Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வாட்ஸாப்பில் வந்தவை




தமிழகத் தோழர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள்:-
நாளை நடக்கவிருக்கும் "நடிகர் சங்க உண்ணாவிரதப் போராட்டத்தின்" புகைப்படங்களையோ அல்லது காணொலியையோ யாரும் பகிரவேண்டாம்.
இளைஞர்கள் மீது இருக்கும் கவனத்தை அப்படியே நடிகர்கள் மீது திருப்பிவிடும்.
தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்தும் நாளை நம்மைக் கண்டுகொள்ளாது.
ரஜினி என்ன சொன்னார்?
கமல் என்ன சொன்னார்?
விஜய், அஜித், சூரியா என்ன சொன்னார்கள் என்று தான் விவாதிப்பார்களே தவிர, இளைஞர்கள் படும் துன்பத்தை நாளை துடைத்துவிடுவார்கள்.
அவர்களது போராட்டம் வரவேற்க வேண்டியதுதான். இருப்பினும் நாம் உணர்வுக்காகப் போராடுகிறோம், அது திசைதிரும்பிவிடக் கூடாது.
எனவே, அவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நமது நீதியை நிலைநாட்டிட தொடர்ந்து அற வழியில், காந்திய அஹிம்சையில் போராடுவோம்.
இந்தப் பதிவை முடிந்த வரைப் பகிருங்கள்...

============================================



நான்கு ஆண்டுகளுக்கு முன் டைடல் அருகே ஈழத்துக்காக நடந்த மனிதச்சங்கிலியைவிட இது மாஸ்.

1) மெரீனா அருகே நெட்வர்க் ஜேம் ஆகிவிட்டது. அதனால் லைவ் செல்ல முடியவில்லை. 'ஜேம் பண்ணிட்டாய்ங்களா' என்று நிறைய மாணவர்கள் கடுப்பாகிக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தாலா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

2) விவேகானந்தர் இல்லத்தில் இருந்து, பாரதிதாசன் சிலை தாண்டி கூட்டம் நீண்டிருந்தது.

3) 100000 பேர் இருப்பார்கள். ஒருவர் கூட போதையில் இல்லை. ஒரு பீடி, சிகரெட் துண்டு இல்லை.

4) 'பீட்டா ஓழிக', 'வரச்சொல் வரச்சொல் ஓபிஎஸ்-ஐ வரச்சொல்', 'மோடி மோடி எங்க போன ஓடி', 'ஜல்லிக்கட்டு காளை எங்க வீட்டுப்பிள்ளை', ஆகிய கோஷங்கள் ரிப்பீட் மோடில் இருந்தன.

5) லோட் வண்டிகள், டாட்டா ஏஸ்களில் இருந்து, வாட்டர் பாக்கெட் மூட்டைகளை கூட்டத்தினர் குடிப்பதற்காக, ரன்னிங்கில் ரோட்டோரத்தில் ஆங்காங்கே போட்டுச் சென்றார்கள் மாணவர்கள் சிலர்.

6) கத்தி முடித்து தொண்டை வற்றிய போது, வலது கையை உயர்த்தியவுடன், எதிர்த்திசையில் இருந்து ஒரு வாட்டர் பாக்கெட் பறந்து வந்தது. எறிந்தவன் எவனென்று தெரியவில்லை, முன்னிருந்தவன் ஒரு கையால் பிடித்து, என்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் குடுத்தான்.

7) கண்ணகி சிலைக்கு தெற்கே மாணவர்கள் போராட்டம். வடக்கே எம்ஜிஆர் சமாதி அருகே அதிமுக தொண்டர்கள் கூட்டம். எங்கள் கூட்டத்தை கடந்து சென்ற வேனில் இருந்து ஒரு அதிமுக கொடி நீண்டவுடன், சில நூறு வாட்டர் பாக்கெட்கள் வேனை நோக்கி எறியப்பட்டன. கொடி பொத்திக்கொண்டு உள்ளே சென்றது. அடுத்தடுத்த வேன்களுக்கும் இதே நடந்தது.

8) பறை இசை அடி நொறுங்கியது. தேவையற்ற கோஷங்களை தவிர்த்து, சல்லிக்கட்டுக்காகவும், கைதானவர்கள் விடுதலைக்காகவும் கோஷம் எழுப்ப சொல்லி சிலர் கூட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

9) கூட்ட நெரிசலில், கூச்சலில் யார் பேசுவதும் கேட்கவில்லை, சார்ட்டுகளில் எழுதி உயர்த்தி காண்பித்தார்கள். தங்கர் பச்சான் வந்து 'மக்கள் தேர்ந்தெடுத்த எம்பி, எம்எல்ஏக்கள் வரும் வரை பள்ளி கல்லூரி செல்ல மாட்டோம்' என்று எழுதிய சார்ட்டை உயர்த்தியவுடன் எழுந்த ஆரவாரம் அடங்க நேரமானது.

