• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, மார்ச் 18, 2017

  பெற்றோர்களைப் பயமுறுத்தும் நீலநிறக் குழந்தைகள்


  புதிதாக பூமியில் பிறக்கும் குழந்தைகள் எப்போதுமே அழகானவைகள்தான். ஆனால், சில குழந்தைகள் பிறக்கும்போதே நீலநிறத்தில் பிறக்கின்றன. அந்தக் குழந்தையைப் பார்த்ததும் மொத்தக் குடும்பமும் சோகத்தில் மூழ்கிவிடும். இது ஏதோவொரு நோயின் அறிகுறி என்று பயத்தில் உறைந்து நிற்கும். இப்படி நீலநிறத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு இதய வால்வில் பிரச்சனை இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.


  மனித உடலின் இதயத்தில் இயற்கையாகவே நான்கு வால்வுகள் இருக்கின்றன. இவைகள் திசுக்களால் ஆனவை. இந்த வால்வுகள் ஒரே திசையில் மட்டுமே திறந்து மூடும் தன்மை கொண்டவைகள். இவைகள் சீராக இயங்கினால் இதயம், நுரையீரல் உட்பட உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தின் பணி ஒரே சீராக இருக்கும். 

  ரத்தத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்ட உறுப்புகள் இதயமும் நுரையீரலும்தான். இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. இந்த நான்கு அறைகளுக்கும் இடையே ரத்தத்தை வாங்கி மறு அறைக்கு செலுத்துவது நான்கு இதய வால்வுகளின் வேலை. இவற்றில் சுருக்கம், கசிவு, அடைப்பு, ரத்தத்தை தவறான திசையில் செலுத்துதல் என வால்வுகளில் ஏற்படும் கோளாறே மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை கொண்டுவருகின்றன.


  இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரத்யேக வேலை இருக்கிறது. எந்த வால்வு பாதிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, அதற்கேற்ப பிரச்சனையின் தன்மை மாறுபடும். இதயத்தின் கீழ் அறையிலிருந்து நுரையீரல் ரத்தக் குழாய்க்கு ரத்தத்தை அனுப்பி வைக்கும் வால்வுக்கு 'பல்மனரி வால்வு' என்று பெயர். பிறந்த குழந்தைக்கு இந்த வால்வில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் குழந்தை நீலநிறமாக மாறிவிடும். 

  சில குழந்தைகளுக்கு தாயின் கருவறையில் இருக்கும்போதே இந்த பிரச்சனை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் குழந்தை பிறக்கும்போதே நீலநிறமாக பிறக்கிறது. இந்த பாதிப்பு தீவிரமாக இல்லாத போது குழந்தைகள் சாதாரணமாகவே இருக்கும். குழந்தைகளுக்கு 10 வயது ஆகும்போது கூட வெளிப்படக்கூடும்.

  இப்படி குழந்தை நீலநிறமாக பிறந்தாலே 'பல்மனரி' இதய வால்வில் பிரச்சனை என்று தெரிந்து கொள்ளலாம். இந்த இதயக் கோளாறால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் 75 சதவீதத்திற்கு மேல் இருப்பதுதான் அதிர்ச்சியளிக்கும் நிஜமாக இருக்கிறது.


  இந்தக் குறையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறக்கும்போதே மூச்சுத் திணறல் இருக்கும். குழந்தை இதயத்தின் கீழ் அறையிலிருந்து ஆக்சிஜன் குறைவான ரத்தம் நுரையீரலுக்கு செல்வதே இதற்கு காரணம். பிறக்கும்போதே இதய பல்மனரி வால்வு கோளாறுடன் பிறக்கும் குழந்தை வளர்ந்தால் எடைக் குறைவு, வளர்ச்சியின்மை ஆகிய பிரச்சனைகள் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

  ==========================================

  எனது யூடியூப் சேனல்களில்..

  பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆசையாக உயரே தூக்கிப்போட்டு விளையாடுவார்கள். அந்த விளையாட்டில் குழந்தையின் உயிர் போகும் ஆபத்து இருக்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. அதனைப் பற்றி விரிவாக பேசும் காணொலி.  =========================

  'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' சேனலில் 

  இந்தியாவின் மிகப்பெரிய ரோஜாப் பூங்கா என்று பெயரெடுத்த ஊட்டி அரசு ரோஜாத் தோட்டம் பற்றி.. 
  11 கருத்துகள்:

  1. வணக்கம்

   அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி

   பதிலளிநீக்கு
  2. எனது தம்பியின் முதல் குழந்தை நீல நிறக் குழந்தை
   இதயத்தின் வால்வுகளில் இரண்டு, இடம் மாறி இருந்ததாக
   மருத்துவர்கள் கூறினார்கள்.
   நாற்பதே நாற்பது நாளில் அக்குழந்தை
   எம்மை விட்டுப் பிரிந்துவிட்டது.
   கருவில் இருக்கும்பொழுதே, ஸ்கேன் செய்து பார்த்தால்
   இதுபோன்ற குறைகளைக் கண்டறிய முடியும் என்கிறார்கள்
   ஆனாலும் நமது ஸ்கேன் இயக்குநர்களுக்கு இதையெல்லாம்
   கண்டுபிடிக்கத் தெரிவதில்லை, அவர்கள் அதைப் பற்றியும் கவலைப் படுவதில்லை
   இன்று எத்தனை ஸ்கேன் எடுத்தோம் எவ்வளவு வருமானம் என்பதிலேயே
   குறியாக இருக்கிறார்கள்
   பாவம் மக்கள்

   பதிலளிநீக்கு
  3. விழிப்பூட்டும் பதிவு
   எத்தனை ஆள்களின்
   எண்ணங்கள் இந்நிலையிலே...

   பதிலளிநீக்கு
  4. Blue Baby - எனக்கும் இப்படி ஒரு குழந்தையைப் பார்த்த அனுபவம் உண்டு.

   தகவல்கள் சிறப்பு.

   பதிலளிநீக்கு
  5. அதிர்ச்சியாக இருந்தது. படிக்கும்போது மனம் கனத்தது.

   பதிலளிநீக்கு
  6. Dear Admin,
   Greetings!
   We recently have enhanced our website, "Nam Kural"... We request you to share the links of your valuable articles in our website to reach more wider Tamil audience...

   தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி, http://www.namkural.com/

   நன்றிகள் பல,
   நம் குரல்
   Note:- To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்