல வருஷங்களாகக் குட்டிச்சுவராக்கி மாட்டையே கலப்பின மாடுகளாக்கி கலப்பின பாலைக் கொடுத்துவிட்டு அதை முழுவதும் நீக்க வேண்டும் என்றால் எப்படி எளிதில் முடியும். தில்லி மதர் டயரியாகட்டும், விஜயா டயரியாகட்டும், நம் ஆவின் ஆகட்டும் எல்லாமே கலப்பின பால்தான்..தூய நாட்டு மாடு பால் கிடையாது... இதை மாற்ற .வருடங்கள் ஆகும்..என்பதே..நம் அரசுதான் முக்கிய காரணம் இதற்கெல்லாம்...
சமீபத்திய விவசாயத் துறை நிகழ்வுகள்/உணவுமற்றும் உணவுப் பொருட்கள் துறையில் நிறைய அச்சத்தையே கொடுக்கிறது.
நம் நாடு ஒரு குப்பைக் கிடங்கு! அப்படி ஆக்கியதன் முழு பொறுப்பும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள்தான் காரணம். மக்கள் மார்க்கெட்டில் என்ன கிடைக்கிறதோ அதைத்தானே வாங்குவார்கள். நாம் நம் நாட்டையும் அரசையும் நம் தாயாகத்தான் நினைக்கிறோம். நாம் நம் குழந்தைகளுக்கு உடல் நலம் கெடும் உணவைக் கொடுப்போமா? சொல்லுங்கள். அப்போ மக்களுக்காக என்று சொல்லும் குடியரசு நாடு தன் மக்களைக் குழந்தைகளாகக் கருதினால் இப்படிப்பட்ட பொருட்களை இங்கே நுழைய அனுமதி கொடுக்குமா?..எத்தனை உணவுப் பொருட்கள் இப்படி நுழைந்துள்ளன.....பதிவாக எழுத நினைத்தேன்...இங்கே சொல்லிவிட்டேன்...
பதிலளிநீக்குகீதா
ஆரம்பத்திலேயே இந்த விசத்தை(யும்) தடுக்க வேண்டும்...
பதிலளிநீக்குஅடப்பாவிகளா... என்ன தைரியம். நம் அரசுமீது கோபம் வருகிறது. Why to reinvent the wheel? ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் நிறைய equipmentsம், technologyம் கொண்டிருக்கின்றன. அதைவிட, தன் மக்களின்மீது மற்ற எல்லா நாட்டவரையும்விட அக்கறையும் கொண்டிருக்கின்றன. அவர்கள் எதைத் தடை செய்தாலும், நாமும் உடனே தடை செய்வதில் என்ன பிரச்சனை? இதில் என்ன வெட்கம்?
பதிலளிநீக்குரொம்ப கஷ்டமில்லாமல், எந்த நாட்டில் உற்பத்தியாகிறதோ, அல்லது உரிமையாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ, அந்த நாடு தடை செய்த பொருள் இந்தியாவில் விற்கப்படக்கூடாது என்று சொல்லலாமே. இதைச் செய்யாமல் தூங்குபவர்களை எதற்கு துறை அமைச்சராக வைத்திருக்கவேண்டும்?
இந்த விஷச்செடியை முளையிலேயே கிள்ளியெறிவோம். தகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்!
சரியான எச்சரிக்கைப் பதிவு. நன்றி.
பதிலளிநீக்குநம் உயிரின் விலை தான் மிகவும் மலிவு! விழிப்புணர்வூட்டும் பதிவுக்கு நன்றி செந்தில்!
பதிலளிநீக்குall people who are selling milk to houses or cooperatives, at least in the cities inject hormones indiscriminately to increase yield. There is no "safe" milk anywhere. VIO is a flavoured milk variety, not plain milk, I believe.
பதிலளிநீக்குசுவையூட்டிப் பானங்கள்
பதிலளிநீக்குஎப்பவும்
சாவுக்கு வழிகாட்டிகள்
ஆகையால், இளநீர் போன்ற
இயற்கைப் பானங்களே சிறந்ததே!
சரியான நேரத்தில் சரியான எச்சரிக்கை மணியை நீங்கள் அடித்திருக்கிறீர்கள்! மக்களுக்கு இப்பொழுது இருக்கும் வெறுப்புக்கு விரைவில் இதற்கான சாவுமணியை அவர்கள் அடிப்பார்கள்.
பதிலளிநீக்குகருத்துரையிடுக