10) வயதானவர் ஒருவர் வந்து, கருப்புத்துணி காமிச்சு கத்துங்கப்பா என்று ஒரு பண்டிலை குடுத்துவிட்டு சென்றார்.

11) 'ரிசல்ட் பாத்துட்டியா மச்சி', 'அப்புறம் பாத்துக்கலாம் மச்சி. முதல்ல இவனுகள பாப்போம், பீட்டா ஒழிக' என்று பக்கத்தில் ஒரு கான்வெர்சேஷன் நடந்தது

12) ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து கோஷம் வேண்டாம் என்று சிலர் சொல்லியும், அது தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

13) பீட்டாக்காரர்கள் இன்று சிக்கியிருந்தால், தக்காளிச்சட்னி கூட மிஞ்சியிருக்காது.

14) காவல்துறை எக்ஸெலண்ட் ஒத்துழைப்பு. ஒரு சத்தம், அரட்டல், உருட்டல் இல்லை. நன்றிகள் பல.

15) கண்ணகி சிலைப்பக்கம், இரண்டு கரைவேட்டிகள், 300 ரூவா பேசுனா குடுக்கணும்ல, ஊருக்குப் போயி தர்றேன்னா என்னா அர்த்தம் என்று புலம்பிக்கொண்டு இருந்தன. 'எம்.ஜி.ஆர்' நூற்றாண்டு விழாவுக்கு 'கூட்டி' வந்திருக்கின்றனர்

16) கார்ப்பரேஷன்காரர்கள், வாக்கிங் ஏரியாவில் தரமான தடுப்புக் கம்பிகள் போட்டிருக்கிறார்கள். 100 பேர் ஏறி நின்றாலும் தாங்குகின்றன.
தலைவனே இல்லாமல், அனைவரும் தொண்டர்களாக, தன் இனத்துக்காக போராடுகிறார்கள். 

அடுத்த தலைமுறை நிச்சயம் பிழைத்துக்கொள்ளும்.

காலரத் தூக்கி விட்டுக்கலாம் !

===========================================



மெரீனா - Day 2

1) நேத்திக்கு 2000 பேர்னா, இன்னிக்கு 2 லட்சம் பேர்.

2) நடிகர், நடிகைகளில் இருக்கும் விளம்பரம் தேடிகள் எவனையும் கூட்டத்துக்குள் விடவில்லை. 'அவர்களை பேட்டி எடுக்கும் மீடியா, செல்பி எடுக்குறவன் எல்லாம் பேரிகேட்டுக்கு அந்தப்பக்கம் போ'ன்னு சொல்லிட்டாய்ங்க :)

3) 'நேத்து வரைக்கும் நாங்க மட்டும்தான இருந்தோம். அப்ப எங்க போனீங்க'ன்னு கேக்கவும் க்ரவுட் அப்ளாஸ்.

4) குடும்பப் பஞ்சாயத்து செய்கிற லட்சுமி ராமகிஸ்ணன் தேடி வந்து பல்பு வாங்கிவிட்டு சென்றார்.

5) கோட்டு போட்டு உள்ளே வந்து மைக் பிடிக்க நினைத்த ஹைகோர்ட் வக்கீல்களுக்கும் வாட்ஸ் குறையாமல் அதே பல்பு. 

6) விஜயகாந்த் குரலில், மிமிக்ரி செய்த ஒருவர் பீட்டாவையும், கட்சிகளையும் கழுவி ஊத்தி அப்ளாஸ் அள்ளினார்.

7) ஓரமாய் கழுத்தில் கட்டோடு இருந்த லாரன்ஸை மட்டும் உள்ளே அனுமதித்து மைக் கொடுத்தார்கள். அருமையாகப் பேசினார். கடைசியில் கையில் இருந்த 1 லட்ச ரூபாயைத் தூக்கி காண்பித்து 'பேங்க்ல இவ்ளோதான் எடுக்க முடிஞ்ச்சு. நான் போராட்டம் முடியுற வரை இங்கதான், உங்ககூடத்தான் இருப்பேன். என்ன வேணாலும் என்கிட்ட கூச்சப்படாம கேளுங்க. இது நீங்க குடுத்த காசு" ன்னார். விசில் பறந்தது. மன்சூர் அலிகான் அலம்பலே இல்லாமல் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார்.

