• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, மார்ச் 11, 2017

  இந்திய இஸ்லாமிய நாகரிகங்கள்


  ழங்காலம் தொட்டே இந்தியா மீது பல அந்நியர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள். கிரேக்கர்கள், சாகர்கள், ஹீனர்கள் போன்றோர்களின் ஆட்சியில் இந்திய மக்களிடையே எந்த வேறுபாடும் தோன்றவில்லை. இவர்கள் இந்திய மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். வேறுபாடின்றி கலந்ததால் தங்களின் தனி அடையாளங்களை இழந்துவிட்டனர். 


  ஆனால், இந்தியா மீது படையெடுத்த துருக்கிய ஆப்கானியர்களை பொறுத்தவரை நிலைமை தலைகீழ். அவர்கள் தங்களின் தனி அடையாளங்களை இழக்க தயாராக இல்லை. இந்தியாவின் சமுதாய கொள்கை முஸ்லிம்களின் கொள்கையோடு அடிப்படையில் மாறுபட்டிருப்பதே இதற்கு காரணம். இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக இருவகைப்பட்ட நாகரிகங்களும் அருகருகே இருந்ததால் ஒன்றையொன்று தழுவிக்கொண்டன. 

  இந்து-முஸ்லிம் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பொது இயக்கங்களில் ஒருவர் மற்றொருவர் பழக்கங்களை ஏற்கவேண்டிய நிலை வந்தது. வெளித்தோற்றத்தில் வேறுபாடும் வெறுப்பும் காணப்பட்ட போதிலும், பொறுத்துக்கொள்ளும் பண்பும், இணங்கி செல்லும் குணமும் கலந்தே காணப்பட்டன. நாளடைவில் முஸ்லீம் அறிஞர்களும் சூபிக்களும் இந்திய மக்களிடையே இஸ்லாமிய தத்துவத்தையும் நெறிகளையும் பரப்பினர். இந்துக்கள் சூபிக்களின் போதனைகளை கேட்டனர். இதனால் இருவருக்குள்ளும் பொறுத்துப்போகும் மனநிலை உருவானது. 


  சம்ஸ்கிருத மொழியில் இருந்த சமய இலக்கியங்கள் இஸ்லாமிய அரசவையில் பயிலப்பட்டும், மொழி பெயர்க்கப்பட்டும் வந்தன. காஷ்மீரின் ஜெய்னுலாப்தீன், வங்காளத்தின் ஹூசேன் ஷா ஆகியோர் இந்த வகை பணிகளை சிறப்புறச் செய்தனர். முஸ்லிம் அறிஞர்கள் யோகம், வேதாந்தம், மருத்துவம், ஜோதிடம் சம்மந்தமான அறிவியல் நூல்களைப் படித்தனர். வானியல் வல்லுநர்கள் இஸ்லாமிய கலைச்சொற்களை ஏற்றனர். அதேபோல் அட்சரேகை, தீர்க்க ரேகை பற்றிய இஸ்லாமிய கணக்கு முறைகளையும், பஞ்சாங்க முறையில் சில கருத்துக்களையும் தாஜிக் என்ற ஜாதக கணிப்பையும் மருத்துவ துறையில் உலோக தாழிகளை பற்றியும் இந்துக்கள் இஸ்லாமியர்களிடம் இருந்து கற்றனர். 

  உருது என்ற மொழி, பாரசீக, அரபிக், துருக்கி மொழி வார்த்தைகளையும், சம்ஸ்கிருத மூல மொழிகளையும் கொண்டு ஒரு புதிய மொழியாக வளர்ந்தது. இது இந்த நாகரிகத்தின் கூட்டுறவுக்கு நல்ல எடுத்துக்காட்டு. உருது மொழியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் தேர்ச்சி பெற்ற கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விளங்கினர்.

  ஆட்சி அதிகாரத்தில் இருந்த இந்துக்கள், இஸ்லாமியர்களிடையே திருமண பந்தங்களும் நிகழ்ந்தன. இந்த திருமணங்கள் இரு தரப்பினருக்கும் அப்போது இருந்த வெறுப்பை வெகுவாக குறைத்தன. இந்துக்களின் சில பழக்க வழக்கங்களை இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களின் சில பழக்க வழக்கங்களை இந்துக்களும் ஏற்றனர். இதனால் கலைகளிலும் கட்டட வடிவமைப்பிலும் முன் எப்போதும் இல்லாத புதிய பாணி உருவானது. 

  சில இலாமிய மன்னர்கள் இந்துக்களையும், இந்து மன்னர்கள் இஸ்லாமியர்களையும் உயர் பதவியில் அமர்த்தினர். கலை, கைத்தொழில், இசை, ஓவியம், ஆடை, ஆபரணங்கள், விளையாட்டுகள் போன்றவற்றில் இரு மதத்தினரும் பெரிதும் ஒத்துப்போயினர். இதனால் இரு தரப்பினருக்கும் நிறைய நன்மைகள் ஏற்பட்டன. அதேவேளையில் அவ்வப்போது இரு தரப்பினரும் உரசிக்கொண்டதையும் மறுப்பதற்கில்லை. 

  ==================================

  எனது யூடியூப் சேனல்களில்..

  ஏற்கனவே கூட்டாஞ்சோறு தளத்தில் வெளியான மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு பதிவு இப்போது காணொலி வடிவம் எடுத்திருக்கிறது.


  ==========================

  'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' சேனலில், மர்மம் நிறைந்த கொல்லிமலையில் எந்தெந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்பதை விரிவாக சொல்லும் காணொலி.

  Travels Next 

  ============================

  9 கருத்துகள்:

  1. வணக்கம்

   யாவரும் நிச்சயம் படிக்க வேண்டிய விடயத்தை மிக அழகாக சொல்லியமைக்கு நன்றி அண்ணா
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
  2. நல்லதொரு பகிர்வு.

   Travels Next காணொளி மனதைக் கவர்ந்தது. நன்றி.

   பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே
   தங்களின் காணொளிகளை யூ ட்யூபில் தொடர்கிறேன்

   பதிலளிநீக்கு
  4. மதம் பிடித்தவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகிர்வு....
   காணொளிகளை பார்க்கிறேன்.

   பதிலளிநீக்கு
  5. நல்ல பகிர்வு!காணொளிகள் தொடர்ந்து பாத்து வருகிறோம்!

   கீதா: கொல்லிமலை 3 முறை சென்றதுண்டு. அருவியில் குளித்து ரசித்ததுண்டு. ரகசியங்கள், மூலிகைகள் நிறைந்த மலை. அங்கு காய்க்கும் கொய்யாப்பழம் மிக் மிக அருமையாக இருக்கும் சிவந்த வண்ணத்தில் தித்திப்பாக...தேன் போன்று அங்கு செல்லும் போது காய்கள், பழங்க்ள் எல்லாம் வாங்கிவந்துவிடுவோம்....

   அருமையான இடம்...

   பதிலளிநீக்கு
  6. தரமான செய்திகளுக்கு கூட்டாஞ்சோறு ...
   வாழ்த்துகள் செந்தில் ஜி
   தொடர்க
   எங்கள் பகுதியல் உங்கள் பத்திரிக்கை கிடைப்பதில்லை என்கிற தகவலும் உண்டு

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்