நான் யூடியூபில் சேனல் ஆரம்பிப்பேன் என்று மூன்று மாதங்களுக்கு முன்புவரை கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், நடந்துவிட்டது. இப்போது இரண்டு சேனல்களை நடத்தி வருகிறேன். ஒன்று எனது பெயரிலே இருக்கும் சேனல். மற்றொன்று 'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' சேனல். இரண்டுமே வெவ்வேறு வகையறாக்கள். எனது பெயரில் இயங்கும் சேனல் பல்சுவை சேனல் கூட்டாஞ்சோறு வலைத்தளம் போல. அனைத்து விஷயங்களும் அதில் இருக்கும். 'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' முழுக்க முழுக்க சுற்றுலா சம்பந்தப்பட்டது.
இப்படி யூடியூப் பக்கம் எனது கவனம் திரும்பியதற்கு முழுமுதற் காரணம் கூகுள்தான். ஆரம்ப காலத்தில் சுற்றுலா சம்பந்தமாக எடுத்த சில வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்திருந்தேன். அதில் அச்சன் கோயிலைப்பற்றி எடுத்திருந்த வீடியோ பெரும் பார்வைகளைப் பெற்றது. முதன் முதலாக 5,000 பார்வைகளைக் கடந்தபோது யூடியூபில் இருந்து வாழ்த்து தெரிவித்து ஒரு மெயில் வந்தது. அதிலே நீங்கள் இந்த வீடியோ மூலம் பணம் ஈட்டலாம் என்ற தகவலும் இருந்தது. நான் அப்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் போயின.
இடையிலே என்னுடைய சில விடீயோக்களில் தொடர்ந்து விளம்பரம் வந்து கொண்டிருந்தது. ஒருநாள் எதார்த்தமாக யூடியூபில் ஆட்சென்ஸுக்கு அப்பளை செய்தேன். அது அன்று மாலையே அப்ரூவல் ஆகிவிட்டது. அப்போது 6 வீடியோக்கள் மட்டுமே என்னுடைய சேனலில் இருந்தது. அதில் 4 வீடியோ காப்பிரைட் கண்டெண்ட் இருப்பதாக வந்தது. அது வேறொன்றும் இல்லை. வீடியோக்களில் சில சினிமா பாடல்களின் இசையை பயன்படுத்தியிருந்தேன். பின் அந்த இசையெல்லாவற்றையும் நீக்கி வேறு இசையை சேர்த்தேன்.
அதன்பின்தான் யூடியூப்பில் எப்படி பணம் சம்பாதிப்பது என்று யோசித்தேன். அதற்கு நிறைய ஆலோசனைகள் யூடுபிலேயே கிடைத்தன. அவர்கள் தினமும் ஒரு விடீயோவாவது அப்லோடு செய்ய வேண்டும் என்றார்கள். வீடியோ எடிட்டிங்கிற்காக வெளியே பணம் கொடுத்து செய்தால் கட்டுபடியாகாது என்ற காரணத்தால் நானே கற்றுக்கொள்ள முடிவெடுத்தேன்.
வீடியோ எடிட்டிங் சாப்டவேர் மட்டும் பணம் கொடுத்து டவுண்லோடு செய்துகொண்டேன். பின் இணையத்தின் மூலமே யூடியூப் வழியாகவே எடிட்டிங் செய்ய கற்றுக்கொண்டேன். அதிலும் சந்தேகங்கள் ஏற்பட்ட போது தெரிந்த நண்பர்களின் உதவியை நாடினேன். ஒருவழியாக சில அடிப்படை அம்சங்களை தெரிந்து கொண்டேன்.
வலைப்பூவில் திரட்டிகள் இருப்பதுபோல் இதில் இல்லை. இங்கு எல்லாமே நேரடி பங்களிப்புதான். சேனலில் இருக்கும் சந்தாதார்களே சேனலின் பலம். பல சேனல்களுக்கு லட்சக்கணக்கில் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் இங்கு முதல் 100 சந்தாதாரர்கள் என்பது ஒரு இலக்குதான். காரணம் இங்கு சேனல் தொடங்கியதுமே நமக்கு url கொடுப்பதில்லை. எண்களும் எழுத்துக்களும் மட்டுமே குழப்பமாக காண்பிக்கப்படும். நமது பெயரில் நமக்கு url கிடைக்க 100 சந்தாதாரர்களை அடைந்திருக்க வேண்டும். அது வந்தபின்தான் நமக்கான url கொடுக்கப்படுகிறது.
எனக்கு url கிடைத்துவிட்டது. https://youtube.com/c/SPSenthilKumarMDU என்பதுதான் எனது சேனலுக்கான முகவரி. இந்த 3 மாதத்தில் இரண்டு சேனல்களிலும் சேர்த்து 50-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறேன். இப்போதைக்கு 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு விடியோதான் தயார் செய்ய முடிகிறது. இனி இதை அதிகப்படுத்த வேண்டும்.
இப்படி யூடியூப் பக்கம் கொஞ்சம் பார்வையை திருப்பியதால்தான் முன்பு போல் வலைப்பக்கம் வரமுடியவில்லை. இனி அதிலும் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்றிருக்கிறேன்.
நீங்களும் சந்தாதாரராகி நான் பதிவிடும் வீடியோக்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள். இந்த இரண்டு சேனல்களிலும் சந்தாதாரராகுங்குகள்.
நன்றி.

S.P.Senthil Kumar
Travels Next
பாராட்டுகள். வாழ்த்துகள். சந்தாதாரர் ஆவது என்றால் என்ன? எப்படி? தொலைக்காட்சியில் வரும் டிராவல் நெக்ஸ்ட் என்கிற தமிழ்ச் சேனலில் உங்கள் பங்களிப்பு உண்டா?
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே விரைவில் பணம் சேர்த்து மதுரையில் பாதியை வாங்குவதற்கு எமது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
அருமையான தொழில்நுட்ப வழிகாட்டல்
பதிலளிநீக்குயூடியூப்பிலும்
தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் காணொளிகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதங்களின் அயரா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி
தொடரட்டும் தங்களின் காணொளிகள்
நூறு ஆயிரமாகட்டும் சில மாதங்களிலேயே என்று வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சி
வித்தியாசமான சிந்தனையும் முயற்சியும் என்றும் நம்மை முன்னுக்கு இட்டுச் செல்லும் என்பதற்கு உதாரணமாகியுள்ளீர்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குதமிழ்செய்திகள்
வணக்கம்
பதிலளிநீக்குதெளிவான பதிவு
வாழ்த்துகள்
அருமையான முயற்சி. வாழ்த்துகள் :)
பதிலளிநீக்குமனம் நிறைந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்! நண்பரே/சகோ!
பதிலளிநீக்குகருத்துரையிடுக