8) இரண்டு கைகளும் இழந்த 5-6 வயது சிறுவனை தோளில் தூக்கிக் கொண்டு ஒருவர் உள்ளே வர கூட்டம் ஆர்ப்பரித்தது. அந்தச் சிறுவனின் சட்டையில் 'We Do Jallikkattu' என்று எழுதியிருந்தது.

9) சாப்பாடு, லெமன் ரைஸ், வாட்டர் பாக்கெட், சாத்துக்குடி என்று வரிசையாக சப்ளை செய்தார்கள்.

10) அவ்வப்போது சோஷியல் மீடியாவின் மூலம் வரும் தகவல்களை பகிர்ந்தபடி இருந்தார்கள். அப்போது மைக்கில் பேசியவர், 'நெட்வர்க் சரியில்ல. போலீஸ்கார்அந்த ஜாம்மரை எடுத்துருங்க' னு சொல்லவும் கூட்டத்தில் குபீர் சிரிப்பு.

11) இவர்தான் நம்ம சூ சூ சூனா சாமியை மானாவாரியா திட்டியவர் என்று ஒருவரை அறிமுகம் செய்தார்கள்.

12) ஓபிஎஸ், மோடி படங்களை தூக்கி கத்தியவர்களை, நமது நோக்கம் இதுவல்ல என்று சொல்லி இறக்க சொல்லிவிட்டார்கள். கொடும்பாவி எரிப்புக்கும் ஸ்டிரிக்ட் நோ.

13) 'பாப்பியா பாப்பியா விசாலு படம் பாப்பியா', 'குடிப்பியா குடிப்பியா கோக்கோ கோலா குடிப்பியா', 'பறந்தியே பறந்தியே நாடு நாடா பறந்தியே', 'சின்னம்மா சின்னம்மா மீனு வாங்கப் போலாமா', 'மீசையத்தான் முறுக்கு பீட்டாவை நொறுக்கு' இவையெல்லாம் ஹைலட் கோஷங்கள். ( சென்சார் கட் நிறைய :))

14) சோழிங்கநல்லூரில் லத்தி சார்ஜ் என்ற செய்தி வந்தவுடன், வன்முறை கூடாது, மிகப்பொறுமையாக இருக்க வேண்டும், நம் வழி அறவழி என்று சொல்லி மிகமிக கவனமாக இருந்தார்கள். 

15) நேத்து சாயங்காலம் வரை ஒரே ஒரு மீடியா வேன் மட்டுமே இருந்தது. இன்று மொத்த நேஷனல் மீடியாவும் விவேகானந்தர் இல்லம் எதிரே. கிரேன் கேமரலாம் இருந்துச்சுபா.

16) பின்னால் இருந்தவன் 'பாஸு..கேமரால மட்டும் என் மூஞ்சி தெரியாம பாத்துக்கங்க பாஸு. ஆபிஸ்ல லீவு போட்டு வந்துருக்கேன்' என்றான். 'ஊரே பாத்துருக்குமேடா' என்றவுடன் 'அய்யய்யோ' என்றான்.

17) திருவல்லிக்கேணி ரயில்வே ஸ்டேசனில் நான் இவ்வளவு கூட்டம் இதுவரையில் பார்த்ததில்லை. முன்பு ஒருமுறை பீச்சில் தேமுதிக மாநாடு நடந்த போதுகூட இவ்வளவு கூட்டமில்லை.

18) ஆட்டோவில் சென்ற ஸ்கூல் சுள்ளான்கள் சிலபேர் 'வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும்' என்று சார்ட்டை காண்பித்து கத்தினார்கள். ஒரு வெசப்பயபுள்ள மட்டும் 'ஐஸ்மோர் வேண்டும்' என்று கத்தினான்.

19) கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்ல, இளைஞர்கள் ரோட்டில் இறங்குவதைத் தடுக்க, மைக்கில் பேசியவன் " பின்னாடி போ நண்பா. கடல் வரைக்கும் போகலாம். நம்மகிட்ட கூட்டம் இருக்கு" என்று சிரித்தபடி சொன்னது அல்டிமேட்.

20) தாகம் தீர்க்க கூட்டத்தினுள் அனுப்பப்பட்ட லிம்கா பாட்டில் தூக்கி எறியப்பட்டது

21) இந்த இனத்தின் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகளுக்காக போராடுகிறார்கள். கைக்குழந்தைகளோடு இரு குடும்பத்தினர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு இளைஞர்கள் அவர்களுக்கு குடை பிடித்தார்கள்.

'3 மாசப்புள்ள நமக்காக போராட வந்திருக்கு. நம்மள எவன் என்ன செய்ய முடியும் ? ' னு மைக்ல ஒருத்தர் கேட்டதெல்லாம் தெறி மாஸ்.

இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் இனப்பாசத்தையும்,  நாகரீகத்தையும் அறிந்துகொள்ள மெரீனா பக்கம் வாருங்கள்.

=============================================

இளைஞர்கள்,  மாணவர்களின் 10 கோரிக்கைகள்.

இந்த போராட்டம் 'காளை'க்காக மட்டும் அல்ல 'நாளை'க்காகவும்   தான்.

#1. ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் அல்ல..யாராலும் ஒருகாலும் அசைக்க முடியாத உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர தீர்ப்பே வேண்டும்.

#2. அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்திய சூழ்ச்சியில் ஊடுருவிய பீட்டாவை இந்தியாவை விட்டே துரத்த வேண்டும்.

#3. ஆவின் பால் முழுக்க முழுக்க நாட்டு பசுவின் பாலாகத்தான் இருக்க வேண்டும். 
குழந்தைகளுக்கு சர்க்கரை நோயை உண்டாக்க கூடிய ஜெர்சி பசுவின் பால் ஆவின் பாலில் கலக்கபட கூடாது.

#4. hybrid எனப்படும் மரபனு மாற்றம் செய்யப்பட்ட வெளிநாட்டுக்காரன் கொடுத்த அனைத்து விதைகளும் தடை செய்யப்பட வேண்டும். ஏனென்றால் வெள்ளைக்காரனே பாலையும் விதைகளையும் அதன் மூலம் நோயையும் அதற்கான மருந்தையும் தருவான்..நாங்கள் எங்கள் உயிரையும் பணத்தையும் தர வேண்டுமா?

#5. வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து ஜெர்சி பசுக்களும் இன்றே கப்பலேற வேண்டும்.

#6. தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள எல்லா வெளிநாட்டு குளிர்பான கம்பெனிகளும் இழுத்து மூடப்பட வேண்டும்.
விவசாயிகளின் தண்ணீர் தேவையை உறுதி செய்ய தமிழகத்தில் இருந்து கடலில் கலக்கும் எல்லா ஆறுகளின் குறுக்கேயும்  கடலில் கலப்பதற்கு 1 கி.மீ முன்பே தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும். அணையை அணையாக பயன்படுத்தினால் 3000 டி.எம்.சி நீரை சேமிக்கலாம். ஆற்றையே அணையாக பயன்படுத்தினால் 300000 டி.எம்.சி நீரை சேமிக்க முடியும். கருகிய பயிரை பார்த்து என் தகப்பன் எனக்கு சோறு போட முடியவில்லையே என தற்கொலை செய்வதையும் எவனோ ஒருவனிடம் தண்ணீரை பிச்சை கேட்பதையும் என்னால் சகிக்க முடியாது. இந்த பொறுப்பை மதிப்பிற்குறிய ஐயா திரு. சகாயம் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். 

#7. முதல்வன் படத்தில் வருவது போல் Tamilnaducomplaintbox.com என்ற ஒரு வெப்சைட் உருவாக்கப்பட்டு அதில் ஆளும் அனைத்து தொகுதி, வட்ட, மாவட்ட மற்றும் வார்டு தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பக்கங்கள் திறக்கப்பட்டு, அந்நியன் படத்தில் வருவது போல் அந்தந்த பகுதி மாணவர்களாகிய நாங்களே எங்கள் பகுதி குறைகள் மற்றும் தேவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆட்சி முடியும் போது பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அடுத்த தேர்தலில் அவரையே தேர்ந்தெடுப்போம்..இல்லாவிட்டால் ஓட்டை மாற்றி குத்துவோம்...குத்தவும் சொல்லுவோம்.

#8. பூரண மது விலக்கு கொண்டு வர மாட்டீர்கள் என தெரியும்..குடிகாரர்களுக்கோ தங்கள் குடும்பத்தை பற்றி கவலை இல்லை..ஆனால் அவரது இறப்பிற்கு பின் அவரது குடும்பத்தினர் வாழ வழி இல்லாமல் கண்ணீர் வடிப்பதை எங்களால் சகித்துக் கொள்ள முடியாது. எனவே குடிப்பவர் இறக்கும் பட்சத்தில் அவர் குடிப்பதற்கு செலவழித்த பணம் அரசாங்கத்திடமே சேர்வதால் அரசாங்கமே அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். 

#9. விவசாயிகளுக்கு் என்று ஒரு வெப்சைட் Tamilfarmers.com வேண்டும். அதில் விவசாயிகள் தாங்கள் விற்க தயாராகும் அனைத்து விவசாய உற்பத்தி பொருட்களையும் தாங்களே அரசு நிர்ணயித்த விலையில்  நேரடியாக விற்கவும் வணிகர்கள் நேரடியாக வாங்கவும்  இடைத்தரகர்களின் சுரண்டல் இல்லாமல்   olx போல செயல்பட வேண்டும்.

#10. மக்களுக்கு தெரியபடுத்தாமல் எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் வியாபார நோக்கோடு தமிழ்நாட்டிற்குள் வர கூடாது.

 நாங்கள் எல்லோரும் விழித்துக்கொண்டோம்...இனி தூங்கமாட்டோம்..
சந்தேகப்பட கற்றுக்கொண்டோம்..

இதில் ஒன்று நிறைவேறாவிட்டாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம்...

என் தோழர்களே...
நமக்காக நாமே செய்துகொள்ளாவிட்டால், நமக்காக செய்ய யாரும் முன் வர மாட்டார்கள்..

=====================================================







10 கருத்துகள்

  1. மூன்று நாட்களாக மனம் முழுக்க சந்தோசம்...! ஆகா...! இதுவல்லவோ எழுச்சி...!

    பதிலளிநீக்கு
  2. அருமை.... மெய் சிலிர்க்கிறது ஐயா...நம் மக்களின் மாண்பை காணும் போது...

    காளைக்காக சீறும் காளைகளுக்கு... வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  3. அரசியலில் இறங்காது
    தமிழனின் முதலீடான
    கல்வியை மேம்படுத்தியவாறு
    ஒழுக்கம், பண்பாடு பேணி
    எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
    எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
    மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
    எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

    பதிலளிநீக்கு
  4. ப்டிக்க, படிக்க மெய் சிலிர்க்கின்றது. அருமை.

    பதிலளிநீக்கு
  5. அருமையான பதிவு, உங்களின் tamilnaducomplaintbox.com நல்ல யோசனை. ஏற்கனவே wardmember.com என்ற இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கலாம், மேலும் நீங்களே சரி செய்யலாம்.

    மேலும் உங்கள் MP, MLA ஆகியோரது மின்னஞ்சல், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறியலாம்.

    by Praveen , wardmember.com

    பதிலளிநீக்கு
  6. மாணவர்களின் தன்னெழுச்சி
    உலகேஇன்று வியந்து பார்க்கிறது
    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்

    பதிலளிநீக்கு
  7. இப்பேர்ப்பட்ட போராட்டத்தைத்தான் இப்படிப்பட்ட போராட்டமாக முடித்து வைத்திருக்கிறார்கள்.

    பன்னாட்டு சமூகம் உலக வரலாற்று நூலைத் தூக்க முடியாமல் தூக்கிப் பிரித்து அதில் தமிழர்களின் இந்த எடுத்துக்காட்டுப் போராட்டத்தைப் பற்றி எழுதத் தங்க மையால் எழுதும் தூவலைத் திறந்து ஆயத்தமானபொழுது தூவல்முள்ளைத் தன் கழியால் அடித்து நொறுக்கிய தமிழ்நாட்டுக் காவல்துறை வாழ்க! அவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து அனுப்பிய ஆளுங்கட்சி வாழ்க! ஆளுங்கட்சி அப்படி ஒரு முடிவு எடுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டத்தைத் திசை திருப்பிய எதிர்க்கட்சி வாழ்க!

    வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதரம்!

    பதிலளிநீக்கு
  8. ஜல்லிக்கட்டுடன் பல கோரிக்கைகள் மக்கள் மனதில் இத்தனை நாட்கள் அழுந்திக் கொண்டிருந்த ஏக்கங்கள், தாகங்கள் எல்லாம் வடிகாலாகி இங்கே வடிந்துள்ளன. ஆனால் எப்படியோ முடிந்து போனது. வட இந்தியர்கள் மக்கள் எல்லோரும் மிகவும் வியப்புடன் பார்ப்பத்தாகத் தெரிகிறது. உலகமே கூட..நல்ல மாற்றம் வரும் என விழைவோம். நம்புவோம். ஏனென்றால் மக்களும் இளைய சமுதாயமும் விழித்துக் கொண்டுவிட்டது..

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை